Advertisement

உள்ளங்கள் பந்தாடுதே

1

*கோயில்களில் எல்லாம்
எல்லாம் தெய்வங்கள்
இருக்குமா
என்றால் தெரியாது.,
ஆனால் வீடுகளில்
இன்னும் சில தெய்வங்கள்
வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறது.,*

சென்னையின் டிராபிக்கில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது பிரணவின் கார்., ட்ராபிக் ல் ஊர்ந்து செல்வது மற்ற நாட்களில் ஒரு வகையான டென்ஷனை கொடுத்தாலும்., ஏனோ இன்று அவனுக்கு டென்ஷன் ஏறவில்லை.., மிக நிதானமாக ஓட்டிக்கொண்டிருந்தான்.,

கவனம் சாலையில் இருந்தாலும்., மனம் முழுவதும் காலையில் போனில் பேசிய அந்த இரண்டு நபர்களிடமே சுற்றி வந்து கொண்டிருந்தது., என்ன செய்வது யாருக்கு சாதகமாக பதில் சொல்ல முடியும்.,

இருவரும் முக்கியம் என்ற எண்ணத்தோடு மனம் வாதிட்டு கொண்டிருந்தாலும்., அவன் எண்ணங்கள் முழுவதும் குழம்பி தவித்துக்கொண்டிருந்தது.,

இன்னும் சிறிது நேரத்தில் அலுவலகத்தை அடைந்து விடுவான்., ஆனாலும் என்ன செய்யமுடியும் எப்படியாவது வேலையை முடிக்க வேண்டும்., அவன் நினைத்த காரியத்தை எப்படியும் இன்று பேசி தீர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான்.,

எவ்வளவு நிதானமாக ஓட்டினாலும் சேரும் இடம் வந்து சேர தானே வேண்டும்., அப்படித்தான் நிதானமாக வந்து சேர்ந்திருந்தான் பிரணவ்.

வெளியே சாதாரணமாக காட்டிக் கொள்ள முயன்றாலும்., அவன் மனதின் குழப்பமோ இன்னும் அவனே தெளிவற்றவனாகவே அன்று காட்டியது.,

ஏதோ குழப்பத்தில் இருப்பது போல தோன்றியதோ என்னவோ அவன் நண்பன்., “என்னடா மாப்ள வரும்போதே இவ்வளவு டல்லா வர்ற”., என்று கேட்டான்.

‘அப்படியா முகத்தில் தெரியும்’., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்.

“இன்னைக்கு டிராபிக் ஜாஸ்தி அதுல ரொம்ப டயர்டா பீல் பண்ணுறேன்”.,என்று சொன்னான்.,

“சென்னைல டிராபிக் டெய்லி பார்க்காதது இல்லையே., இன்னைக்கு உன் முகத்துல ஏதோ ஒன்னு குறையுதே., அல்லது எப்பவும் நல்ல 100 வாட் பல்பு மாதிரி பளபளன்னு வருவ”., என்று மேலும் கேட்டான்.,

“இன்னைக்கு பல்பு பீஸ் ஆயிடுச்சு., அதனால டல்லா வந்தேன்”., என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தான்.,

வார்த்தைகளில் கிண்டல் இருந்தாலும்., எப்பொழுதும் பேசும் அந்த மகிழ்வு குறைந்தது போல இருந்தது., இத்தனை காலம் கூடவே இருக்கும் நண்பனுக்கு புரிந்து விட்டது போலும்., “ஓகேடா சைன் போட்டுட்டு வா., கேன்டீன் போவம்”., என்று சொன்னான்.

“இல்ல., வேலை இருக்கு”., என்றான்.,

“கம்ப்யூட்டர் கட்டிக்கிறத அப்புறமா பாரு”., என்றான்.

“டேய் வேலை நிறைய இருக்கு., இதுல எங்க கேன்டீனுக்கு போக., வேலை மெனக்கெட்டு வந்து கூப்பிடுற., இதெல்லாம் உனக்கே நியாயமா”., என்று சொன்னான்.

“டேய் ஆபீஸ்ல உள்ள புட் கோட் போனா., அங்க நம்மள சுத்தி ஒரு பத்து டிக்கெட் வந்து உட்கார்ந்துரும்., ஃப்ரீயா பேசக்கூட முடியாது., அதே இது கீழே இருக்க பொதுவான கேன்டீன் வெச்சுக்கோயேன்., கொஞ்ச நேரம் நிம்மதியா பேசிட்டு வரலாம்., எப்படி வசதி கீழே உள்ள கேண்டினுக்கு போவோமா., ஆபீஸ் புட் கோட் போவோமா”., என்று கேட்டான்.,

இவனுக்கும் சற்று பேசவேண்டியது இருந்ததால்., “ஓகே ஓகே இரு வரேன்”., என்று சொல்லி விட்டு உள்ளே சென்றவன்.,

லாப்டாப் பேக்கை வைத்து விட்டு., தன்னுடைய இடத்தை எப்பொழுதும் போல சுத்தமாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து விட்டு., கார் சாவியை பாக்கெட்டில் திணித்துக் கொண்டே இவனோடு கேன்டீன் நோக்கி நடந்தான்.,

அங்கு 2– 3 அலுவலகங்கள் சேர்ந்திருப்பதால்., கீழே ஒரு பொதுவான கேன்டீன் இருக்கும்., அங்கே என்றால் அனைத்து அலுவலகத்தை சேர்ந்தவர்களும் இருப்பார்கள்., யாரும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

அதே நேரம் இவர்கள் அலுவலத்தை சேர்ந்த புட் கோட் என்றால்., அலுவலகத்தைச் சேர்ந்த யாராவது ஒன்றாக அமர வேண்டியது இருக்கும்.,

அப்படி இருக்கும் போது மனம் விட்டு பேச முடியாது என்ற காரணத்தினால் தான் ஃபுட் கோர்ட் போகாமல் இங்கு வந்தது.,

“சொல்லுடா மாப்பிள என்ன ஆச்சு., ஏன் ஒரு மாதிரி இருக்கே”., என்று பிரணவ் ன் மனம் அறிந்தவனாக அவன் நண்பன் கேட்டான்.,

பிரணவ் தான்., “என்னடா பண்றது”., என்று பெருமூச்சு விட்டவன்., என்ன பண்றதுன்னு ஒரு ஐடியாவே இல்ல., காலைல ஊர்ல இருந்து போன்., அப்பா சொல்றாரு மேரேஜ் க்கு பார்க்கணும்னு., என்ன சொல்றதுன்னே தெரியல.., வேலையா இருக்கேன் அப்புறம் கூப்பிடுறேன் ன்னு சொல்லிட்டு வச்சுட்டேன்.,

“கொஞ்ச நேரத்துல நீதா வீட்ல அதுக்கு மேல பிரச்சினை., அவங்க வீட்டிலேயும் பிரச்சனை காலையில தொடங்கிருச்சி போல.., போன் பண்றா இப்படி அலைன்ஸ் பாக்குறாங்க.., என்ன பண்றதுன்னு புரியலடா ன்னு., நான் யாருக்கு இப்ப என்ன பதில் சொல்றதுன்னு குழப்பத்தில் இருக்கேன்., எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல”., என்று சொன்னவன்., நீதா பேசியதை சொல்லிக்கொண்டிருந்தான்.,

பிரணவ் நீதா இருவரும் கல்லூரி காலத்தில் இருந்து தொடங்கியது இந்த காதல்.,

அவனது எம்பிஏ முடிக்கப் போகும் தருணத்தில் நீதா அந்தக் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு சேர்ந்தாள்.,

ஒரு வருட பழக்கத்தில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது., இருவரும் ஒருவரை ஒருவர் எப்போதாவது பார்த்துக் கொள்வது என்று இருந்தாலும்., அவர்களுடைய காதல் ஸ்ட்ராங்காக இருந்தது போலும்., ஏனெனில் இருவரும் அந்த காதலை இத்தனை வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.,

பெரும்பாலும் அலைபேசி உதவியோடு பேசிக்கொள்ள., எப்போதாவது வெளியே சந்தித்துக் கொள்வார்கள்., வீட்டில் யாருக்கும் தெரியாமல்., இப்போது அந்தக் காதலை இரண்டு வீட்டிலும் தெரிவிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தார்கள்.,

ஏனெனில் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு அவசரப்படுத்தி கொண்டிருக்க அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தான் இப்போது பிரணவ் யோசித்துக் கொண்டு இருக்கிறான்., இவற்றை எல்லாம் சொல்ல., பிரணவ் தான் “எனக்கு என்னவோ பயம்மா இருக்கு”., என்றான்.,

“டேய் மாப்ள லவ் பண்ணும்போது தைரியமா பண்றீங்க., அப்ப கல்யாணம் பண்ண போகும் போதும் அதே தைரியத்துடனும் இருக்கனும்., இப்ப என்ன பயமா இருக்கு ங்க, பயப்படாம இரு எல்லாம் நல்லபடியா நடக்கும்”., என்று சொன்னான்.,

“நானும் இத்தனை நாட்கள் அப்படி தான் யோசித்தேன்., ஆனால் ஏனோ இப்பொழுது மனதிற்குள் என்னை அறியாமல் ஒரு நடுக்கம்”., என்று சொன்னவனுக்கு அவன் குடும்பத்தை பற்றிய நினைவு பதட்டத்தை உருவாக்கியது.,

அதுமட்டுமல்லாமல் நீதாவைப் பற்றிய எண்ணங்களும்.

பிரணவ் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன்., இவனது குடும்பம் கூட்டுக்குடும்பம்., அங்கு பெரியப்பா அப்பா., சித்தப்பா என கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளாக ஒரே குடும்பமாக இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் இடத்தில் இவன் மட்டும் காதல் கல்யாணம் என்று போனால்., வீட்டில் எவ்வளவு பெரிய பிரச்சினையை கிளப்பும் என்பது தெரிந்தது தான்., ஏனெனில் பாரம்பரியமிக்க பெரிய குடும்பத்தை சேர்ந்தவன்., தென் மாநிலத்தில் இருந்து வந்தவன் அந்த பயமே அவனுக்கு உதறியது.,

குடும்பத்தில் பெரியவர்களை மீறி எதுவும் இதுவரை செய்ததில்லை., வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் அண்ணன்மாறும் திருமணம் செய்து இருக்கின்றனர்., தங்கைகளும் அக்காக்களும் திருமணம் செய்து இருக்கின்றனர்.,

இதில் ‘தான் மட்டும் இவளை தான் திருமணம் செய்வேன் என்று கூறி எப்படி பேசுவது’ என்ற பயம் வரும் போதெல்லாம்.,

நீதா இதைதான் கேட்பாள்., “அப்புறம் ஏன் என்ட்ட ப்ரொபோஸ் பண்ண., ஏன் என்னை லவ் பண்றேன்னு சொன்ன., ஏன் அப்ப எல்லாம் உங்க குடும்பத்துல சம்மதிக்க மாட்டாங்கன்னு தெரியாதா”., என்று கேட்பாள்.

அதையே இப்போது யோசித்து கொண்டவன் நீதா வின் குடும்பத்தைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தான்.,

நீதா கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள்., கேரளாவை பூர்வீகமாக கொண்ட நீதா படித்தது எல்லாம் சென்னையில் தான்., குடும்பம் இருப்பதும் சென்னையில் அப்பா பிசினஸ் செய்து கொண்டிருக்க., அம்மாவும் பிசினஸில் ஹெல்ப் பண்ணி கொண்டிருக்கிறார்.,

அவளுக்கு ஒரு தம்பி மட்டுமே., சிறிய குடும்பம் தான் என்றாலும் நல்லது கெட்டது எந்த காரியம் என்றாலும் கேரளா சென்று விடுவார்கள்.,

அப்படி இருக்கும்போது மதம் என்பதை மீறி., மொழியும் வேறு., தமிழ் நன்றாக பேசத் தெரியும் என்றாலும்., படித்தது அனைத்தும் சென்னையில் தான் என்றாலும்., பெற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமும் பிரணவ் டம் இருந்தது.,

அதுபோலவே நீதா குடும்பத்திலும் நிச்சயமாக சம்மதம் கிடைக்காது என்பது தெரியும்., நீதா “வீட்டில் சம்மதிக்காவிட்டாலும்., நான் வெளியே வருவதற்கு தயாராக இருக்கிறேன்”., என்று தைரியமாக சொல்லிக் கொண்டிருக்கிறாள்.,

ஆனால் அந்த தைரியம் இவனுக்கு வர மறுக்கிறது., இதுதான் காலையில் இருவருக்குமான வாக்குவாதம்.,

அவள் எப்போதும் போல ரயில்வே ஸ்டேஷன் வந்து விட்டே அவனுக்கு அழைத்து பேசினாள்., வீட்டுச் நிலவரங்களை சொல்லிவிட்டு சொல்ல., அவனும் “கொஞ்சம் பொறு நேரம் பார்த்து வீட்டில் பேசிட்டு சொல்றேன்” என்று சொன்னான்.

“என்னை என்னதான் பண்ண சொல்ற பிரணவ்., அப்புறம் எந்த தைரியத்தில் என்ட்ட லவ் ப்ரொபோஸ் பண்ண., இத்தனை வருஷம் ஏன் வெயிட் பண்ண வச்ச., அப்போ உனக்கு பேசுற அளவுக்கு தைரியம் இல்லனா., நீ பர்ஸ்டே சொல்லி இருக்க வேண்டியது தானே., எங்க வீட்ல வேலைக்கு அனுப்ப மாட்டேன் ன்னு சொல்லியும்.,

எக்ஸாம் எழுதி வேலைக்கு போனேன் ஏன்., நான் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போகாம இருந்தா., இதுக்குள்ள கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்களோ என்று பயந்து போய் தானே., நம்ம படிக்கும்போதே என்ன பேசிக்கிட்டோம்., எல்லாத்தையும் யோசிச்சு பாரு”., என்று சொல்லி அவள் காலையில் கோபமாக பேசியதையும் யோசித்துக் கொண்டு., அதையே நண்பனிடமும் சொல்லிக்கொண்டிருந்தான்.

“இந்த எழவெடுத்த கர்மத்துக்கு தாண்டா., நான் அந்த லவ்வு அது இது ன்னு போகவே இல்லை., ஸ்ஸ் சப்பா உன் கதையை கேட்கும்போதே எனக்கு கண்ண கட்டுது”., என்றவன்.,

“ஏண்டா ஒரு பொண்ணு இவ்ளோ தைரியமா முடிவு பண்ணுது., நீ ஏண்டா இப்படி தயங்குற”., என்று சொன்னான்.,

மதுரைக்கு அருகில் இருந்த தன் ஊரை பற்றியும்., தன் குடும்ப பாரம்பரியத்தை பற்றியும் சொல்லி பேசிக் கொண்டிருக்க.,

“வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வருது., ஏதாவது சொல்லிற போறேன்., மாப்பிள அப்படி பாரம்பரியம் குடும்பம் அப்படின்னு பார்த்தேனா., அந்த பொண்ணு சொன்ன மாதிரி தான் நானும் கேட்கிறேன்., எதுக்கு ல போய் லவ் சொன்ன., அப்படியே குடும்பம் முக்கியம்., பாரம்பரியம் முக்கியம் ன்னு நினைச்சிருந்தேனா.,

உங்க ஊரு சைடு ஒரு பொண்ண பாத்து கட்டிக்கிட்டு சத்தம் காட்டாமல் இருந்து இருக்கணும்., உங்களுக்கு தான் ஏகப்பட்ட பிசினஸ் இருக்கு இல்ல போய் பிசினஸ் பார்க்க வேண்டியது தானே., என்ன இதுக்கு இங்கு வந்து வேலை பார்க்க”., என்று சொன்னான்.,

தயவு பார்க்காமல் அவன் திட்டவும் “டேய் நீ என்னடா என்னை இப்படி திட்டற”., என்றான்.

“அறிவு கெட்டவனே ஒரு பொம்பள புள்ள தைரியமாக பேசுது., இவன் குடும்பம் பற்றி அப்படி இப்படினு பேசிட்டு இருக்கான்., சரிடா குடும்பம் முக்கியம் னா., அப்புறம் எதுக்கு லவ் பண்ணின., அதை சொல்லு”., என்று சொன்னான்.,

“இல்லடா இப்ப வரைக்கும் என்னால நீதா வேண்டாம் ன்னு சொல்ல முடியல”.,என்றான்.,

“அப்புறம்”., என்று நண்பன் கேட்டான்.,

“அதே நேரம் குடும்பத்தையும் யோசிக்க வேண்டியது இருக்கு”., என்று சொன்னான்.,

“இங்க பாரு தெளிவா ஒரு முடிவு எடு., நீ முடிவு எடுத்துட்டு சொல்லு., நான் என்னால முடிஞ்ச உதவி செய்வேன்., அவ்வளவு தான் ஆனா மனசை குழப்பிக்கிட்டு., ஒத்தையா ரெட்டையா போட்டுட்டு சொதப்புனா.,

நானே உன்னை கொன்னு போடுவேன் ஞாபகம் வச்சுக்கோ”., என்று சொல்லி விட்டு நண்பனை இழுத்துக்கொண்டு அலுவலகம் நோக்கி கிளம்பினான்.

*உலகத்திலேயே ரொம்ப விலை
உயர்ந்த விஷயம்., நம்பிக்கை அதை அடைய வருடங்கள் ஆகலாம்.. அது உடைய சில நொடிகள் போதும்..!
*

Advertisement