Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 06

                 மருத்துவமனையில் இருந்த அபிராமியின் அருகில் அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இன்பன். அவரின் உடல்நிலை இப்போது தான் மெல்ல மெல்ல சீராகி கொண்டிருக்கிறது. நேற்றைக்கு முன்தினம் இன்பனின் குரலை கேட்கவும், சற்றே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கண்களை திறந்து பார்த்தவர் அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டார்.

                    அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய முதலில் அவர் எதற்காக அழுகிறார் என்று புரியவே இல்லை இன்பனுக்கு.  “அம்மா.. என்னம்மா.. ஏன் அழறீங்க.. என்ன செய்யுதுமா..” என்று இன்பன் பதறி துடிக்க, அந்த நொடிகளில் தான்இல்லை.. என் மகனை தனித்து விடமாட்டேன்..” என்று சபதமெடுத்துக் கொண்டிருந்தது அபிராமியின் மனது.

                     அழுத விழிகளோடு தன்னை ஏறிட்ட மகனிடம், அழ வேண்டாம் என்று தடுத்தவர்எனக்கு ஒண்ணுமில்ல இன்பாசரியாகிடுவேன்..” என்று சிரமப்பட்டு உரைத்துவிட்டு கண்களை மூடிக் கொண்டிருந்தார்.

                      அதன் பின்னான நேரங்கள் எல்லாம் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலேயே இருக்க, அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறினர். இன்று காலை வரை மதுசூதனனும் அங்கே தான் இருந்தார்

                     அபிராமியின் உடல்நிலையை குறித்து தெரிந்து கொண்ட இன்பன் அவரை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தான். அப்போதும் மனைவியை திரும்பி, திரும்பி பார்த்துக்கொண்டே சென்ற தந்தையை நினைக்கையில் இப்போது சிரிப்பு வந்தது இன்பனுக்கு

                   இந்த கடைசி நான்கு நாட்களில் மதுசூதனனை மொத்தமாக முடக்கி போட்டிருந்தார் அபிராமி. சொல்வார்களே அவனின்றி ஓரணுவும் அசையாது என்று. அப்படிதான் இருந்தது மதுசூதனனின் நிலை. அபியின்றி அவரின் ஓரணுவும் அசையவே இல்லை தான்.

                      இன்பன் புன்னகையுடன் தன் தாய் தந்தையரின் அன்பை அசைபோட்டு கொண்டிருந்தான். அவன் மெல்லிய சிரிப்புடன் அமர்ந்திருந்த நேரம், அபிராமி கண்விழிக்க, மகனின் முகத்தில் இருந்த புன்னகையில் உள்ளம் குளிர்ந்து போனது அந்த தாய்க்கு.

                      அவரும் மகனையே பார்த்திருக்க, இன்பன்  அன்னையை திரும்பி பார்க்கவும் அன்று போலவே கண்கள் கலங்கியது அபிராமிக்கு. இன்பன்அம்மா….” என்று அருகில் செல்ல, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, மெல்ல அவன் கையை பிடித்துக் கொண்டார் அன்று போலவே..

                       அன்னையின் செயல்கள் வித்யாசமாக தெரிந்தாலும், எதுவும் கேட்கவில்லை அவன்.. எதையோ நினைத்து வருந்துகிறார் என்று மகன் நினைக்க, அன்னை முழுதாக உடைந்து போயிருக்கிறார் என்று தெரியவில்லை அவனுக்கு

                      மகனின் கைகளை பிடித்திருந்தவர்என் மகனை யாரை நம்பியும் விடவே மாட்டேன்..” என்று மீண்டும் ஒருமுறை தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டார். மகனிடம்சாப்பிட்டாயா இன்பா..” என்று முயன்று இயல்பாக அவர் கேட்க 

                      “இன்னும் இல்லம்மா.. நீங்க எழுந்ததும் போகலாம் ன்னு வெயிட் பண்ணேன்..” என்றான் மகன்..

                   “அப்பா  எங்கே..” என்று அடுத்ததாக கேட்க, குளிச்சுட்டு வர சொல்லி, வீட்டுக்கு அனுப்பி இருக்கேன்மா..” 

                     “என்ன சாப்பிடுவ இப்போ..” என்றவர் கேள்வியாக அவனை பார்க்க 

                   “இங்கே கேன்டீன்ல ஏதாவது வாங்கிக்கறேன்மா..” என்றான் மகன்.. 

                   “அதெல்லாம் வேண்டாம்.. அப்பாவை கொண்டு வர சொல்லு.. வீட்ல சமைச்சு கொடுக்க சொல்லு…” என்று முகத்தை சுளித்துக் கொண்டே அவர் கூற 

                  “ம்மா.. உங்களுக்கே இங்கே இருந்து தான் சாப்பாடு கொடுப்பாங்க..” என்று நினைவுறுத்தினான்.

                  “நான்தானே நோயாளி.. நீ ஏன் பத்தியசோறு திங்கணும்.. வீட்ல இருந்து கொண்டு வர சொல்லி சாப்பிடு.. போன் போடு..” என்று அவர் மெதுவான குரலில் சொல்ல 

                    அவரை புரிந்தவன் என்பதால் தந்தைக்கு அழைத்து சொல்லிவிட்டான். மதுசூதனன் தான் வரும்போதே உணவை கொண்டு வந்து விட, நேராக மனைவியிடம் தான் சென்று நின்றார்.. ஆனால் தன் முகம் பார்த்த மனைவியின் முகத்தில் எதுவோ குறைவதாக தோன்றியது மதுசூதனனுக்கு. முப்பது ஆண்டு கால இல்லறம் அல்லவா

                   மனைவியின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவர்என்ன அபி.. என்னம்மா..” என்று காதலான குரலில் வினவ, அபிராமியால் அவரை சந்தேகிக்கவும் முடியவில்லை, அதேநேரம் ஒன்றுமில்லை என்று ஒதுக்கவும் முடியவில்லை.

                    அந்த நேரம் எதையும் பேச விரும்பாதவர்ரெண்டு பேரும் சாப்பிடுங்க முதல்ல.. நீங்க ரெண்டு பேரும் தான் நோயாளி மாதிரி இருக்கீங்க..” என்று விட்டு மகனை திரும்பி பார்த்தான். அவன் புன்னகையுடன் நிற்கஅவனை சாப்பிட வைங்க..” என்று கணவரிடமும் கூறினார்.

                   மதுசூதனன் அதற்கு மேல எதுவும் கேட்காமல் மகனோடு அமர்ந்து உணவை எடுத்துக் கொள்ள, சரியாக அவர்கள் உண்டு முடிக்கும் நேரம் மதுசூதனனின் தங்கை  மாதவியும், கலையரசனும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.

                  அவர்களை கண்டதுமே அதுவரை இருந்த இயல்புநிலை மாறிவிட, கசப்புடன் பார்த்தார் அபிராமி. ஆனால் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. உடல்நலனை விசாரித்த மாதவியிடம் கூட, மெதுவான தலையசைப்பு மட்டுமே.. கலையரசன் ஏதோ பேசியபோதும் அயர்வாக இருப்பது போல் கண்களை மூடிக் கொண்டார்.

                   ஒருவார்த்தை கூட யாரிடமும் பேசி இருக்கவில்லை. மதுசூதனனுக்கு மனைவியின் இந்த செயல் அதிர்ச்சியாக இருக்க, இன்பனுக்கு அன்னை ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று யோசனையாக இருந்தது. கலையரசனுக்கு அபிராமி வேண்டுமென்றே செய்கிறாரோ என்று ஒரு எண்ணம்.

               தன் மச்சானை அவர் ஒரு பார்வை பார்த்து வைக்க, “அவளால முடியல மாப்பிள்ளை.. தூக்கத்துக்கு இன்ஜெக்ஷன் போட்டு இருக்காங்க..” என்று சமாளித்தார் மதுசூதனன். அப்போதும் கூட முறுக்காகவே நின்றவர் அடுத்த அரைமணி நேரத்தில் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்

                மதுசூதனனுக்கு மனைவி பிழைத்து  வந்ததே போதும் என்றிருக்க, இதையெல்லாம் பெரிதாகவே எடுக்கவில்லை அவர். மருத்துவமனையில் இருந்த அடுத்த ஒரு வாரமும் சற்று இறுக்கமாகவே கழிய, ஒருவார ஓய்வுக்கு பிறகு வீடு திரும்பினார் அபிராமி.

               வீட்டில் அத்தனை வேலைகளுக்கும் தனித்தனியாக ஆட்கள் இருக்க, வீட்டிலும் முழு நேரமும் ஓய்வில் தான் இருந்தார் அபிராமி. வீட்டிற்கு வந்த முதல் நாளே மகனை தனியே அழைத்தவர் சிறிது நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் முடிவில்அம்மாக்கு ஒரு சத்தியம் செய்வியா இன்பா..” என்று சற்றே ஏக்கமாகவும், எதிர்பார்ப்புடனும் அவர் கேட்க 

               “அம்மா.. என்னமா.. சத்தியம் அது அது ன்னு பேசிட்டு இருக்கீங்க.. நீங்க செய் ன்னு சொன்னா செஞ்சிட்டு போறேன்.. இதுக்கு ஏன்மா சத்தியம் எல்லாம்.. ” என்று கடிந்தவன்இப்போ என்ன நான் கல்யாணம் செய்துக்கணுமா.. மஞ்சரியை தானே பேசி இருந்திங்க.. நான் அவளையே கல்யாணம் பண்ணிக்கறேன்மா.. உங்கமேல..” என்றவன் சத்தியம் செய்வதற்குள் தன் கைக்கொண்டு அவன் வாயை அடைந்திருந்தார் அபிராமி..

                 அவன் முன்னுச்சியில் முத்தமிட்டவர்உன் கல்யாணத்தை தவிர எனக்கு வேற என்ன கனவு இருக்க முடியும் இன்பா.. ஆனா நான் கேட்க வந்தது வேற.. என்ன சூழ்நிலை வந்தாலும் நீ மஞ்சரியை ஒரு நாளும் கட்டிக்க கூடாது.. உன் அத்தை அழறா, உன் மாமா மிரட்டுறாரு, உன் அப்பா கெஞ்சறாங்க ன்னு எதுவுமே சொல்லக்கூடாது… 

                 “உன் கல்யாணம் முழுக்க முழுக்க என் விருப்பம் தான்.. நான் சொல்றவளை நீ கல்யாணம் செய்துக்கணும்.. செய்வியா..” என்று அவர் பரிதவிப்பாக கேட்க 

              அவர் உடல்நிலையை கவனத்தில் கொண்டவன்நீங்க சொல்றபடியே செய்றேன்மாஅதோட மஞ்சரி விஷயம் எனக்கு நிம்மதிதான்.. உங்களை மீறி என்ன செஞ்சிட போறேன்எதையும் யோசிச்சு உடம்பை கெடுத்து வைக்காதிங்க.. தூங்குங்க..” என்று அவன் அதட்ட, அதன்பிறகே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருக்கிறார் அபிராமி.

                     ஆனால் அவர் நிம்மதியை கெடுத்து வைக்கத்தான் கலையரசன் இருக்கிறாரே.. அவர் ஒருவர் போதாதா.. அந்த குடும்பத்தின் நிம்மதியை குலைக்க. அபிராமி வீடு திரும்பிய மறுவாரம் தன் மனைவி, மகள்கள் என குடும்பத்தோடு வந்துவிட்டார் அவர். இப்போது எப்படி முகம் திருப்புவாய் என்பது போல ஒரு பார்வை வேறு அபிராமியை நோக்கி..

                     அபிராமி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மதுசூதனன் லாரன்ஸ் மற்றும் இன்பனை அழைத்துக் கொண்டு டென்னிஸ் கிளப்பிற்கு சென்றிருக்க, அந்த காலை நேரத்திலேயே வந்துவிட்டிருந்தனர் இவர்கள். பிடிக்கவில்லை என்றாலும் வீட்டுப்பெண் ஆகிற்றே.

                      “வாங்க,..” என்று புன்னகையுடன் வரவேற்றவர் வேலைக்காரரிடம் காபியை கொண்டு வர சொல்லி அமர்ந்து விட்டார். கலையரசனுக்கு அதுவே கோபம் தான்.. பின்னே மாமியார் இருந்தவரை ஏன் இவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக வரையும் கூட அந்த வீட்டில் ராஜமரியாதையை அனுபவித்தவர் ஆயிற்றே.

                     இப்போது வேலைக்காரர் காஃபியை கொண்டுவர, அதை அவமதிப்பாகவே கருதினார் கலையரசன். மாதவிக்கும் அண்ணியின் செயல்கள் ஏற்புடையாக இல்லாமல் போக, “என்னண்ணி வேலைகாரங்ககிட்ட காஃபியை கொடுக்க சொல்றிங்க..” என்று அவர் கேட்டே விட 

                     “என்ன செய்ய சொல்ற மாதவி.. இந்த உடம்பு படுத்தி வைக்குதே என்னை.. என் மகனுக்கும், வீட்டுக்காரருக்குமே நான் எதுவுமே செய்ய முடியல, பிறகெங்க நான் கிச்சனுக்கு போக..” என்று சலிப்புடன் சொன்னாரே தவிர, எழவே இல்லை இன்னமும்.

                    வேலையாள் காஃபியை நீட்டிக் கொண்டே நிற்க, கலையரசன்அதனால என்ன மாதவி. பாவம்.. தங்கச்சியே உடம்புக்கு முடியாம இருக்கு.. இப்போ உபசரணையா முக்கியம்..” என்றவர் காஃபியை எடுத்துக் கொண்டார்.. ஆனால் பேச்சில் இருந்த பாசம் குரலில் இல்லாமல் வஞ்சமே உச்சத்தில் இருந்தது.

                    அபிராமி அமைதியாகவே அமர்ந்து அவர்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். உடல் நலமில்லாதவரை நலம் விசாரிக்க வருபவர்கள் போலவா இருக்கிறதுஇவர்கள் தோற்றம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தார் அவர்

                     பெரியவள் ஒரு மெல்லிய ஷிஃபான் புடவையில், அதற்கேற்ப நகைகள், முக அலங்காரம், என்று ஜவுளிக்கடை பொம்மையை போல நிற்க, சிறியவள் உடலை சேர்த்து தைத்து விட்டது போல் இரு இறுக்கமான சல்வார்.. அதுவும் அத்தனை அகலமான கழுத்து இறக்கத்தோடுமுகத்தில் வெள்ளையடித்ததை போல எதையோ பூசிக் கொண்டு அத்தனை மினுமினுப்புடன் இருந்தனர் இருவரும்..

               

Advertisement