Advertisement

                       “அட் லாஸ்ட் ஒத்துக்கிட்டீங்க அங்கிள்..  இதனால என்ன மாறிடும்.. நீங்க இப்போ ரியலைஸ் பண்ணா, என் இன்பா சரியாகிடுவானா..” என்று லாரன்ஸ் உச்ச ஸ்தாயில் கத்த

                       “என்னை என்ன செய்ய சொல்ற லாரன்ஸ்… அன்னைக்கு இருந்த சூழ்நிலை என்ன அப்படிதான் யோசிக்க வச்சது செஞ்சிட்டேன்.. ஆனா, நீ சொன்னமாதிரி என்னால அவன் உயிரை மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சுது.. மூணு வருஷமா என் மகன் நரகத்தை தான் அன்பவிச்சுட்டு இருக்கான்…” என்று அவன் கண்கலங்க

                     அவரின் கண்ணீரை நம்பாமல் பார்த்தான் லாரன்ஸ்.. “நீங்க சொல்றது உண்மையா இருந்தா, ஜஸ்ட் பைண்ட் ஹெர்..” என்று சாதாரணமாக அவன் கூற, மது அவனை பார்க்கவும்

                    “இன்பா லவ்வரை தேடுங்க.. அவ கிடைச்சா தான் இன்பா பழையபடி உங்களுக்கு கிடைப்பான்… அந்த பொண்ணை தேடுங்க..” என்று மீண்டும் அழுத்தமாக கூற

                     “அதெப்படி முடியும்.. நான் எப்படி..”

                      “ஏன் ஏன் முடியாது.. நீங்கதானே அவளை துரத்தினது.. நீங்களே தேடுங்க.. அவ கிடைச்சாகனும்.. உங்களுக்கு ஒரே மாசம்தான் டைம்.. அதுக்குள்ள அவளை கண்டுபிடிங்க..” என்று மிரட்டிக் கொண்டிருந்தான் லாரன்ஸ்..

                        மது  பரிதாபமாக முழிக்க “சீ அங்கிள்.. எனக்கு இங்கே லோக்கல் பெர்சன்ஸ் யாரும் தெரியாது.. பட் நீங்க அப்படி இல்லையே.. போலீஸ், டிடெக்ட்டிவ், பொலிடிசியன் யார்கிட்ட வேணாலும் போங்க.. அந்த பொண்ணு கிடைச்சே ஆகணும்…” என்று கூறிய அவன் குரல் அத்தனை உறுதியாக இருந்தது.

                    இதுவரை அமைதியாக இருந்த அபிராமி “நம்ம மகன் வாழ்க்கைக்காக இதை செய்யுங்க.. அன்னிக்கு நான் பேசினதை என்னன்னே கேட்காம உங்க அம்மாவும் நீங்களும் என் வாயை அடைச்சுட்டிங்க.. இன்னிக்காவது என் பேச்சை கேளுங்களேன்.. என் மகன் வாழ்க்கையை அவன்கிட்ட தேடி கொடுத்துங்க மது.. இத்தனையும் ஓடி ஓடி சேர்த்தது யாருக்காக..

                    “இங்கே இருக்கறதை கட்டி ஆண்டா போதாதா.. என் மருமக எடுத்துட்டு வந்து தான் நிறையணுமா… என் மகனை பழையபடி மீட்டு கொடுத்திடுங்க…” என்றவர் அவர் மடியில் முகம் புதைத்து அழ, மது முற்றிலுமாக நொறுங்கி போயிருந்தார்.

                       தவறு செய்துவிட்டோம் என்று மனசாட்சி பெரிதாக குரல் கொடுக்க, எப்படி கண்டுபிடிப்பேன், எங்கே தேடுவேன் என்று மனது அலைபாய்ந்தது அவருக்கு.

                           லாரன்ஸ் அவரையே பார்த்திருந்தவன் “சே சம்திங் அங்கிள்… சே எஸ் ஆர் நோ…” என்று அவரை விடாமல் விரட்ட

                          “எப்படி கண்டுபிடிக்கிறது ன்னு தான் யோசிக்கிறேன் லாரன்ஸ்… இது எல்லாமே நான் தொடங்கினது நானே முடிச்சு வைக்கிறேன்… நான் என் மருமகளை கண்டுபிடிக்கிறேன்..” என்று அவர் உறுதி கொடுக்க

                        “நான் நாளைக்கு இன்பாவை கூட்டிட்டு லண்டன் போறேன்..” என்று அலுங்காமல் அடுத்த வெடியை வீசினான் நண்பன்..

                        அபிராமி “என்ன லாரன்ஸ்.. அதுதான் அவர் ஒத்துக்கிட்டாரே.. அப்புறம் எதுக்காக லண்டன் போகணும்..” என்று பதற

                        “அபிம்மா.. அவன் ரொம்ப எமோஷனலா இருக்கான்.. இங்கே செட் ஆகாது.. உங்களோடவும் பேசமாட்டான்.. நீங்க அந்த பெண்ணை கண்டுபிடிச்சதும் சொல்லுங்க.. நான் அவனை கூட்டிட்டு வரேன்.. இப்போ நாங்க கிளம்புறோம்…”

                        “இல்ல.. இல்ல லாரன்ஸ்.. அவன் இப்போ போனா, நிச்சயமா என்கிட்டே திரும்ப வரமாட்டான்.. நான் என் மகனை எங்கேயும் அனுப்ப மாட்டேன்..” என்று திடமாக அபிராமி மறுத்துவிட

                       “அவன் இங்கே நிம்மதியா இல்ல அபிம்மா.. புரியலையா உங்களுக்கு… ஸ்லீப்பிங் பில்ஸ் கொடுத்து தூங்க வச்சிருக்கேன் இப்போ.. நிச்சயமா இதோட விடமாட்டான் அபிம்மா..” என்று நிதானமாக அவன் கூறவும், மீண்டும் கண்ணீர் பெருகியது அபிராமிக்கு.

                        மது மனைவியின் அழுகையை பொறுக்க முடியாமல் “ஏதாவது செய்வோம் அபி.. சும்மா அழுது நீ ஒருபக்கம் எதையாவது இழுத்து வைக்காத.. “என்று அதட்ட

                      “அப்படியாவது போய் சேர்ந்துடறேன் நான்… ஒத்த பிள்ளையை பெத்து அவனையும் இந்த நிலையில பார்த்து கதறிட்டு  இருக்கேனே.. ஆண்டவா..”

                   ” போதும் அபி.. அவன் எங்கேயும் போகமாட்டான்… அதுக்கு நான் பொறுப்பு..”

                   “அங்கிள் அவனால இங்கே இருக்க முடியாது.. அவனை தனியா இங்கே விட்டுட்டு நானும் போக மாட்டேன்..” என்று ஸ்திரமாக உரைத்தான் லாரன்ஸ்.

                     “நீங்க ரெண்டு பேருமே லண்டன் போக வேண்டாம் லாரன்ஸ்.. உங்க பிசினஸ் பார்க்க, நான் யாரையாவது அனுப்பி வைக்கிறேன்.. கொஞ்ச நாள் இங்கேயே இருங்க…”

                    லாரன்ஸ் அவசரமாக இடையிட முயற்சிக்க ” நான் சொல்றதை முழுசா கேளு லாரன்ஸ்.. ” என்று அவனை தடுத்தவர் “வால்பாறைல நமக்கு ஒரு எஸ்டேட் இருக்கு.. அபி அப்பாவோடது.. இன்பன் அங்கே இருக்கட்டும்.. அவனோட மனநிலைக்கு அந்த இடம் தான் சரியா இருக்கும்… நீயும் அவனோடவே அங்கேயே இருக்கலாம்… “

                     “நான் இங்கே சென்னையில இருந்து அந்த பெண்ணை தேடறேன்.. நீ அங்கே அவனை கவனமா பார்த்துக்கோ… அந்த பொண்ணு கிடைச்சதும் அடுத்து என்ன ன்னு பார்க்கலாம்..” என்று அவர் தன் திட்டத்தை கூற

                     “நானும் என் மகனோடவே போறேன்..” என்று அறிவித்தார் அபிராமி..

                     “வேண்டாம்.. நீ இங்கே என்னோட இரு அபி..” என்று மது முடிக்க, அபி அவரை முறைத்து பார்க்கவும்

                    “இன்பன் நிச்சயமா நிறைய கேள்வி கேட்பான் அபி.. உன்னால பதில் கொடுக்க முடியாது… அப்படியே நீ பதில் சொன்னாலும், அந்த பெண்ணை தேடறேன் ன்னு அவனே கிளம்பிடுவான்.. அவனுக்கு இப்போ எதுவும் தெரிய வேண்டாம்.. லாரன்ஸ் அவனை பார்த்துப்பான்.. நீ இங்கேயே இரு..” என்று முடிவாகவே கூறிவிட்டார் மதுசூதனன்…

                           அவர் சுலபமாக முடிவெடுத்துவிட, அவர் மகனை சம்மதிக்க வைப்பது அத்தனை எளிதாக இல்லை.

                  நன்றாக உறங்கி ஓய்வெடுத்தவன் அன்று மாலை வேளையில் கண்விழிக்க, அடுத்த சில நிமிடங்களில் தன் உடைகளை எடுத்து தன் பெட்டியில் அடுக்க தொடங்கி விட்டான்..

                                லாரன்ஸ் அவனையே பார்க்க, “சீக்கிரம் கிளம்பு.. நாம இன்னைக்கே லண்டன் கிளம்புறோம்…” என்று அவசரமாக வெளிவந்தது வார்த்தைகள்..

                             “அப்போ கிளம்பலாமா… அந்த பொண்ணு வேண்டாமா..” என்று கேள்வியாக அந்த வெள்ளையன் சிரிக்க, அங்கே இருந்த பூஜாடியை கையில் எடுத்தவன் அடிப்பது போல் ஒங்க, “இன்பா நோ…” என்று அலறினான் லாரன்ஸ்..

                          இன்பன் கோபத்துடன் கையில் இருந்த பூஜாடியை எதிரில் இருந்த சுவற்றில் வீச, அந்த பித்தளை ஜாடி சுவற்றில் மோதி கீழே விழுந்தது. லாரன்ஸ் அவனையே பார்க்க “என்னால இந்த சிச்சுவேஷனை ஹாண்டில் பண்ண முடியல லா.. நாம இங்கே இருக்க வேண்டாம்..” என்று முடிவாக அவன் கூற

                       “நாம இங்கே இருக்க வேண்டாம் இன்பா.. ஆனா லண்டனுக்கும் போக வேண்டாம்… நாம கொஞ்ச நாள் இந்தியால இருப்போம்..”

                          “இருந்து..”

                          “இருந்து உன் லவ்வரை தேடுவோம்…”

                         “எப்படி… முழுசா எல்லாம் தெரிஞ்சாலே மூணு வருஷம் கழிச்சு தேடறது கஷ்டம்.. நான் ஒண்ணுமே தெரியாம அதுவும் அவ முகம் கூட நியாபகம் இல்லாம எங்கே போய் தேடுவேன்… ஏண்டா நீ வேற.. இங்கேயே இருந்தா நிச்சயம் நான் டென்சன் ஆகிட்டே தான் இருப்பேன்.. நீ கிளம்பு..”

                           “நாம இந்த வீட்ல இருக்க வேண்டாம் இன்பா… உன் தாத்தா வீட்டுக்கு போவோம்.. என்னை வால்பாற கூட்டிட்டு போ.. எனக்கும் இந்தியாவை சுத்தி பார்க்கணும்…”

                        “நாம டூர் வந்திருக்கோமா…”

                         “இதுக்கப்புறம் போவோம் இன்பா.. அங்கிள் எனக்கு ப்ராமிஸ் பண்ணி இருக்காரு.. அவர் அதை செஞ்சு முடிகிறதுக்குள்ள நாம டூர் முடிச்சுட்டு வருவோம்..”

                          “லா.. உனக்கு என் நிலைமை புரியுதா…” என்று இன்பா வேதனையுடன் கேட்க

                         “எனக்கு உன்னை நல்லாவே புரியும் இன்பா.. அதான் சொல்றேன்.. நாம லண்டன் போகல.. வால்பாற போறோம்.. அதுவும் இன்னைக்கே.. கிளம்பு..” என்று நின்றுவிட்டான் லாரன்ஸ்..

                        அடுத்த சில மணி நேரங்களில் டிரைவர் உதவியுடன் இன்பனை அழைத்துக் கொண்டு வால்பாறைக்கு கிளம்பினான் லாரன்ஸ்.. அதுவரையும் கூட இன்பன் தன் பெற்றவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசி இருக்கவில்லை..

                              அபிராமி தானாக அவனிடம் போய் நின்றபோதும் “நீங்க இப்படி செஞ்சிருக்க கூடாதும்மா… நான் கேட்டேன் உங்ககிட்ட… நான் தினம் தினம் கனவுக்கும், நிஜத்துக்கும் நடுவுல போரடித்து இருக்கேன் மாம்.. உங்களுக்கு கூட என்னை புரியவே இல்லையே… நீங்க இனி எதுவுமே சொல்ல வேண்டாம் எனக்கு…”

                           “உங்க நாத்தனார் பொண்ணு சொன்னது போல, பைத்தியத்துக்கிட்ட சொன்னா என்ன, சொல்லாம விட்டா என்ன… நீங்க திரும்ப வேற பொண்ணு கூட பாருங்கம்மா.. நான் கல்யாணம் செய்துக்கறேன்… ஏன்னா பைத்தியம் தானே நான்…” என்ற அவன் வார்த்தைகள் அபியை சரியாக தாக்க, அவரின் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை.

                             அபியிடமாவது தன் உள்ளக்கிடக்கையை கொட்டிவிட்டான்.. ஆனால் மதுசூதனனை திரும்பி கூட பார்க்கவில்லை அவன்… மதுவும், அபியும் முன்னேறி செல்லும் அவன் காரையே பார்த்து நிற்க, அவர்களை திரும்பியும் பார்க்காமல் தன் பயணத்தை தொடங்கி இருந்தான் அவன்.

                         இனி அவனை என்ன செய்ய காத்திருக்கிறதோ அவன் விதி…. பட்டதெல்லாம் போதும் என்று பூக்களை தூவுமோ??? இல்லை புன்னகை கூட தராமல் விரட்டி அடிக்குமோ…???

முகவரி சொல்லாமல்

முகம் மறைத்தவளே – இனியாவது

உன் அகம் உரைப்பாயா….

 புதைந்து போன என் அகப்பொருளே

என் கவிதையின் கருப்பொருளாக வருவாயா – என் காதலை

கரம் பிடிப்பாயா….

தேடல் என்னவென அறியாமல்

தேடுகிறேன் நான்….

உன்னையும் உன்னுள் ஒளிந்திருக்கும்

என்னையும்…

களவு போன என் காதலையும்

நீ களவாடிய என்னையும்

கரம் சேர்த்து காத்திடு

என் கவிதை பெண்ணே….

Advertisement