Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 07

                             தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தான் இன்பன், ஆழ்ந்த உறக்கம்… ஆனால் இயல்பாக வந்ததில்லை.. நடந்த நிகழ்வுகளின் கனம் தாங்காமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை முதலில் கண்டு கொண்டது லாரன்ஸ் தான்.

                           அந்த வீட்டின் மாடியில் நின்று நடந்த நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருந்தவன் அவர்களின் குடும்ப விஷயம் என்பதால் தள்ளியே நின்றிருந்தான். ஆனால் நண்பன் தலையை பிடித்துக் கொண்டு அமரவும், ஆளுக்கு முன்னாக அவனை நெருங்கி இருந்தான் லாரன்ஸ்.

                           அபிராமி அவர்களை துரத்தி விட்டு வந்தவர் மகன் அமர்ந்திருந்த நிலையை கண்டு கண்ணீர் விட, மதுசூதனன் கூட கலங்கி போயிருந்தார்.. அதுவும் தங்கை மகள் என்று எப்போதுமே சற்று செல்லம் அதிகம் தான், அதற்கேற்ப சலுகைகளும் உண்டு.. ஆனால் இன்று தன் மகனை பைத்தியம் என்று சொல்லிவிட்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது அவரால்.

                    அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு மகனை நெருங்க, அவர் அருகில் அமரவும் சட்டென எழுந்து விட்டான் மகன். மது திகைத்து போனவராக பார்க்க, அவரை கண்டு கொள்ளாமல் நடக்க தொடங்கி இருந்தான் மகன். அபிராமி “இன்பா…” என்று கண்ணீர் குரலில் அழைக்க

                     “என்ன… இன்னும் என்ன பொய் சொல்ல போறீங்க… நான் எவ்ளோ ஒருத்தி கூட குடும்பம் நடத்தி இருக்கேன் ன்னு அவளுக்கு தெரியுது உங்களுக்கு தெரியாதா.. இல்லை இவன் பைத்தியம் தானே..  ஏமாத்தினா என்ன தெரிய போகுது ன்னு நினைச்சீங்களா..” என்று குத்தி கிழித்தது வார்த்தைகள்.

                       அபிராமி மகனின் இந்த வார்த்தைகளை தாங்க முடியாமல் நெஞ்சை பிடித்துக் கொண்டு நின்ற இடத்திலேயே மடங்கி அமர்ந்துவிட்டார். தலையில் கையை வைத்துக் கொண்டவர் தலையிலேயே அடித்துக் கொண்டு அழ, வார்த்தைகளே இல்லை அவரிடம்.

                         மது இன்னமும் அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவே இல்லை. அவருக்கு மகனின் வார்த்தைகள் சொல்ல முடியாத அளவுக்கு வேதனை கொடுத்தாலும், மகன் சொன்னது போல அவனுக்கு நினைவில்லை என்ற தைரியத்தில் தான் ஆடி விட்டோமோ என்ற குற்றவுணர்வும் சேர்ந்தே எழ, தலை நிமிர்ந்து மகனின் முகத்தை பார்க்கவே முடியவில்லை.

                         தலையை குனிந்து அவர் அமர்ந்துவிட, கையை கட்டி கொண்டு நின்று எதிரில் இருந்த இருவரையும் முறைத்தானே தவிர, அசையவே இல்லை இன்பன். லாரன்ஸ் அவன் கையை பிடித்து அன்னையை கண்ணால் காட்ட, அப்போதும் வேதனையாக தலையை திருப்பிக் கொண்டவன், தன் அறைக்கு சென்றுவிட்டான்.

                          அதன் பின்பும் அவனால் இயல்பாக இருக்க முடியாமல் போக, எதிரில் இருந்த நிலைக் கண்ணாடியில் மொத்த கோபமும் இறங்கி இருந்தது. அது எப்படி ஞாபகம் வராமல் போகும்???…. ஞாபகம் வராமல் இந்த முகம் மட்டும் எதற்கு..?? என்ற விபரீத எண்ணங்களில் தான் அவன் அந்த கண்ணாடியில் கையை மடக்கி குத்தியது.

                       கை விரல்களில் ரத்தம் வழிய, லாரன்ஸ் பதறியவனாக அவனை நெருங்கினான். “இன்பா..” என்று அதட்டியவன் அவன் காதில் வாங்காமல் மீண்டும் கையை ஓங்கவும் அவனை கன்னத்திலேயே அறைந்து விட்டிருந்தான். இன்பன் கண்களில் கண்ணீரோடு நின்ற இடத்தில மண்டியிட்டு விட “முட்டாள் மாதிரி பிஹேவ் பண்ணாத இன்பா…” என்றிருந்தான்.

                        “தப்பா சொல்ற லா… பைத்தியம் நான்.. கொஞ்ச கொஞ்சமா பைத்தியம் பிடிச்சுட்டு இருக்கு எனக்கு…” என்று முழுவதுமாக உடைந்தான் அவன்.

                        லா அவன் எதிரில் மண்டியிட்டவன் அவனை கட்டிக்கொள்ள, எப்போதும் போல அவனை கட்டிக் கொண்டவன் அவன் தோளில் ஆறுதலாக தலையை சாய்த்துக் கொள்ள, “இப்போ எதையும் யோசிக்காத மேன்… கொஞ்சம் டைம் எடுத்துப்போம்.. இது என்ன விஷயம் ன்னு விசாரிப்போம்… நீ ஃபிரீயா விடு.. கன்பியூஸ்  பண்ணிக்காத மேன்..” என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

                  ஆனாலும் அவன் உடல் இறுக்கமாகவே இருக்க, அவன் ஷெல்பில் இருந்து ஒரு தூக்கத்திற்கான மாத்திரையை எடுத்து அவன் கைகளில் திணித்தவன் தண்ணீரையும் அவனிடம் நீட்டினான். அந்த நேரம் அது தேவையாக இருக்க, இன்பனும் மறுக்காமல் எடுத்துக் கொண்டவன் அமைதியாக கண்களை மூடி படுத்து விட்டிருந்தான்.

                      அவன் கைகளில் வழிந்த ரத்தத்தை துடைத்து இதற்குள் லேசாக ஒரு கட்டு போட்டு விட்டிருந்தான் லா.. தூக்கத்தில் கூட அவன் முகம் ஏதோ பெரும் வேதனையில் இருப்பது போலவே தோன்றியது லாரன்சுக்கு..  ஆனால் உறக்கத்தில் இருந்தவனோ மீண்டும் தன் கனவு பெண்ணுடன் கவிபாட சென்று விட்டிருந்தான்.

                   நிஜத்தில் இவன் அழுவது போல் நிழலில் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் முகத்தில் உலகின் மொத்த வேதனையும் குடியிருக்க, எதிரில் இருந்த ஒரு பெண்மணியின் புகைப்படத்தை பார்த்து ஓயாமல் கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள் அவள். தன் கால்களின் முட்டியில் அவள் முகம் புதைத்திருக்க, இன்பன் லேசாக அவளை தொட்டதுமே அவன் நெஞ்சில் விழுந்திருந்தாள்.

                  அப்போதும் அந்த வீட்டில் அவர்கள் இருவரை தவிர யாருமில்லாமல் போக, மெல்ல, தயங்கியவனாக அவளை மென்மையாக அணைத்து கொண்டவன் அவள் உச்சந்தலையில் தன் இதழ்களை பதிக்க, கதறலாக தொடங்கிய அழுகை மெல்ல மெல்ல விசும்பலாக மாறி இருந்தது. அவள் அவன் நெஞ்சிலே புதைந்திருக்க, மெதுவாக அவளை தட்டி கொடுக்க தொடங்கினான் அவன்.

                   அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் அப்படியே உறக்கத்தை தழுவ,, சற்று தள்ளி இருந்த தலையணையை எடுத்தவன் அவளோடு சேர்ந்தே அதில் சாய்ந்துவிட்டான். அவள் உறக்கம் கெடாமல் மென்மையாக அவன் அணைத்து கொள்ள, இறுக்கம் தளர்ந்தவளாக உறங்க தொடங்கி இருந்தாள் அவனது கவிதைப்பெண்.

———————————————–

                         

                         இன்பன் நன்றாக உறங்கி விடவும், மெல்ல கீழே இறங்கி வந்தான் லாரன்ஸ். மதுவும், அபிராமியும் இன்னமும் அதே நிலையிலேயே அமர்ந்து விட்டிருக்க, அவர்களை சற்றே தேற்றியவன் என்ன நடந்தது??? என்று மதுசூதனனிடம் விளக்கம் கேட்க, அபிராமி லேசாக விசும்பினார்.

                        மதுசூதனன் ஆதி முதல் அந்தமாக நடந்தது அனைத்தையும் அவனிடம் கூறிவிட, முதல் முறையாக அவரை ஒரு புழுவை விட துச்சமாக பார்த்தான் லாரன்ஸ். அவன் மனதின் உணர்வுகள் அவன் முகத்தில் அப்படியே வெளிப்பட, இன்னும் குறுகி போனார் மதுசூதனன்.

                        “எப்படி அங்கிள் மனசு வந்தது உங்களுக்கு… அவன் எவ்ளோ லவ் பண்ணி இருப்பான் அந்த பொண்ணை… அப்படி ஒரு சிச்சுவேஷன்ல, உங்களுக்கு இன்பா உயிரை விட அவளை துரத்தி விடறது தான் முக்கியமா இருந்ததா… என் இன்பாவை வச்சு டீல் பேசினீர்களா…” என்று அவன் வலிக்க வலிக்க கேட்க, அவனுக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தார் மதுசூதனன்.

                        “துரத்தினதோட விட்டிங்களா.. இல்ல அவளை ஒரேடியா பினிஷ் பண்ணிட்டிங்களா…” என்று ஆத்திரமாக அவன் வினவ, அவன் வெண்மையான முகம் ரத்த நிறத்திற்கு மாறி இருந்தது.

                       “இல்ல.. நிச்சயமா நான் வேற எதுவும் செய்யல லாரன்ஸ்.. அவ என் மகனோட வாழ்க்கையில இருந்து போக சம்மதிச்சதே போதுமானதா இருந்தது எனக்கு… அதுக்கு மேல அவளை எதுவும் செய்ய நினைக்கல… அதுக்கு பிறகு அவளை பத்தி மொத்தமா மறந்துட்டேன் நான்.. என் கவனம் முழுக்க இன்பன் மேல தான் இருந்தது…” என்று அவர் மெல்லிய குரலில் கூற

                        “அவன் உயிரை காப்பாத்திட்டா மட்டும் போதுமா… அவன் லவ் பண்ண பொண்ணை தொலைச்சி இருக்கீங்க நீங்க.. அதோட விடாம இப்படி ஒரு சண்டை போடற பொண்ணோட அவனுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்கீங்க… இன்பா எப்படி பட்டவன் தெரியுமா…???

                        “என் பிரென்ட் பைத்தியமா… அவ தான் பைத்தியம்.. முட்டாள்..  என் கையில படட்டும்… அவளை..” என்று கழுத்தை நெறிப்பது போல் அவன் சைகையில் காட்ட

                         ‘நானுமே எதிர்பார்க்கல லாரன்ஸ்.. என் தங்கச்சி மக தானே ன்னு முழுசா நம்பிட்டேன்.. கடைசியில இவங்க எல்லாருமே சுயநலமா இருக்க, நான்தான் அந்தஸ்து, கௌரவம் ன்னு பார்த்து என் மகனோட வாழ்க்கையை பணயம் வச்சிருக்கேன்..” என்று வேதனையாக வெளிவந்தது குரல்.

Advertisement