Advertisement

ஏன் மாதவியே ஒரு லேசான பட்டுபுடவையும், லேசான அலங்காரத்துடன் வந்திருக்க, என்னை நலம் விசாரிக்கவா வந்தனர் இவர்கள்..என்பது போல ஒரு மிதப்பான பார்வைதான் பார்த்தார். இதற்குள் மதுசூதனனும் வந்துவிட, இன்பனும், லாரன்சும் நின்று அவர்களை சிரிப்புடன் வரவேற்று விட்டு தங்கள் அறைக்கு வந்துவிட்டனர்.

                      மதுசூதனன் அவர்களுடன் அமர்ந்துவிட பேச்சு தொடர்ந்தது.. தொழில் தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டிருக்க, உண்பதற்கு எதையும் சொல்லும் எண்ணம் கூட இல்லை அபிராமியிடம். மாதவிக்கு அண்ணியின் செயல்கள் புதிராக இருக்க, அலைப்புறுதலுடனே அமர்ந்திருந்தார். மஞ்சரிக்கும் அவள் தங்கைக்கும் கூடஇன்னிக்கு என்ன வந்து தொலைச்சது இந்த அத்தைக்கு..” என்ற எண்ணம் தான்.

                    அதே நேரம் குளித்து விட்டு இன்பன் கீழிறங்கவாங்க மாப்பிளை..” என்று அன்பாக வரவேற்றார் கலையரசன். அவரை பார்த்து புன்னகைத்தவன் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டான். கலையரசன் மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர் பேச்சு வாக்கில் 

                    “பிள்ளைங்க கல்யாணத்தை பத்தி என்ன யோசிச்சிருக்கீங்க மச்சான்..ரெண்டு பேருக்குமே வயசு கூடிட்டே போகுது.. அதோட வீட்லயும் அடுத்தடுத்து சங்கடம் தான்ஒரு சுபகாரியம் நடத்தி பார்ப்போமே…” என்று வர முடிவெடுத்து விட்டதை போலவே பேச 

                   மதுசூதனன் சங்கடமாக இன்பனை பார்க்க, அவன் பார்வை அன்னையை பார்த்திருந்தது.. அபிராமியும் மகனையே பார்த்திருக்கநீங்க சொல்றதும் சரிதான் மாமா.. மஞ்சரிக்கு இதுதான் சரியான வயசு.. நீங்க அவளுக்கு மாப்பிளை பாருங்க..” என்று கலையரசனிடம் தன்மையாகவே அவன் கூற 

                     “என்ன மாப்பிளை பேசறீங்க.. என் பொண்ணுக்கும்,உங்களுக்கும் ஏற்கனவே கல்யாணம் பேசி முடிச்சாச்சு.. இப்போ வந்து வேற மாப்பிளை பார்க்க சொல்றிங்க..” என்று ஆவேசமாக கேட்டார் அவர்.

                    “நான் இருக்க நிலைமையில, கல்யாணத்தை பத்தி எல்லாம் யோசிக்கவே முடியாது மாமா.. எனக்கு கல்யாணம் செய்துக்கற எண்ணமும் இல்ல..” 

                      “அதென்ன மாப்பிளை அப்படி சொல்லிட்டீங்க.. உங்களுக்கு என்ன குறை.. இந்த மறதி எல்லாம் ஒரு விஷயமே இல்ல.. இதுக்காக கல்யாணம் பண்ணாம இருப்பிங்களா..” என்று அன்பில் தோய்த்து வார்த்தைகளை அவர் கோர்க்க 

                       “இல்ல மாமா.. நான் என்னை குறையாக நினைக்கல.. ஆனா இந்த கல்யாணம் வேண்டாம் ன்னு தோணுது..”

                      “என்ன மாப்பிளை விளையாடறிங்களா.. நீங்க கல்யாணம் வேண்டாம் னு சொன்னா, என் பொண்ணு நிலைமையே யோசிச்சு பார்த்திங்களா.. உங்களையே நினைச்சு வாழ்ந்துட்டு இருக்காளே.. அவளுக்கு என்ன சொல்ல போறீங்க..”

                    “இதுல நான் சொல்ல எதுவுமே இல்ல மாமா.. என்னால மஞ்சரியை கல்யாணம் செய்துக்க முடியாது.. அதை பத்தி பேசாதீங்க..” என்று முடிவாக அவன் முடித்துவிட 

                     கலையரசன் மச்சானிடம் திரும்பினார்.. “என்ன மது.. என்ன உன் மகனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறியாஎன் மக வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்ற,…” என்று அவர் மதுசூதனனிடம் கத்த 

                   “இங்கே பாருங்க.. இது முழுக்க முழுக்க என்னோட முடிவு.. என் அப்பாவை கார்னர் பண்ணாதீங்க..” என்று நிமிர்வாகவே கூறினான் இன்பன்

                     இப்போதுஎன்னடா.. என்ன உன் முடிவு.. என் மக வாழ்க்கையை நாசம் பண்றது தான் உன் முடிவா.. எங்களை இப்படி அசிங்கப்படுத்த எத்தனை நாளா காத்திருந்த..” என்று கலையரசன் ஏக வசனத்தில் பேச 

                       மதுசூதனன் கொதித்து எழுந்து விட்டார்பார்த்து பேசுங்க மாப்பிளை.. அவனை மரியாதை இல்லாம பேச வேண்டாம்..” என்று எச்சரிக்கையாக அவர் கூற 

                   “என்ன.. நான் இவனுக்கு மரியாதை கொடுக்கணுமா.. என் மகளை கட்டிக்கிறதா சொல்லி ஏமாத்தி இருக்கான்.. இவனுக்கு மரியாதை ஒண்ணுதான் கேடா..” என்று மேலும் பேசினார் கலையரசன்.

                   “ஏன். ஏன் மரியாதை கொடுக்கமாட்டீங்க. என் மகன் மறுத்ததால, உங்க மக வாழ்க்கை என்ன கெட்டுப்போச்சு..” என்று அழுத்தமாக வந்தது அபிராமியின் குரல்..

                   “அப்போ இது மொத்தமும் உங்க திட்டம் தானா அண்ணி.. என்னடா பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கே ன்னு நினைச்சேன்இப்போதான தெரியுது நீங்கதான் திட்டம் போட்டு கொடுத்து இருக்கீங்க ன்னு…” என்றவர்ஏன்னா. நீயும் இதெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு நிற்பியா.. என் மக வாழ்க்கையை கெடுக்க எத்தனை நாளா திட்டம் போட்டிங்க நீங்களும், உங்க மகனும்…” என்று மாதவி சத்தமாக கத்த

                    “ஏற்கனவே கெட்டு போன ஒருத்தியை எங்க தலையில கட்டிவைக்க, நீயும் உன் புருஷனும் எத்தனை நாளா திட்டம் போட்டிங்க மாதவி…” என்று சுருக்கென கேட்டார் அபிராமி..

                   மாதவி சட்டென துடுக்குற்றவர்என்ன.. என்ன பேசறீங்க நீங்க.. உங்க தப்பை மறைக்க, என் மக வேல அபாண்டமான பழியை போடுறிங்களா.. நீங்க நல்லா இருப்பிங்களா..” என்று பெரும் குரலில் கத்தியவர் அழ தொடங்க 

                  “இதுவரைக்கும் நாங்க நாசமா போகணும் ன்னு சாபம் மட்டும் தான் கொடுக்காம இருந்த.. இன்னிக்கு அதையும் செஞ்சாச்சு.. ஆனா நீ கத்தி பேசறதால உண்மை பொய்யாகிடாது.. 

                  “எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தா இவ இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருப்பாஆனா அதையும் மறைச்சு இவளை எங்க தலையில கட்டி வைக்க பார்த்திங்களேநீயும் உன் அம்மாவும்.. ச்சிநீயெல்லாம் ஒரு பொம்பளை..” என்று அருவருப்பாக அவர் முகம் சுளிக்க 

                   மதுசூதனன்அபி.. நீ என்ன பேசுற புரியுதா உனக்கு.. மஞ்சரி நம்ம வீட்டு பொண்ணு.. நீயே அவளை..” என்று தொடங்க 

                   “ஏன் உங்களுக்கும் தெரிஞ்சிதான் நடந்ததா இந்த அசிங்கமெல்லாம்யார் இந்த வீட்டு பொண்ணு.. எனக்கு யாரை பத்தியும் கவலை இல்ல.. என் மகனோட வாழ்க்கை மட்டும்தான் எனக்கு முக்கியம்.. இந்த மாதிரி சுயநல பிண்டங்களோட வாழ்ந்திருக்கறதை நினைச்சாலே அசிங்கமா இருக்கு எனக்கு…” என்று அவர் அத்தனை பேரையும் சாட

               “அபிராமி…” என்று சத்தமாக அதட்டிவிட்டார் மதுசூதனன்.

                 இடையில் கலை வேறு.. “நல்ல மரியாதை செஞ்சுட்டிங்க மது.. ரொம்ப நல்ல மரியாதை.. ” என்று ஏற்றிவிட 

                  “நீ ரொம்ப அதிகமா பேசுற அபி.. மாதவி என் தங்கச்சி..” என்று நினைவூட்டினார் மது..

                 “இன்பன் என் மகன்.. எனக்கு இந்த நிமிஷம் என் மகனோட வாழ்க்கை மட்டும்தான் முக்கியம்.. வேற எதையும், யாரையும் நான் யோசிக்கிறதா இல்லை..” என்று முடித்துவிட்டார் அபி..

                    “உங்களை போல தான் எனக்கும்.. என் மக வாழ்க்கை தான் முக்கியம்.. நீங்க எப்படி இப்படி ஒரு பழியை அவ மேல போடலாம்.,..இது எப்படி நியாயமாகும்.. என்ன ஆதாரம் இருக்கு உங்ககிட்ட..” என்று ஆவேசமாக மாதவி கேட்க 

                  “ஆதாரமாஇன்னும் கூட இத்தனை பிரமாதமா நடிக்கிற பார்த்தியா.அங்கே நிற்கிற நீ…  ஆதாரம் தானே வேணும்.. இதோ உன் மக நிற்கிறா இல்ல, கேளுஇல்ல உன் புருஷனை கேளு.. “

                  “ஏன் இத்தனை பேசுற இல்ல.. உன் மக கெட்டு போனவ இல்ல ன்னு உன் புருஷன் தலையில அடிச்சு நீ சத்தியம் செஞ்சிடு பார்க்கலாம்…” முறைப்பாகவே கேட்டார் அபிராமி

                 மாதவி என்ன செய்வது என்று முழிக்கநீங்க பொய் சத்தியம் செஞ்சாலும் செய்விங்க.. அப்படிப்பட்ட குடும்பம் தானே உங்களோடது.. ” என்றவர் மதுசூதனின் தாயாரின் அறைக்குள் நுழைய மாதவி நெஞ்சில் கைவைத்து விட்டார்.

                வசந்தாவின் அறையில் தான் வைத்திருந்த கோப்பை கையில் எடுத்து வந்தவர்நீ கேட்ட ஆதாரம்.. உன் அம்மா இறந்த அன்னிக்கு என்ன கேட்ட, என் அம்மாவை கவனிக்கமே விட்டுட்டீங்களே அண்ணி… “

               “இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.. நீங்க செய்ய நினைச்ச பாவத்தோட சம்பளம்தான் உன் அம்மாவோட சாவு..  அவங்க குற்றவுணர்ச்சிதான் அவங்களை கொன்னுருக்கு.. உன் அம்மாவோட சாவுக்கு நீயும், உன் மகளும் தான் காரணம்..” என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டியவர் நெஞ்சை பிடித்துக் சோஃபாவில் அமர்ந்துவிட்டார்.

                   மதுசூதனன் பதறியவராக மனைவியின் அருகில் செல்ல, “இவங்க யாரும் என் வீட்ல இருக்கக்கூடாதுஇனி ஒரு நிமிஷம் இவங்க இங்கே இருந்தாலும், நான் இந்த வீட்ல இருக்கமாட்டேன்..” என்று  அவர் கொதிக்க 

                “இங்கே யாரும் உங்க வீட்டுக்கு வாழ்க்கைப்பட காத்து கிட்டு இருக்கல.. அதோட இது என் பாட்டியோட வீடு.. இங்கே எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல நீங்க யாரு..” என்று ஆத்திரமாக கேட்டாள் மஞ்சரி..

                  அபிராமி அமைதியாக அவளை பார்த்திருக்க, அவளோஆமாசும்மா கொதிக்கிறிங்க .. ஏன் உங்க பிள்ளைக்கிட்ட குறையே இல்லையாஎன்ன மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் மறந்து போச்சா.. இன்னொருத்தியோட குடும்பம் நடத்தியவன் தானே இவன்.. அதுவும் போக இப்பவும் அரை பைத்தியம்இவனுக்கு என்னை விட எவ வருவா..” என்று எள்ளலாக அவள் கேட்க 

                      அவள் பேச்சை இதுவரை பொறுத்திருந்த அபிராமி கடைசி வார்த்தையில் எட்டி அவள் முடியை பிடித்திருந்தார்.. அவள் அவரின் கையை பிடிக்க முற்பட, சாமி வந்தவர் போல் ஆவேசத்துடன் மறு கையால் கன்னம் பழுக்க ஒரு வைத்தவர், அவளை அந்த வீட்டின் வாசலுக்கு வெளியே இழுத்து தள்ளி இருந்தார்.

                   மாதவி அதே அளவு கோபத்துடன் அண்ணியை நெருங்க, மதுசூதனன் மனைவியை அணைவாக பிடித்துக் கொண்டவர்இனி ஒரு நிமிஷம் நீங்க யாரும் என் வீட்ல இருக்கக்கூடாது.. போங்க வெளியே.. ” என்று கத்திவிட்டார்.

                 ஆனால் இவர்கள் அத்தனை பெரும் கவனிக்க மறந்த ஒருவன் பேரின்பன்.. தலையை பிடித்துக் கொண்டு அந்த சோஃபாவில் அமர்ந்து விட்டிருந்தான் அவன்..

                     

                      

                    

Advertisement