Advertisement

அன்பு நெஞ்சங்களுக்கு..

உங்கள் அன்பையும், ஆதரவையும்,  ஏதேனும் கருத்துப்பிழை, எழுத்துப்பிழை இருப்பின் தெரியப்படுத்துங்கள் சகோக்களே. மௌனமாக படித்துவிட்டு மட்டுமே போகாமல் உங்கள் கருத்துக்களை விமர்சனங்களாக வழங்கி என்னை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

பகுதி – 01

ஆதவனை விரட்டி விட்டு இருள் தனது ஆளுமையை துவங்கி இருந்த நேரம். ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த அந்த வீடு.  கரண்ட் வேற கட்டாகி இருந்ததால் பயங்கரமாக இருள் சூழ்ந்து காணப்பட்டது.

ஜன்னல் கதவுகள் தென்றலுக்கு இசைந்து கொடுத்து ‘படபடவென’ ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

சுமித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அவளது பெற்றோர் வெளியில் சென்றவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. சுமித்ராவிற்க்கு இருள் என்றால் மிகுந்த பயம். ஏற்கனவே பயந்து போய் இருந்தவளை அந்த காரிருள் அவளது  கண்களின் கருவிழிப் பாவை மிரளும் அளவிற்கு மேலும் மிரட்டியது. மெழுகுவர்த்தி ஏத்த கூட தைரியம் இன்றி அழுது கொண்டே பயத்தின் உச்சத்தில் தனது அறையில் அமர்ந்திருக்க.

“அப்போது ஒரு மெல்லியசத்தம் அவளது  காதுகளுக்கு நன்றாக கேட்டது.  அது என்ன சத்தமாக இருக்கும்”  என்று கூர்ந்து கவனித்தாள்.  சரியாக அவளால் யூகிக்க முடியவில்லை என்றாலும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றி அவளுக்குள் மேலும் பயத்தை அதிகரித்தது.

“சுமித்ரா அவசரத்தில்  தனது தாய்க்கு போன் பண்ணினாள். அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு..  கொஞ்சம் சீக்கிரம் வாங்க”  என்று கூற.

“இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவோம் சுமி.  பயப்படாத. எவ்வளவு பெரிய பொண்ணு. இன்னும் பயந்துட்டு இருக்க” என  திட்டிவிட்டு  போன் இணைப்பை துண்டித்தார்.

“கடிகாரத்தில் முட்கள் மெதுவாக நகர. சுமித்ராவின் விழிகள் அரைமணி நேரம் எப்போது ஆகும்”  என  கடிகார முட்களோடு போராடிக்  கொண்டிருந்தது.

“திடீரென அந்த சத்தம் மீண்டும் சுமிக்கு கேட்டது. அவளது இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. இரு விழிகளும் மிரண்டு போனது. அந்த சத்தம் அ… அது.. அது” என மேற்கொண்டு வார்த்தை வராமல் தடுமாறினாள். “அ.. அ.. அம்.. அம்மா” என தட்டுத்தடுமாறி  உச்சரித்தாள்.

மெதுவாக  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த அறையின் கதைவை திறந்து பார்த்தாள். யாரும் இல்லை.  தனது மொபைலில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் மெதுவாக சமையலறைக்கு வந்தாள்.  மெழுகுவர்த்தியை எடுத்து ஏற்றினாள்.  அதைக்கொண்டு வந்து ஹாலில் வைத்தாள். அந்த அறை  முழுவதும் ஒரு மெல்லிய ஒளி படர.

சோபாவில் வந்து கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்தாள். பயத்தில் கடவுளின் பெயரை உச்சரித்து கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அப்போது ஒரு உருவம் அவளது அருகில் வந்தது. சுமி கண்களை இறுக்கமாகமூடி இருக்க அவளது இடுப்புபகுதியில் மெதுவாக தனது ஸ்பரிசத்தை கொடுக்க.

வித்தியாசத்தை உணர்ந்த சுமி  முழித்துப் பார்த்தாள். பார்த்தவள் பயங்கரமாக அலற.

ஆனாலும் அந்த சத்தத்திற்கு கொடுக்காமல் மெல்ல மெல்ல ஊர்ந்து அவளது  வயிற்றுப் பகுதியைத் தொட..  சுமி  சோபாவில் இருந்து கீழே இறங்கி கத்தினாள். குதித்தாள். பயத்தில் அவளின் குரல் நடுங்கியது.. அவள் போட்ட ஆட்டத்தில் வயிற்றில் ஏறிய அந்த பல்லி கீழே விழுந்து ஓடிய இடம் தெரியாமல் போனது.

“ச்ச்சீ. கருமம். பல்லி. இதுவேற நேரம் காலம் தெரியாம”  என திட்டிக் கொண்டாள்.

“மீண்டும் அந்த அமானுஷ்ய குரல் சுமிக்கு மெல்லியதாக கேட்டது. அடித் தொண்டையில் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட.. கொஞ்சம் தண்ணீர் குடித்தாள். மடக்.. மடக்” என தண்ணீர் குடிக்கும் மெல்லியதாக சத்தம் கேட்டது..

“மீண்டும் அந்த அறையை சுற்றி தன் கண்களை சுழல விட்டாள். மறுபடியும்அந்த சத்தம். அவளது இதயம் படபடத்தது. துடிப்பு அதிகரித்து. ஏதோ வித்தியாசமான சத்தமா இருக்கே. பேசாம பூஜை அறைக்கு போய்டலாம்” என நினைத்தவள் பூஜை அறைக்கு சென்று சாமியின் முன் அமர்ந்துகொண்டாள்.

“சுமி.. சுமி.. கதவ திறம்மா”  என அவளது தாய் லட்சுமியின் குரல் கேட்க..

“கடவுளே! நன்றி. அம்மா வந்துட்டாங்க”  என்று மகிழ்ச்சியில் ஓடிச்சென்று கதவைத் திறந்தவள் அதிர்ந்து போனாள்.. ” அ.. அம்.. அம்மா”  என அழைத்தாள்.. அங்கு யாரும் இல்லை.. பயந்தவள் உடனே தனது மொபைலை எடுத்து அம்மாவிற்கு கால்  பண்ணினாள்..

“என்னம்மா. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவோம். கொஞ்சம் பொறுக்கோம்மா” என கட் பண்ணினாள்.

“அப்போ அம்மா இன்னும் வர்ல. அப்படினா அந்த குரல் யாரோடது.. அ.. அந்.. அந்த.. ச.. சத்.. சத்தம் யா.. யாரோடது” என நடுக்கத்தில் யோசித்தாள்..

அப்போது அவளது கைகளை  யாரோ மென்மையாக தீண்டியது போன்ற சில்லென்ற ஒரு உணர்வு..  கைகளை  தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.. அவளது கையில் ஏதோ பிசுபிசுப்பாக ஒட்டி இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட அந்த மெழுகுவர்த்தி ஒளியில் கைகளைப் பார்த்தாள்..

“சில்லென சுமியின் கைகளில் ஈரமான ரத்தம் பிசுபிசுப்பாக காணப்பட்டது. அதிர்ச்சியில் உறைந்து போனாள். வீல்”  என பயங்கரமாக அலறினாள். ஆனால் அந்த சத்தம் அவளுக்கு கூட கேட்கவில்லை. கண்கள் மிரள, உடலெங்கும் நடுங்க, இதயத்துடிப்பு அதிகரிக்க அந்த இடத்தை சுற்றிலும்பார்த்தாள்.

அங்கு எதுவுமே அவள் கண்களுக்கு தென்படவில்லை.  இதயத்துடிப்பு இடம் மாறிக்கொண்டு இருந்தது. “அப்போ இந்த ரத்தம் எப்படி வந்தது. இங்க என்ன நடக்குது. அது.. அது… அந்த குரல்.. இந்த ரத்தம் எப்படி ?” என தனக்குத்தானே கேள்விகளை கேட்டுக் கொண்டாள். அப்போது மீண்டும் காலிங் பெல் அடிக்கும் சத்தம் அவளது கவனத்தை திசை திருப்பியது.

“அம்மா, அப்பா வந்திருப்பாங்களா? இருக்கும். அரைமணி நேரம் ஆகுதே” என உள்ளூர இருந்த பயத்தை மனதின் ஓரத்தில் வைத்துவிட்டு கதவைத் திறந்தாள்.

“அ.. அம்மா. அம்மா” என தன் தாயை கட்டிக்கொண்டாள். விழிகளில் தேக்கி வைத்திருந்த கண்ணீர் மடைதிறந்த வெள்ளமென உடைந்து வழியத் தொடங்கியது.

சுமி, “என்னடா இது. சின்ன பிள்ளை மாதிரி இப்படி அழற. அதான் அம்மா வந்துட்டேன்ல. அழாத” என கண்களை துடைத்து விட்டாள். கொண்டு வந்த பொருட்களை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். அனைத்தையும் கீழே வைத்துவிட்டு, “சுமி கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வாடா” என கேட்க.

“அம்மா. இங்க என்னமோ இருக்கும்மா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீயும் வாம்மா” என தாயை கட்டிக்கொண்டாள்.

சுமி எதுக்கு இப்படி பயப்படற. உனக்கு என்ன ஆச்சு? இங்க இருக்கு.

“அம்மா. ப்ளீஸ். நான் சொல்றத நம்பும்மா. அப்பா எங்கம்மா. அப்பா..அப்பா” என தந்தையை கண்கள் மிரள, கண்ணீர் வழிய தேடினாள்.

“அப்பா இன்னும் கொஞ்சம் வேலை இருக்குனு வெளில போனார். உங்கப்பா வர லேட் ஆகும். என்னடு ஆச்சு? எதுக்கு சுமி அழற. அம்மா நான் இருக்கேன் டா”
என சுமித்ராவின் தலையை வருடிவிட்டாள்.

“அம்மா, இங்க என்னம்மோ இருக்கு. ஏதோ வித்தியாசமா சத்தம் கேட்குதும்மா. என் கைல.. கைல.. ரத்தம்.. ரத்தம்.. அம்மா.. அம்மா” என கதறினாள். ஏதோ தொண்டையை அடைப்பது போல இருந்தது.

“என்னடி சொல்ற. என்ன ரத்தம்? என்ன உளறிட்டு இருக்க. என்ன நடந்துச்சி” என அவளது தோளைப் பிடித்து உலுக்கினாள்.

“என் கைல ரத்தம் இருந்துச்சும்மா. அது எப்படி வந்துச்சினு தெரில. ஏதோ பயங்கரமா சத்தம் கேட்குதும்மா. எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா” என குலுங்கி குலுங்கி அழுதாள்.

“ரத்தமா? எப்படி உனக்கே தெரியாம உன் கைக்கு வரும். நீ ஏதோ பயத்துல உளறிட்டு இருக்க. நம்ம வீட்டுல அப்படிலாம் எதுவும் இருக்காது சுமி. நீ பயத்துல இருக்க. அதெல்லாம் உன் கற்பனை. அவ்வளவு தான். நீ இப்படி உட்காரு. நான் தண்ணி கொண்டு வரேன்” என ஒரு எடுத்து வைத்தாள்.

அப்போது அந்த அகோரமான அலறல் சத்தம் லட்சுமியின் காதுகளுக்கும் கேட்டது. “சுமீஈஈஈஈஈஈ. உன்ன விட மாட்டேன்டி. உன்னோட உயிர் என்கைல தாண்டி போகும்” என பயங்கரமான குரல் லட்சுமியின் காதுகளை தீண்டியது.

லட்சுமியின் கால்கள் நடையை மறந்து அந்த இடத்திலேயே நின்றது. “சு.. சுமி”
என வார்த்தை வராமல் நா குளறியது. உதிரமே உறைந்து விடுவது போலத் தோன்றியது. மெதுவாக சுமித்ராவின் அருகில் வந்து நின்றாள்.

“அம்மா. நான்.. நான்.. சொன்னேன்ல. ரொம்ப பயமா இருக்கும்மா”  என்றாள்.

தீடீரென அந்த பயங்கர சத்தம் இவர்கள் அருகில் மிக நெருக்கமாக ஒலித்தது. துர்நாற்றத்துடன் கூடிய மோசமான கெட்ட வாடையை அவர்களால் உணர முடிந்தது. நிமிடத்திற்கு நிமிடம் மரணபயம் அதிகரிக்கத் தொடங்கியது.

பயத்தின் உச்சத்தில் இருந்த அவர்களால் எதையும் சிந்திக்க முடியாமல் தடுமாற்றத்துடன் உடல் நடுங்க நின்றிறுக்க.

அந்த நொடியில் ஒரு அமானுஷ்ய உருவம் அவர்கள் முன் தோன்றியது. அந்த உருவத்தை அவர்களால் முழுவதும் உணர முடியாத அளவிற்கு கொடூரமாக காட்சியளித்தது. உடல் முழுவதும் வெந்து, விழிகள் பிதுங்கி, ஆங்காங்கே ரத்தமும் சதையமாக கிழிந்து தொங்கியது. 

அந்த அமானுஷ்ய உருவம் கண்ணாடியில் ஒவ்வொரு  எழுத்துக்களாக  ரத்தத்தில்  எழுதத் தொடங்கியது.

சுமித்ரா விழிகள் விரிய அதைப் பார்த்தாள்.  அந்த எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கினாள்..

“டிசம்பர் 28 ”  அன்று  இரவு  12. 30 உனது வாழ்வின் இறுதி நிமிடங்கள் என எழுதியது.

உயிர் உறையும்…..

Advertisement