Advertisement

அத்தியாயம் – 24

“மல்லி, ரெடியா… சீக்கிரம் வா, நாம இப்ப கிளம்பினா தான் 11.30 முகூர்த்தத்துக்கு மண்டபத்துக்கு போயி சேர முடியும்…” கையிலிருந்த வாட்சைப் பார்த்துக் கொண்டே ஹாலில் இருந்து குரல் கொடுத்தார் பொன்வண்ணன்.

அவருடன் பாங்கில் பணிபுரியும் அசிஸ்டன்ட் மானேஜர் ரகுவரனின் மகளது கல்யாணத்திற்கு காஞ்சிபுரம் செல்வதற்காய் இருவரும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

“இதோ வந்துட்டேங்க…” அடுக்களையிலிருந்து குரல் கொடுத்த மல்லிகா தலையில் பூ வைத்துக் கொண்டிருந்த சின்ன மருமகளிடம்,

“காவி… சீக்கிரம் வச்சிவிடு, உன் மாமா கால்ல வெந்நீர் கொட்டின கதையா குதிக்கத் தொடங்கிட்டார், இன்னும் கொஞ்சம் லேட்டானாலும் என்னை விட்டுட்டுக் கிளம்பினாலும் கிளம்பிடுவார்…” என்றவரிடம், “இதோ, முடிஞ்சுது அத்தை…” சொல்லிக் கொண்டே தலையில் மல்லிகைப் பூவை வைத்து இருபுறமும் பின் குத்தி சரி செய்தாள். கல்யாணமாகி இரண்டு நாட்கள் கழிந்திருந்தது.

“அம்மாடி, அப்படியே இந்த புடவை மடிப்பை கொஞ்சம் சரி பண்ணி விடேன்…” எனவும் குனிந்து சரி செய்தாள் காவ்யா.

“ம்ம்… போதும் மா… கவின் உன்னைக் கூட்டிட்டு ஏதோ பிரண்டு வீட்டுக்கு கிளம்பணும்னு சொன்னான், எத்தன மணிக்கு கிளம்பறீங்க…?”

“மகாபலிபுரம் அத்தை… டிபன் முடிச்சிட்டு கிளம்பினா மதியம் லஞ்ச் அங்க சாப்பிட்டு அப்படியே சுத்திப் பார்த்திட்டு வர நைட் ஆகும்னு அத்தான் சொன்னார்…”

“ம்ம்… பார்த்து பத்திரமாப் போயிட்டு வாங்க…” சொல்லும்போதே ரம்யா அங்கே வந்தாள்.

“ரம்மிமா, நீங்க எங்கயும் வெளிய போகலையா…?”

“இல்லத்தை…”

“அர்ஜூனும் கல்யாணத்துக்கு லீவு போட்டு வீட்டுல தானே இருக்கான், நீங்களும் எங்காச்சும் போயிட்டு வரலாம்ல…”

“ம்ம்… மெதுவாப் போயிக்கலாம் அத்தை…”

“சரி… இன்னைக்கு ஷட்டவுன் சொல்லிருக்காங்க, உங்களுக்கு மட்டும் சமைச்சாப் போதும்… ஏதாச்சும் மிக்ஸில அரைக்கணும்னா அரைச்சு வச்சிக்க, இல்லேன்னா அர்ஜூனை அழைச்சிட்டு ஹோட்டல்ல போயி சாப்பிட்டு வாங்க, நாங்க வர சாயந்திரம் ஆயிடும்…”

“நான் பார்த்துக்கறேன் அத்தை, நீங்க கிளம்புங்க…”

“ம்ம்… உன் மாமா வேற கைல கட்டின கடிகாரத்தை ரொம்ப நேரமா முறைச்சுப் பார்த்திட்டு இருக்கார்… சரி வரோம் மா, பத்திரமா இருங்க…” என்றவர் ஹாலுக்கு செல்ல,

“அப்பாடி ஒரு வழியா கிளம்பியாச்சா… வா, வா…” என்ற பொன்வண்ணன் முன்னில் நடந்தார். கவினும் அர்ஜூனும் இரு காரையும் வெளியே நிறுத்தி கழுவிக் கொண்டிருந்தனர். மகன்களிடமும் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிப் போக, நால்வரும் உள்ளே வந்தனர்.

“அண்ணா, நீங்களும் எங்களோட மகாபலிபுரம் வரீங்களா…”

“இல்லடா கவின், எனக்கு உன் ஆபீஸ் பிரண்டெல்லாம் தெரியாது… உங்கள லஞ்சுக்கு அழைச்சிருக்கும்போது நாங்க ஒட்டிட்டு வந்தா நல்லாருக்காது, நீங்க போயிட்டு வாங்க…”

“ஓகே அண்ணா, இப்ப குளிச்சு கிளம்பினா சரியாருக்கும்…” என்றவன் ரம்யா வெங்காயம் தோலுரிப்பதைக் கண்டதும்,  “அண்ணி… தோசைக்கு உங்க ஸ்பெஷல் இன்ஸ்டன்ட் சட்னி செய்துடறீங்களா, ப்ளீஸ்…” எனவும் புன்னகைத்தாள்.

“செய்து வைக்கிறேன்…” என்றதும், “தேங்க்ஸ் அண்ணி…” என்றவன் அருகில் நின்ற காவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நகர்ந்தான்.

“காவி… வா, நம்ம ரெடியாகலாம்…” சொன்னபடி அவளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டே படியேற அவள் நெளிந்து கொண்டே அவனுடன் நடந்தாள். அவர்களைப் பார்த்தபடி நின்ற ரம்யா அர்ஜூனின் குரலில் கலைந்தாள்.

“ரமி…

“ம்ம்… என்ன…?”

“நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா…?”

“கொஞ்சம் தேங்கா மட்டும் சட்னிக்கு துருவிக் கொடுத்துடுங்க, கரண்ட் போறதுக்குள்ள எல்லாத்தையும் அரைக்கணும்…”

“ஓகே…” என்றவன் ஒரு தேங்காயை உடைக்கப் போக,

“அர்ஜூன், இருங்க… இந்த தேங்காத் தண்ணியை எடுத்து வச்சா ஆப்பத்துக்கு யூஸ் ஆகும்…” என்றவள் ஒரு கிளாஸை எடுத்து நீட்ட புன்னகையுடன் தேங்காயை உடைத்து அதில் தண்ணீரைப் பிடித்துக் கொடுத்தான் அர்ஜூன்.

அவன் தேங்காய் துருவத் தொடங்க அவள் வெங்காயத்தை சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள். அடுத்து அவள் தேங்காய் சட்னியும் செய்துவிட்டு, தோசை ஊற்றத் தொடங்க கரக்ட்டாய் பவர் ஆப் ஆனது.

“வேற ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா ரமி…”

“இல்ல, நான் பார்த்துக்கறேன்…” என,

“ம்ம்… அப்ப நானும் பார்க்கறேன்…” என்றவன் உணவு மேஜை மீது சாய்ந்து நின்று அவளைப் பார்த்தபடி நிற்க அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

“ப்ச்… எதுக்கு இங்க நிக்கறிங்க, போயி ஹால்ல உக்காருங்க அர்ஜூன்…” என்றாள் முகத்திலிருந்த வியர்வையை நைட்டியின் புறங்கையால் துடைத்துக் கொண்டே.

“என்ன ரமி, நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம தானே இருக்கேன், பார்க்கக் கூட கூடாதுன்னா எப்படி…”

“ப்ச்… அது அப்படிதான், நீங்க இப்படி வெறிக்க வெறிக்கப் பார்த்தா எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை…”

“அச்சோ, நான் வேணும்னா உன்னைத் தூக்கிக்கட்டுமா…?” கேட்டவன் அவளை நெருங்க திகைப்புடன் பார்த்தாள்.

“அர்ஜுன், என்னாச்சு உங்களுக்கு…?” என்றவளின் அதட்டும் குரலில் அவள் முகத்தையே தவிப்புடன் ஒரு நிமிடம் பார்த்தவன், “ச..சாரி ரமி…” என்றபடி அங்கிருந்து நகர இப்போது தவிப்பது அவள் முறையானது.

சிறிது நேரத்தில் கவினும், காவ்யாவும் புறப்பட்டு புன்னகையுடன் கீழே வந்தனர்.

“சாரிக்கா, இன்னைக்கு எல்லா வேலையும் நீயே செய்ய வேண்டியதாப் போயிருச்சு…” காவ்யா வருத்தமாய் சொல்ல, “பரவால்ல காவி, சாப்பிட வாங்க…” என்றாள்.

“அண்ணா, நீயும் சாப்பிட வா…” கவின் அர்ஜூனை அழைக்க,

“நீங்க சாப்பிடுங்க, நான் அப்புறம் சாப்பிடறேன்…” என்று அர்ஜூனின் குரல் மட்டும் வந்தது.

“ஹூம்… பார்த்தியா காவி, அண்ணன் அண்ணியோட சாப்பிடலாம்னு நினைப்பார் போல, வா… நாம சாப்பிட்டு கிளம்புவோம்…” என்றான் கவின் நமுட்டு சிரிப்புடன். அது ரம்யாவின் காதிலும் விழ, கேட்காத போல் இருந்தாள்.

அவர்கள் சாப்பிட்டுக் கிளம்ப அர்ஜூனுடன், ரம்யாவும் வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தாள். அர்ஜூன் மாடிப்படி ஏறப்போக, “அர்ஜூன், வாங்க சாப்பிடலாம்…” என்றாள்.

“இல்ல, பசிக்கல… நீ சாப்பிடு…” திரும்பிப் பார்க்காமல் சொன்னவன் அறைக்கு செல்ல அவளுக்கு கோபம் வந்தது.

“வேண்டாம்னா போங்க…” என்றவள் தட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்தாலும் சாப்பிட மனசு வரவில்லை.

“ச்ச்சே, நான் ஏன் இப்படி இருக்கேன்… ஏத்துக்கவும் முடியாம, ஒதுக்கவும் முடியாம…” தன்னைப் பற்றி யோசிக்கும் போதே சுயகழிவிறக்கத்தில் கண் கலங்கியது.

சாப்பிடப் பிடிக்காமல் தட்டை எடுத்து வைத்து விட்டு, கணவனைத் தேடி மாடிப்படி ஏறினாள். அறை வாசலில் நின்றவள் கட்டிலில் படுத்திருந்த அர்ஜூனிடம், “இப்ப சாப்பிட வரீங்களா, இல்லியா…” என மிரட்டலாய் கேட்க,

“நான் குளிச்சிட்டு அப்புறம் சாப்பிடறேன் ரமி… நீ போயி சாப்பிடு…” என்றான் அமைதியாக.

“இதுக்குதான், இதுக்கு தான் நான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன், கேட்டிங்களா… நான் அவ்ளோ தூரம் சொல்லியும் நீங்கதான என்னைக் கட்டிக்கணும்னு கிடந்து துடிச்சிங்க, நல்லா அனுபவிங்க…” சொன்னவள்  கண்  கலங்க கட்டிலில் அமர அர்ஜூன் துடித்துப் போனான்.

“ஹேய் ரமி… என்னமா, எதுக்கு இப்படி பீல் பண்ணற, நிஜமாலுமே எனக்கு இப்ப பசிக்கலை, அப்புறம் உன்னைப் பக்கத்துல பார்த்தா…” என்றவன் சொல்லாமல் நிறுத்த,

“பார்த்தா… என்ன…? சொல்லுங்க…” என்றவளைக் குறும்புடன் நோக்கியவன்,

“கை ரொம்பப் பரபரங்குது, என்னெல்லாமோ பண்ணத் தோணுது…” என்றான் திருட்டு சிரிப்புடன்.

“என்ன, என்ன பண்ணத் தோணுது…” என்று அவள் அதற்கும் எகிற அவள் முகத்தை நெருங்கியவன் பட்டென்று கன்னத்தில் முத்தமிட்டு,

“இதோ, இப்படி கன்னத்துல கிஸ் பண்ணனும்னு தோணுது…” காது மடலில் மெல்லக் கடித்து, “உன் காது மடலைக் கடிக்கணும் போலருக்கு…” என சொல்லிக் கொண்டே கூச்சத்தில் நெளிந்தவளின் உதட்டை நோக்கி நெருங்க அவனைத் தள்ளி விட்டாள்.

“அர்ஜுன், என்ன பண்ணறிங்க…?”

“பார்த்தியா, டென்ஷன் ஆகிட்ட… இதான், இதுக்குதான் பக்கத்துல இருந்து உன்னை டென்ஷன் பண்ண வேண்டாம்னு கிளம்பி வந்துட்டேன்… நீ பின்னாடியே வந்து அதுக்கும் டென்ஷன் ஆகற, நான் என்ன தான் பண்ணறது…”

“ம்ம்… அப்ப என்மேல கோவிச்சிட்டு சாப்பிடாம வரலியா…? பாவமாய் கேட்டவளை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டுமென அவனுக்குத் தோன்றியது.

பதில் சொல்லாமல் அவன் தன்னையே கண்ணெடுக்காமல் பார்ப்பதைக் கண்டு கூச்சத்துடன் குனிந்து கொண்டவள், “எதுக்கு இப்படி பார்த்து வைக்கறிங்க…” என்றாள் தவிப்புடன்.

“ஏன், பார்த்தா என்ன… அதுக்குதான நமக்கு லைசன்ஸ் கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க…” என்றான் அவனும் விட்டுக் கொடுக்காமல்.

“ப்ச்… அப்படிப் பார்த்தா ஒரு மாதிரி இருக்குல்ல…”

“ஒரு மாதிரின்னா, எப்படி…” என்றான் அவனும் விடாமல்.

“அது..வந்து… ப்ச்… இப்ப சாப்பிட வரீங்களா, இல்லையா…” எனப் பட்டென்று பேச்சை மாற்றினாள்.

“நீ ஊட்டி விட்டேன்னா சாப்பிட நான் தயார்…”

“ஊட்டியும் இல்லை, கொடைக்கானலும் இல்லை… ஒழுங்கு மரியாதையா வந்து சாப்பிடுங்க…” மிரட்டலுடன் சொல்ல, சிரித்தான் அர்ஜூன்.

“ஓகே, ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு, குளிச்சிட்டு வந்து சாப்பிடறேன்…” எனவும்,

“ம்ம்… சீக்கிரம் வாங்க…” என்றவள் அங்கிருந்து நகர டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தான் அர்ஜூன்.

அடுக்களை சிங்கில் கிடந்த பாத்திரங்களை கழுவத் தொடங்கியவள் இரண்டு பாத்திரம் கழுவியதும் பைப்பில் தண்ணி வராமல் போக திகைத்தாள்.

“அடடா, டாங்குல தண்ணி தீர்ந்திடுச்சு போலருக்கே… காலைல அண்ணனும், தம்பியும் ரெண்டு காரையும் கழுவோ கழுவுன்னு கழுவி தண்ணி எல்லாத்தையும் தீர்த்துட்டாங்க போலருக்கு, சரி, மோட்டரைப் போடுவோம்…”

தனக்குள் சொல்லிக் கொண்டே மோட்டார் சுவிட்சைப் போட வந்தவளுக்கு அப்போதுதான் அன்று ஷட்டவுன் என நினைவு வர, “இப்ப என்ன பண்ணறது, ஐயையோ அர்ஜூன் வேற குளிக்கப் போனாரே…” என நினைத்துக் கொண்டே மாடிக்கு ஓடிவர அங்கே அவன் கத்திக் கொண்டிருந்தான்.

“ரமி… ரமி…” கத்திக் கொண்டே இடுப்பில் டவலை சுற்றியபடி உடம்பெல்லாம் சோப்பு நுரையுடன் நின்றிருந்தான்.

அவனை அப்படிக் கண்டதும் ரம்யாவுக்குப் பாவமாய் தோன்ற, “அச்சச்சோ, குளிக்கத் தொடங்கிட்டிங்களா அர்ஜூன், டாங்குல தண்ணி தீர்ந்திடுச்சே…” என்றாள்.

“சீக்கிரம் மோட்டார் போடுமா… ஆ… கண் எரியுதே…” என்றவன் சோப்புக் கையாலேயே கண்ணைத் துடைக்க இன்னும் எரிய உதறினான்.

“அச்சோ அர்ஜூன், இன்னைக்கு ஷட்டவுன்னு அத்தை சொன்னாங்களே, மறந்துட்டிங்களா…?”

“ஐயோ, இப்போ என்ன பண்ணறது…” என்றான் பதட்டமாய்.

“சரி, சரி… நீங்க பாத்ரூம்ல இருங்க… நான் தண்ணி எடுத்திட்டு வரேன்…” என்றவள் வேகமாய் கீழே செல்ல அர்ஜூன் தவிப்புடன், “என்னடா இது, இந்த அர்ஜூனுக்கு வந்த சோதனை…” என பாத்ரூமுக்குள் போய் நின்றான்.

சிறிது நேரத்தில் ரம்யா குடிக்க வாங்கி வைத்திருந்த முப்பது லிட்டர் தண்ணி கேனில் ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மாடிப்படியில் கஷ்டப்பட்டு ஏறி வந்தாள்.

அர்ஜூன் கதவை வெறுமனே சாத்தியிருக்க சத்தம் கேட்டதும், “ரமி, தண்ணி கொண்டு வந்துட்டியா…?” என்றான் சோப்பால் எரியும் கண்ணைத் திறக்காமலே.

“ம்ம்… குடிக்கிற தண்ணியை எடுத்திட்டு வந்தேன், இருங்க பக்கெட்ல ஊத்தித் தரேன்…” சொன்னவள் அந்தப் பெரிய கேனைத் தூக்கி பக்கெட்டில் ஊற்ற முயல அர்ஜூன் ஓரமாய் நின்று கொண்டான். பாதித் தண்ணீருக்கு மேல் அவளால் ஊற்ற முடியாமல் கையிலிருந்து கேன் நழுவியது.

“அர்ஜூன், என்னால கேனைத் தூக்கி ஊத்த முடியலை… பக்கெட்டுல கொஞ்சம் தண்ணி ஊத்திருக்கேன், முகத்தைக் கழுவிட்டு நீங்க பக்கெட்டுல ஊத்துங்க…” என்றாள்.

“ம்ம்… நீ கொஞ்சம் ஓரமா நின்னுக்க ரமி…” என்றவன் கையால் சுற்றிலும் தடவ பக்கெட்டிலிருந்து மக்கில் அவளே தண்ணீரை எடுத்து நீட்ட வாங்கிக் கொண்டான்.

அவன் முகத்தைக் கழுவ அவள் மீதும் தண்ணீர் தெறித்தது.

“மெதுவா அர்ஜூன், என் மேலயும் தண்ணி தெறிக்குது…”

“ஓகே, ஓகே…” முகம் கழுவிவிட்டு அவள் கையிலிருந்த கேனை வாங்கி பக்கெட்டில் தண்ணீரை கவிழ்த்தான்.

“ரமி… உன் மேல சோப்பு ஆயிருக்கு பாரு…” என்றவன் சற்று தண்ணீரை எடுத்து வேண்டுமென்றே அவள் கன்னத்தைத் துடைக்க அவனது நெருக்கமும், குளிர்ந்த கையின் ஸ்பரிசமும் அவளுக்குள் ஒருவித அனலை மூட்ட, படபடப்புடன் கண்ணை மூடிக் கொண்டவள் சட்டென்று வெளியே செல்ல முயல இழுத்து அணைத்தான் அர்ஜூன். அவனது குளிர்ந்த தேகத்தின் வெம்மை அவளையும் பற்றிக் கொள்ள கண் மூடி சிலிர்த்து நின்றவளின் கழுத்து வளைவில் தன் ஈர முத்தத்தைப் பதித்தான் அர்ஜூன். அவளிடம் மறுப்பேதும் இல்லாவிட்டாலும் அப்படியே நிற்கவும் முன்னேறத் தயங்கி அவள் முகம் பார்த்தான்.

“ரமி…” அவனது குரலில் கண்ணைத் திறந்தவளின் முகத்தில் நிறைந்திருந்த கிறக்கம் அவனை உற்சாகம் கொள்ளச் செய்ய அந்தக் கண்களை சந்திக்க முடியாமல் அவன் நெஞ்சுக்குள் முகத்தை ஒளித்துக் கொள்ள முயன்றாள் ரம்யா.

அவனது ரமி என்ற அழைப்பு காது மடலில் உரச, அதற்கு மேலும் விலக முடியாமல் அவனை இறுக்கிக் கொண்டாள். பெண்ணவளின் மென்மைகளை உணரும் வேகத்தில் ஆணவனின் கைகள் மேனியில் தவழ பெண்மை நெகிழத் தொடங்கியது. அவன் கைகளுக்குள் பூமாலையாய் கிடந்தவளைப் புன்னகையாய் நோக்கியவன் பக்கெட்டில் இருந்த தண்ணீரை இருவரின் மீதுமாய் ஊற்றினான்.

காதலின் மோகத்தீயை காட்டாற்று வெள்ளத்தாலும் அணைக்க முடியாதபோது அந்த தண்ணீர் மட்டும் என்ன செய்து விடும். தேகத்தின் வெளியே குளிர்மையும், உள்ளே வெம்மையும் ஒருசேர அவளைத் தவிக்க வைக்க அவனது சீண்டல்களில் மொத்தமாய் தன் வசமிழந்து, “அர்ஜூன்… என் அர்ஜூன்…” என்ற நினைவு மட்டுமே அவள் மனதுக்குள் நிறைந்திருக்க இருவரும் தாம்பத்யத்தின் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கி இருந்தனர்.

அவள் உணர்வுக்குள் தன் காதலைக் கடத்தி உயிருக்குள் தன்னையே விதைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

கடந்து போன காதலின் வலிகளின் தடம் மறந்து, புதிய காதலின் சந்தோஷ வழிகளில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருந்தாள் ரம்யா. சில நேரத்தில் காமமும் காதலை மீட்டெடுக்கும் வழியெனத்தான் தோன்றுகிறது.

ஆங்காரமும், கோபமுமாய் எப்போதும் திமிறிக் கொண்டிருந்தவள் அவனது அன்பான கைகளுக்குள் சிறு குழந்தை என கிடந்தாள். இறுதியில் ஒன்றுக்கு இரண்டு குடி தண்ணீர் கேனை செலவழித்து இருவரும் குளித்து வந்தனர்.

வேறு உடைக்கு மாறி கண்ணாடி முன் தலை துவட்டியபடி நின்ற ரம்யாவின் முகத்தில் தெரிந்த நாணத்தின் செம்மை, அவன் காதலை முழுமையாய் உணர்ந்து கொண்ட பெண்மையின் பூரிப்பு, பின்னில் நின்று வெற்றுக் கழுத்தில் இதழ் பதிக்கும் அர்ஜூனின் செயலில் இன்னும் அதிகமானது.

உன் இதழ்களுக்குள்

பஞ்சமாகிக் கிடக்கிறது…

உனக்கும் எனக்குமான

இடைவெளியை காதலிட்டு

நிரப்பும் ம்ம்ம் என்ற

ஒற்றை வார்த்தை…

Advertisement