Advertisement

அத்தியாயம்-9

கீதாவின் கேள்விக்கு பதிலாக அவனிடம் இருந்து பேசலாம் அதற்குதானே அழைத்து செல்கிறேன். அதற்குள் என்ன அவசரம்  என்றான் அலட்சியமான தோள் குலுக்கலுடன்.

அவனின் ஒருமை அழைப்பு மனதை பாதிக்க ஹே நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்.நீ பாட்டுக்கு போனா என்னடா அர்த்தம்.முதன் முதலில் பார்க்கும் பெண்ணிடம் இப்படிதான் பேசுவியா மரியாதை கொடுத்து பேசு என்றாள்.

ஹோ அப்புடியா டார்லிங் நீ என்ன பல முறை பார்த்திருக்கிறாயா என்றான் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டும் கண்ணில் குறும்புடனும்,

டேய் நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்கிறாய். ஒழுங்காய் கேட்கும் கேள்விக்கு பதில் சொல் இல்லை என்னுடைய கராத்தே திறமையை காட்ட வேண்டி வரும் என்றாள் கையை முறுக்கி கொண்டு.

என்னடி போனா போகுதுனு பார்த்தா ஏவரா பேசற கொஞ்சம் நேரம் உன் வாய மூடறியா.

டேய்….. யார பாத்து டி போடற வாய ஒடச்சுருவேன் மரியாதையா பேசுடா.

நீ மரியாதையா பேசிருறியாடி.நீயும் என்னை இப்ப தானே பர்ஸ்ட் டைம் பாக்கற.நீ இப்படிதான் பரிஸ்ட் டைம் பாக்கறவங்ககிட்ட மரியாத இல்லாம பேசுவியா.

நான் மரியாதையா பேசறதும் பேசாததும் அவங்க அவங்க நடவடிக்கை பொறுத்தது.நீ ஒரு புலுகு மூட்ட சோ உனக்கு இந்த மரியாதை போதும்.

கீதா பேசுவதையே கடுப்புடன் கேட்டு கொண்டு இருந்தவன் திடீரென்று அவளுக்கு பின்னால் எட்டி பார்த்தான் அவன் கண்களில் தான் எதிர்பார்த்தது நடந்துவிட்டது என்ற  மகிழ்வு உண்டாக்க திரும்பி கீதாவை பார்த்து சிரித்துகொண்டே அப்படிங்களா மேடம் ஓகே மேடம் என்று பணிவு போல் கூறியவன் வாங்க மேடம் போகலாம் என்று காரினுள் அமர வைத்தான்.

கீதாவோ அது அந்த பயம் இருக்கட்டும் என்ற கெத்தான பார்வையோடு காரில் அமர்ந்து கொண்டாள்.

காரில் அமர்ந்த நகுலனோ மனதுக்குள் உபதேசம் எல்லாம் அடுத்தவர்களுக்குதான் போல பேச்ச பாரு இவள…… என்னபண்றது அழகா பொறந்து தொலச்சுட்டா அதனால அமைதியா இருக்க வேண்டி இருக்கு என்று புலம்பி கொண்டான்.ஆனாலும் மாமனாரே கொஞ்சம் நீங்க உங்க மகளுக்கு மரியாதை சொல்லி கொடுத்து இருக்கலாம் என்றான் மானசீகமாக.

கீதாவோ என்ன மனிதன் இவன் எந்த கேள்வி கேட்டாலும் பதில் இல்லை. இவன்பாட்டிற்கு வந்து இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டது என்கிறான்.கையை பிடித்து அனைவரின் முன்பும் இழுத்துவருகிறான்.போன வாரம்தான் பார்த்த ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது.

நாம் நினைத்த விசயமாக இருக்கும் என்று அமைதியாக இருந்தாள்,இவன் பண வசதி தெரிந்ததால் இவனுடன் வருகிறேன் என்று நினைப்பான் போல என்ற கோபத்தில் மனதுக்குள் குமுறி கொண்டு இருந்தாள்.

காரில் அமர்ந்தவன் எதிர் பார்த்த ஆள் இவர்களின் காரை நோக்கி வருவதை உணர்ந்து காரை வேகமாக கிளப்பினான்.நினைத்தது நடந்த சந்தோசத்தில் அவன் இருக்க கீதாவோ அவனை திட்டிக்கொண்டே வந்தாள். பொருத்து பொருத்து பார்த்தவன் கீதாவின் வாய் மூடாமல் பேசி கொண்டே இல்லை இல்லை அவனை திட்டி கொண்டே இருக்கவும்.இவளை எப்படிதான் இவர்கள் வீட்டில் சமாளிக்கிறார்களோ வாய் மூடாமல் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்று நினைத்து அவனை பற்றி கூற ஆரம்பித்தான்.

ஹாய் என் பெயர் நகுலன்

 அதற்கு கீதாவோ இருந்துவிட்டு போ அதனால் எனக்கென்ன என்பது போல் பார்க்க அவள் பார்வையை அவன் தெளிவாக அறிந்து கொண்டான்.என்னதான் செய்கிறாள் என்று பார்ப்போம் என்று அவனின் வழக்கமான அழுத்தம் கை கொடுக்க அமைதியாக அவள் சொல்வதை கேட்டு கொண்டு இருந்தான்.

நகுலன் பெயரை சொன்னதும் மீண்டும் திட்ட ஆரம்பித்தாள் கீது ஓஹோ………… அப்படியா, இருவருக்கும் நிச்சயம் முடிந்த பிறகுதான் பெயரே தெரிகிறது இல்லை. என்றாள் குத்தலாக அவள் பார்வையில் புரிந்த விஷயமும் பேச்சில் இருந்த கடுப்பும் அவனுக்கும் கடுப்பை கிளப்பியது என்னமோ இவன் வேலை இல்லாமல் இவளிடம் பேசி கொண்டு இருப்பது போல் நினைப்பாள் போல, அழகா இருக்கா இல்ல அந்த திமிரு.லவ்பண்ணுனா இந்த இம்சைய எல்லாம் சமாளிக்கணுமோ என்று மிரண்டு போனான்.

டேய் நகுலு இந்த பெஞ்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என்று அலறியது அவன் மனசாட்சி. அதுவும்தான் என்ன பண்ணும் காரில் ஏறியதில் இருந்து ஒரு மனிதனை புல் ஸ்டாப் இல்லாமல் திட்டி கொண்டே இருந்ததில் நகுலி காதில் வாங்கினானோ இல்லையோ அவனுடன் இருக்கும் பாவத்துக்கு அதை முழுவதும் கேட்ட மனசாட்சிக்கு காதில் இரத்தம் வர ஆரம்பித்தது.அதில்தான் இந்த கேள்வி எழுந்தது.

நகுலனோ சிரித்து கொண்டே ஆமா என்றி பதில் அளித்தான் அதன் மனசாட்சிக்கு.மேலும் அவள் வாயை மூட வைக்க எனக்கு தெரியும் நீ சின்ன பையன் போ போய் தூங்கு எங்கள டிஸ்டர்ப்பண்ணாத என்றான்.

ஆமா அப்புடியே அவ உன்ன மானே தேனேனு கொஞ்சரா நான் இத டிஸ்டர்ப்பண்றேன் டேய் நீ ஒரு பெரிய பிஸ்னஸ் மேன் நினைப்பு இருக்கா உனக்கு கீழ இருபதாயிரம் பேர் வேலை செய்யறாங்க. மீட்டிங்னு வந்துட்டு இப்புடி வந்த இடத்துல தனி ரூட்விடறியே இது நீதியா,தர்மமா,அடுக்குமா.

டேய் நீ இப்ப போறியா இல்ல என்னோட டார்லிங்க உன்ன நோக்கி திருப்பவா.

ஆத்தி உன்னுடைய விதி இதுதானும் போது மாத்த முடியாது என்று அவனை பாவமாக பார்த்துவிட்டு திரும்ப கீதா பேசுவது மீண்டும் காதில் விழ ஆரம்பித்தது.இவ வாய மூடமாட்டாளா இவ கூட இவன் குடும்பம் நடத்துனா எனக்குதான் காதை அடைக்க பஞ்சு மூட்டை மூட்டையா தேவைபடும் போலயே என்று புலம்பி கொண்டே சென்றுவிட்டது.

 மனசாட்சியை ஓரம்கட்டிய நகுலன் கீதாவிடம் நான் உங்களிடம் முக்கியமான விசயம் பேச வேண்டும் அதனால் தான் உங்கள் எம்.டியிடம் அப்படி சொன்னேன்.நீங்களும் புரிந்து கொண்டு சந்தேகம் வரவும்தானே என்னோடு வந்தீர்கள் இப்போது எதற்காக திட்டுகிறீர்கள் என்றான்.

நகுலனின் பேச்சு கீதாவிற்கு  எல்லாம் தெரிந்துதானே என்னோடு வந்தாய் இப்போது எதற்கு இந்த அலப்பறை என்று அவன் கேட்பது போல் தோன்றியது.கீது யாரு அவன் கேள்விக்கா பதில் சொல்வாள்.அவன் கேள்வியை காற்றில்விட்டவள் அவன் மரியாதை கொடுத்து பேசியதை நினைத்து பெருமைபட்டு கொண்டு பரவால்ல கீது குட்டி பய மிரண்டுட்டான் இப்புடியே கீப்அப்பண்ணு, எப்புடி மரியாதை குடுக்கறான் பாரு என்று தனக்குதானே பேசி கொண்டாள்.ஆனாலும் நான் நினைத்தது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று முழித்தவள் தன்னை சமாளித்து கொண்டாள்.

ஹலோ அதுக்காக இப்படியா சொல்வீர்கள் உறவு என்றதோடு முடித்து இருக்கலாம்,இல்லையா அண்ணன் என்று சொல்லி இருக்கலாம் அதுவும் இல்லையா பிரண்டுனாவது சொல்லி இருக்கலாம் அதெல்லாம் விட்டுவிட்டு நிச்சயம் முடிந்தது என்று எதற்காக சொல்ல வேண்டும்.ஓவரா பேசறீங்க ஏதோ நானா இருக்கறதுனால இதோட விடறேன் இனிமே யாருக்கிட்டயாவது பேசனும்னா நான் தந்த ஐடியாவா பாலோபண்ணுங்க.

ஆமா…………. இப்ப மட்டும் இவ்வளவு மரியாதையாக பேசும் நீங்கள் அங்கு ஏன் ஒருமையில் பேசினீர்கள். ஆபிஸில் அனைவரின் என் கையை பிடித்து இழுத்து வந்திருக்கிறீர்கள்.அதே போல் எல்லோரும் பார்க்க ரோட்டில் கையை பிடித்து காருக்கு இழுத்து வந்திருக்கீறீர்கள் என்ன உரிமையில் இதை எல்லாம் செய்தீர்கள் என்று இவ்வளவு நேரம் மனதில் உள்ளதை கொட்டினாள்.

கீதா முதலில் பேசியது அனைத்தையும் ரசனையுடன் கேட்டு கொண்டு இருந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் வண்டி ஓட்டி கொண்டு இருந்தவன். கீதா அண்ணன் என்று சொல்ல சொன்னதை கேட்டு மனதில் ஜெர்க் ஆனான். அடிபாவி இவள அத்தான்னு சொல்ல வைக்க நான் பிளான் போட்டா இவ என்ன அண்ணானு சொல்றா,என்று நினைத்தவன்.லூசு இவள போய் நான் எதுக்கு தங்கையா நினைக்கனும் பார்த்தவுடனே கண்ண உருட்டி மயக்கிப்புட்டு தங்கச்சியாம் தொங்கச்சி……….. என்று நினைத்தவன் அவளை பார்த்தான்.

கீதாவிடம் எனக்கு எந்த உரிமையும் இல்லைதான். ய.நான் உங்களுடன் பேச வேண்டும் அதனால் அப்படி நடந்து கொண்டேன் அதற்காக இப்போது சாரி கேட்டு கொள்கிறேன் போதுமா இனிமேலாவது அமைதியாக வருவீர்களா என்றான் குரலில் பவ்யமாகவும் கண்களில் குறும்புடனும்.

கீதாவோ அவன் பாவனையில் இவன்நம்மை கிண்டல் செய்கிறானா சமாதானபடுத்துகிறானா என்று புரியாமல் குழம்பி அமைதியாகிவிட கார் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் முன் நின்றது.கேள்வியாக பார்த்தவளிடம் முதலிலேயே சொன்னேனே என்ற பார்வையை நகுல் பார்க்க அமைதியாக இறங்கி நடந்தாள்.ஹோட்டலில் ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்தார்கள்.

என்னிடம் என்னடா பேசனும் சீக்கிரம் சொல்லி தொலையேன் நான் நினைத்த விசயமாக இருக்க வேண்டும். விநாயகா நான் உனக்கு விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு மோதகம் அதிகமாக வைக்கிறேன் என்ற வேண்டுதலை வைத்து கொண்டிருந்தாள் மனதிற்குள்.

பேரர் வரவும் என்ன சாப்பிடுகிறாய் என்பது போல் நகுல் பார்க்க எனக்கு எதுவும் வேண்டாம் என்பது போல் தலையாட்டவும் இருவருக்கும் காபி சொல்லி அனுப்பினான்.

சொல்லு நகுலன் உனக்கும் அபிக்கும் என்ன சம்பந்தம் என்றாள்.

நகுலனின் பதில் என்னவாக இருக்கும் மக்களே…………

Advertisement