Advertisement

அத்தியாயம் -34

காலை உறக்கம் கலைந்து எழுந்த சுவாதி இறவு நடந்ததை நினைத்து பெரு மூச்சை வெளியிட்டவள் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்றாள்.

கீதா புது புடவை சகிதம் கல்யாண பெண்ணாக ரெடியாகி ஏதோ யோசித்து கொண்டு இருந்தாள். அவளை நெருங்கிய சுதி என்ன மேடம் இப்பயே டூயட் பாட போய்டீங்களா?எங்க சுவீஸா?இல்ல காஷ்மீரா? என்று கிண்டல் செய்தவளை பார்த்து முறைத்தவள்.

போடி போய் நீ கிளம்பி வா உனக்குதான் வெயிட்டிங். நேராக கோவிலுக்கு நம்மை வர சொல்லிவிட்டார்கள். அம்மா நார்மல் வார்டுக்கு வந்ததால்,கோவிலுக்கு செல்ல பர்மிஷன் வாங்கிவிட்டார்கள் என்று சொன்னாள்.

கண்களை இறுக ஒரு முறை மூடி திறந்தவள். தலையை ஆட்டிவிட்டு தனக்காக சுந்தரி கொடுத்தனுப்பிய புடவையை எடுத்து கொண்டு சென்றாள்.பின்பு அனைத்து வேலைகளும் வேகமாக நடக்க மண்பத்தில் அமர்ந்த சுதிக்கும் சரி, கீதாவுக்கும் சரி இது சரி வருமா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.இதை கவனித்த இருவரின் கணவர்களும் அவர்களது கையை அழுத்தி அமைதிபடுத்தினர்.

மாங்கல்யதாரணம் முடிந்து பெரியவாக்கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க என்ற அய்யரின் குரலை ஏற்று வள்ளி,ராகவ் காலில் விழ போன சுதியை தடுத்த ராகவ்.

உன் அப்பாவை இப்போதாவது மன்னிக்க கூடாதா?சொந்த பொண்ணு கல்யாணத்துக்கு வேற்றாளு மாதிரி இருக்கிறார்.நான் வற்புறுத்தவில்லை உனக்கு விருப்பம் இல்லை என்றால் வேண்டாம் என்று முடித்துவிட்டார்.

ராகவ் சொன்னதை கேட்டு நிமிர்ந்து பார்த்த சுவாதியின் கண்களில் முதல் வரிசையில் கண்ணீரோடு அமர்ந்திருந்த கோவிந்தன் பட்டார். முன்பைவிட அதிகம் இளைத்து,கண்கள் குழி விழுந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.

அர்ஜூன் சுதியை நெருங்கி சொத்து அனைத்துக்கும் பொறுப்பை நீ அவரிடம் ஒப்படைத்ததால்,மிகவும் நொந்து போனார்.இப்போது உன் அம்மா பெயரில் டிரஷ்ட் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறார்.தப்பை உணர்ந்தவர்களை தண்டிப்பதில் பயன் இல்லை.இது என் விருப்பம் என்று கூற ராகவ்வை பார்த்த சுவாதி கோவிந்தனை நோக்கி சென்று ஆசிர்வாதம் வாங்கினாள்.

மகள் தன் கால்களில் விழுந்ததால் கண் கலங்கிய கோவிந்தன்.என்னை மன்னித்துவிட்டாயா சுதி என்று கண் கலங்கினார்.உங்களை மன்னிக்க முடியவில்லை ஏன் என்றால் உங்கள் இந்த மாற்றத்திற்கு நான் இரண்டு உயிரை இழக்க வேண்டியதாகி போனது.உங்களை புது உறவாக ஏற்க முயற்சிக்கிறேன் என்றவள் விறுவிறுவென ராகவை நோக்கி சென்றுவிட்டாள்.

ஒரு வழியாக அனைவரும் கீதாவின் வீட்டுக்கு சென்றனர். வள்ளிக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.இரு பெண்களும் கண் நிறைய கணவனுடன் அமர்ந்திருப்பதை பார்த்த அந்த தாய் மனம் பூரிப்படைந்தது.

கீதாவின் நிலையோ பரிதாபமாக அய்யோ எப்படா இத கழட்டுவீங்க,திடீர் கல்யாணத்துக்கு யாரு இவ்வளவு பெரிய மாலையை ஆர்டர் செய்தது என்று நெளிந்து கொண்டு இருந்தவளை பார்த்த ராகவ் கீது நீ இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம்.நீ உன் அறைக்கு சென்று ஓய்வெடு என்று சொல்ல,அவர் எப்போது சொல்வார் என்பது போல் இருந்தவள்.வேகமாக எழுந்து தன் அறைக்கு சென்றாள்.அறைக்கு வேகமாக சென்றவள் செய்த முதல் வேலை மாலையையும்,கட்டியிருந்த புடவையை கழட்டி கட்டிலில் போட்டதுதான்.ஏசியை ஆன் செய்து சிறிது நேரம் கண்களை மூடி அப்படியே அமர்ந்தாள்.கதவு திறக்கும் சத்ததில் சுவாதிதான் வந்திருப்பாள் என்று நினைத்து.

எப்படி டி இந்த புடவையை கட்டியிருக்க என்னால் சுத்தமாக முடியவில்லை.இதில் மாலை வேறு என்று கண்களை திறக்காமலே புலம்பினாள்.

தன் புலம்பலுக்கு எந்த பதிலும் வராமல் போகவே என்னடி நான் பாட்டுக்கு பே……. என்றவள் பேச்சை நிப்பாட்டிவிட்டு வேகமாக தான் கட்டிலில் போட்ட புடவையை எடுத்து மேலே போர்த்தி கொண்டு அவனை பார்த்து முறைத்தாள்.

ஆம் வந்தது நகுலனேதான்.அவனும் கீதா இப்படி இருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை என்பது அவனது சங்கடமான பார்வையிலேயே தெரிந்து கொண்டாள்.உடனே நகுலன் எதிர் புறம் திரும்பி கொண்டு இருவரையும் உன் அறையிலேயே ஓய்வெடுக்க சொன்னார்கள்.அதனால்தான் வந்தேன் என்றவனது பதிலில் ஓரளவு சமாதானம் ஆனாள்.இந்த அப்பாவை என்ன செய்வது காதல் திருமணம் என்று எங்களுக்கு தனிமை தர்ராராம்.   இவரை என்னதான் செய்வதோ என்று நொந்து கொண்டாள்.

சரி ஒரு நிமிடம் அப்படியே நில்லுங்கள்.நான் சேஞ்ச் பண்ணிக்கிறேன்.தவறாக நினைக்காதிர்கள் என்று சொன்னவள்.தனது கப்போர்டில் இருந்து  வேறு ஆடைகளை எடுத்து மாற்ற துவங்கினாள்.

நகுலன் அப்போதுதான் கவனித்தான் அங்கிருந்த கண்ணாடியை அச்சச்சோ இப்போது எப்படி சொல்வது என்று திணறிய சமயம் அவள் தனது மேலாடையில் கை வைத்திருந்தாள்.

டேய் நகுலா இது தப்புடா.அந்த பொண்ணு வேற ஒருத்தரை விரும்புது என்று எவ்வளவோ கண்களுக்கு தடை இட்டும் கேட்காமல்.கண்ணாடி வழியாக அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். அவள் சுடிதாரை மாற்றிய பிறகு இப்போது திரும்புங்கள்.

ரொம்ப தேங்ஸ் நான் சொன்னதை தப்பாக எடுத்து கொள்ளாமல் இருந்ததுக்கு என்றவளை கூர்மையாக பார்தவன்.நான்தான் தேங்ஸ் சொல்லனும் என்றான் விஷமமாக.

நீங்கள் எதுக்கு தேங்ஸ் என்று புரியாமல் பார்த்தவளை பார்த்து சமாளிக்கும் விதமாக வெளியே போக சொல்லியிருந்தால் வெளியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.அறைக்குள் போனவுடன் ஏன் வந்தாய் என்று கேள்வி கேட்டு என்னை குடைந்திருப்பார்கள்.அதிலிருந்து என்னை காப்பாற்றினீர்கள் இல்லையா அதற்கு என்று ஒருவழியாக சமாளித்தான்.

ஏசிதான் ஓடுகிறதே உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்கிறது. இந்தாங்க ரிமோட் அதிகமாக வைத்து கொள்ளுங்கள்.நான் சென்று உங்களுக்கு மாத்தி கொள்ள என்றவளை தடுத்தவன் பரவாயில்லை நான் இதிலேயே என்றவனை தடுத்து இப்படியே எவ்வளவு நேரம் இருப்பீர்கள்.இதனால்தான் உங்களுக்கு வேர்க்கிறதோ என்னவோ என்றுவிட்டு வெளியேறினாள்.

அடியேய் எனக்கு இந்த டிரசால் வேர்க்கவில்லை. உன்னை டிரஸ் இல்லாமல் பார்த்ததால் வந்த வேர்வை என்று வெட்கமே இல்லாமல் நினைத்து கொண்டவன்.இடுப்புக்கு கீழ மச்சம் இருந்தா அதிகம் கோவம் வரும்னு சொல்லுவாங்களே அது உண்மைதானோ.முதல் நாள் என்னமா கோபபட்டா என்று யோசித்து கொண்டு இருந்தான்.

நகுலன் இந்தாங்க அப்பாகிட்ட புது வேஷ்டி வாங்கிட்டு வந்தேன் கட்டிக்கங்க.இந்த ஜூஸ் உங்களுக்குதான் பாவம் வேர்த்து விறுவிறுத்து போய்டீங்க என்று கொடுத்தவளை இமைக்காமல் பார்த்தான்.

என்ன நகுலன் அப்படி பாக்குறீங்க அன்னைக்கு அப்படி கோபபட்டவள் இன்று சாதாரணமாக பேசுகிறாள் என்றா,அன்னைக்கு சம்மந்தமே இல்லாமல் நீங்கள் கோபபடவும் நானும் கொஞ்சம் என்றவளை முறைத்தவன் சரி..சரி…..ரொம்ப அதிகமாகவே கோபபட்டுவிட்டேன்.இனி நாம் பிரண்ட்ஸ் இல்லயா,அதான்  உங்கள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்துவிட்டேன்.

எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க இனி நீங்களும் என்றவள்.ஜூஸ் குடிச்சுட்டு நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க.நான் போய் சுவாதியுடன் இருக்கிறேன் என்றவளை,கொஞ்சம் நில்லு பேபி என்றான் நகுலன்.

என்னை பார்த்தால் உங்களுக்கு பேபி போல் இருக்கிறதா?நான் பேபி என்றால் என் பிரண்ட் நீங்களும் பேபியா என்னை அப்படி கூப்பிடாதீர்கள் என்று பொறிந்தாள்.

பேசி முடிச்சுட்டியா எப்பவும் நீ இப்படிதானா?இல்ல இன்னைக்கு மட்டும் இப்படியா?என்று கேட்டவனை புரியாமல் பார்த்தாள்.இன்னைக்குதான் உன் பிரண்டுக்கும் மேரேஜ் ஆகியிருக்கு அவங்க சேரனும்னுதானே நாம இந்த கல்யாணம் செய்தது நீ அங்க போனா என்ன அர்த்தம் சில சமயம் நீ பண்றத பாத்தா மட்டும் தான் பெரிய பொண்ணா தெரியுது பல சமயம் நீ இன்னும் வளரவே இல்லையோனு எனக்கு தோனுது என்றான். அவனை பார்த்து அசடு வழிந்தவள் சரி நகுலன் நான் எங்கயும் போகல, வெளியே அபி இருப்பான் அவன் கூட விளையாட போறேன் என்றவள் சிட்டாக பறந்துவிட்டாள்.பின்னே நின்றால் அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி வெளியே விடமாட்டானோ என்று.

என்ன விளையாட போகிறாயா?…………. என்று அவன் கேட்ட கேள்வி அங்கிருந்த சுவர்களிடம்தான். அவள்தான் எப்போதோ சென்றிருந்தாலே.இவள் ஒரு வளர்ந்த குழந்தை என்று நினைத்தவன் ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை என்று கணவனாக சற்று முன் அவன் கண்ணாடியில் பார்த்ததை நினைத்து தனக்குள் சிரித்து கொண்டு உடை மாற்றி படுத்தவன் எழுந்திரிக்கும் போது மணி 5 என்றது அவனின் கடிகாரம்.

ச்ச… இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமா என்று நினைத்து கொண்டே எங்க என்னோட குட்டி வால காணாம் என்று வெளியில் வந்தான்.

Advertisement