Advertisement

அத்தியாயம் -33.
காலையில் அவளது மொபைல் விடாமல் அடிக்கவும் யார் இந்த நேரத்தில் என்று யோசித்து கொண்டே போனை எடுத்தவளை கீதாவின் படபட பேச்சே எதிர் கொண்டது.அவளிடம் பேசி அங்குதான் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் அடுத்த வாரம் வருவதாக சொல்லி வைத்தாள்.தன் அம்மாதான் தனக்கு இப்படி ஒரு வழியை வழங்கினார் என்று யோசித்து குளித்துவிட்டு கீழே வந்தவளை பார்த்த கோவிந்தன்.

என்னமா சீக்கிரம் எழுந்துவிட்டாயா என்று கேட்க தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றுவிட்டாள்.
தான் செய்த தவறுக்கு தன் மகள் தன்னை வெறுப்பதில் தவறில்லை என்று நினாத்தாலும் அவருக்கு அவளின் ஒட்டாத தன்மை கவலையை அதிகரித்தது.

அன்று வெளியே சென்று வருவதாக சென்ற சுவாதியை பின் தொடர்ந்து சென்ற ராமின் ஆட்களை மாட்டிவிட தருணம் பார்த்து கொண்டு இருந்தவள். பிக்பாக்கெட் கேசில் உள்ளே தள்ளிவிட்டு தனது குடும்ப வக்கீலை சந்தித்து சிலபல வேலைகளை செய்துவிட்டுவந்தாள்.

இதற்கிடையே அவளை சந்திக்க வந்த அர்ஜூனை சந்திக்க மறுத்தாள்.கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று அவன் சொல்லும் போது வீட்டு வேலைகார அம்மா அல்லது அவளது அப்பாவை உடன் வைத்து கொண்டு பேசினாள்.மற்றவர்கள் முன்பு என்ன பேசுவது.அவளை சமாதானம் செய்து திருமணத்துக்கு ஒத்து கொள்ள வைக்க வேண்டும் என்றுதான் வந்தான் ஆனால் உடன் அவர்கள் இருப்பதால் எதுவும் பேசாமல் சாதாரண ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு வருவான்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஒரு நாள் இரவு அவர்கள் வீட்டு மாடி ஏறி குதித்து அவளது அறையை அடைந்தான்.அவள் நன்றாக தூங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன்.

என் தூக்கத்தை கெடுத்துவிட்டு நீ நன்றாக தூங்குகிறாயா என்றவனின் காதல் உள்ளம் விழித்து கொண்டு அவளை முழுவதுமாக ரசித்தது.அவள் திரும்பி படுக்கும் போதுதான் தன்னிலை உணர்ந்தவன் ஆள் மயக்கி இப்படி நீ மயக்கினாள் நானா பொறுப்பு இருந்தாலும் நீ இவ்வளவு அழகா இருக்க கூடாதுடி என்று கூறி அவளை எழுப்பினான்.

யார் தன்னை எழுப்புவது என்று அரை கண் விழித்து பார்த்தவள்.அடித்து பிடித்து எழுந்தாள்.

ஏய் நீ எப்படி உள்ளே வந்தாய்?எதற்கு வந்தாய்? நான்தான் உன்னை எண் கண் முன்னே வர கூடாது என்று சொன்னேனே?மீண்டும் எதற்கு வந்தாய்?என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க அவன் அவளை தொட கையை நீட்டினான்.ஏய் என்று கத்தி அவன் கையை தட்டிவிட்டவள் என்ன செய்ய போகிறாய் என்று பயத்துடன் கேட்டாள்.

அவளின் பயந்த பார்வை அவனை பாதித்தாலும் இப்போது அதை வெளிகாட்ட கூடாது.அவள் என்ன செய்தாலும் இதுதான் என்முடிவு என்பதை அவளுக்கு நிருபிக்கும் வரை நான் பழைய அர்ஜூனாக மாற வேண்டும் இவளுக்காக உருகும் அர்ஜூனை பார்த்தால் இவளுக்கு கொழுப்பு ஏறி விடுகிறது, இல்லையென்றால் எத்தனை முறை பேச வந்தேன் ஒரு முறையாவது என்னுடன் பேசினாளா என்ற முடிவோடு இருந்தான்.

அதனால் அர்ஜீன் அவளை பார்த்து சிரித்து கொண்டே அது ஒண்ணும் இல்ல செல்ல குட்டி நீ அடுக்கடுக்கா கேள்வி கேட்டு டயர்டாகி மூச்சு வாங்கினாய் அதான் நான் சரி செய்யலாம் என்று கண்ணடித்து கூற அவளுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது.

முதலில் நீ இங்கிருந்து வெளியே போ.ஒரு பொண்ணோட அறைக்கு இரவு நேரத்தில் வந்திருக்கிறாய் என்று சொன்னவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்.

என்ன வது டார்லிங் என்ன பேசற நீ பொண்டாட்டி ரூமுக்கு புருஷன் வர என்ன தடை என்று கேட்டான். அவன் சொல்வதை கேட்ட சுவாதி கடகடவென சிரித்து,என்னது பொண்டாட்டியா எனக்கு தெரியாமல் எப்போது திருமணம் ஆனது என்று கிண்டலாக கேட்டாள். அவள் இது போல்தான் ஏதாவது சொல்வாள் என்று தெரிந்ததால் அவளின் சிரிப்பை ரசித்து கொண்டே தாலி மட்டும்தான் கட்டவில்லை மற்றது எல்லாம் முடிந்துவிட்டதுதானே என்று அந்த எல்லாமில்…… அழுத்தம் கொடுத்து அவளின் இதழ்களை பார்த்து கொண்டே சொன்னான்.அவனுக்குதானே தெரியும் அது தந்த போதை.அவன் வார்த்தையில் அவனை நிமிர்ந்து பார்த்தவள்.அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தடுமாறி தன் தடுமாற்றத்தால் ஏற்பட்ட கோபத்தையும் அவனிடமே காட்டினாள்.
நடந்துவிட்டது என்று சொல்லாதே நடத்தி கொண்டாய் என்று சொல்.உன்னை பார்க்கவே எனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னது நினைவு இருந்திருந்தால் இப்படி என் முன் வந்து நிற்கமாட்டாய் என்று கூறியவளை இழுத்து அவள் இதழ்களை சிறை செய்தவன் வெகு நேரம் கழித்தே அவளை விடுத்தான்.

தேவையில்லாமல் கண்டதையும் பேசினால் இதுதான் உனக்கு தண்டனை.பேசாமல் இருந்தால் நான் வந்ததற்கான காரணத்தை சொல்லிவிட்டு சென்று விடுவேன் இல்லை என்றால் இது போல் தண்டனை கிடைக்கும் இதற்கு மேலும் தண்டனைகள் செல்லும் அது என் கையில் இல்லை.உன் கையில்தான் இருக்கிறது.

நீ பேசாமல் மாமா சொல்வதை கேட்டால் நான் சீக்கிரம் சென்றுவிடுவேன் என்றவன்,அவளை கூர்மையாக பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டான் நிதானமாக.அவள் எதுவும் சொல்லாமல் இருப்பதை பார்த்து இன்று சனி கிழமை அடுத்த வாரம் திங்கட்கிழமை நமக்கு முருகன் கோவிலில் திருமணம்.கல்யாணம் முடிந்த பிறகு எங்கள் வீட்டிற்கு செல்லலாம்.
அம்மா ஒத்து கொள்ளமாட்டார்கள் என்பதால் இந்த பிளான் இல்லை.அவர்கள் கண்டிப்பாக ஒத்து கொள்வார்கள் உன்னை சமாளிக்க இந்த திருமண ஏற்பாடு செய்ய இந்த இரண்டு நாள் என்றவன் சரி நீ தூங்கு நான் போகிறேன் என்று திரும்பியவன் திருமணத்துக்கு பிறகு உன்னை புத்திசாலியாக மாற்றி என் காதலை நிருபிக்கிறேன் என்று சொல்லி சென்று விட்டான்.

அர்ஜீன் அறையை விட்டு வெளியேறியதும்,இழுத்து வைத்திருந்த மூச்சை நிதானமாக வெளியிட்ட சுவாதி இவன பாக்காம இருந்ததான் நமக்கு சேப் இல்லனா இவன் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட ஆரம்பிச்சுருவோம்.இவனவிட்டு விலகி இருக்கணும் என்ற முடிவுடன் இரவு உறங்க முற்பட அர்ஜீன் வந்து தூங்கவிடாமல் செய்தான்.

பாவி….பாவி………..படு பாவி இப்ப தூங்கவிடாம பண்ணிட்டானே இவனுக்கு எல்லாம் கும்பிபாகம்தான் நானே வேண்டிக்கிறேன் என்று அவனை வார்த்தையால் வருத்து எடுத்துவிட்டு லேட்டாக தூங்க ஆரம்பித்தாள்.அடுத்த நாள் சனி கிழமை என்பதால் குளித்து முடித்து நிதானமாக வந்தவளை பார்க்க காத்திருந்தார் ரம்யாவின் தாய்.
வாங்க மா எப்ப வந்தீங்க ரொம்ப நேரம் காக்க வைத்துவிட்டேனா ஒரு குரல் கொடுத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்று சமையலறையை பார்த்து,டீ கொண்டு வாங்க அக்கா என்று சமையல் வேலை செய்யும் சரசை ஏவினாள்.

சுவாதியை அமைதியாக இருக்கும்படி கூறிய ஆண்டாள் நான் டீ குடித்துவிட்டேன் வந்தவுடனே சரசு கொடுத்துவிட்டாள். நான் இப்போது வந்தது ஒரு நல்ல விஷயம் சொல்ல திருமணம் ஆகி ஒரு வருடம் ஆக போகிற நிலையில் ரம்யா நாள் தள்ளி போய் இருக்கிறாளாம்.

நாங்கள் அவளை பார்க்க நாளை செல்கிறோம் அதான் சொல்ல வந்தேன்.எல்லாம் எடுத்து வைக்க வேண்டும் நான் கிளம்புகிறேன் என்று சென்று விட்டார் ஆண்டாள்.

தனக்கு போலவே தன் மகளுக்கும் லேட்டாக குழந்தை பிறக்குமோ என்று பயந்து கொண்டு இருந்தவருக்கு இந்த நல்ல செய்தியை கேட்டவுடன் தலைகால் புரியவில்லை. அதனால் சுவாதியின் பேயறைந்தார் போன்ற முக பாவத்தையும்,இவள் பேசுவதை கவனிக்காமல் அவள் அதிர்ந்து அமர்ந்திருப்பதையும் அவர் கவனிக்கவில்லை.அவர் சென்றவுடன் வேகமாக தன் அறைக்கு சென்றவள் தான் கடைசியாக தலை குளித்த நாளை கணக்கிட்டாள். கிட்டதட்ட அறுபது நாட்கள் தள்ளி போய் இருந்தது.
நான் அம்மாவாக போகிறேனா?நான் அனாதை இல்லையா?என்று தன் வயிற்றை தடவி பார்த்தவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. தோழியாகவும் தாயாகவும் இருந்த மாலதியின் நினைவில் கண் கலங்கி அவளுடைய ஒரு சேலையை எடுத்தாள்.அந்த சேலைக்குள் இருந்து ஒரு டைரியும்,போட்டோவும் கீழே விழுந்தது.

என்ன அது என்று எடுத்த பார்த்தவளின் காலடியில் பூமி நழுவியது.அது அர்ஜூனின் போட்டோ.டைரியை பிரித்து பார்த்தாள்.அவன் அட்ரஸ்,குவாலிபிகேஸன் என அனைத்தும் இருந்தது.நம்ப முடியாமல் அந்த போட்டோவை பார்த்து கொண்டு இருந்த சுவாதி.
குட்டிமா நீயும் அவரை காதலித்தாயா?ஏன் என்னிடம் சொல்லவில்லை.நீ எப்போது அவரை பார்த்தாய் என்று குழப்பி கொண்டவள்.இறுதியாக நீ நேசித்தவரை என்னால் மணக்க முடியாது.அவரும் கடமைக்காகதான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார் என்று எனக்கு தெரியும்.
நான் இங்கு இருந்தால் தானே இந்த பிரச்சனை நாளையே நான் கிளம்புகிறேன் என்று சரியாக தவறான முடிவெடுத்தாள். அர்ஜூன் இங்கு திருமணத்துக்கு ராஜாவின் மூலம் ஏற்பாடு செய்தான்.திருமணம் முடிந்த பிறகு ஒரு ரிஷப்ஷன்மாறி வைத்து ஊருக்கு தெரியபடுத்தலாம். முதலில் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று அந்த வேலையில் பிஸியாக இருந்தவன்,சுவாதியை கவனிக்க தவறினான்.

ராஜாவுக்கு முன்பே அர்ஜூனின் காதல் தெரியும் என்றாலும் சுவாதிக்கு அண்ணனாக எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்தான்.
ஞாயிற்று கிழமை நடு இரவில் நாகபட்டினத்துக்கு முழுக்கு போட்டு திருச்சி செல்ல ஆரம்பித்தாள் சுவாதி.கடந்த நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டிருந்த சுவாதி.குட்டிமா நான் எப்படி அவரை மணப்பேன் நீ காதலித்தவரை நான் எப்படி.இந்த திருமணத்துக்கு ஒத்து கொண்டிருக்கவே கூடாது.

வள்ளி அம்மா,ராகவ் அப்பா முக்கியமாக கீதா இவர்களுக்காக சம்மதிக்கிறேன். என்வாழ்கை இனி எப்படி போக போகிறது என்று பயமாக இருக்கிறது குட்டிமா என்று வாய்விட்டு புலம்பியவள் தலையை ஆதரவாக தடவியது ஒரு கரம் யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்,கீதாதான் அமர்ந்து இருந்தாள்.கண்டதை போட்டு யோசிக்காமல் கொஞ்சநேரமாவது தூங்கு கண்ணெல்லாம் சிவந்து இருக்கு என்று சொல்ல, மந்திரத்துக்கு கட்டுபட்டவள் போல் தலையை ஆட்டியவள்,அவள் மடியிலேயே உறங்க ஆரம்பித்தாள்.

Advertisement