Advertisement

அத்தியாயம்-32

அர்ஜீன் பேசியதை கேட்ட சுவாதிக்கு கோபம் கண்மண் தெரியாமல் ஏற,அங்கு அர்ஜீன் வைத்திருந்த டீ கப்புகள் கண்ணில்பட அவற்றை எடுத்து தரையில் அடித்தாள்.அர்ஜீன் பேச்சு நின்றவுடன் அவனையே கோபமாக உருத்து விழித்தவள் விரிந்திருந்த தலை முடியை அள்ளி கொண்டையாக போட்டு கொண்டு,அவன் சட்டையை பிடித்து உளுக்கி என்ன சொன்னாய்?மறுபடியும் சொல்.உன்னை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?என்னிடம் இதை சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னிடம் இப்படி சொல்வாய்.என் அக்காவை காதலித்தாய் அவளைதான் மணப்பேன் என்றாய்.இன்று  என்னை மணக்க கேட்கிறாய். இவ்வளவுதான் உன் காதலா.

குளிரால் நடுங்கினாய் வேறு வழி இல்லாமல் என்றாயே,உன்னிடம் வரும் எல்லா பேசண்டிடமும் இப்படிதான் நடந்து கொள்வாயா?உன்னை எவ்வளவு நம்பினேன்.அந்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பிக்க உன்னிடம் வந்தேன். கடைசியில் அவர்கள் என்ன நினைத்து எனக்கு மயக்க மருந்து கொடுத்தார்களோ, அதை நீ செய்து விட்டாய்.

உனக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.என்னை பொருத்தவரை இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.இந்த நிமிடம் நான் சொல்வதை நன்றாக காதில் வாங்கி கொள்.இந்த உலகத்தில் நான் அதிகமாக வெறுக்கும்,மீண்டும் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் ஒரே ஆள் நீ .நீ மட்டும்தான் இனி என் முகத்தில் முழிக்காதே என்றவள் வெளியே செல்ல திரும்பியவளுக்கு மயக்கம் வருவது போல் இருக்க தலையை பிடித்து கொண்டு அங்கிருந்த சுவரில் சாய்ந்தாள்.

சுவாதியின் ஒவ்வொரு கேள்விக்கும் அர்ஜீனோ மனதில் பதில் சொல்லி கொண்டு இருந்தான் ஆமாம் டி நீ என்னுடையவள் என்னை மணந்து கொள். எனக்கானவளை மணந்து கொள்ள கேட்பதில் எதுக்குடி வெட்கம்.என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் வது நீ என்னுடையவள் என்ற உரிமைதான் என்னை உன்னிடம் அப்படி நடந்து கொள்ள வைத்தது.

உன்னை தவிர வேறு யாராக இருந்தாலும் என்னால் என்னால் நல்ல டாக்டராக அவர்களை பாதுகாத்திருக்க முடியும். ஆனால் நான் ஏன் அப்படி செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

யாராக இருந்தாலும் இப்படிதான் செய்வீர்களா? என்று கேட்டதற்கு பதிலாக நீ உன் கையாலேயே என்னை கொன்னு போட்டு இருக்கலாம் என்று அவளின் ஒவ்வொரு கேள்விக்கும்  பதில் சொல்லி கொண்டு இருந்தான்.சத்தமாக சொல்லி இருந்தாள் பல பிரச்சனைகளை தவிர்த்து இருக்கலாம்.

சுவாதி சுவரில் சாய்ந்து நிற்பதை பார்த்து, என்ன வதுமா? என்ன ஆச்சு? என்று அவளின் கையை பிடித்து பார்த்தான்.அவன் தொட்ட வேகத்தில் கையை உதறியவள்.இனி ஒருமுறை என்னை தொட்டாய் அதுதான் நீ என்னை கடைசியாக பார்ப்பதாக இருக்கும்.

நீ தொட்ட கரை நீங்க என்னை நானே எரித்து கொள்வேன் என்று சொன்னவுடன் அவள் கையைவிட்டவன் அடிபட்ட பார்வை பார்த்தான். இப்போது பேச கூடிய நிலையில் அவள் இல்லை என்பதை உணர்ந்து பிறகு பேசி கொள்ளலாம் என்று அமைதி ஆனான்.

சுவாதியின் சோர்ந்த நிலையை உணர்ந்தவன் அவளை நெருங்கி உனக்கு ரொம்ப டயர்டாக இருக்கும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு போ.நான் உனக்கு சூடாக ஏதாவது எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவன் திரும்பி வந்து பார்க்கும் போது வெறும் அறையே வரவேற்றது.

அதற்குள் சென்று விட்டாளா?என்று நினைத்தவன் நீ செய்த வேலைக்கு இங்கிருந்து போகாமல் நீ சொல்வதை எல்லாம் கேட்பாள் என்று நினைத்தாயா? என்ற மனசாட்சியின் கேள்வியில் தப்புதான் நான் செய்தது மிக பெரிய தப்புதான்.எதனால் எனக்கு அந்த சூழ்நிலையில் அப்படி தோன்றியது என்று புரியவில்லை.ஆனால் ஒன்று உறுதி சுவாதி சொன்னது போல் அவளிடத்தில் வேறு யாரு இருந்திருந்தாலும் நிச்சயம் நான் அப்படி நடந்து கொண்டிருக்கமாட்டேன். அவளை விரைவில் மணமுடிப்பேன்.அவளுக்கு விருப்பம் என்றாலும் இல்லை என்றாலும் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தவனை நோக்கி வேகமாக ஓடி வந்தான் ராஜா.

நம்ம ஒரு முடிவு எடுத்த பிறகு நமக்கு ஏதாவது ஒரு முடிவு ரெடிய இருக்கும் தம்பி……………….

என்ன ராஜா ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்று கேட்க.

சார் அந்த லட்சுமி அம்மா இறந்துட்டாங்க சார்.சுவாதி பொண்ணு எப்பவும் போல் பார்க்க போய் இருக்கும் போல  இப்போதுதான் பார்த்திருக்குமாட்டுக்கு என்று சுவாதி அப்போதுதான் அங்கிருந்து சென்றாள் என்பதை அறியாமல் பேசி கொண்டே இருந்தான்.

அர்ஜூன்தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டு இருந்தான்.இனி அந்த மனுசன் குடிக்க என்ன பண்ணுவான்னு பாக்கலாம். என்ன இருந்தாலும் இனி இந்த பொண்ணு தனியாகதான் இருக்க வேண்டும்.

இரண்டு பொண்ண பெத்து ஒரு பொண்ணுக்கு கூட கல்யாணம் பண்ணி பார்க்கும் குடுப்பனை இல்லாமலேயே அந்த அம்மா போய் சேந்திருச்சு என்று அங்காலாய்ப்பாக கூறினான்.இருவரும் சுவாதி வீட்டுக்கு போன போது சுவாதி இனி எனக்கு யார் இருக்கா என்னையும் உங்களுடன் கூட்டி போயிருக்கலாமே அம்மா இப்படி என்னை அனாதை ஆக்கிவிட்டீர்களே என்று அழுது கொண்டு இருந்தாள்.

சுதியை பார்த்த அர்ஜூனுக்கு கவலைபடாதே வதுமா உனக்கு நான் இருக்கிறேன்.யார் சொன்னா நீ அனாதை என்று உனக்காக என் குடும்பம் மொத்தமும் காத்திருக்கிறது. என்னைபற்றி நினைக்கவே மாட்டாயா வது நான் என்ன செய்வேன் என்று அவளின் துடிப்பை பார்த்து இவன் துடித்து கொண்டு இருந்தான்.

ஆயிற்று இதோ சுவாதி அம்மா இறந்து ஒரு மாதம் முடிந்து அனைவரும் வந்து சாமி கும்பிட்டுவிட்டு சென்று விட்டனர்.வீடே வெறுச்சோடி கிடந்தது. கோவிந்தன் சுவாதிக்கு தட்டில் உணவை போட்டு எடுத்து வந்து சாப்பிடுமா என்று அன்பாக கூறினார்.

ஆம் மகளின் இறப்பு அவரை ஓரளவு மாற்றி இருந்தாலும் ராம் அவரை தனது கஸ்டடியில் வைத்து போதை தெளியாமல் பார்த்து கொண்டாலும் மகள் பாசம் அவரை அறிக்கத்தான் செய்தது.அப்போது எல்லாம் அவருக்கு அடியும் உதையும்தான் மிஞ்சும்,இப்போது மனைவியின் இறப்பு அவரை வெகுவாக மாற்றி இருந்தது.ஒரு பொருள் இருக்கும் போது அதன் மதிப்பு தெரிவதில்லை,இல்லாமல் போனால்தான் தெரியும் அது போல்தான் லட்சுமி விஷயத்திலும் நடந்திருந்தது.

லட்சுமி உடம்புக்கு முடியாமல் இருந்த போதும் இருக்கிறாள் என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு அவர் இல்லை என்ற பிறகுதான் தனிமை உரைத்தது. அந்த நேரம் உணர்ந்தார் பணத்துக்காக சேரகூடாதவர்களுடன் சேர்ந்து ஒரு மகளை இழந்தது மட்டும் இல்லாமல் இனோரு மகளுக்கு மன ரீதியான உளைச்சலை ஏற்படுத்திவிட்டோமே எவ்வளவு பெரிய பாதகம் செய்துவிட்டோம்.என்று அதை சரி செய்ய போகிறோம் என்ற வருந்தியவர் சுவாதியிடம் பாசம் காட்ட ஆரம்பித்தார்.ஆனால் உடனே எல்லாம் சரியாகாது என்பதையும் அறிந்தே இருந்தார்.

 அப்பாவின் பாசத்துக்கு ஏங்கிய சுவாதிக்கு இந்த பாசத்தை பெற தான் கொடுத்த விலை அதிகம் என்று நினைத்து அவரை ஏற்று கொள்ள முடியாமல் இருந்தால்.இனி இங்கு இவருடன் இருக்க முடியாது இவரது அன்பை என்னால் ஏற்க முடியாது.

ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு சொத்து மேல்தான் விருப்பம் அதற்கு ஒரு வழி பண்ணிவிட்டு எங்காவது செல்ல வேண்டும் என்று பழைய சுவாதி வெளிவந்தாள். அம்மாவால் ஏற்பட்ட கோழைதனத்தை அம்மாவே அவளிடம் இருந்து எடுத்து சென்றுவிட்டதாக நினைத்தாள்.அந்த வார பேப்பர் எல்லாம் செக் செய்து வேலைக்கு அப்ளை செய்துவிட்டு இண்டர்வியூக்கு காத்திருந்தாள்.

சுதி நினைத்தது போல் ஆன்லைனிலேயே இண்டர்வியூ அட்டண் செய்து செலெக்ட் ஆனாள்.வேலைக்கு வரும்படி வந்த ஆபிஸ் சென்னை என்பதை பார்த்து திருச்சிக்கு கேட்டாள்.அவர்களும் ஒரு மாதம் கழித்து வேகண்ட் வரும் அப்போது உங்களை அங்கு அப்பாயிண்ட் பண்ணுகிறோம் என்று சொல்லிவிட்டனர். அவளது திறமையை பார்த்து.

இதோஅதோ என்று ஒரு மாதம் முடிந்து வேலையில் சேர சொல்லி கடிதம் வந்தது.

தன் அம்மாவின் படத்தின் முன் அமர்ந்தவள் அடுத்து நான் என்ன செய்யட்டும் அம்மா.நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும் என்று புலம்பிவிட்டு வெகுநேரம் கழித்தே படுக்க சென்றாள்.

Advertisement