Advertisement

அத்தியாயம்-29

அடுத்த நாள் எப்போதும் போல் லட்சுமியை செக் செய்ய சென்றவன்.சுவாதி வீடு கும்பலாக இருப்பதை பார்த்து என்னவென்று விசாரிக்க சுவாதி அம்மாவிற்கு ரொம்ப முடியாமல் இருக்கிறதாம் அதனால் இன்றே நிச்சயமும். ஒரு வாரத்தில் திருமணம் என்று ராம் வீட்டில் இருந்து வந்து பேசி சென்றனர் என்று ஒரு வயதான பாட்டி சொல்லிவிட்டு அந்த பொண்ணு என்ன பாவம் செஞ்சதோ இப்படி ஒரு அப்பனுக்கு மகளா பிறக்க,எந்த அப்பனாவது சொந்த மகளை ஒரு பாளங்கிணற்றில் தள்ளுவனா… எல்லாம் விதி என்று புலம்பிவிட்டு சென்றார்.

அவர் சொல்வதை கேட்ட அர்ஜூனுக்கு முதலில் தோன்றிய எண்ணம் என் வதுக்கு திருமணமா என்பதுதான்.லட்சுமி இருக்கும் அறைக்கு சென்றான். கிளிந்த நாறாக ஒரு உருவம் கட்டிலில் படுத்து இருக்கிறதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு மோசமான நிலையில் இருந்த லட்சுமியை செக் செய்ய போனான்.ஆனால் லட்சுமி வேண்டாம் என்பது போல் கண்களால் கெஞ்சி இன்னும் நான் இருந்து என்ன செய்ய போகிறேன்.

என் உயிரை வைத்து என் மகளை நாசம் செய்ய பார்க்கிறார்கள்.நான் சாகிறேன் எனக்கு எந்த மாத்திரையும் வேண்டாம்,எந்த மருந்தும் வேண்டாம் என்று ஈன சுவரத்தில் பேச முடியாமல் பேசினார்.இது பேசியதே அதிகம் என்பது போல் அவருக்கு மூச்சு வாங்கியது.

லட்சுமி இவ்வாறு சொன்னது சுவாதியிடம் சொன்னாள் அவளது அம்மாவை பார்த்து கொள்ள வைத்திருக்கும் வேலைகார பெண்.அம்மா சொன்ன விஷயத்தை கேட்ட சுவாதி வேகமாக லட்சுமி இருக்கும் அறைக்கு சென்றாள்.

லட்சுமி படுத்திருக்க அவரிடம் சென்ற சுதி ஏன் மா.நீ மட்டும் போக வேண்டும் என்று நினைக்கிறாய் நீ இப்போது அவரை பார்க்க விடவில்லை என்றால் வா இருவரும் சாகலாம்.எனக்கு அது சம்மதமே. உங்களை எல்லாம் இழந்து அனாதையாக இந்த உலகத்தில் நான் வாழ்வதற்கு நானும் உங்களுடனே வந்துவிடுகிறேன் அனைவரும் சேர்ந்தே இருப்போம் என்று அமைதியாக அதே சமயம் அழுத்தமாக கூறினாள். சுவாதியின் பேச்சால் லட்சுமி அமைதியானார்.

சுவாதியின் ஒவ்வொரு சொல்லும் அர்ஜூனுக்கு அதிக வலியை தந்தது.ஆனால் அது எதனால் என்று யோசிக்க பிடிக்காமல்,சுவாதியிடம் மெதுவாக போலிஸ் கம்ப்ளெய்ண்ட் பற்றி பேசினான்.இவர்கள் பேசுவதை கேட்ட லட்சுமி என் ஒரு மகளாவது எனக்கு வேண்டும் அவர்களுக்கு தெரிந்தாள் என் மகளை கொல்லவும் தயங்கமாட்டார்கள் என்று தடை கூறினார்.சுவாதி என்ன சொல்கிறாள் என்று அவள் முகம் பார்க்க அவள் பிறகு பேசலாம் என்று சைகையில் கூறி சென்றாள்.

அன்று மாலை நேரத்தில் அர்ஜூன் காற்றாட நடந்து வரலாம் என்று நடக்க ஆரம்பித்தான்.எதிரில் ஒரு சேலை வியாபாரி வருவதை பார்த்தவனுக்கு நேற்று நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்தது.இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை அந்த மாமியே கட்டி கொள் என்று நான் வாங்கி வந்த சேலையை தருகிறார்கள் இவளுக்கு என்ன வாங்கி கட்டி கொள்ள வேண்டியது தானே,என்று திட்டி கொண்டே நடந்தவன் நான் யாரு………… அந்த சேலையை கட்டவச்சேன்ல என்று தனக்கு தானே சபாஷ் போட்டு கொண்டு நடந்தான்..

அவன் வருவதற்கு எதிர் புறத்தில் வந்த சுவாதி காலையில் என்ன சொல்ல வந்தீர்கள் என்று கேட்டாள்.அர்ஜூன் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக கூறி,நாம் நாளை சென்று கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு வந்து விடலாம்.என் மாமாக்கு தெரிந்தவர்தான் டி.ஐ.ஜி.அவர் மூலமாக பிரஸர் கொடுத்தால் சீக்கிரம் வேலையாகும் என்று அந்த வெட்டவெளியை வெறித்து கொண்டு சொன்னான்.ராஜாவையும் உடன் அழைத்து செல்லலாம். உதவியாக இருக்கும் என்று சொல்லிவிட்டு.ராமிற்கு இப்போதைக்கு இந்த விஷயம் தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவளை எச்சரித்து அனுப்பினான்.

சுவாதி அர்ஜூனிடம் தலையாட்டினாலும்,மாலதி விஷயம் தெரிந்ததில் இருந்து விலகி செல்லும் அவன் குணத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

சுவாதியை எச்சரித்த அர்ஜூன் அறியவில்லை அவள் மூலமாக இல்லை என்றாலும் ராமிற்கு விஷயம் தெரிந்து.அவனால் சுவாதி மரணத்தின் வாசல் வரை செல்ல போவதையும்.சுவாதியை விட்டு விலகி இருக்க வேண்டும் ராமிற்கு தண்டனை வாங்கி கொடுத்த பிறகு இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று நினைத்த அர்ஜூன் எந்த அளவுக்கு தான் சுவாதியை காதலிக்கிறோம் என்றும்.தன் மனதில் இருந்த குழப்பம் நீங்கி உண்மையான காதலை அறிந்து கொண்டபின் அவன் பட போகும் நரக வேதனை பற்றி அறியாமல்இருவரும் அடுத்த நாள் விடியலுக்காக காத்திருந்தனர்.

காலையில் எழுந்த சுவாதிக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. இருக்காதா பின்னே தன் அக்காவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க போகிறதே. வேகவேகமாக கிளம்பியவள் தன் தோழியை பார்த்து வருவதாக தாயிடம் பொய் உரைத்துவிட்டு,மனதில் இந்த முறை என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா நம்முடைய குடும்பத்தை அழித்தவனுக்கு தண்டனை வாங்கி தராமல் நான் ஓய போவது இல்லை.

மாலதிக்கு நான் கொடுத்த சத்தியத்தை நிறை வேற்ற என் உயிரையும் தருவேன் என்று மனதுக்குள் சொல்லி கொண்டுபுறப்பட்டாள்.அவர்கள் இருவரும் பேசி வைத்தது போல் ஊருக்கு வெளியே சென்று காரில் காத்திருந்த அர்ஜூனுடன் இணைந்து கொண்டாள். கார் பயணத்தில் போகும் போதும் சரி வரும் போதும் சரி இருவரும் பேசி கொள்ளவில்லை.

அர்ஜூன் மட்டும் கண்ணாடி வழியாக அவளை பார்த்து கொண்டு வந்தவன் மனதில் பெரும் சுமை. உன்னைவிட்டு என்னால் பிரியவும் முடியவில்லை, சேரவும் முடியவில்லை. உன்னை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே குழப்பமாக இருக்கிறது என்று மனதுக்குள் பேசி கொண்டான்.

 இருவரும் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு வீடு வர மாலை ஆறு மணி ஆகிவிட்டது.காரைவிட்டு இறங்கும் போதும் அவள் ராஜாவை பார்த்தே நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.அவளை பொறுத்த வரை அர்ஜூன் அக்கா காதலித்தவன் என்ற எண்ணத்தை ஆழமாக அவள் மனதில் பதிய வைத்தாள்.

சுவாதி அறியாதது வதுவாக அர்ஜூனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது சுவாதி தான் என்றும்.அவன் மனதில் வதுவுக்கு மட்டுமே இடம் அவனின் காதல் அவளுக்கு மட்டுமே என்பதை அறியாமல் போனது விதியின் சதியே.

மறுநாள் காலை எழுந்து வந்தவளை வரவேற்றது ராமின் நக்கலான சிரிப்பே.என்ன மேடம் எனக்கு எதிரா கம்ப்ளெய்ண்ட் எல்லாம் குடுத்துட்டு வந்துருக்கீங்க போல என்றவனின் முகம் விகாரமாக மாறியது.பாவம் சின்ன பொண்ணு அப்புடினு விட்டா ரொம்ப துள்ளுற இன்னைக்கு உன்னை அடக்கறேன் என்றவன்.

கல்யாணத்துக்கு அப்பறம் நீ எனக்கு பையன் பெத்து தர தயாரா இல்லைங்கும் போது உன் வழிக்கே வருகிறேன். பையன பெத்துட்டே கல்யாணம் பண்ணிக்கலாம் என்று அவளை நெருங்கியவன் அவளின் தாவணியை  இழுத்தான்.

விடுடா…….விடுடா…….என்னை என்று போராடியவள் வேகமாக கிச்சனுக்குள் நுழைந்து வேகமாக கதவை அடைத்து கொண்டாள். உதவிக்கு யாரை அழைத்தாலும் யாரும் இவனுக்கு  பயந்து கொண்டு வர போவது இல்லை.நாம் இருந்தால்தானே இவன் எதுவும் செய்வதற்கு நான் இறந்துவிட்டாள் என்ன செய்வான்.கம்ப்ளெய்ண்ட் வேறு கொடுத்திருப்பதால் நிச்சயம் என்னையும் கொல்ல பார்க்கிறான் என்ற கேசில் மாட்டிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தவள். கத்தியை எடுத்து வயிற்றில் குத்தி கொண்டாள்.

காலையில் ஏழு மணிக்கு என்ன சத்தம் என்று எழுந்து வந்த அர்ஜூன்.சுவாதி வீட்டின் முன் ராமின் கார் இருப்பதையும் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்ப்பதை பார்த்தவன்.இவர்கள் எல்லாம் மனிதர்கள்தான ஒரு பெண்ணை இவன் தொல்லை செய்கிறான்.இவர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.இன்று அவனுக்கு முடிவு கட்டுகிறேன் என்று வீட்டின் உள்ளே சென்று பாதுகாப்புக்கு அவன் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு நேராக சுவாதி வீட்டிற்குள் நுழைந்தான்.

அர்ஜூனை அங்கு எதிர் பார்க்காத ராம் ஒரு நிமிடம் திகைத்தாலும் அவனால் தன்னை என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்தில் ஆனவமாக பேச ஆரம்பித்தான்.

வாடா……… டாக்டர் நான் நீ வந்த அன்றே என்ன சொன்னேன் வந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று சொன்னேனா இல்லையா யாரை கேட்டு அவளை கம்ப்ளெய்ட் கொடுக்க கூட்டி சென்றாய்.உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அர்ஜூனை தாக்க சென்றவன் அவன் கையில் இருக்கும் துப்பாக்கியை பார்த்து தயங்கி நின்றான். அப்போதும் தன் கெத்தை விடாமல்

என்ன டா பொம்ம துப்பாக்கி வைத்து பயமுறுத்துகிறாயா? என்று மிரட்டினான்.

அவனின் பேச்சை கேட்ட அர்ஜூன் துப்பாக்கியை மேல் நோக்கி சுட்டான்.

உண்மை துப்பாக்கி என்று தெரிந்த ராம் அமைதியாக நின்றான்.வரும் போது அவன் சொன்னதுக்கு ஏற்ப போலிஸிற்கு போன் செய்த ராஜா அவர்களுடன் உள்ளே நுழைந்தான்.ராமை அரெஸ்ட் செய்து ஊரே பார்க்கும் மாறு அழைத்து சென்ற பிறகுதான் சுவாதி அங்கு இல்லை என்பதை உணர்ந்து அர்ஜூன் அவளை தேட தொடங்கினான்.

வீட்டின் அனைத்து இடங்களிலும் தேடி அவளை காணாமல் இறுதியாக கிட்சனுக்கு வந்தவன் ஆடி போனான்

Advertisement