Advertisement

அத்தியாயம்-28

பூஜை ஆரம்பிக்க போகிறது வாடி மா என்ற பக்கத்து வீட்டு மாமியுடன் செல்ல எழுந்தவள் எண்ணெயில் கால் வைத்து வழுக்கி கீழே விழ போனாள்.கீழே அவள் விழமல் பிடித்து கொண்ட மாமி.
அடடா……..பார்த்து உட்கார கூடாத மா…….பார் எண்ணெயிலேயே உட்கார்ந்து இருக்கிறாய்.சேலை புல்லா நனஞ்சுடுத்து நீ நடக்கும் இடம் எல்லாம் எண்ணெய் சீலையில் இருந்து சிந்தி கொண்டே இருக்கும் இப்படியே எப்படி சாமி கும்பிடுவாய் என்று கேட்டு கொண்டிருந்தார்.

எதேச்சையாக வருவது போல் அங்கு வந்தான் அர்ஜூன்.மாமியை பார்த்து சிரித்துவிட்டு ஒன்றும் அறியாதவன் போல் என்ன மாமி பூஜை ஆரம்பிக்க போகுது அங்கு போகாமல் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டவன்,என் அம்மா கூட அம்மனுக்கு புடவை வாங்கி சாத்த சொன்னார்கள் என்று வாங்கி வந்து விட்டேன் எங்கு கொடுப்பது என்ன செய்வது என்று ஒண்ணும் புரியவில்லை.இந்த அம்மாவிடம் எனக்கு அது எல்லாம் தெரியாது என்றால் கேட்க மாட்டேங்கறாங்க என்று புலம்புவது போல் நடித்தான்.

மாமி யோசித்து அந்த புடவையை வாங்கி பார்க்க சுவாதி போட்டிருந்த பிளவுஸ்கு மேட்சாக இருந்தது.
என்ன மாமி நீங்களே கொடுக்க போகிறீர்களா என்று ஆஸ்கர் நடிகன் ரேஞ்சுக்கு அவன் நடிக்க.அவன் எதிர் பார்த்தது போல மாமி அந்த சேலையை சுவாதி கட்டி கொள்ளட்டும் என்று நடந்த விஷயத்தை கூற அவனும் உடனே ஒத்து கொள்ளாமல் அம்மனுக்கு வாங்கியது ஒன்றும் பிரச்சனை இல்லை என்றால் எனக்கும் ஒன்றும் இல்லை என்று பெருந்தன்மை போல் கூற,சுவாதிக்கு கோபமாக வந்தது.

மாமியை பார்த்து வேண்டாம் மாமி பாவம் சாருடைய அம்மா என்ன வேண்டி கொண்டு அம்மனுக்கு எடுக்க சொன்னார்களோ, சாமிக்கு வாங்கி வந்ததை நீங்கள் கேட்கவும் சங்கடபடுகிறார்.இதை அவரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறியவள்.மாமியிடம் இருந்த சேலையை வாங்கி அர்ஜூனிடம் தந்து நீங்கள் போங்க டாக்டர் சார் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டாள்.

மாமியின் பக்கம் திரும்பிய சுவாதி மாமி நான் அந்த கோவில் கணக்கு பார்க்கும் அறையில் இருக்கிறேன். நீங்கள் வீட்டிற்கு சென்று வேறு புடவை எடுத்து வாருங்கள் என்றுவிட்டு அந்த அறையை நோக்கி சென்றாள்.

சரி மா,பாவம் அந்த புள்ளைக்கும் எதற்கு மன சங்கடம் என்று கூறி நான் போய்விட்டு வருகிறேன். அது வரை பத்திரமாக இரு என்று கோவிலைவிட்டு வெளியேறினார்.

கணக்கு பார்க்கும் அறையில் மாமிக்காக காத்து கொண்டிருந்தவள் உட்கார கூட முடியாது.கீழே எல்லாம் எண்ணெய் ஆகிவிடும் நடந்து கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று நடந்தவள்.வழுக்கிய தரையை பார்த்தாள் அவளுடைய சீலையில் இருந்து எண்ணெய் சொட்டி அறை முழுவதும் எண்ணெயாக இருந்தது.

ச்சே…..இந்த சேலை வேறு என்று எண்ணெய் சொட்டிக்கொண்டிருந்த சேலையை கழட்டி இனி எதற்கும் இது உதவ போவதில்லை.எப்படி அங்கு அவ்வளவு எண்ணெய் வந்தது.எந்த கடன் காரன் கொட்டினானோ என்று கடுப்புடன் நினைத்து சேலையை சுருட்டி ஓரமாக தூக்கி போட்டாள். இன்று நேரமே சரி இல்லை என்று நொந்து கொண்டவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதற்குள் கொண்டு வந்து விட்டீர்களா மாமி என்று நிமிர்ந்தவள் சத்தியமாக அர்ஜூனை அங்கு எதிர் பார்க்கவில்லை.

அர்ஜூனோ ஏன் இந்த சேலை கட்ட மாட்டாலாமா என்ற கோபத்துடன் மாமி கோவிலைவிட்டு வெளியேறியதும் சுவாதி இருந்த அறையை திறந்து உள்ளே சென்றவன் தடுமாறிதான் போனான்.அரக்கு நிற பிளவுஸில் அவளது சிவந்த நிறம் மேலும் கூடி தெரிய அவளின் அழகு அவனை பித்தம் கொள்ள செய்தது.

சுவாதியின் மேலிருந்து கீழாக தன் பார்வையை ஓடவிட்டவனின் கண்களில் தப்பவில்லை அவளது இடது மார்பின் மேல் பக்கம் இருந்த மச்சமும் இடையில் இருக்கும் மச்சமும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தவனை பார்த்த சுவாதிக்கு ஏகத்துக்கும் கோபம் எகிற தன் கைகளால் மேல் பகுதியை மூடி திரும்பி நின்று கொண்டு பொறிய துவங்கினாள்.

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் முதலில் வெளியே போங்கள் யாராவது வந்து நம்மை இப்படி பார்த்தாள் என்ன நினைப்பார்கள் என்று சீற அவளின் சத்தத்தில் இருக்கும் இடம் உணர்ந்து இவனும் திரும்பி கொண்டு
சாசாசாரி சாரி…….இஇந்த சேல்யையே கெட்டி கொள் என்று சௌல்லதான் வந்தேன் என்று உளறியவன் ச்ச்ச…….என்று தன் தலையில் அடித்து கொண்டு வெளியே செல்ல திரும்பியவனின் காதில் சுவாதியின் கோபமான நீங்கள் யார் எனக்கு புடவை வாங்கி தர என்ற குரல் தடுத்தது.

உங்கள் புடவை இங்கு யாருக்கும் தேவையில்லை அதனால் போகும் போது உங்கள் புடவையை எடுத்து கொண்டே போங்கள் என்று சொன்னவளை இப்போது நேராக பார்த்தவன் சொந்தம் இருந்தால் தான் புடவை வாங்கி தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுவதாகதான் நான் நினைக்கிறேன் என் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை.
நான் புடவை கட்டுவது இல்லை அதனால் இது என் புடவை இல்லை.உங்கள் மனதில் எந்த எண்ணமும் இல்லை என்றால் இதை கட்டி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றவனின் மனதில் ஆயிரம் குழப்பம்.இவளை பார்க்கும் போது எனக்குள் ஏன் இப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இதுவரை எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்காத நான் வதுவை பார்க்கும் போது மட்டும் தடுமாறுகிறேனே ஏன்?அவளை பார்க்கும் போது யாரோ ஒரு பெண்ணாக என்னால் பார்க்க முடியவில்லையே ஏன்?அவள் என் உரிமை எனக்கானவள் என்ற எண்ணம் தோன்றுகிறதே ஏன்?அப்போ நான் காதலித்தது வதுவைதானா, மாலதியை இல்லையா?ஒரே குழப்பமாக இருக்கிறதே என்று மண்டையை போட்டு உடைத்து கொண்டவன் முதலில் மாலதி சாவிற்கான தன்டணையை அவனுக்கு வாங்கி தருவோம்.அதுவரை எதைபற்றியும் யோசிக்க கூடாது என்ற முடிவெடுத்தவன்.மேலும் சில பல வேலைகளை செய்துவிட்டு வீட்டிற்கு சென்றான்.

அர்ஜீன் வெளியேறியதும் வெகு நேரம் காத்திருந்தும் மாமி வராமல் போக வேறு வழி இல்லாமல், அர்ஜீன் கொடுத்த சேலையை எடுத்தாள்.அதில் அவள் அணிந்து கொள்ள தேவையான அனைத்தும் இருந்தது.இவன் என்ன எல்லாமே வாங்கி இருக்கான்.

இந்த சேரியைதான் உடுத்த வேண்டும் என்ற முடிவோடு வாங்கி வந்தது போல் இருக்கிறதே என்று எண்ணியவளுக்கு சந்தேகம் ஆரம்பித்தது.எண்ணெய் கொட்டியது தற் செயல் இல்லையோ,இவன் செய்ததோ என்ற சந்தேகத்தோடே அதே சேரியை அணிந்து கொண்டவளுக்கு அணைத்தையும் மீறி மனதில் ஒரு குறுகுறுப்பு ஏற்படத்தான் செய்தது.

கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு,வீட்டிற்கு வந்தவளுக்கு இந்த மாமி எங்க போனாங்க என்ற சந்தேகம் தோன்ற அவரை தேடி கொண்டு அவர் வீட்டுக்கே சென்றாள். அங்கு மாமி கடுகடு முகத்துடன் அவர் கணவருக்கு மருந்து எடுத்து கொடுத்து கொண்டு இருப்பதையும். மாமா சோர்வாக அமர்ந்து இருந்ததை பார்த்து பதறி ஓடி வந்து என்னவாயிற்று என்று கேட்டாள்.

மாமிதான் அதற்கு பதில் சொன்னார்.வயசான காலத்துல ஒரு இடத்துல ஒழுங்க இருக்காம அங்கையும் இங்கையும் அலஞ்சா இப்புடிதான் இருக்கும் என்றார்.

என்னாச்சு மாமி. சுதி.

அத ஏன்டி கேக்கற உனக்கு சேரி எடுத்துட்டு வரலாம்னு வந்தன்ல அப்போ எதுத்த வீட்டுகாரங்களோட பொண்ணு ஊர்ல இருந்து வந்து இருந்தா,செத்த நாளி அவாக்கிட்ட பேசிட்டு வரலாம்னு நின்னுட்டு இருந்துட்டு வந்தேன் இவர் கோவில் படி ஏறிக்கிட்டு இருந்தாரு திடீர்னு நிலை தடுமாறி விழ போய்ட்டாரு நல்ல வேலை அந்த டாக்டர் தம்பி அங்க இருந்தாரு கரெக்ட்டா கீழ விழம புடிச்சுட்டாரு இல்லனை என்ன ஆகிருக்கும் வயசு ஆக ஆக புத்தி குறாஞ்சுட்டே போகுது எனக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிடுத்து என்று பொறிந்து தள்ளிவிட்டார்.

செத்த இரு இந்த மருந்தை வச்சுட்டு வறேன் என்று அவர் அறைக்கு சென்றுவிட்டார்.அவர் சென்றதை உறுதி படுத்தி கொண்டு சுவாதி பேசஆரம்பித்தாள்

என்ன மாமா பாத்து வரக்கூடாதா.வெயில் சேரலனா வராம இருக்கலாம்ல.சாயந்திரமா வந்து சாமிய பாத்து இருக்கலாம்ல என்று கேட்டாள்.

அட போமா சுதி நீயும் அவ கூட சேந்துக்கிட்டு என்னக்கு என்னமோ எண்பது வயசு ஆன மாதிரி பேசற,எனக்கு ஜஸ்ட் அறுவதுதான் என்றவர். நல்லதான் ஏறிக்கிட்டு இருந்தேன்.கண்ண மூடி வேண்டிக்கிட்டே படி ஏறும் போது யாரோ காலை தட்டிவிட்டது மாதிரி இருந்தது. அதுல கொஞ்சம் தடுமாறிட்டேன்.ஆன கரெக்ட்டா டாக்டர் தம்பி வந்து பிடிச்சுட்டார் என்று புலம்பினார்.

மாமா முதலில் ஜஸ்ட் சிக்ஸ்ட்டி என்று சொல்லும் போது சிரித்த சுவாதி அடுத்து அடுத்து அவர் சொன்னதில் சிந்தனையில் ஆழ்ந்தாள்.ஒரு வேலை இது எதேச்சையாக நடந்ததாக இருக்கதோ அர்ஜீனின் வேலையாக இருக்குமோ,மாமி வேறு சேலை எடுத்து வரக்கூடாது.அவர் கொண்டு வந்த சேலையைதான் கட்ட வேண்டும் என்பதற்காக அவர் கவனத்தை திசை திருப்பி இருப்பாரோ என்ற சந்தேகம் தோன்றிய அடுத்த நொடி ச்ச…ச்ச…. இருக்காது உதவி செய்வதாக சொன்னான் எதேச்சையாகதான் இருக்கும் என்று முடிவுக்கு வந்தவள்.அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பிறகுதான் சென்றாள்.

சுவாதி அறியதா ஒன்று என்னவென்றால் நம்ம அர்ஜீனோட கைங்கர்யம்தான் இது என்று.

Advertisement