Advertisement

அத்தியாயம்-27

மறு நாள் யாருக்கும் காத்திராமல் எப்போதும் போல் விடிந்தது.இருவரை தவிர இரவு முழுவதும் தான் மாலதிக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து அர்ஜூனும்,தன் அக்கா காதலித்தவனையா தானும் காதலித்தோம் என்ற குற்ற உணர்ச்சியில் சுவாதியும் வெகு நேரம் அழுதுவிட்டு காலை லேட்டாக எழுந்தனர் ஆளுக்கொரு முடிவுடன்.

சுவாதியிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று அர்ஜூனும்,அஜூ என்று சொல்ல வந்து இனி எப்போதும் அவனை அவ்வாறு கூப்பிடும் உரிமை தனக்கு இல்லை. எல்லோருக்கும் போல் எனக்கும் இனி டாக்டர்தான். டாக்டரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சுவாதியும் முடிவெடுத்தனர். அதன்படி அர்ஜூனும் ராஜாவுடன் பேசி கொண்டே சுவாதி வீட்டிற்கு சென்று லட்சுமியை செக் செய்துவிட்டு எதுவும் பேசாமல் வந்துவிட்டான்.

மறுநாளும் சுவாதி வீட்டில் வேலை செய்யும் பெண் இருக்கும் நேரம் வந்து லட்சுமியை பார்த்துவிட்டு சென்றுவிடுவான். முதலில் என்றால் அவளிடம் பேசுவதற்காகவே எதாவது கேட்டு கொண்டே இருப்பான்.

சுடு தண்ணீர் வேண்டும்,காட்டன் துணி வேண்டும் என்று.ஆனால் இப்போது அவனின் அமைதி ஓரளவு சுவாதி எதிர் பார்த்திருந்ததால் அவளும் அவன் லட்சுமியை பார்த்துவிட்டு போகும் வரை வெளியில் வராமல் இருந்தாள்.விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அர்ஜூனுக்கு அது கடினமானதாகவே இருந்தது.

சுவாதியை பொறுத்த வரை அர்ஜூன் மாலதியின் கணவன் என்று தன் மனதில் பதியவைக்க முயற்சிகள் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றாள்.

மூன்று நாட்களாக சுவாதியை பார்க்காமல் வெறுமையாக உணர்ந்தான் அர்ஜூன். அம்மாவிடமாவது பேசலாம் என்று கோவில் மலை மீது ஏறினான்.அங்குதான் டவர் கிடைக்கும் என்று.பெண்கள் அனைவரும் கோவிலுக்கு வருவதை பார்த்து என்ன விசேஷம் என்று அங்கு வந்த பாட்டியிடம் கேட்டான் அர்ஜூன்.

பாட்டியோ அவனை பார்த்து கிண்டலாக சிரித்து அர்ஜூனன்னு பேரு வச்சதால பொண்ணுங்க மட்டும்தான் உங்க கண்ணுக்குபடுவாங்களா டாக்டர் சார்.இன்னைக்கு ஊரில் பெரிய தலைகளுக்கு எல்லாம் முதல் மரியாதை செய்வாங்க அதற்குதான் இந்த கூட்டம் என்று சொல்லி சிரித்தார்.
அர்ஜூன் கடுப்பாகி அந்த பாட்டியை பார்த்து முறைக்க இந்த காலத்து புள்ளைங்களுக்கு உண்மைய சொன்னா எதுக்குதான் இப்படி கோபம் வருதோ என்று புலம்பிவிட்டு போனார்.

அர்ஜூனின் கோபம் இப்போது இந்த பெயரை வைத்த தன் அம்மாவின் மேல் திரும்பியது.வேகமாக அம்மாவின் நம்பரை டையல் செய்தவன் கோவில் சத்ததில் கேட்காது என்று ஸ்பீக்கரை ஆன் செய்து பேச ஆரம்பித்தான்.

கோவிலுக்கு வந்த சுவாதி அர்ஜூனிடம் பேச வேண்டும் என்று அவன் அருகில் நின்றதால் அவர்களின் பேச்சு அவள் காதிலும் விழுந்தது.
அம்மா……..என்று அர்ஜூன் கத்தவும் அந்த பக்கம் சுந்தரி.

டேய் மெதுவாடா எனக்கு நன்றாக காது கேட்கும் எதற்கு இப்படி கத்துகிறாய் என்று கேட்டார்.
கத்துகிறேனா உங்களை……எனக்கு ஏன் நீங்கள் அர்ஜூன் என்று பெயர் வைத்தீர்கள் என்று கேட்டான்.
சுந்தரி அந்த பக்கம் சிரிக்கும் சத்தம் கேட்டது.
ஏன்டா….இதை கேட்க தான் உன் வேலை எல்லாம் விட்டுவிட்டு வந்து எனக்கு போன் செய்து இந்த கத்து கத்தினாயா என்று கிண்டல் செய்ய.
அர்ஜூனோ சிரிக்குறீங்களா என் பொலப்பே இங்கு சிரிப்பா சிரிக்குது இதில் நீங்கள் வேறு என்னை கடுப்படிக்காதீர்கள் என்று கத்தினான்.
சுந்தரி சரி சரி எனாச்சு ஏன் உனக்கு திடீரென்று இப்படி ஒரு கேள்வி என்று கேட்க சற்று நேரத்திற்கு முன்பு அவனுக்கும் அந்த பாட்டிக்கும் நடந்த உரையாடலை கூறி பாருங்கள் நீங்கள் இந்த பேர் வைத்ததால்தான் அந்த பாட்டியெல்லாம் என்னை கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புகார் வாசித்தான்.
சுந்தரியோ சரி விடுடா அர்ஜூனன் எவ்வளவு பெரிய வில் வித்தன் தெரியுமா?பெரிய வீரன் எனக்கு மகாபாரதத்தில் பிடித்த கேரக்டர் அதனால்தான் உனக்கு இந்த பேர் இனிமேல் எல்லாம் மாத்த முடியாது.அதுமட்டும் இல்லை உன் மகன் பெயர் கூட யோசித்துவிட்டேன்.

அர்ஜூனின் மகன் அபிமன்யு பெயர் நன்றாக இருக்கிறதா என்று மேலும் அவனை சீண்ட தாயின் சீண்டலை புரிந்து கொண்ட அர்ஜூன்
ஏன் மா?ஏன்? உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி நான் என் மகனுக்கு மாடர்னாக தான் பெயர் வைப்பேன்.உங்கள் இஷ்டபடி உங்க மகனுக்கு பெயர் வச்சீங்க இல்ல,நான் எதாவது கேட்டனா.அது மாதிரி என் இஷ்டபடிதான் என் மகனுக்கு பெயர் வைப்பேன் என்று கண்ணில் கனவுடன் கூறிய அர்ஜூனை பார்த்த சுவாதி அவன் வசீகரத்தில் ஒரு நிமிடம் தடுமாறிதான் போனாள்.
அர்ஜூன் கனவில் சுவாதியும் அவளை போன்று குண்டு கன்னத்துடன் ஒரு மகளை தூக்கி வைத்திருப்பதை போல் நினைத்து பார்த்தான். சட்டென தலையை உழுக்கி என்ன நினைவு எங்கெங்கோ செல்கிறது.
என் வாழ்வில் திருமணம் என்பது நடக்குமா?அப்படி நடந்தால் என் காதல் பொய்யா என்று மண்டையை போட்டு பிச்சு கொள்ளாத குறையாக யோசித்தான். அதற்குள் ஹலோ….ஹலோ….. என்று பலமுறை கத்திவிட்டார் சுந்தரி.

தாயின் குரலில் கவனம் கலைந்தவன் சொல்லுங்க அம்மா என்று குழம்பிய மன நிலையில் பேச ஆரம்பித்தான்.
என்னடா குரலில் சுதி இறங்கிவிட்டது. சுந்தரி
சுவாதி நினைப்பில் இருந்த அர்ஜூன்.சுதியின் நினைவு வந்ததால்தான் பிரச்சனையே என்று சொல்ல கேட்டு கொண்டிருந்த இரு பெண்களும் திகைத்தனர்.

சுவாதியோ என்னை பிரச்சனை என்று சொல்கிறாரே என்று திகைக்க,சுந்தரி என்ன டா சொல்கிறாய் என்ன சுதி என்று புரியாமல் திகைப்புடன் கேட்டார்.
தாயிடம் உளறிய தன் மட தனத்தை நொந்து கொண்ட அர்ஜூன் அது ஒண்ணும் இல்லமா,இங்கு சிக்னல் ப்ராப்ளம் சரியாக கேட்கவில்லை.நான் பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறி சமாளித்து போனை கட் பண்ணியவனிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.

அப்பாடா………சமாளிச்சாச்சு என்று.
சரி கோவிலுக்கு செல்லலாம் என்று திரும்பியவனின் பின்னே நின்று கொண்டிருந்தாள் சுவாதி அவளை அங்கு எதிர் பார்க்காத அர்ஜூன் அவளை ஆச்சரியமாக பார்த்து பின் தன் முகத்தை கோபமாக மாற்றி கொண்டு என்னவென்று கேட்டான்.அவளை தள்ளி நிறுத்தும் முயற்சியுடன்.ஆனால் அந்த முயற்சி அவள் பேசி முடிக்கும் போது அதிதகோபமாக மாறுவதை உணராமல்.

தன்னுடன் பேசுவதை கூட அவன் விரும்பவில்லை என்பதை அறிந்து அவளுக்குள் உள்ள ரோசம் தலை தூக்க ஆரம்பித்தது.அவனை நேர் பார்வை பார்த்தவள் நீங்கள் என் அக்கா என்று நினைத்துதான் என்னிடம் மணந்து கொள்வதாக வாக்களித்தீர்கள் அதனால் அது செல்லாது.

நான் உங்கள் வாக்கை உங்களிடமே தந்து விடுகிறேன் என்று சொன்னவளை அர்ஜூன் ஆச்சரியமாக பார்க்க நேற்று நைட் அம்மாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று சொல்ல வந்தேன். நீங்கள் அப்போது மாலுவின் போட்டோ வைத்து பேசி கொண்டு இருப்பதை பார்த்துவிட்டுதான் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டேன்.

நீங்கள் கவலை பட தேவையில்லை மாலதியிடம் நீங்கள் சொன்ன வார்த்தை அது அவளிடமே சொன்னதாக இருக்கட்டும்.அது மட்டும் இல்லாமல் திருவிழா முடிந்து இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் என்று ராம் காலையில் வந்து சொல்லிவிட்டு சென்றான் என்று சுவாதி பேச பேச தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று புரியாமல் பார்த்தவனின் கண்ணில் பட்டது அவளின் அரக்கு நிற புது பட்டு புடவை.சந்தேகமே இல்லாமல் அவனுக்கு தெரியும் இது அந்த ராம் எடுத்து கொடுத்திருப்பான் என்று.அவன் எடுத்து கொடுப்பதை இவள் எப்படி கட்டலாம் என்ற எண்ணம் தோன்ற அவளை முறைத்தான்.
அர்ஜீனின் முறைப்பை பார்த்தவள் எதற்கு முறைக்கிறான் என்று முதலில் புரியாமல் பார்த்தவள் அவன் கண்கள் புடவையில் இருப்பதை பார்த்து, அது வந்து……என்று தடுமாறி ராம் இந்த புடவைதான் கட்டி வர வேண்டும் என்று கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனான் அதான்.சரி நான் கிளம்புகிறேன்.என்னால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என்று கோவிலுக்குள் சென்றவள் எப்போதும் அவள் அமரும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு கோபுரத்தை வெறிக்க ஆரம்பித்தாள்.

அர்ஜூனுக்கு முதலில் தோன்றிய எண்ணம் இவளுக்கு எப்படி அவன் புடவை எடுத்து கொடுக்கலாம் என்பதுதான்.வேகவேகமாக கோவிலைவிட்டு வெளியேறியவன் போய் நின்ற இடம் புடவை கடைதான்.அவள் போட்டிருந்த அரக்கு நிற பிளவுஸ்கு ஏற்றவாறு ஒரு அழகான சேலையை வாங்கியவன் மீண்டும் கோவிலுக்கு வந்தான்.அங்கு சுவாதி கோபுரத்தை வெறித்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டே நடந்தவனுக்கு அப்போதுதான் ஒன்று உரைத்தது.

நாம் யார் அவளுக்கு புடவை வாங்கி தர.அவன் வாங்கி தந்த புடவையை அவள் கட்டி இருந்தாள் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது.உடனே அவளுக்கு வேறு புடவை வாங்கி தர வேண்டும் என்ற எண்ணம் ஏன் எனக்கு தோன்றியது என்று யோசிக்கையில்,ஒரு அயோக்கியன் எடுத்து கொடுத்த புடவையை கட்டியிருக்கிறாளே என்ற கோபம் அவனால் எவ்வளவு துன்பம் அனுபவித்து கடைசியில் அவன் வாங்கி தந்த புடவை கட்டி இருக்கிறாளே என்றுதான் கோபம்.

ராம் பரதேசியால்தான் என்மாலதி இறந்தால் என்ற கோபம் என்று தனக்கு தானே ஒன்றுக்கும் உதவாத காரணத்தை கண்டுபிடித்தான்.
இந்த சேலையை எப்படி அவளிடம் கொடுப்பது என்று யோசித்து கண்டு பிடித்த ஐடியாவின்படி அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் வாங்கி வந்த ஒரு பாட்டில் எண்ணெயை ஊற்றினான்.பிறகு ஒன்றும் தெரியாதவன் போன்று அந்த இடத்தைவிட்டு தள்ளி சென்றான்.

Advertisement