Advertisement

அத்தியாயம்-26

அர்ஜீன் பேய் என்று பயந்து அரண்டு நின்றது ஒரு நிமிடம்தான் பின் ச்ச……….இல்லை, இல்லை இது யாரோ செய்யும் வேலை நாமே ஒரு நிமிடம் பயந்துவிட்டோமே இது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன்.யாராக இருக்கும் என்று கூர்ந்து பார்த்தவன் முகம் சரியாக தெரியாமல் இருப்பதால் ஓரமாக இருந்து கவனிப்போம் அசந்த நேரம் பார்த்து நேரில் நிற்போம் அப்போது அது யார் என்று கண்டு பிடித்து விடலாம் என்ற முடிவுடன் ஓரமாக மறைந்து நின்றான்.

ராம் வா கல்யாணம் பண்ணிக்கலாம்,அதற்குதானே ஆசைபட்டாய் வா….. என்று கத்தி விகரமாக சிரித்தது. ஆமாம் நான் வர கூடாது என்று நம்பூதிரியிடம் தாயத்து எல்லாம் கட்டியிருக்கிறாய் போல,அதனால் தான் என்னால் உன் அருகில் வர முடியவில்லையா? என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு என் தங்கையுடன் நிச்சயம் பண்ண வேண்டும் என்று சொன்னாயாம்,ஏன் எனக்கு என்ன குறை என்று கேட்டு மீண்டும் அந்த வீடே அதிரும் வண்ணம் சிரித்துவிட்டு, என்றாவது ஒரு நாள் உன் கையில் இருக்கும் தாயத்து கீழே விழும் அன்று உன்னை என்ன செய்கிறேன் பார். நான் மீண்டும் வருவேன் என்று சத்தமாக சொல்லிவிட்டு, அதே மரத்தை நோக்கி நடந்து வந்தது.

உஷார் ஆன அர்ஜூன் தானும்அந்த மரத்தின் பின் சென்று நின்று கொண்டான்.யார் இப்படி இவனை பயமுறுத்துவது இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்று யோசித்து கொண்டு இருந்தவனின் அருகில் அந்த சத்தம் கேட்கவும் கொஞ்சம் பயந்துடனே இருந்தான்.

அந்த உருவம் ராமின் வீட்டைவிட்டு ஏன் இவ்வளவு தூரம் வந்து இப்படி செய்கிறது என்று எண்ணியவனின் கையின் மேல் விழுந்தது பேயாக வேஷம் போட்டவர் வைத்திருந்த ஒட்டு முடி. இது தான் சமயம் என்று எண்ணிய அர்ஜூன் அந்த உருவத்தின் பின் பக்கமாக சென்று இடது கையால் வயிற்றின் மேல் பகுதியை அழுத்தியும் வலது கையால் சத்தம் போடாமல் இருக்க வாயை அடைத்தும் இருக்கினான்.
யார் நீ எதற்காக இப்படி வேஷம் போட்டு வந்து ஊரை ஏமாற்றுகிறாய் என்று அதிகாரமாக கேட்டான்.
அவன் கையில் சிக்கியிருந்த உருவம் முதலில் திகைத்து அவனிடம் இருந்து தப்பிக்க போராடிகொண்டு இருந்தது. உருவத்தின் தப்பிக்கும் எண்ணத்தை உணர்ந்தவன் மேலும் இருக்கிய போது கைகளில் வித்தியாசமான உணர்வு ஏற்படவும் தன்னுடைய எண்ணத்தை உறுதி செய்து கொள்ள தன் கைகளை எடுத்துவிட்டு முன் பக்கமாக திருப்பி முகம் பார்க்க எண்ணி கைகளை கொஞ்சம் தளர்த்தினான்.
இரும்பு போன்ற அவன் பிடி தளர்ந்தவுடன் தன்னை மீண்டும் அந்த கைகள் பிடிக்காத வண்ணம் துள்ளி குதித்து விலகி நின்றாள் சுவாதி.
எதிர் பாராமல் இது மாதிரியான சூழ்நிலையில் சந்தித்த இருவருமே திகைத்துதான் போனார்கள். முதலில் தன்னை சுதாரித்து கொண்ட அர்ஜூன் சுவாதியின் கைகளை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தவன்,அவன் தங்கி இருக்கும் வீட்டிற்குள் வந்துதான் கையை விட்டான். அவளை முறைத்து கொண்டே ஓங்கி ஒரு அறை விட்டான்.

அறிவிருக்காடி உனக்கு எதற்கு இப்படி செய்தாய்? இந்த விஷயம் மட்டும் அவனுக்கு தெரிந்தது பிரச்சனை உனக்குதான்.ஏன் இப்படி செய்தாய்?என்று அவளின் இரு தோள்களிலும் கையை வைத்து உழுக்கினான்.
சுவாதியின் காதல் கொண்ட மனம் அவனிடம் அனைத்தையும் சொல்ல தூண்டினாலும் ஏதோ ஒன்று அவளை சொல்ல விடாமல் தடுத்தது.அதனால் அவள் எதுவும் சொல்லாமல் நான் என்ன தவறு செய்தேன்? என்ற ரீதியில் அர்ஜூனை முறைத்து கொண்டு நின்றாள்.கேட்பதற்கு பதில் சொல்லாமல் திமிராக நின்று கொண்டிருந்த சுவாதியை பார்த்த அர்ஜூன் மேலும் கோபமாகி நீ இப்படி கேட்டால் சொல்லமாட்டாய் வா உன் அம்மாவிடமே அனைத்தையும் சொல்கிறேன்,அப்போது அவர்களிடம் நீ பதில் சொல்லிதானே ஆக வேண்டும் வா என்று இழுத்தான்.
சுவாதி அம்மா என்ற வார்த்தையில் உடைந்து அழுதவள். வேண்டாங்க வேண்டாம் இப்ப உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் நான் ஏன் இப்படி செய்தேன் என்றுதானே நானே சொல்கிறேன் என்றவள்.
தன் வாழ்வின் அழகான பக்கத்தையும் அந்த ராமால் அலங்கோலமான தன் அக்காவின் வாழ்வையும்,தன் அம்மாவிற்கு நேர்ந்த கொடுமையையும் சொல்லி இறுதியாக மாலதி அவளிடம் வாங்கிய சத்தியத்தைபற்றியும் சொன்னாள்.

எங்கும் போகாதவள் தோழியின் திருமணத்திற்கு சென்று இப்படி ஒரு சிக்கலில் மாட்டுவாள் என்று நாங்கள் யாருமே நினைக்கலங்க என்று இத்தனை நாள் சோகத்தையும் தனக்குள் வைத்து குமுறி கொண்டு இருந்தவள் இன்று கேட்க ஒரு ஆள் கிடைக்கவும் அனைத்தையும் அவனிடம் கொட்டி தீர்த்து அவன் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

அந்த ராமை பழி வாங்க நான் தேர்ந்தெடுத்த வழிதான் இந்த பேய் நாடகம்.வேண்டுமென்றே இரவு நேரங்களில் யாராவது வருகிறார்களா என்ற பார்த்து பேய் போல் சிரித்து அவர்களை பயமுறுத்தினேன் முதலில் நம்பாத மக்கள் நாட்கள் செல்ல செல்ல நம்ப ஆரம்பித்தனர்.

அப்படிதான் ராமையும் பயமுறுத்தி அவனுக்கு நிம்மதி இல்லாமல் செய்ய வேண்டும் என்று இப்படி செய்தேன்.

சுவாதி கூறுவதை கேட்டவனுக்கு அதிர்ச்சியாகவும், இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்து அருவருப்பாகவும் இருந்த அதே சமயம் மற்றொரு சந்தேகம் அவன் மனதில் எழுந்து குடைந்து கொண்டு இருந்தது.அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தி கொள்ளும் முகமாக அவளையே கேட்போம் என்ற முடிவுக்கு வந்தவன் சுவாதியை பார்த்தான்.

அர்ஜூன் சுவாதியையே கூர்மையாக பார்த்து கொண்டு நீங்கள் இருவரும் டிவின்ஸா என்ற அவனின் கேள்விக்கு அவள் இல்லை என்று சொல்ல வேண்டும் என்று நினைத்து இருக்க சுவாதியோ ஆமாம் என்று தலையாட்டலில் அவனின் ஆசையை நிராசையாக்கினாள்.

சுவாதியின் தலையாட்டலை பார்த்த அர்ஜீனுக்கு மேலும் அதிர்ச்சியாகி போனாது.நான் முதலில் சந்தித்தது, பேசியது அனைத்தும் மாலதியிடம்தானா, அதனால்தான் இவளுக்கு என்னை தெரியவில்லை. ஆனால் மாலதி.அவள் இப்போது இல்லையா.நான் பின்னாடி சுற்றி அலைந்தது அவளது சகோதரியிடமா என்று திகைத்து யோசித்து கொண்டு இருந்தான். இருப்பினும் ஒரு சின்ன நப்பாசையில் மாலதி தோழியின் பெயர் திருமண தேதி, மண்டபம் என்று அனைத்து விவரங்களையும் கேட்டவன் சுக்கு நூறாக உடைந்தான்.

தன் மார்பில் சாய்ந்து அழுதவளை நிமிர வைத்தவன் நீ இப்போது வீட்டிற்கு போ இதற்கான தீர்வை நாளை பேசலாம் என்று அனுப்பி வைத்தான்.அவள் சென்றவுடன் தலையை பிடித்து கொண்டு சிறிது நேரம் அமர்ந்தவன் வேகவேகமாக மாடி படிகளில் ஏறி தன்னுடைய போட்டோவிற்கு பின்னால் இருக்கும் மாலதியின் போட்டோவை பார்த்து கண்ணீர் சிந்தினான்.

உன் தங்கை சொன்ன அதே திருமணத்தில் தான் நானும் உன்னை பார்த்தேன்.அங்குதான் நான் இந்த போட்டோவை உனக்கு தெரியாமல் எடுத்தேன்.
நீயே என் நினைவு முழுவதும் இருந்தாய் உன்னை மறுபடியும் எப்போது பார்போம் என்று நான் தவித்து கொண்டு இருந்தேன்.இந்த ஊருக்கு வந்து சுவதியை பார்த்து நீ என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு வேறு கொடுத்துவிட்டேனே உன்னை காதலித்துவிட்டு என்னால் எப்படி இன்னோரு பெண்ணை மணக்க முடியும்.என்னால் எதுவும் செய்ய முடியாமல் கொடுத்த வாக்கை காப்பற்ற முடியாதவனாக்கி விட்டாயே என்று போட்டோவை பார்த்து புலம்பினான். அர்ஜீன் அறியவில்லை அவன் பேசிய அனைத்தையும் சுவாதி கேட்டுவிட்டாள் என்று.

ஆம் அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று சொல்ல வந்தவள் அர்ஜூனின் புலம்பல் அனைத்தையும் கேட்டு கண்ணில் கண்ணீருடன் அங்கிருந்து சென்றிருந்தாள்.

Advertisement