Advertisement

அத்தியாயம்-25

ராஜா சொல்வதை கேட்ட அர்ஜூனும் இவனிடம் எது கேட்டாலும் பதில் வராது இங்குதானே இருக்கிறோம் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

அடுத்த நாள் சென்று லட்சுமியை முழுவதுமாக டெஸ்ட் செய்ததில் அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக அவரது உயிரை காத்து  வைத்திருப்பது போல்தான் அர்ஜூனுக்கு தோன்றியது.ஆக்ஸிடன்டில் அதிக பதிப்படைந்தவரை சாதாரண ட்ரிட்மண்ட் கொடுத்து அவரது உயிரை தற்போது போகாமல் மட்டுமே காத்துள்ளனர்.இதே நிலையில் இவ்வளவு நாட்கள் இருந்ததால் அவர்கள் மேலும் வீக்காகதான் ஆகியிருக்காறார்கள்.இன்னும் மிஞ்சி போனால் ஆறு மாதம் என்ற விவரத்தை சொன்ன போது கேட்டு கொண்டிருந்த சுவாதியின் இதழ்களில் விரக்தி புன்னகை ஒன்று மட்டுமே வெளிப்பட்டது.

தாய்காக அவள் கத்தவில்லை கதறவில்லை அர்ஜூனுக்கு ஆச்சரியமாக இருந்தது.எதுவும் பேசாமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினான்.

அன்று இரவு ராம் குடித்துவிட்டு வந்து சுவாதியின் வீட்டின் முன்பு நின்று கொண்டு கண்டபடி கத்தி கொண்டு இருந்தான்.

ஏய் நான் உன்னை விலக்கி வாங்கிவிட்டேன்.நீ எனக்கு தான். இதை யாராலும் மாற்ற முடியாது இதை அந்த மாலதி தடுத்தாலும் சரி.அவளுக்கு ஒரு முடிவு கட்டி விட்டேன்.இங்க பார் கேரள நம்பூதிரி மந்திரித்து கொடுத்த தாயத்து என்று கத்தி கொண்டு இருந்தான்.

சத்தம் கேட்டு வெளியே வந்த அர்ஜூனுக்கு ஆச்சரியம்.என்னவென்றால் அவனுடைய இத்தனை கத்தலுக்கும் பதில் இல்லாதது போல சுவாதியின் வீட்டு கதவு மட்டும் இல்லாமல் அந்த தெருவில் அனைவர் வீடும் மூடி இருந்தது.

தன் வீட்டின் உள்ளே வந்து படுத்த அர்ஜூனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யார் அந்த மாலதி என்று யோசித்து கொண்டே தூங்கி போனான்.இதோ ஆகிவிட்டது அர்ஜூன் அந்த ஊருக்கு வந்து இரண்டு மாதம் ஓடி விட்டது.இடையில் பலமுறை சுவாதியிடம் பேச முயற்சி செய்து தோல்வி அடைந்தாலும் அவன் முயற்சியை நிறுத்தவில்லை. அவளுடன் பேச வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு அதிகமானதே தவிர குறையவில்லை.

சுவாதிக்கும் அர்ஜூனின் மேல் நல்ல எண்ணம் வர துவங்கி இருந்தது.அதற்கு காரணம் அர்ஜூன் பலமுறை ராமின் அறுவையில் இருந்து காப்பாற்றியதே.அது மட்டும் இல்லாமல் சுவாதியின் தாயின் உடல் நிலையை தினமும் வீட்டிற்கு வந்து செக் செய்வான்.அந்த சமயம் அவன் லட்சுமியுடன் மென்மையாகவும்,ஆறுதலாகவும் பேசி அவருக்கு தைரியம் அளிப்பான்.

 சுவாதியை கண்டால் வம்பிழுப்பது போல் ஏதாவது பேசி கொண்டு இருப்பான்.

அன்றும் அப்படிதான் வந்தவன் எங்க வீட்லலாம் தமிழர் பண்பாடு அது இது என்று சொல்லி சாப்பிட்டுதான் அனுப்புவார்கள் வீட்டிற்கு வந்தவர்களுக்கு இங்கு ஒரு டம்ளர் தண்ணீர்குகூட வழி இல்லை என்று புலம்ப சுவாதி வேகமாக கிச்சனிற்குள் சென்று அவனுக்கு டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.

இந்தாங்க டாக்டர் சார் இப்புடியே நாலு வீட்ல போய் பெரிய வீட்ல எனக்கு தண்ணீர்கூட தரவில்லைனு சொல்லுங்க இருக்க பெயரும் கெட்டு போகட்டும் என்று கடுப்படித்தாள்.

நான் என்னமா செய்யட்டும் உண்மையைதானே சொன்னேன்.

என்ன உண்மையை சொன்னீர்கள்.வீட்டு வேலை செய்யும் அக்கா வந்து சமைத்துவிட்டு சென்று விடுவார்கள் அவர் இருக்கும் போது நீங்கள் வந்து இருந்தால் சாப்பிட சொல்லி இருப்பேன்.நீங்கள் எப்போதும் அவர் சென்ற உடன்தான் வருகிறீர்கள் அதற்கு நான் என்னபண்ண முடியும்.இப்போதும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்,சுடு தண்ணீர் கேட்டீர்கள்,சரியென்று கொண்டு வந்து கொடுத்தேன் குடிக்கவில்லை.இப்போது சாப்பாடு கேட்கிறீர்கள் டீ கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன் அதையும் வாங்கி வைத்துவிட்டீர்கள் குடிக்கவில்லை. உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்றாள் கோபமாக.

ஹே…..கூல் எதுக்கு இவ்ளோ கோபம்.இவ்ளோ கோபம் உடம்பு தாங்காது மா.மீ பாவம் என்று சிறு பிள்ளை போல் கூறியவனை புரியாமல் பார்தாள் சுவாதி.

சுத்தம் ரொம்ப கஷ்டம் ஏம்மா போமா போய் பால் கொண்டு வா  என்றான் அழுத்து கொண்டு.சுவாதி போகாமல் இடுப்பில் கைவைத்து அவனை முறைத்து கொண்டு இருந்தாள்.

என்ன நீ போகலையா….                         அர்ஜீன்.

உங்க பக்கத்துல பாருங்க அங்க இருக்க டம்ளர் எல்லாம் காலி பண்ணுங்க அதுக்கு அப்புறம் நான் வேற கொண்டு வறேன் என்று சிறு சிரிப்புடன் கூறியவளை பார்த்தவன்.வேகமாக எழுந்து ஓ.கே இன்னைக்காவது உங்க சிரிப்ப காமிச்சீங்களே அது வரை சந்தோஷம்.நான்கூட உங்களுக்கு சிரிக்க தெரியாது என்று நினைத்தேன் அதை மாற்றிவிட்டீர்கள் என்று கூறி, நன்றி வணக்கம் மீண்டும் நாளை சந்திப்போமா என்று சென்றுவிட்டான்.

அர்ஜீனின் கண்ணியமான பார்வையிலும் குறும்பான பேச்சிலும் சுவாதியின் மனதில் இருக்கும் நல்ல எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது.அச்சமயம் இடி போல் இறங்கியது ராம் சொன்ன செய்தி.ஆம் சுவாதிக்கும் ராமுக்கும் சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னதுதான் அந்த இடி.

கை கூடா காதல் என்னுள் ஏன் வந்தது என்று ஊமையாக அவளால் அழ மட்டுமே முடிந்தது.பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக இந்த காதலை வெளியில் யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளே புதைத்து கொள்வது என்ற முடிவு எடுத்து கொண்டாள்.

இப்படியே நாட்கணக்கில் அல்லாமல் மாத கணக்கில் தன்னுள் மொட்டுவிட்ட காதலை தனக்குள்ளே மறைத்துவிட்டதாகதான் நினைத்தாள். அவளுடையவன் வந்து அவளிடமே சவால் விடும் வரை.

சுவாதிக்கு அன்று கோவிலுக்கு சென்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றவே பக்கத்து வீட்டு மாமுயுடன் கிளம்பிவிட்டாள்.மாமி பிரசாதம் வாங்கி வர சென்றுவிட இவள்அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து கோபுரத்தை பார்த்து கொண்டு இருந்தாள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டு இருந்தது.

அர்ஜூனும் கோவிலுக்கு வந்த இடத்தில் சுவாதியை பார்த்து அவளிடம் பேசும் ஆவலில் அவள் அருகில் செல்ல,சுவாதி அர்ஜூன் வருவதை பார்த்து எழுந்து செல்ல முற்பட்டாள்.அவளின் செயலை எதிர் பார்த்து வந்தது போல் வேகமாக அவளை நெருங்கிய அர்ஜூன் அவளின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு

உட்கார்,நான் உன்னுடன் பேச வேண்டும் என்று சொன்னான்.சுவாதியோ யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் முதலில் கையை விடுங்கள் என்று சீறினாள்.

நான் கையை விட்டாள் நீ ஓடி விடுவாய் எத்தனை முறை இப்படி செய்திருக்கிறாய்.நான் சொல்வதை கவனமாக கேட்டு கொள் யார் வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும் இந்த அம்மன் சந்நிதியில் வைத்து சொல்கிறேன் நன்றாக கேட்டு கொள் உனக்கு தாலிகட்டி உன் நெற்றியில் பொட்டு வைக்கும் உரிமை எனக்கு மட்டும் தான் உள்ளது.

நான் தான் உன் கணவன்.உனக்கும் என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.நீ யாருக்காக பயப்படுகிறாய் என்றும் தெரியும். இதுதான் என் முடிவு என்று சொன்னவன் இதை சொல்லதான் வந்தேன் பாய்…….. என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

சுவாதி தான் என்ன நினைக்கிறோம் என்று புரியாமல் திக் பிரம்மை பிடித்தவள் போல் நின்று கொண்டு இருந்தாள்.பக்கத்து வீட்டு மாமி வந்து அவள் நிற்பதை பார்த்து என்ன மா ஏன் இப்படி தனியாக நிற்கிறாய் என்று கேட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

நாட்கள் தன் போக்கில் செல்ல, அர்ஜூன் தன் காதலை சொல்லி ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று இரவு தூக்கம் வராமல் மாடியில் நடந்து கொண்டிருந்த அர்ஜூனுக்கு யாரோ ரோட்டில் பதுங்கி பதுங்கி செல்வது கண்ணில்பட்டது.

யார் இது இந்த நேரத்துக்கு ஒரு வேலை திருடனாக இருக்குமோ எதற்கும் போய் பார்ப்போம் என்று இவனும் வேகமாக இறங்கி அந்த உருவத்தை தொடர்ந்து சென்றான்.அந்த உருவம் மறைவாக ஒரு மரத்தின் பின்புறம் சென்று சிறிது நேரம் கழித்து வெளிபட்ட போது பார்த்த அர்ஜூனுக்கு வேர்த்து விறுவிறுத்து போய்விட்டது. என்ன காரணம் என்று பார்கிறீர்களா அது ஒன்றும் இல்லை அவன் பார்த்தது பேயை.ஆமாம் தலையை விரித்து போட்டு கொண்டு வெள்ளை நிற சாரி கட்டி கொண்டு ஜல் ஜல் என்று கொழுசு சத்தத்துடன் ராமின் வீட்டிற்கு அருகில் சென்று நிலம் அதிர நடந்து, விகாரமாக சிரித்தது.

அர்ஜூனோ ராஜா சொன்ன விஷயத்தை நினைத்து திகிலடைந்து இருந்தான்.அதாவது சுவாதிக்கு ஒரு அக்கா இருந்ததாகவும் அவள் இறந்து அவளின் ஆவி இங்கு சுத்தி கொண்டு இருப்பதாகவும் அவளை நைட் சிப்ட் முடிந்து வருபவர்கள் பார்த்திருப்பதாகவும் அதனால் இரவு நேரங்களில் வெளியே எங்கும் போக வேண்டாம் என்று எச்சரித்து இருந்தான்.

பேயாவது ஒன்றாவது என்று கிண்டல் செய்து சிரித்தது நினைவுக்கு வந்தது.அப்போ பேய் எல்லாம் உண்மையில் இருக்கிறதா என்று அரண்டு போனான்.

Advertisement