Advertisement

அத்தியாயம்-24

சுவாதி சொன்னதையே சொல்லி புலம்பி கொண்டு இருக்க, ஐ.சி.யூ வில் இருந்து வெளியில் வந்த நர்ஸ் சுதிமா யாருங்க வந்துட்டீங்களா பேசண்ட் கூப்பிடறாங்க என்று சொன்னவுடன் இல்ல நான் வரமாட்டேன்,நான் வரமாட்டேன் என்று கத்தி கொண்டே இருந்தவளை பிடித்து அமர வைத்த அலமேலு நீங்க போங்க மேடம் நான் அனுப்புகிறேன் என்று கூறி அவரை அனுப்பிவிட்டு சுவாதியை கோபமாக முறைத்தார்.

நான் கூட உனக்கு உன் அக்காவின் மேல் பாசம் அதிகம் என்று நினைத்தேன்.ஆனால் நீ இவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவள் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது என்று கோபமாக கூற.சுவாதியோ இவர் எதுக்கு இப்படி பேசுகிறார் என்று பார்த்தாள்.

அலமேலு சுதியை திட்ட தொடங்கினார்.உன் அக்காவுக்கு எப்போ ஆக்ஸிடெண்ட் ஆச்சுனு தெரியுமா என்று கேட்க.சுதி மறுப்பாக தலையாட்டினாள்.

விஷயம் அறிந்த ராம் தன் பெயர் வெளியில் வர கூடாது என்று சொல்லி,குடுக்க வேண்டிய இடத்தில் பணத்தை கொடுத்து ஆக்ஸிடெண்ட் கேஸாக மாற்றி விட்டான்.மாலதியின் கடத்தல் கேஸை.
நேற்று காலை பத்து மணிக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சு எங்களுக்கு மதியம்தான் தெரியும்.ஆனால் நாங்கள் வந்ததில் இருந்து உன் அப்பாவை கண்ணால் கூட பார்க்கவில்லை. கிட்டதட்ட இருபத்தி நான்கு மணி நேரமாக இந்த வலியை தாங்கி கொண்டு இருக்கிறாள். உனக்கே தெரியும் சின்ன வலியை கூட அவளால் தாங்க முடியாது என்று.இப்போது அவளுக்கு முப்பது தையல் போட்டிருக்கிறார்களாம். அவளுக்கு எப்படி வலிக்கும் என்று யோசித்து பார்.
ஒன்று நீ அவளை பார்த்து அவளின் வலியில் இருந்து வெளியில் வர உதவு இல்லை அவள் வலியில் துடித்து கொண்டே இருக்கட்டும் நான் வேண்டும் என்றால் டாக்டரிடம் சொல்லி கதவை திறந்து வைக்க சொல்கிறேன்.அவள் உன் பெயரை சொல்வதையும் வலியில் துடிப்பதையும் காது குளிர கேள் என்று கோபமாக சொல்லிவிட்டு இரண்டு நாற்காலி தள்ளி போய் உட்கார்ந்தார்.

அலமேலு சொல்வதும் உண்மைதான்.பென்சில் சீவும் போது கையில் ஏற்பட்ட காயத்தையே தாங்க முடியாமல் இருந்தவளின் நினைவு தாக்க மெதுவாக எழுந்து ஐ.சி.யூ நோக்கி சென்றாள்.அவள் மனதினுள் நாங்கள் யாருக்கு என்ன பாவம் செய்தோம்.எதற்காக எங்களுக்கு இந்த தண்டனை என்று குமுறி கொண்டே மாலதி இருக்கும் பெட்டின் அருகே வந்தாள்.அவளை பார்த்து எப்போதும் சிரிக்கும் சிரிப்பை சிந்த முடியாமல் காயங்கள் அவளை வதைக்க கண்ணீருடன் சற்று நேரம் எதுவும் பேசாமல் சுதியையே பார்த்து கொண்டிருந்த மாலதி நடந்த விஷயங்கள் அனைத்தையும் மெதுவாக சொன்னவள். அவர்களுக்கு சுவாதி தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற சத்தியத்தை பெற்று கொண்டு மாலதியின் உயிர் பறவை அவளை விட்டு சென்றது.
இதோ மாலதி இறந்து ஆறு மாதம் ஆகிவிட்டது.
லட்சுமி லாரியில் அடிபட்டதால் கோமா ஸ்டேஜில் மூன்று மாதம் இருந்து பிறகு தான் கண் விழித்தார்.அப்போதும் அவரால் முன்னை போல் எழுந்து நடமாட முடியாமல், அவர் வேலையை கூட செய்யமுடியாமல் இருந்தார்.சுவாதிதான் அவரை பார்த்து கொண்டார்.அந்த சமயம் தான் அவர்கள் ஊருக்கு டாக்டராக வந்தான் அர்ஜூன்.
பஸ்ஸைவிட்டு இறங்கிய அர்ஜூன்.அந்த இடத்தை சுற்றி தன் பார்வையை ஓட்டினான்.

ம்…….பரவாயில்லை கடைகோடியில் இருக்கும் ஊர் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன் நன்றாகதான் இருக்கிறது என்று நினைத்து கொண்டு நடந்தான்.

நேராக ஹாஸ்பிட்டல் சென்று அவர்களிடம் தங்கும் இடத்தைபற்றி விசாரித்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஹாஸ்பிட்டலை தேடி சென்றான். அங்கிருக்கும் கம்போன்டரிடம் கேட்டு தங்குவதற்கான இடம் விசாரிக்க சொல்ல, கம்போன்டர் ராஜா சொன்ன விலாசத்திற்கு இருவரும் சென்றனர்.
இருவரும் அந்த தெருவில் நுழையும் போது எதிர்பட்டாள் சுவாதி.அவளிடம் பேச வேண்டும் என்று வேகமாக சென்றான் அர்ஜூன்.

அர்ஜீன் சுவாதியை நெருங்குவதற்கு முன்பு ஒரு கார் அவளை உரசினார் போல் வந்து நின்றது.அர்ஜூன் காருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான்.காரைவிட்டு இறங்கிய ராம் அசிங்கமான இளிப்புடன் சுவதி கண்ணு எங்க போய்ட்டு வர்ர என்று கேட்டான்.

சுவாதியோ அவனை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்து எதுவும் சொல்லாமல் குனிந்து கொண்டாள். இதுவே பழைய சுவாதியாக இருந்தால்,நான் எங்கு சென்றால் உனக்கு என்ன டா…. உன் வேலையை பார் என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து சென்றிருப்பாள். ஆனால் இப்போது இருப்பவள்தான் புது சுவாதி ஆயிற்றே மாலதி இறந்த பிறகு பாதி தைரியத்தை இழந்தாள்.அம்மாவின் நிலையை அறிந்து எதுவும் எதிர்த்து சொல்லமுடியாத கோழையானால்.

தன் தந்தையே தன் அக்காவின் வாழ்வை அழிக்க எண்ணி இருக்கிறார் என்ற உண்மை அறிந்து, துடிதுடித்து போனாள்.

மாலதி இறந்த பிறகு அவர்களின் தந்தையை ராம் தன்னுடனே வைத்து கொண்டு இருபத்து நான்கு மணி நேரமும் அவருக்கு குடிக்க கொடுப்பதற்கு ஆட்களை பணித்துவிட்டான் ராம்.

ராமுடனான திருமணத்திற்கு சுவாதி சம்மதிக்கவில்லை என்றால் லட்சுமியை கொன்றுவிடுவதாக மிரட்டியதில் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவள்.அமைதியாக வேறொரு வேலை செய்து வந்தாள்.அது என்ன வேலை என்று இதுவரை யாரும் அறியாமல் பார்த்து கொண்டாள்.{எங்ககிட்ட மட்டும் சொல்லுப்பா அடிச்சு கேட்டா கூட சொல்ல மாட்டோம்……….}

ராம் மறுபடியும் கேட்கவும் தன்னிலை உணர்ந்து அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்க ஆரம்பித்தவளின் காதில் விழுந்த வார்த்தை அவளை நெருப்பில் நிற்பது போல் மாற்றியது.

எதற்கு இப்படி வெயிலில் அலைகிறாய் நம்முடைய கார் எதற்கு இருக்கிறது.நீ வெயிலில் அழைந்தாள் என்னால் தாங்கமுடியவில்லை என்று வசனம் பேசி கொண்டிருந்தான்.

ராம் பேசுவதை கேட்டு கொண்டிருந்த அர்ஜூன் யார் இவன்.இப்படி உளறி கொண்டு இருக்கிறான்.ஒரு வேலை இவளுக்கு தெரிந்தவரோ என்று சுவாதியின் முகம் பார்த்தவன் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.
ஏன் என்றாள் சுவாதி முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் அவனை நிமிர்ந்து பார்த்து, எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தவளின் பார்வையில் விழுந்தான் அர்ஜூன்.

சுவாதி அர்ஜூன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.அர்ஜூனோ அப்பாடா….. ஒரு வழியா நம்மை பார்த்துவிட்டாள் என்று நினைக்க, சுவாதியோ யார் இவன் எதற்கு இப்படி பார்த்து கொண்டிருக்கிறான். இதற்கு முன் இவனை பார்த்ததில்லையே என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

திடீரென,ஏய் யார் நீ என்ற ராமின் அதட்டலில் இருவரும் தன்னை சுதாரித்து கொண்டனர்.

ராமோ நான் இங்கு பேசி கொண்டு இருக்கிறேன் இவள் யாரை பார்க்கிறாள் என்று பார்த்தவனின் கண்ணில் பட்ட அர்ஜூனை பார்த்து கோபம் கொண்டு அந்த கேள்வியை கேட்டான்.

அர்ஜூனோ நிதானமாக அவர்கள் அருகில் வந்து நின்றான்.நான் என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே ராஜா வேகமாக அவர்கள் அருகில் வந்து டாக்டர் சார் வாங்க போகலாம் என்று அவசரமாக அர்ஜூனின் கைபற்றி இழுத்தான்.
ஒரு நிமிடம் இருங்க ராஜா சார்க்கு பதில் சொல்லிவிட்டு வருகிறேன் என்று கூறியவன். சுவாதியை பார்த்து கொண்டே நான் புதிதாக இந்த ஊருக்கு வந்திருக்கும் டாக்டர் இதே தெருவில் அதோ. அந்த வீட்டில்தான் வாடகைக்கு வர போகிறேன் என்று கூற கேட்டு கொண்டிருந்த ராமின் முகம் விகாரமானது.

டாக்டர் சார் கேள்வி கேட்டாள் பெண்களை பார்த்துதான் பதில் சொல்வரோ என்று ராஜாவை பார்த்து கேட்ட ராம்.நீ கிளம்பு என்று அதிகாரமாக சுவாதியை போக சொன்னான்.அவளும் விட்டால் போதும் என்று சிட்டாக பறந்துவிட்டாள்.அவள் போவதை பார்த்து கொண்டிருந்த அர்ஜூனை பார்த்த ராம்.

இங்க பாருங்க டாக்டர் சார் வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்க்க வேண்டும்.பெண்களிடம் ஒழுக்கமாக பழகுங்கள்.ஏதாவது தவறாக என் காதுக்கு வந்தது அவ்வளவு தான் என்று மிரட்டிவிட்டு ராஜாவை பார்த்து சொல்லி வை என்று கூறி தன் வண்டியை எடுத்து கொண்டு சென்றுவிட்டான்.
வாங்க சார் இப்பதான் வந்தீங்க அதுக்குள்ள அவனிடம் வம்பு எதற்கு.என்னவோ இவன் பெரிய யோகியவான் போல உங்களுக்கு அட்வைஸ் செய்கிறான்.இது தான் கலிகாலம் போல என்று புலம்பிவிட்டு அர்ஜூன் தங்க பார்த்திருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

வீடு பார்க்க பெரிய வீடாக இருந்தது.அதற்கு அர்ஜூன் என் ஒரு ஆளுக்கு எதற்கு இவ்வளவு பெரிய வீடு என்று கேட்டான்.இந்த ஏரியாவில் இது போல் ஒரு வீடு கிடைக்காது சார்.அதுமட்டும் இல்லாமல் ஹாஸ்பிட்டலில் இருந்து இந்த வீடு பக்கம்.வீட்டில் கூட நீங்கள் சிகிச்சை அளிக்கலாம் என்று கூற அர்ஜூன் ஒரு வழியாக ஒத்து கொண்டான்.
பைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு உள்ளே போய் வைத்த ராஜாவை பார்த்த அர்ஜூன் இவன் ஏன் அந்த ஆளைபற்றி அப்படி சொன்னான் அவளிடம் வேறு அந்த ஆள் பேசி கொண்டு இருந்தானே என்னவென்று ராஜாவிடமே கேட்போம் என்று முடிவு செய்து அதை கேட்கவும் செய்தான்.
நீ ஏன் அந்த ஆளைபற்றி அப்படி சொன்னாய்.அவன் யார்.

அது ஒரு பெரிய கதை சார் நீங்க முதலில் ரெஸ்ட் எடுங்க ப்ரியா இருக்கும் போது பேசலாம்.நான் சென்று உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன்.நீங்கள் அதற்குள் குளித்துவிடுங்கள் என்றவன் வேகமாக வெளியேறினான்.
அர்ஜூனும் ராமைபற்றி யோசிக்காமல் வந்த அழுப்பு நீங்க குளிப்போம் என்று குளியலறை நோக்கி சென்றவன் மனதில் சுவாதியின் நினைவே வந்தது.சுவாதி என்றுதானே அவன் சொன்னான் நைஸ் நேம்.உன்னை மறுபடியும் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை வது என்று தனக்குள் கூறி கொண்டவனின் மனசாட்சி என்ன வதுவா…… டேய் நீ இப்பதான் அவளை பார்த்தாய்,அதற்குள் செல்ல பேர் வைக்கும் அளவுக்கு வந்துவிட்டதா என்று கேலி செய்தது.

ஏய் நான் அவளை இப்போது தான் பார்த்தேன் என்று சொல்லாதே ஆறு மாதத்திற்கு முன்பே பார்த்து போட்டோவும் எடுத்து வைத்திருக்கிறேன்.என்ன பெயர், என்ன ஊர் என்று எதுவும் தெரியாமல் இருந்தது,இப்போது தெரிந்துவிட்டது அவ்வளவுதான். அவள் என் காதலி.என் வருங்கால மனைவி நான் அவளை எப்படி வேண்டும் என்றாலும் கூப்பிடுவேன், நீ உன் வேலையை பார் என்று அதன் தலையில் கொட்டி அடக்கினான்.அவள் நினைவுடனே குளித்து வந்தவனை சூடான இட்லியும் குருமா வாசமும் வரவேற்றது.

ராஜாவை பார்த்து சிரித்து பயங்கர பசி என்று கூறி சாப்பிட ஆரம்பித்தான்.பசி ஓரளவு சமன்பட்ட பின்பு சமையல் யாருடையது என்அம்மா சமைப்பது போலவே இருக்கிறது என்று கூறினான்.
ராஜா சிரித்து கொண்டே வீட்டு சமையல்தான் சார் அந்த அம்மா நல்லா சமைப்பாங்க.அவங்ககிட்டதான் வாங்கிட்டு வந்தேன் என்று கூற சாப்பிடுவதை நிறுத்திய அர்ஜூன் யாரிடமும் வாங்க வேண்டாம் ராஜா வீட்டில் நானே சமைத்து கொள்கிறேன். மற்றவர்களிடம் இனாமாக எதுவும் வாங்குவது எனக்கு பிடிக்காது.நீங்கள் கடையில் வாங்கி வருகிறேன் என்று தானே சொன்னீர்கள் என்று கேட்டான்.

அந்த சுவாதி பொண்ணுதான் சார் கூப்பிட்டு கொடுத்தது.பதிலாக அவர்களின் அம்மாவின் உடல்நிலையை முழுவதுமாக செக் செய்ய வேண்டுமாம் என்று கூறினான்.முதலில் ராஜா சொன்னதை கேட்டு சந்தோஷபட்டவன் அவன் அடுத்து சொல்வதை கேட்டு ஆச்சரியபட்டு, அவனிடமே கேட்டான் இது அவர்கள் வீடு தானே அவர்கள் நினைத்தாள்,சென்னை போன்ற பெரிய நகரத்தில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கே அழைத்து போகலாமே.

எல்லாம் விதி சார் என்ன பணம் இருந்து என்ன புண்ணியம் வீட்டில் ஆண்பிள்ளை சரியில்லை என்றால் எல்லா கஷ்டமும் வரும்.நீங்கள் சாப்பிடுங்கள் டெஸ்ட் பண்ண நாளை காலை பதினோரு மணி போல் வர சொன்னது என்று சொல்லிவிட்டு விடுவிடுவென சென்று விட்டான்

Advertisement