Advertisement

அத்தியாயம்-23

லட்சுமி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க,தான் ஏன் அந்த கல்யாணத்துக்கு போனோம் என்று நொந்து கொண்டாள் மாலதி.ராம் மாலதியின் வீட்டிற்கு யாரும் போக முடியாதபடி எந்நேரமும் காவலுக்கு ஆளை வைத்தான்.
மாலதியை பார்க்க போன ரம்யாவை மிரட்டினர். அதனால் அவளின் பெற்றோர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று ரம்யா அப்பாவின் தங்கை கிராமத்துக்கு அழைத்து சென்று அவரின் தங்கை மகனுடன் திருமணத்தை முடித்து அவளை அங்கேயே விட்டுவிட்டுதான் வந்தனர்.இருந்தாலும் அவர்களும் மாலதியை நினைத்து கவலைபடதான் செய்தனர்.அமைதியாக அம்மாவை சுற்றி சுற்றி வரும் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று.
சுவாதி டூர் சென்ற ஒன்பதாம் நாள் நடந்தது அந்த துயரம். கோவிலுக்கு சென்றாலாவது மனபாரம் குறையும்,என்று சென்ற தாயும் மகளும் நல்லபடியாக இனி இந்த வீட்டிற்க்கு திரும்ப போவதில்லை என்பதை அறியாமல் கிளம்பி சென்றனர்.அவர்கள் கோவிலுக்கு செல்வதை அங்கு காவலுக்கு போட்டிருக்கும் ஆட்களின் மூலம் அறிந்த ராம்.உன் மகள் கோவிலுக்குள் இருக்கும் தெய்வமா நான் நாயா பார்.இந்த நாய் என்ன செய்கிறேன் என்று மனதுக்குள் கருவி கொண்டவன்.

ராம் அவனது ஆட்கள் மூலம் லட்சுமியை லாரியில் அடிக்க சொன்னவன் மாலதியையும் தூக்கிவர சொன்னான்.அவன் சொன்னது போல செய்த அவனின் ஆட்கள்.மாலதியை தூக்கி சென்றனர்.அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய மாலதி இறுதியாக சற்று நேரம் சோர்ந்து போனவள் போல் அமைதியாக வந்தாள்.

மாலதியை பிடித்து இருந்தவனில் ஒருவன் அவ்வளவு தான் உனக்கு பலமா,இந்த காலத்து பெண்கள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று எதையும் சாப்பிடாமல் உடம்பில் தெம்பு இல்லாமல் இருக்கிறார்கள்.பார் சற்று நேரத்திலேயே இந்த பெண் போராட முடியாமல் சோர்ந்துவிட்டாள் என்று கூற,அதற்கு மற்றவனோ இப்படி இருப்பதும் நல்லதுதான்.

ஐயாவிற்கு வசதியாக இருக்கும் என்று கூறி அசிங்கமாக சிரிக்க கேட்டு கொண்டிருந்த மாலதிக்கு உடல் அருவருப்பில் கூசியது.தன்னை எங்கு கடத்தி போகிறார்கள் யார் கடத்த சொன்னது என்று அனைத்தும் புரிய ஒரு முடிவுக்கு வந்தவளாக ஓய்ந்து படுத்து இருப்பது போல் படுத்திருந்தாள்.
அனைவரும் அசந்திருந்த நேரம் பார்த்து கார் கதவை திறந்து கீழே குதித்தால்.அவளின் கெட்ட நேரம் அப்போதும் விடாமல்,எதிரே வந்த லாரியில் மோதினாள்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த லட்சுமியையும், மாலதியையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.தன் வாழ்வில் இது போல் இனி வாழ்வை ரசிக்க முடியாது என்னும் அளவிற்க்கு பத்து நாள் டூரை முடித்துவிட்டு ஊரில் வந்து இறங்கினாள் சுவாதி.

அம்மாவிற்கும் அக்காவிற்கும் வாங்கிய கிப்டை எடுத்து கொண்டு அவள் வீட்டிற்குள் செல்லும் போது மணி அதிகாலை மூன்று.

வீட்டில் உள்ள மூவரிடமும் எப்போதும் ஒரு சாவி இருக்கும் லட்சுமி கோவிலுக்கு சென்ற நேரம் பார்த்து மாலதியோ அல்லது சுவாதியோ வீட்டிற்கு வந்தால் உபயோகபடுத்த என்று.தன்னிடம் உள்ள சாவி கொண்டு வீட்டை திறந்து உள்ளே வந்த சுவாதிக்கு அப்போதே அம்மாவை பார்க்க வேண்டும் என்று தோன்ற லட்சுமியின் அறைவரை சென்றவள் வேண்டாம் இந்த நேரத்தில் சென்று அவர்களின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்.காலையில் சீக்கிரம் எழுந்து பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுடன் தனது படுக்கை அறை நோக்கி சென்றாள்.

தனது அறைக்கு சென்றவள் இருவருக்கும் வாங்கி வந்த டிரஸ் பேக்குகளை அப்படியே வைத்துவிட்டு ஒரு குளியல் போட்டுவந்து படுத்தவள் காலை பத்து மணி போல்தான் எழுந்தாள்.எழுந்து மணியை பார்த்த சுதி நான் வந்தது தெரியவில்லை போல இல்லை என்றால் காலை 6 மணியில் இருந்து லட்சு சுப்ரபாரதம் பாட ஆரம்பிச்சுடும் என்று கிண்டலாக நினைத்தவள் சென்று காலை கடன்களை முடித்து வெளியே வர யாரையும் காணவில்லை.

குட்டிமாதான் காலேஜ் போயிருப்பா இந்த லட்சு எங்க போச்சு என்று யோசித்து கொண்டே வெளியில் வந்தவள்.அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்பதை பார்த்து.என்னடா இது பத்து நாள் ஊரில் ஆள் இல்லை என்றால் எல்லோரும் புதிதாக பார்பதை போல் பார்க்கிறார்கள் என்று நினைத்து கொண்டு சரி நம்ம குண்டூஸ் அம்மாகிட்ட கேட்போம் இந்த லட்சு எங்க போயிட்டாங்கனு என்று பக்கத்து வீட்டை நோக்கி சென்றாள்.

லட்சுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா.ஒரு பொண்ணு டூர் போனாலே அவளுக்கு என்னாச்சு ஏதாச்சுனு ஒரு போனாவது பண்ணி கேட்டாங்களா,என்ன வாழ்க்க டா இது என்று சலித்து கொண்டவள்.கவலைபடாதே சுதி உனக்குனு வர்ரவன் உன்னை உனக்காகவே விரும்பி கைல வச்சி தாங்குவான் என்று நினத்தவள்..அய்யயோ…….என்று அலறினாள்.

சுதி உன்னோட வெயிட்ட அவன் தாங்களனா, எனக்குதானே பிராப்ளம் அதனால நல்லா பாத்துபான் இது ஓ.கே என்று தனக்குள் கூறி கொண்டவள் அறிந்திருக்கவில்லை தாயும் சகோதரியும் மாற்றி மாற்றி கால் செய்து போன் எடுக்காமல் போனதை விதி என்று சொல்வதா இல்லை மாலதியின் போராத காலம் என்று சொல்வதா மொத்தத்தில் இவர்கள் வாழ்வில் விதி சற்று அதிகமாக விளையாண்டதை என்னவென்று சொல்வது.

ஆண்ட்டி என்று கத்தி கொண்டே வீட்டிற்குள் வந்தவள் ரம்யாவின் அம்மா அலமேலு மாத்து துணிகளையும், பிளாஸ்க் போன்றவற்றை ஹாஸ்பிட்டல் எடுத்து செல்ல அடுக்கி கொண்டு இருந்தவள். சுவாதியின் சத்தம் கேட்டு கண் கலங்க அவளை பார்க்க உள்ளே வந்த சுவாதிக்கு பக்கென்று இருந்தது.
என்ன ஆண்ட்டி உங்களுக்கு உடம்பு சரியில்லையா ஏன் டல்லாக இருக்கிறீர்கள்.மாமா எங்க வழக்கம் போல வேலைக்கு போய்விட்டாரா கவலை படாதீங்க நான் உங்களை ஹாஸ்பிட்டல் கூட்டி போகிறேன்.
ஏன்…… ஏன்…… என்னாச்சு ஆண்ட்டி ஏன் இப்படி அழுகிறீர்கள் என்று கேட்க.

அவரோ மற்றவர்களுக்கு ஒன்று என்றால் ஓடி வரும் உனக்கு ஏன் டி மா இந்த சோதனை என்று கூறி அழ.

சுதி ஒன்றும் புரியாமல் யா……ருக்கு…… என்……….னாச்சு……. ஆண்ட்டி என்று ஒருவித பயத்துடன் பார்த்து,அம்மா,அம்மா எங்க ஆண்ட்டி சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு அ…….ம்மாவுக்கு ஒன்றும் இல்லைதானே என்று நடுங்கிய குரலில் கேட்டவளிடம் அவள் டூருக்கு சென்றதில் இருந்து நடந்ததை எல்லாம் சொன்னார்.அவர் சொல்வதை கேட்க கேட்க சுவாதியின் கண்களில் குற்ற உணர்ச்சியும் தன்னால் தன் குடும்பத்திற்கு ஆபத்து நேரத்தில் பக்கபலமாக இருக்காமல் தோழிகளுடன் ஆட்டம் போட்டு கொண்டிருந்ததை நினைத்து உள்ளுக்குள் துடித்து போனாள்.
ஹாஸ்பிட்டலில் மாமா இருக்கிறார்.நான் பிளாஸ்க் எல்லாம் எடுத்து போகலாம் என்று வந்தேன் நீ எப்போது வருவாயோ என்று எனக்கு பெரிய கவலையாக இருந்தது வா போகலாம் என்றவரை பாவமாக பார்த்தாள்.

அ……….ம்மாவுக்கு என்று சொல்ல முடியாமல் திக்கி திணறியவளிடம் அவர்களின் நிலையை எப்படி சொல்வது என்று யோசித்த அலமேலு வாமா ஹாஸ்பிட்டல் போனால் தெரிந்துவிட போகிறது என்று அவளை சமாதானம் செய்து ஹாஸ்பிட்டல் சென்றனர்.
ஹாஸ்பிட்டல் சென்ற சுவாதி டாக்டரை பார்த்து அவளின் அம்மாவின் உடல்நலனை பற்றி விசாரிக்க. டாக்டர் யார் என்று பார்த்தார்.அவர்களின் மகள் என்றவளை அமர செய்து அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறியவுடன் சுதியின் முகம் பிரகாசமாவதை பாவமாக பார்த்த டாக்டர் அடுத்தடுத்து சொன்ன விஷயங்களை ஜூரணிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.

டாக்டர் பேசி முடித்து சுவாதி முகத்தையே அவளது பதிலுக்கு பார்த்து கொண்டிருந்தார்.அவருக்கு என்ன பதில் சொல்வது என்று கூட புரியாமல் உட்கார்ந்திருந்தாள். ஆனால் அவள் கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.அவளின் நிலையை உணர்ந்த டாக்டர் அவளுக்கு தண்ணீர் கொடுத்து குடிக்க கொடுத்தார்.

உங்கள் அக்கா உங்களை பார்ப்பதற்குதான் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.அவரது உடலில் இருந்து அதிக இரத்தம் வெளியேறி இருக்கிறது.தலையில் வேறு நல்ல காயம்.எங்களால் முடிந்த எல்லாம் செய்தாகிவிட்டது ஒரு பலனும் இல்லை.

ஏதோ ஒரு காரணத்திற்காகதான் அவள் உயிரை பிடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.நீங்கள் சென்று அவர்களை சந்தியுங்கள்.உங்களிடம் பேசகூட காத்திருக்கலாம். ஆனால் அவர்களின் நாட்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் என்று கூறி அவரது பேச்சை நிறுத்தி கொண்டார்.
நீங்கள் சென்று உங்கள் அக்காவை பார்ப்பதென்றால் பாருங்கள் என்று கூறி அனுப்பினார்.முற்றிலும் உடைந்து போனவளாக வந்த சுதியை என்னவென்று அலமேலு கேட்க ,அவர் மடியில் படுத்து குமுறி அழ ஆரம்பித்தாள் நான் தப்பு பண்ணிட்டேன் ஆண்ட்டி என்னுடைய சுயநலத்துக்காக தப்பு பண்ணிவிட்டேன்.
நான் மட்டும் டூர் போகாமல் இருந்திருந்திருந்தால் எனக்கு இப்போது இவ்வளவு பெரிய இழப்பு வந்திருக்காது.அக்கா என்னை பார்க்கதான் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறாளாம் டாக்டர் சொல்கிறார்.நான் போய் பார்த்தால் என்னைவிட்டு போய்விடுவாள்தானே,நான் போகமாட்டேன்,
போகமாட்டேன் என்று சொன்னதையே சொல்லி கொண்டு இருந்தாள்.

Advertisement