Advertisement

அத்தியாயம்-21

சுவாதியும்,மாலதியும் சிரிப்பதை பார்த்த ரம்யா எதற்காக டி சிரிக்கறீங்க வருகிற அவசரத்தில் வீட்டில் சாப்பிடாமல் வந்துவிட்டேன்.அதான் அம்மா டீயும் இரண்டு பிஸ்கட்டும் கொடுத்தார்கள் வேண்டாம் என்று சொன்னால் அம்மா மனசு கஷ்டபடுமே என்று நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்று சொன்னவளை பார்த்த சுவாதி

குட்டிமா நல்லா யோசிச்சுக்கோ நீ இந்த சாப்பாட்டு ராமிகூட தான் போக போகிறாயா?பத்து நிமிஷம் வெயிட் பண்ணு நானே கிளம்பி வருகிறேன்.

அம்மா கொண்டு வந்து வைத்த ஒரு பாக்கெட் பிஸ்கட்டில் மீதி இருப்பது இந்த இரண்டுதான்.உன் முடிவை மாற்றி கொள்ளுங்கள் கோபால் மாற்றி கொள்ளுங்கள் என்று சரோஜா தேவி போல் பேசியவளை முதுகில் அடித்த மாலதி அதை நான் பார்த்து கொள்கிறேன்.நீ போய் கிளம்பும் வழியை பார் என்றாள் அதட்டலாக.

ம்… உண்மையை சொன்னால் ஏற்று கொள்ளமாட்டயே நாம் இவ்வளவு பேசறோமே உன் தோழி ஏதாவது பேசுகிறாளா பார்.அந்த இரண்டு பிஸ்கட் காலியான பிறகு குதிப்பாள்.வா மாலு லேட்டாகிவிட்டது எப்போதுதான் நீ சீக்கிரம் கிளம்புவாயோ என்று இவளை திருத்தவே முடியாது பிளா,பிளா………என்று பேசி கொண்டு இருந்தார்கள்.

ரம்யா டீ குடித்து முடித்தை பார்த்த சுவாதி ஸ்டார்ட் மியூசிக் என்று மாலதிக்கு மட்டும் கேட்கும்படி கூற பின்னே வந்ததில் இருந்து அவளை கிண்டல் செய்து கொண்டு இருப்பது இவளுக்கு தெரிந்தது மாலதியை தனியாக வர சொல்லிவிட்டு சென்று விடுவாளே அந்த பயம்தான்.

மாலதியை பார்த்த ரம்யா ஏன்டீ இப்படி லேட்டாக கிளம்புகிறாய்.நேற்று எத்தனை முறை சொன்னேன் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று சுவாதி கூறியதை அச்சு பிறழாமல் கூறிய தோழியை பார்த்த மாலதிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரிப்பு வர.

ரம்யா அவளை வினோதமாக பார்த்து நான் உன்னை திட்டி கொண்டு இருக்கிறேன்.நீ என்னவென்றால் சிரிக்கிறாய் லூசா டி நீ வா போகலாம் என்று கூறினாள்.

இருவரும் கிளம்பி வெளியே செல்லும் போது அவர்களை தடுத்த சுவாதி,இங்க பாரு ரம்யா உன்ன நம்பிதான் குட்டிமாவை அனுப்பறேன்.அங்க போனவுடன் நீ பாட்டுக்கு இவளை தனியாக விட்டு விட்டு சாப்பாட்டு ரூம் நோக்கி சென்றாய் என்ற தகவல் வந்தது அடுத்த ஒரு வாரத்துக்கு நீ கொண்டுவரும் டிபன் பாக்ஸ் காணாமல் போய்விடும் ஜாக்கிரதை.

கும்பலாக இருந்தால் அங்கு இவளை தனியாகவிடாதே. கை கழுவ போகும் போதும் நீ கூடவே போ.நம்ம மாலு சொல்லமாட்டாள் என்று அஜாக்கரதையாக இருக்காதே நான் வைத்திருக்கும் ஸ்பை உங்களை பார்த்து எனக்கு நியூஸ் அனுப்பி கொண்டே இருப்பார்கள் என்று மிரட்டினாள்.

அவளின் மிரட்டலில் நிஜமாகவே பயந்துதான் போனால் ரம்யா பின்னே ஒரு வார சாப்பாடு ஆச்சே.இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் என்னடி ரொம்ப பேசற என் தோழியை பத்திரமாக கூட்டி போக எனக்கு தெரியாதா? அவள்தான் உனக்கு அக்கா இங்கு நடப்பதை பார்த்தால் நீ தான் அவளுக்கு அக்கா போல் இருக்கிறது.

நான் பத்திரமாக கூட்டி போய் வருகிறேன் என்றவளை பார்த்து சிரித்த சுவாதி கோபித்து கொள்ளாதே குண்டூஸ் அவளின் பயந்த சுபாவம் உனக்கு தெரிந்ததுதானே அதான் நான் அக்காவாகிவிட்டேன் என்றாள்.

ரம்யாவும் இவர்கள் பக்கத்து வீடுதான் ஆனால் சுவாதி எப்போதும் கீதா வீட்டில் இருப்பதால் மாலதி அவளுக்கு தோழியானாள்.அது மட்டும் இல்லாமல் இருவரும் பி.ஏ ஹிஸ்டரி எடுத்ததால் இவர்கள் இருவரும் நல்ல தோழியாக இருந்தனர்.

ரம்யா கொஞ்சம் குண்டாக இருப்பாள்.வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிடுவதால்.அது மட்டும் இல்லாமல் அவளின் அம்மா அப்பாவிற்கு வெகு நாட்கள் குழந்தை இல்லாமல் பிறகு பிறந்தவள்.அதனால் அவர்கள் வீட்டில் அவளுக்கு செல்லம் அதிகம் சாப்பிடுவதில் குறை வைப்பதில்லை.அதனால் எப்போதும் சுவாதி அவளை குண்டூஸ் என்று கூப்பிட்டு வெறுப்பேற்றுவாள்.ரம்யாவிற்க்கு அப்படி கூப்பிட்டாள் பிடிக்காது என்று தெரிந்தும்.

இருவரும் கிளம்பி வீட்டைவிட்டு வெளியில் வந்தனர். அவர்களை பின் தொடர்ந்து வந்த சுதி அப்புறம் குட்டிமா கல்யாணத்துக்கு  போறதுதான் போகிறாய் உன்னுடைய இந்த பாச தங்கைக்கு ஒரு சூப்பர் மாப்பிள்ளை பார்த்துவிட்டு வா என்று கூறி கண்ணடிக்க.அவளின் காதை திருகிய மாலு

ஏன்டி நான் என் பிரண்டு கல்யாணத்துக்கு போகிறேனா, இல்லை உனக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறேனா,போ போய் கிளம்பும் வழியை பார் லேட்டாகி விட்டது நானும் கிளம்புகிறேன் என்று சொல்லி சென்ற தன் அக்காவை பார்த்து கொண்டிருந்தவளின் தலையில் வலிக்காமல் கொட்டினார் லட்சுமி.

மணி என்ன என்று மேடம் பார்த்தீர்களா என்று கிண்டலாக கேட்க மணியை பார்த்த சுவாதி அதிர்ந்துதான் போனாள். பின்னே 8.40 மணிக்கு காலேஜ் பஸ் வந்துவிடும் மணி இப்போதே 8.10 ஆகிவிட்டதே.லட்சுமி திட்ட ஆரம்பிக்கும் முன்

என்ன லட்சு நீ கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கிறதா. நேரம் ஆகிவிட்டதே மகள் காலேஜ் போக வேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.நான் ஒரு ஆளே எவ்வளவு தான் பார்ப்பது என்று கூறி அம்மா எதுவும் சொல்லும் முன் பாத்ரூமிற்குள் சென்று கதவை அடைத்து கொண்டவள் அப்போதும் வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல், நின்று வாயை பார்க்காமல் மதிய சாப்பாடு ரெடி பண்ணு லட்சு என்று சத்தமிட்டாள்.

சுதியின் பேச்சை கேட்டு காண்டான லட்சுமி அநியாயத்த பாருங்க மக்களே இவ்வளவு நேரம் வெட்டி அரட்டை அடித்துவிட்டு இப்போது நான் வெட்டி அரட்டை அடிக்குறேனா என்று மகளின் குறும்பை மனதில் ரசித்தாலும் வெளியில் வா உன்னை பேசி கொள்கிறேன் என்று கோபம் போல் காட்டி கிச்சனுக்குள் சென்றவர்.

சுதியை திட்டி கொண்டே வேலையை பார்த்தார்.இப்படி வெட்டி அரட்டை அடிக்க வேண்டியது பிறகு நேரமாகி விட்டது என்று சாப்பிடாமல் ஓடுவது இதுவே இவளுக்கு வேலை என்று சலிப்பாக நினைத்தார்.அவளின் அறைக்கு சென்று ஒரு நோட்டை எடுத்து ஒழிய வைத்தார்[.எனது அருமை தாயின் வழி இதுதான் நான் காலேஜ் போகும் போது]

லட்சுமி நினைத்தது போலே கிளம்பி வந்த சுவாதி நேரமாகி விட்டதால் சாப்பாடு வேண்டாம் என்று சொல்ல.அவள் சொல்வதை காதில் வாங்காமல் தட்டில் மூன்று இட்லி வைத்தார் லட்சுமி.தனது பேகில் எல்லாம் எடுத்து வைத்தாகிவிட்டதா என்று பார்த்த சுவாதி ஒரு அசைண்மண்ட் காணமல் அதை தேட ஆரம்பித்தாள்.

அய்யோ சுதி எங்க டி வச்ச இன்னைக்கு அந்த அசைண்மண்ட் சப்மிட் பண்ணல அந்த கொறிலா உன்ன ஒரு வழி பண்ணிடும்.தேடு டி தேடு என்று கூறி கொண்டே தேட ஆரம்பிக்க அவளின் பின்னால் தட்டை எடுத்து கொண்டு அவளுக்கு ஊட்டும் வேலையை பார்த்தார் லட்சுமி.

மூன்று இட்லிகளை சாப்பிட்ட பின்பு லட்சுமி எடுத்து வைத்த அவளின் அசைண்மண்டை காட்டி இதுவா பார்.மாலு உன்னிடம் கொடுக்க சொன்னால் என்று நீட்ட.அதை வாங்கி பார்த்தவள் அம்மாவை முறைத்து இவ்வளவு நேரம் இதைதான் தேடி கொண்டிருந்தேன் முதலிலேயே சொல்லமாட்டீர்களா என்று கூறி முறைத்தாள்.ஆனால் லட்சுமி எதுவும் நடக்காதது போல் பார்த்து அதான் இப்போது கொடுத்துவிட்டேனே என்றவர்.இப்போதாவது பஸ்க்கு கிளம்புவாயா இல்லை என்முகத்தையே பார்த்து கொண்டு இருக்க போகிறாயா என்று கூலாக கேட்க.

நேரம் பார்த்து காலை வாருகிறாய் லட்சு வர வர உனக்கு லொள்ளு அதிகமாகிவிட்டது வேறு ஒன்றும் இல்லை.உன்னை ஈவ்னிங் வந்து பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி வெளியில் வந்தவள் தெருமுனையில் காலேஜ் பஸ்ஸில் எல்லோரும் ஏறி கொண்டிருப்பதை பார்த்து வேகமாக ஓடி போய் பஸ்ஸில் அப்பாடா…… என்று அமர்ந்தவளை முறைத்தாள் அவளின் இன்னொரு தோழி பார்கவி.

பார்கவி ஏன் முறைக்கிறாள்……

அத்தியாயம்-22

பார்கவியின் முறைப்பதை பார்த்த சுவாதி என்ன டி ஏன் என்னை இப்படி பார்க்கிறாய் நான் என்ன உன் லவ்வர் சந்துரு மாதிரியா இருக்கிறேன்.அவனை பார்த்துவிடும் ரொமான்டிக் லுக்கை என்னை பார்த்து விடுகிறாய் என்று கேட்டாள்.

ஏன் டி நான் பார்த்ததுக்கு பெயர் ரொமன்டிக் லுக்கா?லேட்டாக ஓடி வந்து பஸ்ஸை பிடித்துவிட்டு உனக்கு நக்கல் வேறு.எதற்காக டி உனக்கு டெய்லி லேட்டாகிறது.நீ எழுந்து ஒரு வேலையும் செய்வதில்லை.உன் புக்கை கூட மாலதிதான் எடுத்து வைப்பாள்.சாப்பாடு ஒரு ஆள் பின்னாடியே வந்து ஊட்டுகிறார்கள் என்றவளை சுவாதி ஆச்சரியமாக பார்க்க,என்ன பார்வை நாங்கெல்லாம் யாரு ஒற்றர் படை மூலம் எனக்கு நியூஸ் வந்துவிட்டது என்று கெத்தாக கூறி சுடிதாரில் இல்லாத காலரை தூக்கி விட்டாள்.

பார்கவியை பார்த்து சிரித்த சுதி ஏன்டி தேவை இல்லாததுக்கு எல்லாம் வேலை செய்யும் உன் ஒற்றர் படை உனக்கு தேவையான விஷயத்தை சொல்லாத என்று கேட்டாள்.

பார்கவி ஒன்றும் புரியாமல் விழித்தாள்.என்ன புரியவில்லையா உனக்கு தகவல் கொடுத்த உன் லவ்வர் என் எதிர் வீட்டு சந்துருக்கு அத்தை மகள் என்று ஒருத்தி வந்து ஒரு வாரமாக வீட்டில் தங்கியிருக்கிறாள்.அது மட்டும் இல்லாமல் நம்ம காலேஜ்ஜில் தான் அவளுக்கு அட்மிஷன் போட்டு இருக்கிறார்கள் என்று கூறியவள் எரிகிற நெருப்பில் என்னை விடுவது போல் அவள் பார்க்க வேற அழகா சமந்தாமாறியே இருக்கிறாள் என்று கூட இரண்டு பிட்டு சேர்த்து போட்டாள்.

அத்தை மகள் ரத்தினம் வந்து ஒரு வாரமாக டேரா போட்டு இருக்கிறாள் அவளை பற்றி கேட்பதை விட்டுவிட்டு நான் என்ன செய்கிறேன் என்று ரன்னிங் கமெண்டரி கேட்டு கொண்டு இருந்திருக்கிறாய் என்று சொன்னதுதான் தாமதம் பார்கவியின்  முகம் கோபத்தில் தக்காளி பழம் போல் சிவந்து போனது.அவள் கோபமாக தனக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த சந்துருவை திரும்பி பார்க்க,இவ்வளவு நேரமும் இவர்கள் பேசியதை கேட்டு கொண்டிருந்த சந்துரு அடி பாவி போட்டு கொடுத்துவிட்டாயே என்று கூறி ஓடி போய் கடைசி சீட்டில் அமர்ந்து கொண்டான்.

பார்கவி அவனை பார்த்து முறைக்க,நான் சொன்னது கரெக்ட்டா என்று கேட்டாள் சுதி.என்ன கரெக்ட் என்று கேட்ட தோழியை குறும்பாக பார்த்து உன்னுடைய ரொமாண்டிக் லுக் என்றாள் சீரியசாக,அவளது முகம் சீரியசாக இருந்தாலும் அவளின் கண்கள் சிரித்து கொண்டிருந்தது.ஒரு வழியாக சுதி கிண்டலிலும்,பார்கவி கடுப்பிலுமாக காலேஜ் வந்தனர்.

பிரேக் நேரத்தில் கேண்டினில் இருந்து வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த சுவாதி  எதிரே வந்த சந்துரு என்ன நாரதரே வேலை சிறப்பாக முடிந்ததா.

சந்துருவின் பேச்சிலேயே அவன் கடுப்பின் அளவை தெரிந்து கொண்டவள் அலட்டி கொள்ளாமல் என் மீது தப்பில்லை என்னை வெறுப்பேத்தும் வேலையை நீ செய்தாய் உன்னை வெறுப்பேத்தும் வேலையை நான் செய்தேன் என்றாள் கூலாக.

சந்துருவோ விளையாடாதே சுதி அவள் என்னுடன் பேசமாட்டிக்கிறாள் என்றான் வருத்தமாக.

அய்ய மூஞ்ச இப்புடி தயவு செஞ்சு மாத்தாத.அப்பாவி லுக் உனக்கு வரல.இனி என்னைபற்றி ரன்னிங் கமெண்ட்ரி குடுக்கமாட்டேன் என்று சொல் மேற் கொண்டு நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்ன டீலா நோ டீலா சீக்கிரம் சொல்.

பார்கவியை சமாளிக்க வேறு வழி இல்லை என்பதை உணர்ந்த சந்துருவும் ஒத்து கொண்டவனாக டீல்..டீல் என்றான்.என்ன செய்ய வேண்டும் என்று கேட்க அவள் சொன்ன ஐடியாவை கேட்டு சூப்பர் என்று சொல்லி அதன்படியே செய்கிறேன் மகாராணி.இப்போது எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று கிண்டலாக கூற அவளும் சிரித்து கொண்டே தலையாட்டினால்.

ஒருவழியாக பார்கவியை சமாதானம் செய்த சந்துரு கட்டை விரலை உயர்த்தி வெற்றி சிம்பலை சுதிக்கு காட்டிவிட்டு சென்றான்.அன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் வீட்டிற்க்கு வந்தவளை வரவேற்றது மாலதியின் சந்தோஷமான முகமே.

என்ன சந்தோஷமான விஷயமா இருக்கும்.இவளுக்கு ஆள் செட் ஆகி இருக்கமோ……………

மாலதியின் முகத்தை பார்த்தே ஏதோ சந்தோசமான விஷயம் என்று அறிந்த சுதி அவளிடம் வழக்கம் போல் வம்பிழுக்க ஆரம்பித்தாள்.

என்ன குட்டிமா முகத்தில் தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரிகிறது என்று கேட்டாள்.

மாலதி சிரித்து கொண்டே உனக்கு இரண்டு சந்தோசமான விஷயம் என்று கூறினாள்.உடனே சுதி என்ன கல்யாணத்திற்கு போன இடத்தில் உனக்கு கல்யாண மாப்பிளையை பார்த்துவிட்டாயா என்று கிண்டலாக கேட்க.

உனக்கு எல்லாம் கிண்டல்தான் என்னை கேலி செய்தாய் இல்லயா உனக்கு ஒரு விஷயம் மட்டும்தான் சொல்வேன் மற்றொன்றை சொல்லமாட்டேன் என்று சொன்னாள்.அவள் சொன்ன நேரம் தேவதைகள் சுற்றிவரும் நேரம் போல அவர்கள் ததாஸ்த்து சொன்னதாலோ என்னவோ அந்த மற்றொரு விஷயத்தை மாலதியால் சுதிக்கு சொல்லமுடியாமல் போனது.

சரி மேடம் ரொம்ப பண்ணாதிங்க என்ன அந்த இரண்டு விஷயம் என்று கேட்க மாலதி பிடிவாதமாக மற்றொரு விஷயத்தை சொல்ல மறுத்தவள்.ஒரு விஷயத்தை மட்டும் சொன்னால்.அது என்னவென்றால் சுவாதி டூர் செல்ல லட்சுமி ஓ.கே சொன்னது தான்.

சரி எப்படி இருந்தாலும் அந்த இன்னொரு விஷயத்தை என்னிடம் சொல்ல வருவாய்தானே அப்போது பார்த்து கொள்கிறேன் என்று அவளும் அதோடு விட்டுவிட்டாள்.

நாட்கள் அதுபோக்கில் நகர சுதி டூர் செல்லும் நாளும் வந்தது.அம்மாவின் சிலபல அட்வைஸ்களுக்கு பிறகும் மாலதியின் பத்திரம் பத்திரம் என்ற ஜெபத்தை கேட்ட பிறகும் பெங்களுருக்கு பஸ் ஏறினாள்.

சுதி வரும்போது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று மாலதி ஒரு சில விஷயங்களை செய்துவிட்டு.மற்றொரு சந்தோஷமான விஷயம் என்ன என்று சுதியிடம் சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவளுக்காக காத்திருந்தாள்.

மாலதியின் கெட்ட நேரம் அப்போதுதான் ஆரம்பித்தது.ஆம் அவள் திருமணத்திற்கு சென்ற இடத்தில் அவளை பார்த்த ராம் என்ற உள்ளூரில் இருக்கும் ஒரு பரம்பரை பணக்காரர் அவளை பெண் கேட்டு வர லட்சுமியும்,மாலதியும் பயந்துதான் போனார்கள்.

ஏன் என்றால் உள்ளூரில் அவனுக்கு இல்லாத செல்வாக்கு இல்லை.அவனுக்கு வயது 35க்கு மேல் இருக்கும். அவனின் முதல் மனைவிக்கு ஆண் குழந்தை இல்லை என்ற காரணம் தான் அவனின் இரண்டாவது திருமணத்துக்கு முக்கிய காரணமாம்  இது அவனே சொன்னது.

அவன் சொல்வதை கேட்ட லட்சுமிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ,அவன் சட்டையை பிடித்து வீட்டைவிட்டு வெளியே இழுத்து வந்தவள்.

“வெளியே போடா நாயே உன் ஆசைக்கு தலையாட்ட இங்கு யாரும் உன் அடிமை இல்லை”எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து இப்படி சொல்வாய்.என் மகள் அந்த கோவிலில் இருக்கும் தெய்வம் போல கலங்கம் இல்லாதவள் அவளுக்கு உன்னை போன்ற ஒரு தருதலைக்கு கட்டி கொடுப்பேன் என்று எப்படி எதிர் பார்க்கிறாய்.என் மகளை கைகளில் வைத்து தாங்குபவனுக்குதான் நான் மணமுடித்து கொடுப்பேனே ஒழிய உன்னை போன்ற தெருதெருவாக அழையும் நாய்க்கு கொடுக்கமாட்டேன் என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் பேசிவிட்டார்.அவர் கோபத்தில் பேசியதற்கான தண்டனையை அவர் மகள் அனுபவிக்க போகிறாள் என்பதை அறியாமல்.

லட்சுமி பேசியதை கேட்டு முகம் கருத்து அவரை தீர்க்கமாக பார்த்த ராம்.நீ இப்போது பேசியதற்கு நிச்சயம் வருத்தபட வைப்பேன்.இப்போது அமைதியாக போகிறேன் என்று நினைக்காதே.நீ இப்போது மிதித்தது பாம்பின் வாலை அது நிச்சயம் உன்னை கொத்தாமல் விடாது என்று கூறி அவன் பார்த்த பார்வை லட்சுமியின் முதுகெலும்புவரை சில்லிட செய்தது.அது மட்டும் இல்லாமல் அவன் முகம் சொல்வதை செய்வேன் என்பதை போல் இருக்க.என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்தனர் தாயும் மகளும்.

சுவாதிக்கு தொடர்பு கொண்ட போதும் ரோமிங் மற்றும் சிக்னல் பிராப்ளத்தால் அவளிடமும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் ராம் தனக்கு சாதகமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான்.குடிக்கு ஏற்கனவே அடிமையாய் இருந்த கோவிந்தனுக்கு பாரின் சரக்கு என்று இலவசமாக கொடுத்து அவனை குடிக்க வைத்து முழு நேரமும் போதையில் இருக்கும் படி பார்த்து கொண்டவன்.அவர் போதையில் இருக்கும் போது வெற்று தாளில் கையெழுத்து வாங்கி வைத்து கொண்டான்.

ராம் பொண்ணு கேட்ட விட்டு சென்று நான்கு நாட்கள் ஆன நிலையில் தங்களது வேலைகளை மட்டும் செய்து கொண்டும் வெளியே வராமல் இருந்த தாயும்,மகளும் தன் வீட்டின் முன்பு ஏதோ சளசளப்பு சத்தம் கேட்டு வெளியே வர அங்கு ராம் தான் அடிபட்ட பாம்பாக சீறிக்கொண்டிருந்தான்.

என்ன சொல்கிறான் என்று கேட்ட லட்சுமிக்கும், மாலதிக்கும் தலையில் யாரோ இடியை இறக்கியது போல் இருந்தது.அதாவது கோவிந்தன் தன் மகளை மணமுடித்து தருவதாக சொல்லி அவனிடம் இலட்ச கணக்கில் கடன் வங்கிவிட்டு இப்போது பொண்ணு தர முடியாது என்று லட்சுமி சொல்வதாக சொன்னான். அவனின் செல்வாக்கால் மூன்று நாட்கள் முன் போட்ட கையெழுத்து ஒரு வருடத்திற்கு முன்பு போட்டது போல் தயார் செய்யபட்டு இருந்தது.

பத்தாதற்க்கு கோவிந்தனும் அவனையே திருமணம் செய்து வைத்தாள் மாலதி பெயரில் இருக்கும் சொத்தை தனக்கு மாற்றி கொள்ளலாம்.ஊரில் இவனுக்கு இல்லாத சொத்தா என்று பலவாறு ஆசைகாட்டி கோவிந்தனையும் கைக்குள் போட்டு கொண்டான்.

லட்சுமியும்,மாலதியும் என்ன செய்ய போகிறார்கள்…..

Advertisement