Advertisement

அத்தியாயம்-16

ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியேறிய சுவாதி ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்வதற்குள் சில முடிவுகளை எடுத்தால். அதன்படி வண்டியில் வரும்போதே தன் அக்காவின் பழக்கம் போல் தூங்கிய மகனை கண்ணில் நீருடன் பார்த்தவள் உன்னை என்னிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.நாம் இங்கு இனி இருக்க வேண்டாம் என்று கூறி படுக்கையில் படுக்க வைத்தவள்.தன்னுடைய பொருட்களை எல்லாம் பேக் செய்ய ஆரம்பித்தாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு யார் இந்த நேரத்தில் என்று படுக்கையறையில் இருந்து வெளியில் வந்தவள் பார்த்தது.கதவை உட்புறமாக தாழிட்டு கொண்டிருந்த அர்ஜூனின் முதுகைதான்.

வேகமாக அவன் அருகில் வந்தவள் என்ன செய்கிறீர்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்றாள் கோபமாக.

நிதானமாக அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தவன் தன் கைகளை தூக்கி சோம்பல் முறித்து மேடம் வெளியில் எங்கயோ கிளம்பி கொண்டு இருக்கிறீர்கள் போல என்றான் நக்கலாக.

நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை.இங்கு எதற்கு வந்தீர்கள் என்று கேட்டேன்.வந்தது மட்டும் இல்லாமல் கதவை எதற்கு சாற்றினீர்கள்.வெளியில் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றாள் கோபமாக.

அவனோ வெளிநாடு சென்றிருந்த உன் கணவன் வந்து விட்டான் என்று நினைப்பார்கள் வெகு நாட்களுக்கு பிறகு பார்க்கும் கணவன் மனைவி என்ன செய்வார்கள் என்று அறியாதவர்கள் யாரும் இல்லை என்று கூலாக சொல்லி கண்ணடித்தவனை பார்த்தவளுக்கு கோபம் சுறுசுறு என ஏறி முகம் கோபத்தில் சிவந்தது.

யாருக்கு யார் கணவன் நீங்கள் என் கணவர் இல்லை முதலில் வெளியில் செல்லுங்கள்.உங்களை பார்த்தால் எனக்கு கோபம்தான் வருகிறது.

சுவாதியின் பேச்சை கேட்ட அர்ஜீன் செல்லம் எனக்கு உன்னை பார்த்தால் ரொமான்ஸ் செய்யதான் வருகிறது நான் என்ன செய்ய. அர்ஜீன்.

அர்ஜீனின் வார்த்தைகள் சுவாதிக்கு இன்னும் கோபத்தை ஏற்ற அவனிடம் பேச பிடிக்காதவளாய் தன்னுடைய மற்றும் அபியின் ஆடைகளை பேக்பண்ண ஆரம்பித்தாள்.

சுவாதி பேக்பண்ணுவதையே பார்த்து கொண்டு இருந்த அர்ஜீன் தன் விளையாட்டு தனத்தை கைவிட்டு ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டான்.
சுவாதியோ ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் அவன் கேள்வியில் வெகுண்டு.நான் என்ன செய்தேன் எல்லாம் செய்தது நீ.சும்மா இருந்தவளை சுற்றி சுற்றி வந்து காதல் ஆசை காட்டியது நீ. காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கையில் உன்னை தேடி வந்த என்னை வேலியே பயிரை மேய்ந்த கதையாய் என் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கியது நீ.இப்போது என்னை நீ கேள்வி கேட்கிறாயா.என்னை கேள்வி கேட்க நீ யார்?முதலில் வீட்டை விட்டு வெளியில் போ என்று ஒருமையில் அவனை சுவாதி வெளுத்து வாங்கினாள்.

சுவாதி பேச பேச அர்ஜீன் அவள் மனதில் இருக்கும் அனைத்தும் வெளிவரட்டும் என்று பார்த்து கொண்டிருக்க.அவள் கடைசி கேள்வியில் வெகுண்டான்.வேகமாக அவள் அருகில் வந்தவன் அவளின் இரு தோள்களில் கை வைத்து உளுக்கி கொண்டே நான் யாரா,நான் யார் என்றா கேட்டாய் உள்ளே தூங்கி கொண்டு இருக்கிறானே நம் மகன் அவன் பிறந்த சான்றிதழை பார் நான் யார் என்று தெரியும் என்றவன் நம் மகன் என்று அழுத்தி கூறினான்.

எனக்கு என்ன உரிமை என்று கேட்டாய் அல்லவா எனக்கு உன்னிடம் இருக்கும் உரிமை வேறு யாருக்கும் இல்லை.வேறு யாருக்கும் என் உரிமையை உன்னால் கொடுக்க முடியாது என்றான் கர்வமாகவும் அவளை ஊடுருவும் பார்வை பார்த்து கொண்டும்.

அவன் பார்வையில் ஒரு நிமிடம் தடுமாறியவள் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள்.எதற்காக சிரிக்கிறாள் என்று அவன் யோசிக்கும் முன்னே நிதானமாக அவனை பார்த்து கேட்டாள் இவன் உங்கள் குழந்தைதான் என்று யார் சொன்னார்கள்.உடனே அபியின் பிறப்பு சான்றிதழை பற்றி சொல்லாதீர்கள்.இந்த உலகத்தில் அர்ஜூன் என்ற பெயர் உங்களுக்கு மட்டும் தான் வைப்பார்களா என்ன.

நான் அங்கிருந்து வந்த பிறகு வேறு என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் இதழ்களை மூடினான் தன் இதழ் கொண்டு.அவன் முத்தத்தை எதிர் பாராதவள் அவன் வேகத்திலும் இறுகிய அணைப்பிலும் மூச்சு முட்டி போய் அவன் மார்பில் கை வைத்து தள்ள அவன் அணைப்பு மேலும் இறுகியது.

நீண்ட நெடிய முத்தத்திற்கு பிறகு அவளை விட்டவன்.அபி என் குழந்தை தான் என்று எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் பின் எதற்கு இந்த விதண்டாவாதம்.அது மட்டும் இல்லை இன்றைய கால கட்டத்தில் அபி என் மகன் தான் என்று நிருபிக்க எனக்கு பத்து நிமிடம் போதும் ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் தெரிந்து விட போகிறது.நீ எல்லாம் படித்து பாஸ் செய்தாயா யாரிடமும் பணம் கொடுத்து பாஸ் செய்தாயா.கொஞ்சமாவது படித்த பெண் போல் பேசு என்றான் கிண்டலாக.

சரி நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேன் இப்போது நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல் என்றான் அதிகாரமாக.
என்ன கேள்வி என்று பார்த்தவளிடம்.
வெளியே எங்கயோ கிளம்பி கொண்டிருக்கிறாயா? என்று கேட்டேன் என்றவனிடம் என்ன பதில் சொல்வது என்று அவள் திருதிருவென முழிக்க நான் நினைப்பது சரி என்றால் நீ இங்கிருந்து மீண்டும் யாரிடமும் சொல்லாமல் செல்ல முடிவெடுத்திருக்கிறாய் சரியா என்றான்.அவளை கூர்மையாக பார்த்து கொண்டே.என்னிடம் இருந்து இனி நீ எங்கும் ஓட முடியாதபடி செய்கிறேன் என்றவன்.

நான் இனி இங்கு தான் தங்க போகிறேன்.அங்கு ஹாஸ்பிட்டலில் அனைவரும் பசியோடு இருப்பார்கள் நீ அவர்களுக்கு வேண்டியதை செய் என்றவன் போகிற போக்கில் அபியை காப்பாற்ற சென்று தான் அத்தைக்கு இப்படி ஆனதாக கேள்வி பட்டேன் அவர்கள் அங்கு துன்பத்தில் இருக்கும் போது நீ போக நினைத்ததை அவர்கள் அறிந்தால் என்ன நினைப்பார்கள்.அவர்கள் நினைப்பது இருக்கட்டும் உனக்கே நீ செய்ய நினைக்கும் செயல் நன்றி கெட்ட தனமாக தெரியவில்லை என்று ஒரு கொட்டை வைத்துவிட்டே சென்றான்.அவன் சொன்னதில் நியாயம் இருந்தாலும் அதை ஏற்று கொள்ள மனம் அற்றவளாக,எனக்கு தெரியும் உன் வேலையை பார் என்று கோபமாக சொன்னவள். சமைக்க ஆரம்பித்தால்.

சமைக்கும் போது இடையில் வேண்டும் என்றே வந்து அவளை இடித்து கொண்டு நின்று ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டு வெறுப்பேற்றி கொண்டிருந்தவனை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தால்.
வீட்டைவிட்டு வெளியே போக சொல்லியாற்று நீ எனக்கு உறவு இல்லை என்றும் சொல்லியாற்று என்ன செய்து இவனை வெளியே அனுப்புவது என்று யோசிக்கையில் அவள் உள் மனம் கேலி செய்தது நிஜமாகவே உனக்கும் அவனுக்கும் உறவு இல்லை என்றால் நீ ஏன் அவன் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை என்ற கேள்வியை அதன் தலையில் தட்டி அடக்கினாள்.
இவள் சமைத்து முடிப்பதற்குள் எழுந்து வந்த அபியை பார்த்து என்ன ராஜா எழுந்துட்டியா கொஞ்சம் பொறு அம்மா உனக்கு பால் ஆற்றி தருகிறேன் என்றாள்.அபியும் சமத்தாக சென்று விளையாட ஆரம்பித்தான்.
சுவாதியை சமைக்க சொல்லிவிட்டு கீழே வந்தவன் நகுலன் நகத்தை கடித்து கொண்டு இருப்பதை பார்த்து உனக்கு திருமணம் என்று வர சொன்னாய் என் குடும்பத்தை கண்டுபிடித்துள்ளாய் ரொம்ப நன்றி டா என்று அணைத்து கொண்டான்.

என்ன அண்ணா நீ எதுக்கு நன்றி எல்லாம் சொல்லி கொண்டு நீ சந்தோஷமாக இருந்தாலே போதும் ஆனால் என்ன நாம் அனைவரும் சந்தித்த சூழ்நிலைதான் தவறாக போய் விட்டது அத்தை ஹாஸ்பிட்டலில் இல்லையென்றால் அபியை பார்த்ததுமே பெரிய விழா ஒன்று தயார் செய்து இருப்பேன் என்றான்.
நகுலை ஆராய்ச்சியாக பார்த்த அர்ஜூன் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க காய்ச்சல் அன்று அவன் புலம்பியதையும்,மீட்டிங் வந்த இடத்தில் அபியை பார்க்கில் பார்த்தது டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் தெரிந்து கொண்டது என அனைத்தையும் கூறியவன் கீதாவிற்கும் அவனுக்கும் நடந்த உரையாடலை பற்றி வாய் திறக்கவில்லை.

சரி உன் அண்ணியை அனைவருக்கும் சமைக்க சொன்னேன் நான் அவளை புரிந்து கொண்ட வரை அவள் நிச்சயம் நமக்கு சமைத்திருக்கமாட்டாள். அவர்கள் மூவருக்கு மட்டும் தான் சமைப்பாள் நீ சென்று மற்றவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடு நான் உன் அண்ணியை அழைத்துவருகிறேன் என்று கூறி அவனை அனுப்பிவிட்டு வீட்டின் முன்பு இருந்த தோட்டதில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்தான். இவ்வளவு நாள் ஒடிய ஓட்டத்தை முடிவுக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன் உடனே சில போன் கால்கள் செய்து பேசிவிட்டு மாடிக்கு சென்றான்.
அங்கு அபி பொம்மைகளுடன் விளையாடி கொண்டு இருப்பதை பார்த்தவன்.இவன் என் மகன் என் உதிரத்தில் உதித்தவன் என்று கர்வமாக நினைத்தவனின் நினைப்பை தன் மகனே அழிக்க போகிறான் என்பதை அறியாமல்.அவனை பார்த்து கொண்டே நின்றான் அபி நிமிர்ந்து பார்த்து யார் என்று தெரியாமல் அறிமுகமில்லாத பார்வை பார்த்து வணக்கம் அங்கிள் நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும் ராகவ் தாத்தாவை பார்க்க வந்தீர்களா என்று கேட்க அர்ஜூன் உள்ளுக்குள் நொறுங்கினான்.
தன் மகன் தன்னை அடையலாம் தெரியாமல் இருப்பதை கூட ஏற்றுகொண்டவனால் அவன் அங்கிள் என்று சொன்னதை ஏற்று கொள்ள முடியாமல் கண்ணில் நீருடன் பார்த்து கொண்டிருந்தான்.அபிக்கு பால் ஆற்றி கொடுக்க வந்தாள் சுவாதி.

அபியின் பேச்சு சத்தம் கேட்டு யாருடன் பேசுகிறான் என்று யோசித்து கொண்டே வந்த சுவாதியின் காதுகளிலும் அபி பேசியது கேட்க கையில் வைத்திருந்த பால் டம்ளரை வேகமாக டேபிளின் மேல் வைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டாள்.

அர்ஜூனோ சமையல் அறையில் இருந்து வந்தவள் தன்மகனுக்கு தான் யார் என்று சொல்லுவாள் என ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க அவள் ஒன்றும் சொல்லாமல் சென்றது கோபத்தை ஏற்படுத்தினாலும் தப்பு தன் பேரிலும் உள்ளது தான் அதற்காக இவ்வளவு பெரிய தண்டனை தனக்கு தர வேண்டுமா தன் மகன் தன்னை அங்கிள் என்று அழைக்கும் கொடுமை தன் எதிரிக்கு கூட வர கூடாது என்று தன்னை நொந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்

Advertisement