Advertisement

அத்தியாயம்-12

என்ன……எப்படி அவளை அவளுடைய ஆபிஸில் இறக்கிவிட்டுதானே நான் வந்தேன்.அது மட்டும் இல்லாமல் உங்கள் பிளானை பற்றி இப்போதுதான் என்னிடம் சொன்னீர்கள்.எந்த தைரியத்தில் இப்படி செய்தீர்கள் என்றால் கோபமாக.

உன் தோழியின் நல்வாழ்விற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீ நினைப்பது எனக்கு தெரியும். அதனால் எப்படியும் என் பிளானிற்கு நீ ஒத்து கொள்வாய் என்றும் எனக்கு தெரியும் என்றவன் நம்மிடம் அதிக நேரம் இல்லை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அபியையும் அண்ணியையும் என் குடும்பத்தின் முன் கொண்டு வரவேண்டும் அதற்காகதான் இப்படி செய்தேன் என்றான்.அவன் கூறுவது சரி என்று படவே அவளும் அமைதி ஆனால்.

இன்று நாம் இருவரும் ஒன்றாக காரில் ஏறியதையும்,நாம் அதாவது நீ திரும்பி இருந்ததால் நான் சிரித்து பேசியதை அண்ணி பார்த்து ஷாக்காகி நின்றுவிட்டார்கள். அண்ணியுடைய ஆபிஸ் எம்.டி என்னுடைய பிரண்ட் அவர்களின் கம்பெனியுடனும் டீலிங் இருக்கிறது.அந்த மீட்டிங் அட்டண் பண்ணதான் நான் திருச்சி வந்தேன்.

வேலை முடிந்து சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க போன வாரம் பார்க்குக்கு வந்தேன் வந்த இடத்தில்,அபியை பார்த்து ஷாக்காகிவிட்டேன் ஏன் என்றால் என் அண்ணன் சின்ன வயதில் எப்படி இருந்தானோ அப்படியே இருந்தான்.அதனால் அவனை யார் என்று அறிய அடுத்தநாள் வந்தேன் ஐந்து மணி போல் ஒரு வயதானவர் அபியை அழைத்து வந்தார்.

நான் அங்கு இருக்கும் மர நிழலில் அமர்ந்து கவனித்தேன்.அவர் கிளம்பவும் அவர் பின்னாடி சென்று அட்ரஸை கண்டுபிடித்து தனியார் டிடெக்டிவ் வைத்திருக்கும் நண்பனின் மூலமாக விசாரித்து பாதி தெரிந்து கொண்டேன்.

என் அண்ணனின் மூலமாக பாதி தெரிந்து கொண்டேன் என்றவனை புரியாமல் பார்த்தவள்,உங்கள் அண்ணன் யாருடனும் பேசுவதில்லை என்றீர்கள் பிறகெப்படி என்று கேட்க அண்ணன் சுயநினைவு இல்லாமல் உளறியவை என்றவனை அதிர்ச்சியாக பார்க்க அண்ணன் நாகபட்டினம் சென்றதும் அங்கு ஏதோ பெரிய பணக்காரனிடம் சண்டைவந்தது என்பது வரை தான் எங்களுக்கு தெரியும்.

நாங்களும் அவனுக்கு பக்க பலமாக இருந்து எந்த ஆபத்தும் அவனுக்கு வராமல் பார்த்து கொண்டோம் பிறகு அந்த பணகாரனுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்தாகிவிட்டது என்று அப்பா சொன்னார்கள்.நான் அந்த சமயம் பிஸ்னஸ் விஷயமாக வெளிநாடு சென்றிருந்தேன்.

வெளிநாடு டிரிப் முடிந்து நான் வீட்டிற்கு வந்த போது வீட்டில் இருந்த அனைவரும் கவலையில் இருந்தனர். என்னவென்று நான் கேட்க அர்ஜீன் திடீர் என்று ஒன்றும் சொல்லாமல் ஊரில் இருந்து வந்திருப்பதாகவும் காய்ச்சல் அதிகமாக இருப்பதால் டாக்டர் செக் செய்து கொண்டு இருப்பதாகவும் கூறினர்.

நான் சென்று பார்த்து கொள்வதாக சொல்லி அன்று அண்ணனுடன் தங்கிவிட்டேன். அப்போது தான் அண்ணன் என்னை மன்னித்துவிடு வது,தயவு செய்து என்னிடம் வந்துவிடு வது என்று ஒரே புலம்பல் எல்லாம் சரியாகிவிடும் என்று தேற்றி அன்று அண்ணனை தூங்கவைக்க டாக்டர் தூக்கமாத்திரை கொடுத்துதான் தூங்க வைத்தார் என்றான். இன்றிலிருந்தே நம் நாடகம் துவங்குகிறது.

மாலை அண்ணி கண்டிப்பாக என்னைபற்றி கேட்பார்கள் நீ ஏதாவது சொல்லி சமாளி எனறான்.சரி சார் எனறவளை முறைத்தவன் நாம் இருவரும் காதலர்கள் என்றான். அந்த வார்த்தை கீதாவினுள் ஏதோ செய்ய ஒன்றும் சொல்லாமல் நகுலயே பார்த்தால்.அவள் பார்வையின் அர்த்தம் புரியாமல் திணறியவன்.

கண்களை ஒருமுறை இறுக மூடி திறந்தவன் இனிமேல் என்னை சார் என்று கூப்பிடாதே என் நண்பர்கள் என்னை நகுல் என்று தான் கூப்பிடுவார்கள் நீயும் அப்படியே கூப்பிடு என்றவன் நான் உன் ஆபிஸிலேயே இறக்கிவிடுகிறேன் என்று கூறி வண்டியை எடுத்தான்.

ஆபிஸ் வந்த கீதாவை தோழிகள் சூழ்ந்துகொண்டு ஓட்டி எடுத்துவிட்டார்கள்.எம்.டியின் மூலம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதை ஊகித்தவள்.

அட பாவி நளா என்னை வேறு எங்காவது பார்த்து வந்த விஷயத்தை சொல்லியிருக்க கூடாதா இப்படி மொத்த ஆபிஸிக்கும் என்னை பொறி உருண்டை ஆக்கிவிட்டாயே என்று திட்டிகொண்டிருந்தவள் திடிக்கிட்டு போனாள்,நான் எதற்கு அவனையே நினைத்து கொண்டிருக்கிறேன் ம்ப்ச்…..எல்லோரும் கிண்டல்பண்ண அவன் தானே காரணம் அதனால் தான் என்று தனக்கு தானே ஆறுதல் கூறிகொண்டு மாலை சுதியை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

மாலை எப்போதும் போல் சுதியை அழைக்க சென்ற கீதாவை, சுதி கூர்மையாக ஒரு பார்வை பார்த்து வேறு எதுவும் பேசாமல் வண்டியில் அமர்ந்து கொண்டால்.கீதாவோ என்ன பார்வடா இது இப்படி பார்க்கிறாளே,இவள் ஏதாவது கேட்பாள் அதில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால் இவள் வாயே திறக்கமாட்டேன்கிறாளே என்று மனதுக்குள் புலம்பியவள் எப்படி இருந்தாலும் சொல்லியாக வேண்டுமே எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்க்குள் நுழைந்த சுதி கீதாவை கூர்மையாக பார்த்து இன்று அபி பார்க்குக்கு போக வேண்டும் என்று சொன்னான் வா நாம் இருவரும் அவனை கூட்டி போகலாம் என்றாள்.

கீதா மனதுக்குள் ஹப்பாடி என் செல்லம் என்னிடம் என்கொயரிக்கு ரெடி என்று சொல்வது போல் இருக்கிறதே குரல் என்று நினைத்து உடனே ஒத்துக்கொள்ளாதே கீது கொஞ்சம் பில்டப் குடு என்று மனதினுள்ளே பேசி கொண்டவள்.

நீ இரு சுதி இங்கு இருக்கிற பார்க்கு தானே நானே அபியை கூட்டி போய் வருகிறேன் என்றாள்.கீதாவின் பேச்சை காதில் வாங்கியவள்.என்னுடைய பிளவுஸ் தைக்க கொடுத்ததையும் நான் வாங்க வேண்டும் நீ அபியை பார்த்து கொண்டு இரு நான் போய் வாங்கிவருகிறேன் என்றவள் கீதா மறுத்து எதுவும் சொல்லிவிடுவாளோ என்று வேகமாக படிகளில் ஏற ஆரம்பித்தாள்.

கீதாவோ மனதில் சிரித்து கொன்டு பார்க்குக்கு தயாரானாள்.இருவரும் தயாராகி அபியை அழைத்து கொண்டு பார்க்குக்கு சென்றனர்.அபி குழந்தைகளுடன் விளையாட கீதா இவளிடம் எப்படி சொல்வது என்று யோசிக்க,சுதியோ தன்னிடம் கூட தோழி காதலிப்பதை மறைத்துவிட்டாளே எப்படி இப்போது பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

அபியின் அம்மா என்ற சத்தத்தில் இருவரும் நிகழ் உலகத்திற்கு வந்தனர்.என்னமா என்று இருவரும் சேர்ந்து கேட்க அவர்களை பார்த்து கொஞ்சலாக சிரித்தான் இவன் சிரிப்பின் காரணம் புரியமல் பெண்கள் இருவரும் முழித்து கொண்டிருந்தனர்.

பந்து அங்க தூரம் விழுந்துடுச்சு அந்த அம்மு இல்ல அவள் போட்டுவிட்டு அந்த பந்து வேண்டும் என்று அழுகிறாள்.நான் போய் எடுத்து வரவா என்றான்.சுதி தலையை அசைத்ததும் ஓடி சென்றான்.

கீதாவை பார்த்தவள் கேட்க என்று வந்துவிட்டு அமைதியாக இருப்பதில் பலன் இல்லை என்று யோசித்து பேச ஆரம்பிக்கும் போது ஏதோ டமார் என்ற சத்தமும் அச்சச்சோ என்ற சத்தமும் தொடர்ந்து கேட்க தோழிகள் இருவரும் அபி வெளியில் சென்றானே என்ற பயத்துடன் பார்க்குக்கு வெளியில் வர அங்கு அபி ஒருவர் கையில் அழுது கொண்டிருந்தான்.அவன் பார்வை வேறு இடத்தில் இருந்தது தோழிகள் இருவரும் அபியை பார்த்து நிம்மதி அடைந்தனர்.வேகமாக அவனிடம் சென்ற கீதா அவரிடம்  இருந்து அபியை கைகளில் வாங்கி கொண்டாள்.

அபியை சமாதானபடுத்தும் விதமாக ஒன்னும் இல்ல ராஜா அழக்கூடாது என்று சொல்லி கொண்டிருந்தாள்.அவன் பார்வை வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்து யாரை பார்க்கிறான் என்று கூட்டத்தை விலக்கி பார்த்த தோழிகள் இருவரும் அதிர்ந்தனர்.

அத்தியாயம்13

கூட்டத்தை விலக்கி பார்த்த தோழிகள் இருவரும் அதிர்ந்து போயினர் ஏனென்றால் இரத்த வெள்ளத்தில் கீழே அடிபட்டு கிடந்தது வள்ளி தோழிகள் இருவரும் அம்மா என்று கத்த கூட திறானி அற்றவர்களாக கண்களில் நீருடன் வள்ளியை கட்டி கொண்டு அழுதனர்.உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த நல்லவரின் உதவியுடன் மருத்துவமனை சென்றனர்.

செல்லும் முன் அங்கிருந்தவர்கள் சொன்னதை வைத்துதான் தெரிந்தது அபியை காப்பாற்ற போய்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று, இதை கேட்ட சுதிக்கு மேலும் அழுகை பொங்கியது.

 ஏன்மா இப்படி செய்தீர்கள்.நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம் உங்கள் உயிரை கொடுத்து இவனை காப்பாற்றி இருக்கிறீர்கள் நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று அழுதவளின் வாயை மூடிய வள்ளி என் பேரன் என்று மெதுவாக சொல்ல தோழிகள் இருவருக்கும் அழுகை பொங்கியது.

மருத்துவமனையில் ஐசியூவில் வள்ளியை சேர்த்தனர்.கீதா ராகவ்விற்க்கு போன் செய்து வர சொன்னாள். மருத்துவமனைக்கு அரக்க பரக்க வந்த ராகவிடம் கீதா நடந்ததை சொல்ல சுவாதி தலையில் அடித்து கொண்டு அழுதால்.

என்னால்தான் என்னால்தான் எல்லாம் நான் கவனமாக அபியை பார்த்திருந்தால் அம்மாக்கு இப்படி ஆகி இருக்காது. இதற்காக நான் அம்மாவுக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று அழுதவளை கீதா கூர்மையாக பார்த்து கொண்டே அவர்கள் எழுந்து வந்து என்ன கேட்கிறார்களோ அதை செய் என்றாள்.

சுதி கண்ணீரை துடைத்து கொண்டு நிச்சயமாக அம்மா என்ன சொன்னாலும் கேட்பேன் இது அபியின் மீது சத்தியம் என்றாள். இவர்களின் பேச்சு முடியவும் ஐசியுவில் இருந்து டாக்டர் வெளியே வரவும் சரியாக இருக்க,மூவரும் ஆர்வத்துடன் டாக்டர் முகம் பார்க்க சாரி சார் நாங்கள் எங்களால் முடிந்த எல்லா முயற்சியும் செய்துவிட்டோம் இரத்தம் அதிகமாக வெளியேறியதால் இரத்தம் தேவைபடுகிறது உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவது o+ இரத்தம் இருந்தால் அவர்களை வர சொல்லுங்கள் இங்கு ஸ்டாக் இல்லை.அவரிடம் நீங்கள் யாராவது சென்று பேச்சு கொடுங்கள் நீங்கள் பேசுவதை பேசண்ட் உணர்ந்தாலே போதும் ஆபத்து கட்டத்தை அவர் தாண்டி விட்டதாக அறியலாம்.கடவுளை நம்புங்கள் என்றவர்,இப்போது ஒவ்வொருவராக சென்று பேசன்டை பார்க்கலாம் ரொம்ப அழுது மற்ற பேசண்டை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி சென்றார்.

அவர் சொன்னதை கேட்டு அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருக்க அந்த நேரம் மருத்துவமனையில் நுழைந்தான் நகுலன்.

ஐசியூ எங்கு என்று விசாரித்து வந்தவன் மூவரும் இடிந்துபோய் அமர்ந்திருப்பதை பார்த்தான். டாக்டரை சென்று விசாரித்தவன் தனக்கும் அதே பிரிவு இரத்தம் என்று கூறி வள்ளிக்கு இரத்தம் கொடுத்துவிட்டு அவன் வரும் வரையில் கூட அங்கு இருந்த மூவரில் யாரும் இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை.

ராகவிடம் சென்றவன் சார் இப்படி அமைதியாக உட்கார்ந்து இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை உங்கள் மனைவியை காப்பாற்ற முடியும் என்று நீங்கள் முதலில் நம்புங்கள்.

டாக்டர் முழுவதும் நம்மை கை விடவில்லை. நீங்கள் சென்று உங்கள் மனைவியுடன் பேசுங்கள் என்றவன்.நீங்களே இப்படி அமர்ந்திருந்தாள் உங்கள் பெண்ணிற்கு யார் ஆறுதல் கூறுவது என்று கூற கொஞ்சம் தெளிந்தவர்.நன்றி என்ற பார்வையோடு வள்ளி இருந்த அறையை நோக்கி சென்றார்.சுருதியும்,கீதவும் அழுது கொண்டிருக்க இவர்கள் அழுவதை பார்த்து அபியும் அழுது கொண்டிருந்தான். நகுலனை பார்த்த கீதா இவன் எப்படி இங்கே என்று பார்க்கும் போதுதான் கீதாவின் தந்தையுடன் அவன் பேசியது காதில் விழுந்தது.அண்ணனுக்காக இவன் என்னவெல்லாம் செய்கிறான் என்று யோசித்தாள்.

வள்ளி இருக்கும் அறைக்குள் நுழைந்த ராகவிற்கு என்ன முயன்றும் தன் அழுகையை கட்டுபடுத்த இயலாமல் வள்ளியின் கைகளில் முகம் பதித்து அழ ஆரம்பித்தார்.முப்பத்திஐந்து வருட திருமணவாழ்வில் ராகவை எதற்கும் கஷ்டபடுத்தாமல் இருந்தவர். இளம் வயதில் தாயை இழந்த ராகவிற்க்கு மற்றொரு அம்மாவாக மாறி பார்த்து கொண்டவர்.

வேலை விஷயமாக அடிகடி மாற்றல் வந்தாலும் முகம் சுழிக்காமல் தன்னுடன் இருந்தவள். தனக்கென்று எந்த விருப்புகளுக்கும் முக்கியதுவம் தராதவள் இன்று தலையிலும் கை,கால்களில் கட்டுடனும் முக்கில் ஏதேதோ வயர்களை சொருகி இருந்ததை பார்த்து துடித்து போனார்.

ராகவின் அழுகை சத்தம் கேட்டு அங்கிருந்த நர்ஸ் அவரை வெளியே அனுப்ப வெளியில் வந்தவர் நேராக கீதாவிடம் சென்று கீது அம்மாவை என்னால் இப்படி பார்க்க முடியல டா நீ சொன்னா அம்மா கேட்பா எழுந்து வர சொல்லு டா.

என்னிடம் என்ன என்ன சொன்னால் தெரியுமா உங்கள் இருவருடைய திருமணத்தையும் கண்குளிர பார்க்கணும் இருவரின் குழந்தைகளுக்கும் கதை சொல்லி தினமும் தூங்க வைக்க வேண்டும்.சின்ன வயதில் நீங்கள் செய்த குறும்புகளை அவர்களிடம் சொல்லி சிரிக்க வேண்டும் இப்படி நிறைய விஷயங்களை கூறிவிட்டு இப்படி வந்து படுத்து கொண்டாலே சொல்லுடா போடா என்று அவளை வள்ளி இருக்கும் அறை நோக்கி இழுத்து செல்ல கீதா அப்பாவை எப்படி சமாளிப்பது என்று பயந்துதான் போனாள்.அம்மா அப்பாவின் காதல் வாழ்வை பார்த்தவள் அல்லவா.

வள்ளி அதை சொன்னார் இதை சொன்னார் என்று பேசி பேசியே ராகவ் மயக்கத்திற்கு போக அந்த மருத்துவமனையில் மற்றொரு அறையில் அனுமதிக்கப்பட்டார். நகுலன்தான் முன்னின்று அனைத்தையும் பார்த்து கொண்டான். வள்ளியை பார்க்க அடுத்ததாக கீதா சென்று பேசியும் சுவாதி சென்று பேசியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தவரை என்ன செய்வது என்று அனைவரும் இருக்க.நகுலன்தான் அபியை அழைத்து சென்று வள்ளியிடம் பேச வைக்க சொன்னான்.

அபி பேசி வள்ளி எழுந்துவருவாரா அடுத்த எபியியல் பார்க்கலாம்

Advertisement