Advertisement

உன் வருகை என் வரமாய்…
20
பொங்கல் நெருங்கியது… எப்போதும் பொங்கல் விழா சிறப்பாக இருக்கும் அவர்களுக்கு… இந்த வருடம்… சுப்புவின் திருமண விருந்து, புது வீட்டு விருந்து.. என நிறைய விழாக்களின் தொகுப்பாக சேர்ந்து கொள்ள…
வேலையாட்களுக்கு… துணியெடுத்து கொடுத்து… ஒரு விருந்து போல் ஏற்பாடு செய்யலாம் என சுப்பு நினைத்திருந்தான்.. 
அதனை கொண்டு சர்ருவிடம் பேசினான்.. ஏனோ தந்தையிடம் பேசவேயில்லை… ஆனால் மனதும் கேட்கவில்லை யோசித்துக் கொண்டேயிருந்தான். இன்னமும் கொஞ்சமாக கோவம்தான் ஆனால்.. எப்போதும் போல பெரியவீடு சென்று பார்த்து பொதுவாக பேசி வந்தான்.. கணக்குவழக்கு பற்றி அவரும் கேட்கவில்லை இவனும் பேசவில்லை.
இன்று வீட்டு பெண்களுக்கு துணியெடுக்க திட்டமிட்டிருந்தனர்… சுப்பு “அம்மா… நீ, நான், வர்ஷினி அவ்வளவுதான் வேறு யாரும் வேண்டாம்… நேரமே போயிட்டு வந்திடுவோம்” என்றான்.
பானுமதி “என்ன தம்பி…. என்ன விளையாடுறியா… 
எல்லா அத்தைகளுக்கும் சொல்லு… அவங்களையும் கூப்பிடு… 
என்ன… ஏதோ திட்டம் போட்டிருக்க போலிருக்கு…” என்றார் அமைதியாக.
சுப்பு அமைதியாக இருந்தான்.. பானுமதி பேசினார் “இங்க பாரு… நான் இங்க இருக்க காரணம்… அறுவடை… அப்புறம் என் மருமக மாசமா இருக்கறதால… வேற ஒண்ணுமில்ல….
என்னிக்கு இருந்தாலும்… எனக்கு அந்த வீடுதான் சொந்தம்… இது எனக்கு மகன் வீடு…. தெரியுதா
அவங்கதான் நம்ம சொந்தம்… யாரையும் விட கூடாது…” என்றார்… அதட்டலாக.. 
சுப்பு வாய்க்குள் சிரித்தபடியே “அட அவர்களுக்கு எடுக்கலாம், ஆனா… நம்ம மட்டும் போகலாம்” என்றான்.
“ஓ…. ஆ… ஆனா அது சரி வராது… நீ போன் போடு நான் கூப்பிட்டு பார்க்கிறேன்…
அப்பாகிட்ட சொல்லிட்டியா…. அவர் எப்போ வரார்” என்றார் அமைதியாக.
சுப்பு, இப்போது அன்னையின் முன்பு தடுமாற தொடங்கினான், ஏதும் பதில் சொல்லவில்லை… அமைதியாக நின்றான்.
பானு, மகனை ஆழ்ந்து பார்த்தார்.. “ஏன் டா… அப்பாகிட்ட சொல்லலையா” என்றார்.
இன்னும் அமைதிதான், கூடவே சிந்தனையும் சுப்புக்கு.. சரிதானே… அப்பாவை கூப்பிடாமல்.. சொல்லாமல் செய்வது தவறு என தோன்ற.. “இல்ல மா… சொல்லணும், மறந்துட்டேன்” என்றான்.
பானுமதி ஒருமாதிரி பார்த்தார் தன் மகனை… “தோ பாருப்பா… உங்க அப்பா செய்த அதே தப்ப நீயும் செய்யாத…. அவர் இப்படிதான் ஒரே பக்கம் பார்த்து, பேசி வாழ்ந்துட்டார்….
அதான் என்னை புரிஞ்சிக்கல….
நீயும் அப்படிதான் செய்யற… 
நீ செய்யும் எல்லாம் உன் மனைவியை பாதிக்கும்… நீ நல்லது செய்தால்… யாரும் சொல்லமாட்டாங்க… பொண்டாட்டி சொல்லித்தான் செய்யறான்னு…
ஆனா, தப்பா செய்யத… அது நீயே செய்தா கூட, அன்னிக்கு சொன்னாங்க பத்தியா… இவ வந்து மாத்திட்டானு…
அப்படிதான் பேசுவாங்க… இதுவரை நீ செய்தது எல்லாம் சரி… இனியும் சரியா செய்… உன் பெண்டாட்டிய அவங்க மதிக்கனும்னா… நீ பெருந்தன்மையா நடந்துக்க… 
எப்போதும் போல எல்லோரையும் கூப்பிடு… உங்க அப்பா என்ன செய்வாரோ அப்படி செய்… கலந்து பேசு…
ஆனா… வளையாமா… அன்னிக்கு மாதிரி ஸ்திரமா நில்லு… 
புரியுதா… போ, அப்பாகிட்ட பேசு” என அசால்ட்டாய்… தனது பழைய புடவையை ஏற்றி இடுப்பில் சொருகிக் கொண்டு… உள்ளே செல்ல ஆயுத்தம்மானார்… 
ஆறேழு பவுனில் தாலி செயின்… தூக்கி முடிந்த கொண்டாய்… எப்போதும் நிறம் மாறிய காட்டன் புடவை, தூக்கி கட்டிதான் இருக்கும்… எல்லோருக்கும் பார்த்து, பார்த்து செய்யும் குணம்… அதிர்ந்த பேசாத குரல்.. இதுதான்  பானுமதி… அழககோ அறிவோ பார்ப்பவரின் கண்களை பொறுத்து.. வீட்டின் அஸ்திவாரங்கள் இப்படிதான், அழகாக இருக்காது… (இவர் குடும்பத்தின் அஸ்திவாரம்… குடும்பம் என்னும் வீட்டை இதுபோல் ஆயிரம் ஆயிரம் அஸ்திவாரங்கள் கண்ணுக்கு தெரியாமல் தாங்கி நிற்கிறது நிற்பதால்தான்…)
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வர்ஷினி கிட்சனில் இருந்து ஓடி வந்தால்.. “த்த….” என சொல்லி இருக்க கட்டிக் கொண்டாள். 
தன்னவளை ஆசையாக பார்த்தான்… தன்னால் செய்ய முடியவில்லை தன் மனைவி செய்க்கிறாள் என்பதே பிடித்து அவனுக்கு.
பானுமதி, வர்ஷினியை பார்த்து  “விடு தங்கம்… என்ன புரியுதா… இப்படிதான் புருஷனுக்கு அப்போ அப்போ நான்தான் எல்லாம்னு தலைக்கு ஏறும்… நீதான் எல்லாத்தையும் அனுசரிச்சு.. கொஞ்சமா தட்டனும்….
அவரவர்க்கான பாகத்தை அவரவர்க்கு கொடுத்து விடு… அவில் பாகம் கொடுத்தால்தான் யாகம் பூர்த்தியாகும்… 
அதே போல், கொடுப்பதில் குறை வைக்காதா… உன் சக்திக்கு தக்க கொடு…. எல்லாம்.. எல்லோரும் சேர்ந்தால்தான் குடும்பம்…” என்றார் அமைதியாக….
அப்படியே பார்த்திருந்தான் தன் அன்னையை… மெதுவாக தன் அன்னையின் கருத்தை உள்வாங்கினான்… தன்னுடைய நிதானம் பிடிபட்டது… எல்லோரும் வேண்டும்… பணம் காசை கொண்டு உறவுவில் பிளவு வரகூடாது என புரிந்தது…
எப்போதும் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை.. ஏதோ சந்தர்ப்பம், சூழ்நிலை… இப்போது நானே சுதாரிக்காமல் இருந்திருந்தால்… அவர்களுக்கு நானும் கெட்டவன்தானே என தன் அன்னை பேச்சில் உணர்ந்தான்.
சரியான புத்திமதி… சரியான நேரத்தில் கிடைத்தல் கூட வரம்தான், அதை ஏற்கவும் தவம் செய்திருக்க வேண்டும்… ஹா…
சுப்பு தன் தந்தையை தேடி சென்றான்… 
எப்போதும் அறுவடை முடிந்து வீட்டு பெண்களுக்கு என நாதன் ஏதோ சீர் போல் செய்யவார்… பழைய வழக்கம் அவர்களுக்கு உண்டு… பொங்களோடு சேர்த்து செய்வர்.. 
இந்த வருடம் மஞ்சள் காடு கணக்கு முழுவதும் தன் மகன் பார்த்ததால், கணக்கு கேட்க முடியவில்லை.. தயங்கினார்…
எனவே… கள்ளகாடு விளைச்சலில்.. ஒரு சிறுபங்கு செய்யலாம் என எண்ணியிருந்தார்… 
இப்போது சுப்பு வந்தான்… தோட்டத்திற்கு… வேலைகள் இல்லை நாதனுக்கு… எனவே, அங்கிருந்த அறையில் டிவி பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
மெதுவாக சுப்பு உள்ளே வர தந்தையும் “வா ப்பா” என்றார்…
காலை மணி எட்டுக்குள்தான் இருக்கும், உணவு உண்டாரா தெரியவில்லை “சாப்பிட்டீங்களா ப்பா” என்றான் அனிச்சையாய்…  
ஏதோ போல் இருந்தார்… ஆனால் அவனுக்கு, வர்ஷினியின் நிலை, அத்தைகள் பேசிய நிலை எல்லாம் சேர்ந்து இருந்ததில்… பெரிதாக பாதிக்கவில்லை தன் தந்தையின் தோற்றம்… 
ஆனால் ரத்தம் சற்று எம்பி குதித்தது… “வாங்க ப்பா சாப்பிட்டு வரலாம்” என்றான் இயல்பாய்.
“ம்…. விஜி கொடுத்து விடும்…. சொல்லுப்பா” என்றார்.
மெதுவாக தானே விவரம் கேட்டான்… “வீட்டு வேலை முடிஞ்சிடிச்சி… பொங்கல் வருது….” என்றவன் தன் மனையாள் மாசமாக இருப்பதை சொல்ல தயங்கினான்… சின்ன வெட்கம்.. எப்படி அப்பாவிடம் இதை சொல்லுவது என..
தயங்கி தயங்கி… “அவ, பர்வதம்… மாசமா இருக்கா ப்பா… அதான் சேர்த்து ஒரு விருந்து மாதிரி… வெச்சிடலாம்னு… இ.. இந்த விஷயத்த அத்தைகளுக்கு இன்னும் சொல்ல… 
எப்படி செய்யலாம்…. எல்லோரையும் கூப்பிடலாமா” என்றான் 
தந்தையாக சிறு கர்வம் வந்தது.. இந்த மாற்றத்தையும் இந்த பேச்சையும் எதிர்பர்க்கவில்லை நாதன்… 
இந்த நாட்களாக தன்னிடம் மகன்பட்டும் படாமல் பேசுகிறான், அம்மாவையும் தன்னோடு அழைத்துக் கொண்டான்.. இன்னும் கொஞ்ச நாளில் பாகபிரிவினைக்கு வருவார்கள் பிள்ளைகள் என எண்ணியிருந்தவர்கு இந்த பேச்சு… அலாதியான இன்பத்தை தந்தது…
என்னை மதித்து என் மகன் கேட்கிறான்… ஆஹா… வேறு ஆனந்தம் வேண்டுமா… 
அவனுக்கே தெரியும்… வயது, அனுபவம் எல்லாம் இருக்கிறது.. அவன் கையில் காசும் இருக்கிறது… என்னை கேட்க வேண்டிய அவசியமே இல்லைதான் ஆனாலும் கேட்கிறான்… 
என் மகன், மனைவி பேச்சை கேட்கவில்லை… என் பிடியில்தான் இருக்கிறான் என பெருமிதம் வந்தது… இது பிறவி குணம் போலும் மாற்றமில்லை அவரிடம்.
யோசித்தவராக “மாமங்க கூட பேசு…. அத்தைகிட்ட நீயே சொல்லு, நானும் பேசுறேன்… 
சேர்த்தே செய்திடலாம்… தம்பி வரானா… சீக்கிரம் வர சொல்லு… வந்து வேலைய பார்க்கட்டும்… ஒத்தையா அலையாத….
வேலையாட்களுக்கு முன்னாடியே செய்து… பொங்கலுக்கு பரிச கொடுத்திடு… வெளியூர் போக, செய்ய.. வசதியா இருக்கும்…
அத்தைகளுக்கு எல்லாம் பொங்கல் சீரோடு… அறுவடை.. சீர் கொடுக்கணும், அப்புறம் இப்போ வீடு குடி போகாத.. 
வீட்டில், மாசமா இருக்கால்ல… இப்போ போக கூடாது… இனி குழந்தை பிறந்துதான்.. 
பெருசா இழுக்காத… போதும் அளவா செய், அவ்வளவுதான்… ” என்றார் பொறுப்பாய்.
பின் மெதுவாக இத்தனை நாள் விட்ட கணக்கு வழக்குகள் பேசினர்… மெல்ல மஞ்சள் காடு கணக்கும் பேசினான்… அவரும் பட்டும் படாமல் கேட்டுக் கொண்டார் ஏதும் கேள்வி கேட்கவில்லை. ஆக வரவு செலவு சத்தமில்லாமல் மகன் கைக்கு இடமாறியது… நாதன் அமைதியாகவே இருந்தார். 
சுப்பு “வாங்க ப்பா, துணி எடுத்து வந்திடலாம்.. அம்மா அத்தைங்க கிட்ட பேசறேன்னு சொன்னாங்க… சாப்பிட்டு ரெடியா இருங்க… பத்து மணிக்கு போகலாம்” என்றான்… வரவேற்பாய் ஆரம்பித்த வார்த்தை… முடிக்கும் போது வந்தே ஆகவேண்டும் என்ற த்வனியில் சொல்லி கிளம்பினான்.. தந்தையும் தலையாட்டினார், வேறு வழியும் இருக்கவில்லை போல…
இந்த நாட்களின் தனிமையும்… புறக்கணிப்பும் அவருள் எதையோ விதைத்தது… முக்கியமாக வயது. தள்ளாமையில்.. தன்னுடன் பேச, கவனிக்க இயல்பாகவே ஒரு உறவை தேடும்.. 
மேலும் இதுவரை… அந்த வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம்… வழக்கு எல்லாம்… இப்போது கேட்பார் இல்லாமல் இருப்பது சற்று ஏமாற்றத்தை தர… ஒரு சுதாரிப்பு வந்தது அவரிடம்… இனி… அவன் வழி… என்ற எண்ணமும் ஓங்கியது… எனவே ஆத்மநாதன் அமைதியாக இருந்தார்.
அதற்குள் அங்கு எல்லோருரிடமும் பேசியிருந்தார் பானுமதி… தன் மகனை பார்க்கவும் “போ, விஜி அத்தையை கூப்பிட்டு வா” என்றார், வரும் அவனை வெளியவே நிறுத்தி…. கொஞ்சம் சங்கடமாக இருந்தது சுப்புக்கு, ஆனாலும் சென்றான். 
ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு… உறவுகளும், பொறுப்புகளும் அழகாக கைமாறும் நேரம்… இது. ‘குடும்பஸ்தன்…’ என்பது  அவ்வளவு எளிதா… கொஞ்சம் வளைந்து… சிலசமயம் நிமிர்ந்து… பல சமயம் மௌனமாயிருந்து… கைவரவேண்டிய பொறுப்பு… அப்படி ஏற்றலும்.. சிறப்புதானே…
தன் விஜி அத்தையை பேசியே, அழைத்து வந்தான்…
ஆக அடுத்த ஒருமணி நேரத்தில் இவர்கள் கிளம்ப.. மற்ற இரு அத்தைகளும் நேரே கடைக்கு வருவதாக பேச்சு… ஆத்மநாதனை தோட்டத்தில் அழைத்துக் கொண்டான் சுப்பு… 
இன்றும் பானுமதிதான் பேசினார்… வர்ஷினி எப்போதும் போல அமைதியாக இருந்து கொண்டாள்.. காரில் ஒவ்வருவருக்கும் ஒவ்வரு மனநிலை எனவே அமைதியான பயணம்… அன்று வெறுப்பாக வர்ஷினியை ஏற்றிகொண்ட கார்.. இன்று உரிமையாக ஏற்றிக் கொண்டது.. 
கடையில் மற்றவர்களும் சேர்ந்துகொள்ள.. கொஞ்சம் கலகலப்பு வந்தது… சுப்புவையும் தன் அண்ணனையும் ஆசையாகவே வரவேற்றனர் உறவுகள்… பானுமதி மேலும் வர்ஷினி மேலும் எப்போதும் போல ஒரு பாராமுகம் வந்தது…
கவலைப்படவில்லை பானுமதி “நீங்க இங்க துணி பாருங்க அண்ணி” என சொல்லி, தன் மருமகளுடன் பக்கத்தில் அமர்ந்து இருவரும் பேசியபடியே புடவை எடுத்தனர்…
வர்ஷினி “த்த… இந்த தரம் நீங்கதான் செலக்ட் பண்றீங்க… சொல்லுங்க உங்களுக்கு என்ன கலர் வேணும்” என்றாள்..
பானு தயங்கவோ வெட்கப்படவோ இல்லை “பாரு, எங்கிட்ட மாம்பழ கலர்கல புடைவையே இல்ல தங்கம்… ஒவ்வரு தரமும்… அது மட்டும் கண்ணுலையே கிடைக்காது…
பார்த்தாலும்… இதென்ன இவ்வளோ பளிச்சின்னு இருக்கு, உங்களுக்கு இது.. சரியா இருக்காதுன்னு, அண்ணிங்க சொல்லிடுவாங்க…. 
இப்போது அந்த கலரு இருக்கா பாருடா தங்கம்…” என்றார் வெள்ளந்தியாக… வர்ஷினி மலைத்து நின்றாள்… ஒரு புடவைக்காக கூட பேசாதவர்.. இன்று தன் மகனுக்கா, அத்தனை புத்திமதி சொன்னார் என எண்ணாமலிருக்க முடியவில்லை வர்ஷினியால்.
அவர் கேட்ட அதே கலர் நல்ல அழகான காஞ்சி பாட்டில், முழங்கால் வரை பச்சை நிற பார்டரில்… ஜரிகை கம்மியாக… என தன் அத்தைக்கு பார்த்து தேடி எடுத்து கொடுத்தாள்… ஏதோ, நிறைவேறா ஆசையை எட்டியதாக அந்த வெள்ளந்தி பெண் பூரித்து போனார்..
தனக்கு எடுப்பதற்கு… தன் கணவனை தேடினாள் கண்களால், அவனும் யார் கண்களையும் உறுத்தாமல் வந்து, அருகில் நின்று… பார்த்து, பொறுமையாக எடுத்து கொடுத்தான்… இதெல்லாம் அந்த மூவர் கூட்டணிக்கு தெரிந்தது… கண்டும் காணமல் இருந்தனர். 
வீட்டிற்கு வந்தனர்… காரில் பேச்சு சென்றது.. பெரிதாக வர்ஷினியை தாக்கவில்லை, எப்போது போல எல்லாம் பானுமதியை தாக்கியது அந்த மூவர் படை…
வீடு வந்ததும்… செண்பா… பரிமாற அனைவரும் உண்டனர்… நாதனுக்கு தோட்டத்திற்கு உணவு சென்றது… கொடுத்து விட்டார் பானுமதி.
சுப்பு, அத்தைகளிடம் பொறுமையாக பேசி… எல்லாவற்றியும் சொன்னான் சுப்பு… “வர்ஷினி கன்சீவா இருக்கா… வீடு வேலை முடிந்தது” என எல்லாம் சொன்னான்.. அப்படியே மாமன்களிடம் பேசியும் ஒரு சமநிலைக்கு கொண்டு வந்தான் அந்த உறவுகளை… 
அந்த மாலையே மாமன்கள் வந்தனர்… தத்தம் மனைவியை அழைத்து செல்ல… “சுப்பு…  வா வீட்டுக்கு, வாம்மா விருந்துக்கு வா… என வர்ஷினியையும் சேர்த்தே அழைத்தனர்.
சுப்பு, பெரிதாக சிரித்தான் “ஹா.ஹா………ஹா……. விடுங்க மாமா.. மூணு பேராவே வந்திடறோம்…” என்றான். அத்தைகளுக்கு முகம் கன்றி போனது… அவரவர் கணவர், மனைவிமார்களை முறைக்க மட்டுமே முடிந்தது..
இரண்டாவது அத்தையின் கணவர் அந்த இடத்திலேயே கேட்டார் “சின்ன பையன், சரியா இருக்கான்.. நமக்கு இன்னும் தெரியலை” என்றார் தன மனைவியை பார்த்து முறைத்தபடியே…
சுப்பு “விடுங்க மாமா… எல்லாம் அவசரமா நடந்தத்துல.. யாருக்கும் ஒன்னும் புரியலை… விடுங்க… பார்த்துக்கலாம்” என்றான்.
மனசே ஆறவில்லை அவர்களுக்கு… “நீ வா மாப்பிள… அடுத்த ஞாயிறு… வந்திடு” என அவர்களே கட்டளையிட்டு சென்றனர்.
எல்லாம் பேசி முடித்து… ஒருவழியாக அத்தைகள் கிளம்ப பானுமதியும்  “சுப்பு என்னை அங்க பெரிய வீட்டில் விட்டிடு” என்றார்.
“ஏன் ம்மா… இருந்திட்டு போயேன்… காலையில” என்றான்..
“இல்லடா… போலாம்… காலையில, வர்ஷினிக்கு அங்கிருந்து ஏதாவது கொடுத்தனுப்பறேன்… போலாம்” என்றார். 
வர்ஷினிக்கு நாட்கள் ஒருவித சோம்பளுடனேயே நகர்ந்தது… காலையில் செண்பாவும், பானுமதி பார்த்துக் கொண்டார்.. வர்ஷினிக்கு, இப்போதுதான் நாட்கணக்கில் இருப்பதால் பால், தாளிப்பு எந்த வாசனையும் ஒத்துக் கொள்ளவில்லை…. எனவே கிட்சென் செல்வதேயில்லை… 
நேரத்திற்கு உணவு வந்தது… பள்ளி கிளம்புவது மட்டும்தான் அவளின் வேலையாக இருந்தது… நாட்கள் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் நகர்ந்தது.
அக்கா மாசமாக இருப்பது கேட்டு கிரி வந்து, பார்த்து சென்றான். சரவணன் இன்னும் வரவில்லை… வேலை விடவில்லை அவனை.. அதனால் பொங்கலுடன் பத்து நாட்கள் லீவ் எடுத்து வருவதாக சொல்லியிருந்தான்.
அன்று கடலை காட்டில் விருந்து. சிறிய அளவிலான சீட் போட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது… குடும்பமே அங்குதான் இருந்தது… எல்லோருக்கும் புடவை வேட்டி எடுத்து கொடுத்து அன்னமிட்டு அனுப்பினர். அவரவர்க்கான பங்கு கொடுக்கப்பட்டது போல…
இந்த வாரம் அங்கு அத்தைகள் வீட்டில் விருந்து… வர்ஷினி “என்னங்க பயமா இருக்குங்க… ஒன்னும் கேட்கமாட்டான்களே” என்றாள்.. 
சுப்பு அவள் மடியில் படுத்துகொண்டு,  அவளின் இடையை வருடியபடியே “இப்போ எதுவும் தெரியாது, கேட்கமாட்டாங்க… சர்ரு வரும்போது எல்லாம்.. தெரியும், அப்போதான் கேட்பாங்க” என்றான் கண்சிமிட்டி.. விளையாடி.யபடி..
இப்போதெல்லாம் மனம் லேசாக இருந்தது சுப்புக்கு… அதனால் மனைவியின் விளையாட்டுத்தனமும் பேச்சும் இவனுக்கும் ஒட்டிக் கொண்டது போல… ஒரு இணக்கம் எப்போதும் குடும்பத்திடம்… 
வர்ஷினி “அஹ…. எப்போ எப்போனாலும் எனக்கு ஒருபாடு… ஒரு திருவிழா இருக்கு..” என்றாள் லேசாக செல்லம் கொஞ்சியபடியே…
“இருக்கு இருக்கு… ஆனா… முன்னமாதிரி பெருசா இருக்காது பாரேன்” என்றான். 
“ஏன்..” என்றாள்…
“ஹா.ஹா……. ஹா……. அது அப்படிதான்.. பாரு, பெருசா சண்டை வராது.” என்றான் சிரித்தபடியே. இன்னும், ஏதேதோ பேச்சுகள்… கிண்டல்கள், சிரிப்புகள் என அவர்களுக்கான நேரம் எப்போதும் இனியையாகவே இருந்தது…
இப்படியே, பொங்கல்விழா அவர்களை நெருங்கியது… கிரி இன்று வந்தான்… சர்ரு… பொங்கல் அன்று காலையில்தான் வந்திறங்கினான்.

Advertisement