Advertisement

 ஓம் நமச்சிவாய.

 உன் நினைவே என் சுவாசமானது. 

அத்தியாயம் 15.

 இன்றுடன் வசந்தி இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது கொஞ்சமும் யோசிக்காமல் விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்துவிட்டது பஞ்சாயத்துக்கு சொந்தமான தோப்பில் இருக்கும் கிணறு மிகவும் ஆழமானது இறங்குவதற்கும் ஏறுவதற்கும் வளைந்த படிகளைக் கொண்டது படிகளில் நீர் தேங்கி நின்று பாசி பிடித்து உள்ளது கால் சற்று பிசகினாலும் கிணற்றில் உள்ளே விழுவதற்கு  வாய்ப்பு இருக்கின்றது அப்படி இருப்பது தெரிந்தும் இந்த வசந்தி வேண்டும் என்றே நடிப்பதற்கு  சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக உயிரை மாய்த்துக் கொண்டார்.

 வசந்தி இறந்தது வீட்டு ஆட்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. வேலை செய்வாரோ இல்லையோ ஆனால் எந்த நேரமும் அந்த வீட்டில் அங்கும் இங்கும்  நடந்து திரிந்து  அவரின் இருப்பை வீட்டில் உள்ளவர்களுக்கு  உணர்த்திய படியே  இருப்பார். வசந்தி.

 டாக்டர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரின் சிதைந்த மூளையை ஒன்றும் செய்யமுடியாமல் மிகவும் மன வருத்தத்துடன் நெடுமாறன் இடம் ” காப்பாற்ற இயலவில்லை..”  என்று கூறி மருத்துவமனையில் செய்யும் போஸ்ட்மார்ட்டம் என அனைத்தையும் செய்து வசந்தியை சடலமாகவே வீட்டாரிடம் ஒப்படைத்தனர் டாக்டர்ஸ்.

 அதன்பின் ஊரே ஒன்று கூடி அந்தப் பெரிய வீட்டில் நடந்த முதல்  துக்கத்தை எடுத்துக்கட்டி வேலைகள் செய்து உரிய நேரத்திற்கு தகனம் செய்தனர்..

 சாந்தியையும் வசதியையும் வேறுபாடு காட்டாமல் பூமணி வளர்ந்திருந்தாலும் வசந்தி சிலநேரங்களில் மூர்க்க குணத்தோடு நடந்து கொள்வதை பார்த்து மன வருத்தப்பட்டிருக்கிறார் ஆனால் இன்று தன் மகள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன வேதனையோடு இருக்கின்றார் பூமணி.

 செழியன் மாறன் கவி மற்றும் சில உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து துக்க வீட்டிலும் வேலைகள் செய்து அனைத்தையும் கவனித்துக் கொண்டனர் அதற்கு அன்பும் மாறனுக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்தாள். பெண்கள் இருவரும் ராசாத்தியம்மாள் இடம் இருந்தனர்.

 அதன்பின்  இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது வசந்தி  இறந்து.

 இன்று முப்பத்தியொறாம் நாள் காரியம் செய்து தொடக்கு கழிக்கின்றார்கள் ஐயர் வந்து வீட்டில் அனைத்து விதமான சாங்கிய வேலைகளையும் செய்து பூஜை செய்து ஒரு வருடத்திற்கான காரியம் செய்துவிட்டு சென்றார். ஊர் மக்கள் அனைவருக்கும் என்று இரண்டு வேளையும் அங்குதான் சாப்பாடு ஒரு பக்கம் சமையல் நடந்து கொண்டிருக்கின்றது. 

 மாலை ஐந்து மணி பூஜை முடிந்து பொதுமக்களும் மதிய உணவு உண்டு அனைவரும் இளைப்பாறிக் கொண்டிருந்தனர் அங்கு  மாறன் செழியனுடனிருந்து பேசிக்கொண்டிருந்தான் அப்போது அங்கு வந்த அகிலம் பாட்டி மாறனிடம் ” ஏன்யா மாறா நீ இனிமேல் இங்க நம்ம வீட்டுல தானே இருப்ப எங்களை இங்க தனியே விட்டுடு போய்டாத ராசா எங்களால  இனி ஒரு பிரிவை  தாங்கமுடியாது. அதுதான் உன்னை ஏமாத்தின உன் அம்மா வசந்தியும் உயிரோட இல்ல நிர்மலாவும் இப்போ உயிரோட இல்ல அதனால இனி நம்ம வீட்டிலேயே நீயும் குடும்பமா அன்பு பிள்ளைகளோட சந்தோசமா இங்கேயே இருக்கணும் அதுதான் இந்த பாட்டியோட ஆசை  மாட்டேன்னு  மட்டும் சொல்லிடாத ராசா.. ” என்று மிகவும் பரிவுடனே சொன்னார்.

மாறன் யோசிப்பதை பார்த்து                ” ஏன்டா மாறா அதுதான் வயசுல பெரியவங்க அதுவும் அப்பத்தா கேக்குறாங்க உன்னை உன் வீட்டுல இருக்கச்சொல்லி அதுக்கு ஏன் நீ இம்புட்டு யோசிக்கிறவன். நீ இப்ப சரின்னு சொல்லுற நானும் கவியும் அந்த வீட்ல இருக்கிற உங்களோட பொருட்கள் எல்லாம் எடுத்துட்டு வாறோம் சரியா?..” என்று கேட்டான் செழியன்.

” சரி அப்பத்தா அதுதான் சரி சொல்லிட்டேன்ல சிரியேன் கொஞ்சம்.  எனக்கு இன்னும் ஒருவேலை இருக்கு தயாளனுக்கு ஒரு பொண்ணு பார்த்து கட்டிவைக்கனும் அதையும் முடிச்சிட்டா இனி நம்ம குடும்பத்தை பார்த்துக்கிறது மட்டும் தான் சரியா போ போய் உன் பேத்தி அதாவது என் பொண்டாட்டியை வரச்சொல்லு..”என்றான் மாறன்.

” என்னது பொண்டாட்டின்னா சொன்னான் அப்போ அன்பை அவனுக்கே தெரியாம மனதளவில என் பேரான்டி ஏற்றுக்கொள்ள ஆரம்பிச்சிட்டான் சீக்கிரம் அதை அவன் உணர்ந்து அன்பை ஏற்றுக்கொண்டு அவங்க வாழ்வை சந்தோசமாக வாழணும் தாயே மீனாட்சியம்மா..” என்று மனதில் வேண்டிக்கொண்டார் அகிலம். 

“என்ன??.. மாமா ஏன் இப்ப என்னை வரச்சொன்னிங்களாம்??. எனக்கு வேலை  இல்லயா? என்ன.? பாபாங்களுக்கு சாதம் குடுக்கனும் என்னன்னு சொல்லுங்க சீக்கிரம்..” 

” ஏய்! சுண்டெலி நிறுத்து ஏன் இப்புடி கறி கோச்சி புகையிற மாதிரி மூஸ் மூஸ் னு புகைவிடுற நீ வா வந்து இப்புடி உட்கார்ந்து கொஞ்சம்  பேசலாம். ” என்று மாறன் சொல்லவும் அவனுடன் பேசிக்கொண்டிருந்த செழியன் எழுந்தான்.

அதை பார்த்த மாறன்.” அட இரு மாமா நாங்க என்ன உம்மாவா குடுக்கப்போறோம் என்னமோ எழுந்து போற..” என்று மாமனின் காதில் குசுகுசு என ரகசியம் பேசிவீட்டு அவனது முகச்சிவப்பை பார்த்து ரகசிய புன்னகை சிந்திவிட்டு மீண்டும் மனைவியிடம் திரும்பினான்.

” ஏய் இங்க பாருடி சுண்டெலி நாம பாபாங்க எல்லாரும் இனிமே இங்கதான் இருக்கப்போறோம் சரியா?. நாளைக்கு நீ நம்ம வீட்டுக்கு போய் அவசியம் தேவையான பொருள் எல்லாரோட உடுப்பும் எடுத்து வை நாங்க மிச்ச சாமாங்களை ஒரு அறையில வைச்சி பூட்டிட்டு அந்த வீட்டை நம்ம அழகனுக்கு குடுப்போம் அவனும் பாவம் எத்தினை நாளைக்கு அந்த குடிசை வீட்ல இருப்பான்??. என்ன நான் சொல்லுறது புரியுதா??. ” என்றான் மாறன்.

அதற்கு அன்போ தலையை ஆட்டினால். ” ஏய் என்னடி பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுறவ வாய்ல என்ன?. முட்டையா வச்சிருக்க வாயத்தொறந்து பதில் சொன்னா என்னடி கொழுப்பு குறைஞ்சிடுமோ?.” என்றான்.

” என்ன சித்து நீங்க பேசம இருக்குறிங்களே இவரே கடைக்கு போய் முட்டை வாங்கி அவிச்சு உரிச்சி ஆசையா இந்தாடி பொண்டாட்டி மெலிந்து சத்தில்லாம இருக்குற இந்தா இந்த முட்டையை சாப்புடுன்னு ஊட்டி விட்டாராக்கும் பேசுறாரு பெரிய மெத்த பேச்சி ம்கூம் நானே பாப்பாங்களுக்கு சாதம் குடுக்கனும்ன்னு கூப்பிட்டாறே போய் என்னனு கேட்ப்போம்னு வந்தா எனக்கு தெரிஞ்ச வியத்தை திரும்பவும் . ஏதோ செய்தி படிக்கிறது மாதிரி ஒப்பிக்கிறாரு ஆளைப்பாரு..” என்று மனதில் அவனை கொஞ்சிங்கொண்டு வெளியே திட்டிவிட்டு சென்றாள் அன்புக்கொடி.

அவர்கள் நினைத்தது போன்றே பெரியவீட்டிற்கு குடிவந்துவிட்டனர். அந்த வீட்டில் இருந்ததை விட பெரிய வீட்டில் மிகுந்த சந்தோசமாக இருந்தாள் அன்பு பெண்கள் தமிழ் கலை இருவரும் அகிலம் நல்லசிவத்தின் பொறுப்பாகினர். கவி நெடுமாறனிற்கு விவசாயம் ரைஸ் மில் தென்னந்தோப்பு கயிறு பேக்ட்ரி என அனைத்திற்கும் உதவியா இருந்தான் அவனே மாறன் சென்றதும் கவனமாக பார்த்துக்கொண்டான் தற்போது மாறன் வந்ததும் அவனிடம் ஒப்படைக்க நல்ல நாள் பார்த்தனர்.

அதற்கு மாறன் ஒத்துக்கொள்ளவில்லை. ” முன்ன மாதிரி நான் அதிகம் இப்போ குடும்பத்தொழில்ல ஈடுபடமாட்டேன் நானும் மாமாவும் சேர்ந்து பண்ணுற இயற்கை விவசாயம் வெற்றிகரமாக விளைச்சல் தந்துடுச்சின்னா எங்களோட முழு நேரமும் இன்னும் அதிகமா அதுலயே  மேலும் மேலும் அதை பெரிதாக்க முயற்சி பண்ணுவோம் வேணும்ன்னா இடையில சப்ளே வேலைக்கு வருவேன் மத்தபடி நீதான் அப்பாவை வைத்து தாத்தாவோட யோசனைபடி தொழிலை நடத்தனும் அப்போதான் அப்பாவும் அம்மாவோட இழப்பை மறந்து இயல்பாக இருப்பாரு சரியா அவரை தனியாக விட்டுடாம பார்த்துக்கோ கவி..” என்று தம்பிக்கு அப்பாவை பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு அவனது வயலை பார்க்கச்சென்றான் மாறன்.

தாயின் அக்காவின் திடீரென்று நடந்த  மரணத்தினால் ஏற்பட்ட தாக்கத்தினால் அவர்களின் புது விவசாய முயற்சி சற்று தடைபட்டது அதற்கும் ஈடாக தற்போது இரவு பகல் பாராமல் மேலும் ஒருவாரமாக அயாராது உழைத்தனர் மாமனும் மருமகனும்.

வசந்தியின் காரியத்திற்கு வந்த அழகம்மையும் மாறன் செழியனின் குடும்ப நல் வாழ்வை பற்றி தாயிடம் கவலையோடு பேசிவிட்டு சென்றார்.

அதையே நினைத்துக்கொண்டிருந்த அகிலம் இறுதியாக பூமணி ராசாத்தி முத்தரசி என அனைவரிடமும் கலந்து பேசி துக்கம் நடந்த வீட்டில் நல்லது பண்ணுவதற்க்காக மாறன் அன்பு மற்றும் செழியன் எழிலுக்கும் என இரண்டு ஜோடிக்கும் சாந்தி முகூர்த்ததிற்கு நாள் பார்த்தனர்.

ஐயர் சொன்ன நாளும் வந்தது. மாறனுக்கும் செழியனுக்கு கவி மூலம் சீக்கிரமாக வீட்டிற்கு வரச்சொல்லி பெண்கள் இருவரையும் அலங்கரித்து அவர்களையும் ரெடியாக சொல்லி அறைக்கு அனுப்பிவைத்தனர்.

மாறனின் கட்டாயத்தினால் தான் செழியன் வீட்டாரின் முன் எதையும் காட்டிக்கொள்ள விரும்பாமல் சாந்திமுகூர்த்ததிற்கு தயரானான்.

செழியனின் சாந்தி முகூர்த்த அறையில்.

செழியன் சோகமாக எப்படி இதை எழிலின் மனம் நோகாமல் தடுப்பது என சிந்தித்துக்கொண்டிருந்தான்.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. 

செழியன் திரும்பி பார்க்கவும் அழகுப்பதுமையென அவனின் சூப்பி அடிவைத்து மெதுவாக நடந்து வந்தாள்.

வந்தவள் அங்கிருந்த மேசையின் மேல் பாலை வைத்துவிட்டு பழங்கள் வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வைத்தாள்.

” மாமா ” என்று அழைக்கவும்.

திரும்பி பார்த்த செழியன் அவள் நின்ற கோலத்தை பார்த்து பதறித்துடித்து ” சூப்பிமா என்னடா பண்ணுற ஏன் கத்தியை இப்புடி கழுத்துல வச்சிருக்க அழுத்தாதமா வெட்டிடப்போகுது ஏன் இப்புடி பண்ணுற மொத கீழ போடு..” என்று அவளின் அருகில் வந்தான்.

” மாமா நீ அங்கயே நில்லு நான் சொல்லுறதை கேட்டின்னா நான் எதுவும் பண்ண மாட்டேன் இல்லன்னா அறுத்துக்கிட்டு இப்பவே ஒரேடியா மேல போய்டுவேன் அம்புட்டுத்தான்.” என்றாள் எழில்.

” என்னன்னு சொல்லு பண்ணுறேன் சாவு அது இது பேசாத இப்பதான் முழுசா ஒரு உயிரை தூக்கி எமன்கிட்ட குடுத்துட்டு ஓஞ்சுபோய் இருக்குறோம் நீயும் பயம் காட்டாதடாமா அரசி நீ என்ன சொன்னாலும் மாமா கேட்ப்பேன் சீக்கிரம்  என்னன்னு சொல்லிட்டு கத்தியை கீழே போடுமா..” என்று ஆறடி ஆண்மகன் அவனது உயிரானவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

அவனது அரசி கூறியதை கேட்டவன். ” முடியாதுடி நீ சொல்லுறதை என்னால பண்ணமுடியாது.”

” அப்போ ஏன் நான் உயிரோட இருக்கனும்.” என்று கத்தியை அழுத்தினாள். எழிலரசி..

சுவாசம் தொடரும்…

Advertisement