Advertisement

ஓம் நமச்சிவாய.

உன் நினைவே என் சுவாசமானது.

அத்தியாயம் 13

 மதுரையில் இருக்கும் பிரபலமான   தனியார் மருத்துவமனையில் அவசர சகிச்சை பிரிவின்முன் இருக்கும் அனைவரின் முகத்திலும் பதட்டம் காணப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்றால் எழில்  தற்போது மயக்கமாகி தலையில்  அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றாள்.   செழியனும் முகத்தில் காயத்தோடு  மிகவும்  கவலையுடன் பூமணியின் பக்கத்தில்  நிற்கின்றான் அவனையே கோபத்தோடு பார்த்தபடியே  மூர்த்தி நிற்கின்றார் மற்றவர்கள் யாரும் அவர்களை பார்க்கும் நிலையில் இல்லாமல்   அவசர சிகிச்சைப் பிரிவின் வாயிலேயே பார்த்து டாக்டரின்  வரவிற்க்காவும் அவர் சொல்லும் பதிலிற்க்காவும். காத்துக்கொண்டிருந்தனர்.

 இரண்டு மாதங்களுக்கு முன்

 அன்றிரவு வயல் வேலைகளை  தனியாக செய்தபடியால் செழியன் தாமதமாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

 களைத்துப் போய் சோர்வடைந்து வந்தவனுக்கு எழில் காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு ஒருவிதமாக அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவனோ இவளோட பார்வையை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான் “என்ன பார்வை டா சாமி இவ இப்புடி பார்க்குறது சரி இல்லையே ஏதோ வித்யாசமாக படுதே ஏதோ இருக்கு நாம கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும் ” என்று நினைத்துக் கொண்டு அவனும் எழிலயே பார்த்துக்கொண்டிருந்தான்.

 அப்போதுதான் மாறனிடமிருந்து  கைபேசியில் அழைப்பு வந்தது செழியனுக்கு அதை எடுத்து காதுக்கு கொடுத்தவன் கேட்டது மாறன் பதட்டத்தோடு உடனே வீட்டிற்கு வருமாறு கூறி வைத்து விட்டான்.

 அப்போது காய்ச்சலில் இருந்த அன்புவிற்கு காய்ச்சல் அதிகமாகி விட்டதோ என்று பயந்து அவன் தற்போதிருந்த  இரவு உடையிலேயே வேகமாக அவனது புல்லட்டில் மாறனின் வீட்டிற்கு சென்றான்.

 சென்றவன் உள்ளே சென்று பார்த்தால் சாந்தி அகிலம் பாட்டி மற்றும் ராசாத்தி இவர்கள் அனைவரும் கவலை அப்பிய முகத்துடன் அழுது சோர்ந்து போய் இருந்தனர் அப்போது  மீண்டும் மாறன் செழியனை கைபேசியில் அழைத்தவன் “யோவ் மாமா நல்ல அக்காவை வளர்த்து வச்சிருக்கீங்க எங்க உசுர எடுக்குறதுக்குன்னே பொறந்திருக்கு உங்கக்கா சீக்கிரமா நம்ம பஞ்சாயத்துக்கு சொந்தமான தோப்புக்கு வா மாமா”  என்று கோபத்துடன் மாமனிடம் பேசிவிட்டு கைபேசியை வைத்துவிட்டான் மாறன்.

 செழியனிடம் வந்த அகிலம் பாட்டி “வசந்தி இப்படி செய்வான்னு நான் நினைத்தும் பார்க்கல நீதான் எப்படியாவது உங்க அக்காவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் நானும் கவியும் எதார்த்தமா வசந்தியை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் அதை வசந்தி கேட்பாள் என்று நான் நினைக்கவில்லை அதைக்கேட்ட வசந்தி வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள்.  நானும்  அவளின் பின்னாடியே வந்தேன் ஆனாலும் வசந்தியை தவற விட்டு விட்டேன் வசந்தி கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாள்.”

“சரி சம்மந்தியம்மா வீட்டுக்குதானே போவா வந்துடுவான்னு இருந்துட்டேன் சாயந்தரமாகியும் வரலயேன்னு தான் உங்கவீட்ட வந்தேன் அங்கேயும் இல்லன்னு சொல்லவும்தான் உடனே மாறனுக்கு அழைத்து விசயத்தை சொல்லிட்டு மாறன் போனா அன்பு தனியாக காய்ச்சலோட கஷ்டப்படுமேன்னு  எழிலை வீட்டுல விட்டுட்டு நாங்க இங்கவந்தோம்.”

  “என்னால இந்த  குற்ற உணர்வை வசந்தி வரும்வரை தாங்க முடியாது  நீ தான் பா செழியா எப்படியாவது உன் அக்காவை சமாதானம் பண்ணி வீட்டுக்கு கூப்பிட்டு வரணும் மாறன் உனக்காக தோப்புல காத்திருப்பான் சீக்கிரமா போ பா. ” என்று கவலையுடன் சொன்னார் அகிலம் பாட்டி.

” சரிங்க அத்தை நீங்க கவலைப்படாதீங்க நான் அக்காவை  எப்படியாவது பேசி கூட்டிட்டு வாறேன்”  என்று அகிலம் பாட்டியிடம் கூறிவிட்டு செழியன் சென்றுவிட்டான்.

 விஷயம் கேள்விப்பட்டு முத்தரசியும்  அங்கு வந்துவிட்டார்  ” என்ன அகிலா நடந்துச்சு “

” அதையேன் முத்து கேக்குற இன்னைக்கு காலைல நானும் கவியும் சும்மா அன்பை பற்றி பேசிக்கிட்டு இருந்தோம் அப்போதுதான் வசந்தி காலையில் எட்டு மணிக்கு தான் எழும்பி வெளியே வந்தா அதுக்கு நான் கொஞ்சம் திட்டிட்டேன் அதுக்காக  கோவிச்சுக்கிட்டு  வெளியே போயிட்டா முத்து நான் என்ன பண்ணட்டும் நானும் அவளை பொருத்து தான் போறேன் இன்னைக்கி காலைல அன்பு இப்படி  காய்ச்சலில் கிடந்தும் பொறுப்பான மாமியாரா மருமகளையும் பார்க்க வராம வெளிய போற புருஷனுக்கும் பிள்ளைக்கும் காலைல சாப்பாடு கொடுத்து சந்தோசமா அனுப்பி வைப்போம்ன்னு  நினைக்காமல் ஆடி அசைந்து  ஒரு குடும்பப் பெண் எட்டு மணிக்கு எழும்பி வந்தா அந்த வீட்டுல  எப்படி மகாலட்சுமி குடியிருக்கும் குடும்பப் பெண் எப்படி இருக்கணும்னு நானும் பொறுமையா  சொல்லியும் கொடுத்துட்டேன் அதையாவது புடிச்சிட்டு குடும்பத்தை பார்த்துட்டு சந்தோஷமா இருக்க வேணாம் ஒரு பொண்ணு மகனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து மருமகளும் வந்துட்டா அப்பயாவது திருந்த வேணாம் என்ன நினைச்சுட்டு அங்க போய் பஞ்சாயத்து சொந்தமா இருக்கிற தோப்புல உள்ள  கிணத்துல குதித்துடுவேன்னு பயங்காட்டி தேடிப்போன மாறனோட பேச்சையும் கேக்காம அடம் பண்ணுறாளாம் அதுதான் மாறன் இப்போ  செழியனை அங்க வரச்சொல்லிருக்கான்  ஏன்?.  இப்புடி கிணத்துக்கு மேல ஏறி நிற்கிறாளோ என்ன செய்து இவளை  திருத்துவதுன்னு  எனக்கு தெரியல??.  சம்பந்தியம்மா வசந்தியை கூட்டிட்டு செழியன்  வரட்டும் பேசிப்போம்.” என்று மனத்தாங்கலோடு  முத்தரசியிடமும்  பூமணியிடமும்  பேசிக்கொண்டிருந்தார் அகிலம் பாட்டி.

” சம்மந்தியம்மா நான் வசந்தியை திட்டியதில் எதுவும் தப்பு இருந்தா மன்னிச்சிடுங்க” என்றார் அகிலம் பூமணியின் கையை பிடித்துக்கொண்டு.

” ஐயோ என்ன காரியம் செய்றீங்க சமந்தி அம்மா என்னை பாவியாக்காதீங்க   அந்த சிறுக்கி மகளுக்கு இப்புடியொரு உயர்ந்த மனிதர்களை கொண்ட பெரிய குடும்பத்தில் அவங்களுக்கு ஏத்த மாதிரி ஒத்து இந்த குடும்பத்தை நடத்தி வாழ தெரியல என்ன பாவம் செஞ்சு அவளை நான் பெத்தெடுத்தேனோ தெரியல இப்படி ஒரு பொறுப்பில்லாத பிள்ளையாக வளர்ந்து வருவான்னு  நினைக்கலையே எவ்வளவு அருமையான குடும்பம் புருஷனும் புள்ளைகளும் தங்கமானவங்க அவங்களை அனுசரிச்சு சந்தோசமா வாழ நினைக்காம இப்படி ஊதாரித்தனமாக இருந்து  அவளோட வாழ்க்கையும்  கெடுத்து  கூட இருக்கிறவங்களுக்கும் நிம்மதிய கொடுக்காமல்  இருக்காளே பாவி மக. அன்பு அவளை கூட்டிட்டு வரட்டும் விளக்கமாத்தாலையே சாத்தி நல்ல புத்தி சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் சம்மந்தியம்மா  நீங்க கவலைப் படாம இருங்க இனி அவ திருந்திடுவா”  என்று அகிலத்திடம் வசந்தியை பற்றிய கவலையோடு பேசினார் பூமணி

 காலையில் திட்டியதை மனதில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே வீட்டை விட்டு வெளியே வந்து அம்மன் கோயிலில் இருந்து விட்டு மாலையானதும் ஆட்கள் பார்க்கும்படியே நடந்து பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றிற்கு சென்றுவிட்டார்.              ” பெரியவீடு சொகுசா வாழலாம்ன்னு பார்த்து அந்தாளை கல்யாணம்  கட்டினா இந்த மாமியா கெழவி என்னன்னா குடும்பத்து பொண்ணுங்கதான் சமைக்கனும்ன்னு ஒரேடியா மூணு வேலையும் விதம்விதமாக முழுங்க  என்னை சமையல்காரியாக்கிடுச்சே  இதுக்கு இன்னையோட ஒரு முடிவு கட்டுறேன். எல்லாரையும் செத்துடுவேன்னு பயம்காட்டி இன்னைக்கே சமையல் வேலைக்கு ஒரு ஆள் போடவைக்கிறேன்.  ஆயிரம்தான் மகன்  பொண்டாட்டியா இருந்தாலும் தொட்டதுக்கும் அந்த கெழவி அந்த எடுபட்ட சிறுக்கி அன்பைதானே ஓசத்தியா தூக்கிவச்சி பேசி என்னை திட்டுது. இனி நான் இருக்குறவரை அவ எப்புடி அந்த வீட்டுக்குள்ள வாறான்னு  நானும் பார்க்கின்றேன்.” என்று வஞ்சத்தை மனதில்வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து யாரேனும் வருகின்றார்களா?. என பார்த்துக்கொண்டு நின்றார் வசந்தி.

 அப்போதுதான் மாறனும் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான் எழுந்ததும் அன்பைப் பார்த்து அவளுக்கு சற்று காய்ச்சல் குறைந்து இருப்பதனால் அவளை எழுப்பி இருக்க வைத்துவிட்டு வேகவேகமாக அவனே சமையலறைக்கு சென்று அரிசி வறுத்து இடித்து உப்பு கஞ்சி வைத்து வேர்க்கடலை துவையல் அரைத்து அவனுக்கும் அன்புக்கும்  எடுத்து வந்தான்.

 அன்போ வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தாள்  தன்னை எழுப்பி விட்டு சென்றவரை இன்னும் காணவில்லை என்று பார்த்திருந்தாள் மாறனோ கஞ்சி வைத்து எடுத்து வர தாமதமாகி விட்டதால் அவனைக்காணாமல் அன்பே கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள் அவள் இறங்கும் நேரம் தான் மாறனும் அறைக்குள் வந்தான் கையில் வைத்திருந்த கஞ்சிப் பாத்திரத்தை மேசையின் மீது வைத்துவிட்டு ஓடிச்சென்று அவளை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு கண்ணசைக்காமல் பாசமாக (முறைத்து)  பார்த்துக்கொண்டு  நின்றான். அப்போது அன்பு போட்ட சத்தத்தில் தான் சுயநினைவிற்கு வந்து தன்னை இயல்பாக்கி கொண்டான் ” ஸ் ஸ் ஸ் ஆ ஆ மாமா மாமா ” என்று மறு கையால் அவனது கையை சுரண்டி அழைத்தாள்.

” ஏய் என்னடி?.  இம்சை பிடிச்சவளே உன்னை யாரு இப்ப கால் வலியோடு எழுந்து நிற்கச்சொன்னது இப்ப மாமா மாமா ன்னு கூப்பிட்டதை அப்பவே கூப்பிட்டிருக்கலாம் தானே எழும்பி  நிக்காமல் கால் வலிக்க போது முதல்ல நீ இரு. ” என்று அவளை  கட்டிலில் இருக்க வைத்தான்.

” இப்ப சொல்லு ஏன்?.. எழுந்து நின்ன”

” எவ்வளவு நேரம் தான் உங்களைத் தேடி தேடி பொறுத்திருக்கிறது அதான் நான் எழுந்து வெளியே போலாம்னு எழும்பினேன்  மாமா. ” அந்த வலியிலும்  சோபையாக  சிரித்தபடியே சொன்னாள் அன்பு.

” அப்படியே  மண்டைல  ரெண்டு போட்டேன்னா பாத்துக்கோ காலுக்கு அதிகமாக வலியை கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க தானே கொஞ்சமும் அவ மேலையே  அக்கறையில்லாமல்  எழும்பி நிக்கிறா  பெரிய இவ மாதிரி ஆளையும் மூஞ்சியும் பாரு. ” என்று அன்பை திட்டியதிற்கும் அவனின் செயலுக்கும் கொஞ்சமும் சம்மந்தமில்லாமல் கைத்தாங்கலாக அவளை மெதுவாக எதற்காக தன்னை தேடினாள் என்பதை புரிந்துகொண்டு அழைத்துச்சென்றான் பாத்ரூமிற்கு.

 மாறன் புரிந்து கொண்டதை பார்த்து சந்தோசத்தோடு அவன் உடன் எழுந்து சென்றாள் அன்பு அவளை அழைத்துக் கொண்டு வந்து கட்டிலில் வசதியாக காலை நீட்டி இருக்க வைத்துவிட்டு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து சுத்தமான துணியை தண்ணீரில் நனைத்து முகத்தின் அருகே துடைப்பதற்கு கொண்டு சென்றான்.

 அவனது  கையை     பிடித்துக்கொண்டு “என்ன பண்ணுறீங்க மாமா அதுதான் காய்ச்சல் குறைந்து நான் நல்லாதானே இருக்குறேன்   நானே தொடச்சிக்கிறேன் மாமா நீங்க விடுங்க.” என்றாள்.

 அதைக் கேட்ட மாறன் அவள் தலையில் மெதுவாக கொட்டிவிட்டு     ” ஏய் சுண்டெலி  ஒரே சொல்ல மாட்டேன் எனக்கு என் வேலையை சரியா செய்ய தெரியும் நீ  எதுவும் பேசக்கூடாது  உனக்கே தெரியும் எனக்கு வாய் அவ்வளவா பேசாது கை தான்  நீளும்  வருத்தம்ன்னு  பாக்காம அடிச்சிடுவேன் சும்மா வாய் பேசாம இருடி . என்று கூறிவிட்டு அவன் எடுத்த வேலையையும் சிறப்பாக செய்து முடித்தே அவளை விட்டான்.

 அதன்பின் ஆறிய கஞ்சியை எடுத்து அவளது கையில் கொடுத்துவிட்டு அவனும் சாப்பிடுவதற்கு அவனுக்காக கொண்டுவந்த கஞ்சியை சாப்புடுவதற்க்கு வசதியாக எடுத்துக்கொண்டு  அவளின்  பக்கத்திலேயே இருந்து விட்டான்.

” ஏன் மாமா நீங்களும் இந்தக் கஞ்சியைத்தான் சாப்பிடுறீங்கலா இந்த ராசாத்தியமாக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல மாப்பிள்ளையை கஞ்சி சாப்பிட விட்டுட்டு அப்படி என்ன வேலையோ தெரியல பொண்ணுக்கு உடம்பு சரியில்ல நாம மாப்பிள்ளையை பார்த்துப்போம்ற பொறுப்பு கொஞ்சமும் இல்ல  வரட்டும் பேசிக்கிறேன்  ராசாத்தியமாக்கு.”

” ஏய்  உனக்கு என்னடி பிரச்சனை இப்போ அத்தைக்கு வேலை கொஞ்சமாவா இருக்கு அதுக்கு இடையில பொண்ணுங்களை வேற தூக்கிட்டு போய் இருக்காங்க அவங்களையும் கவனிக்கணும் அதனால அவங்களை பற்றி குறை சொல்ல வேணாம்டி ஏன்?. நான் ஒரு நேரம் கஞ்சி சாப்பிட்டால் பத்து கிலோ குறைஞ்சிடுவேனா என்ன?. சும்மா வாயை வச்சுகிட்டு கண்டதையும் பேசாம சாப்பிட்டு தூங்கு நீயும் பண்ணுற வேலைக்கு இது உனக்கு ஓய்வு நேரம்ன்னு நெனச்சுக்கோ சுண்டெலி.”  என்று சொல்லிவிட்டு கஞ்சி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் அப்போது கண்ணன் வீட்டிற்குள் கையில் பையோடு வந்தான்.

” இந்தாங்க மாமா  இதுல உங்களுக்கும் அக்காவுக்கும்  சாப்பாடு இருக்காம் கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சாம் அம்மா சாயந்திரம் வருதாம்ன்னு சொல்ல சொல்லுச்சு. ” என்று சொல்லி மாறனின் கையில் பையை கொடுத்துவிட்டு அறையின் உள்ளே இருந்த அன்பை பார்க்க சென்றான் சென்றவன் அக்காவை திட்டிவிட்டு இனிமேலாவது ஜாக்கிரதையா இருக்கா நீ.  பாப்பாங்க அங்க நல்லா  என்னோட விளையாடுறாங்க பூங்கொடி அக்காவும் நானும் பாப்பாவோட நல்லா விளையாடுவோம் என்று அவர்கள் செய்த சேட்டைகள் என அனைத்தையும் சற்று நேரம் இருந்து அக்காவிற்கு சொல்லி சிரித்து விட்டு சென்று விட்டான்.

” ஏய் பார்த்தியாடி அத்தைன்னா  ராசாத்தி அத்த தான் எவ்வளவு பாசமா இருக்கு என் மேல அது தெரியாம நீயும்  சும்மா ஏதோ பேசிட்ட  கொஞ்ச நேரத்துக்குள்ள. ” என்று அன்பை வம்பிழுத்து விட்டு அவனுக்கு  கொடுத்த உணவை எடுத்து சாப்பிட்டான் ” ஆஹா மீன் குழம்பு என்ன ருசி அத்தையோட கைப்பக்குவம் அத்தைக்கு மட்டும் தான் வரும் ” என்று    அன்பை வெறுப்பேற்றினான். 

 அதன்பின் அன்பை படுக்க வைத்துவிட்டு சற்று நேரம் டிவி பார்த்து கொண்டிருந்தான் அப்படியே நேரம் மாலை ஆகி விட்டது மீண்டும்  அவளை எழுப்பி அழைத்துக் கொண்டு காற்றாட வீட்டின் முன் பக்கம் நாற்காலியில் இருக்க வைத்தான் அதன் பின் அவனே காப்பி போட்டு  எடுத்துக் கொண்டுவந்து அன்புக்கும் கொடுத்துவிட்டு இருவரும் சேர்ந்து காபி குடித்துத்துக்கொண்டு இருந்தார்கள் அப்போதுதான் மாறனுக்கு அகிலத்திடன் இருந்தது கைபேசியில் அழைப்பு வந்தது.

” ஏன்ய்யா மாறா காலையிலிருந்து உன் அம்மா இன்னும் வீட்டுக்கு வரல பா எங்க போனான்னு தெரியலை நானும் சம்மந்தியம்மா வீட்ல இருப்பான்னு கண்டுக்காம விட்டுட்டேன் ஆனா அவ சம்மந்தியம்மா  வீட்டுக்கு  காலைல இருந்து வரவே இல்லையாம்  இப்ப நான் சம்மந்தி அம்மா வீட்டுல தான் இருக்கேன்  நானும் கவியும் கொஞ்சம் வசந்தியை திட்டிட்டோம் அதுக்கு அவ கோவிச்சிட்டு விட்டை விட்டு வெளிய வந்துட்டா  இம்புட்டு நேரமா எங்க போனாளோ என்ன பண்ணுறாளோ தெரியல நீ கொஞ்சம் சீக்கிரமா தேடி பாரு ராசா எழில அன்புக்கு துணையா அனுப்பி வைக்கிறேன் உன் அப்பனும் பஞ்சாயத்து விஷயமா மதுரை வரைக்கும் போய் இருக்கான் கவியும் தேடிதான் போயிருக்கான்  நீயும்  கொஞ்சம் சீக்கிரம் வா ராசா. ” என்றுவிட்டு அலைபேசியை வைத்துவிட்டார்.

 அதன்பின் மாறனும் என்னவோ என்று பதட்டத்தோடு தேடி அலைந்தான் கோவிலில் கண்டதாக ஒருவர் சொல்லவும் அங்கும் சென்று தேடினான். ஆனால் அங்கு வசந்தி இல்லை அங்கிருந்து பஞ்சாயத்து சொந்தமான தோப்பில் இருக்கும்  கணத்திற்கு சென்றுவிட்டார். என்று ஒருவாறு ஆட்களிடம் விசாரித்து அங்கே தேடி  சென்றான் மாறன். அவனால் முடிந்த வரை வசந்தியிடம் போராடி பார்த்து விட்டான்.

 “ம்மா இறங்கி வாம்மா எதுனாலும் வீட்டுக்கு  போய் பேசிக்கலாம் இது விளையாட்டு விசயம் இல்ல உயிர்ம்மா வா போவோம்.” என்று  வசந்தியிடம் ரொம்ப நேரமாக போராடிப்பார்த்துவிட்டான். அவரோ வருவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை அதனால் தான் இரவு நேரம் என்றும் பாராமல் செழியனை அழைத்தான்.

அப்போதுதான் எழிலும்  செழியன் வீட்டிற்கு  வரும் நேரம் என அவளும் மாறன் வீட்டில் இருந்து வந்தாள்.  காப்பிகுடித்த பாதியிலயே  மாறன் கைபேசியில் அழைத்து பதட்டத்தோடு வரச்சொல்லவும்  மீண்டும் எழிலை அழைத்துக்கொண்டு மாறனின் வீட்டிற்கு சென்றான்.  

அங்கு சென்றவன் அகிலம் சொன்னதை கேட்டு வசந்தி எதேனும் விபரிதமாக செய்துவிடுவாறோ என பயத்தோடு மாறன் சொன்ன இடத்திற்க்கு சென்றான் அங்கு பார்த்தால்  அவ்வூரிலேயே ஆழம் அதிகமான பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றில் முதல் படிக்கட்டில் நின்று வசந்தி குதித்து விடுவதாக பயமுறுத்திக் கொண்டிருந்தார்.            

“அக்கா தயவு செஞ்சு கீழே இறங்கு என்ன பிரச்சினை என்றாலும் பேசி தீர்த்துக்கலாம் நீ இப்படி எல்லாரையும் பயம் காட்டுறது சரி இல்ல மாறன் பாவம்  அன்பையும் தனியா ஒத்தையில விட்டுட்டு   உன்னை தேடி அலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்து வந்திருக்கான். எல்லாரும் உன்னை காணாமல் தேடி தவிச்சு இருக்காங்க சீக்கிரமா வா வீட்டுக்கு போவோம்.” என்றான்.

 மாறனும் செழியனும் மிகவும் கட்டாயப்படுத்தி அழைத்தும் வசந்தி இறங்கி வருவதாகத் தெரியவில்லை அதனால் இவர்கள் இருவரும் வசந்தி இருக்கும்  கிணற்றுக்கு அருகில் மெதுவாக சென்றனர்.

 ” மாறா என் பக்கத்துல வராதீங்க ரெண்டு பேரும் வந்திங்கன்னா நான் உள்ள குதிச்சிடுவேன் பார்த்துக்கோங்க என்னை என்ன முட்டாள் அந்த வீட்டு வேலைக்காரின்னு நினைச்சிங்களா? எல்லாரும். அந்த மாமியா கெழவி என்னன்னா உடம்பு அசதியினால  கொஞ்சம் தாமதமாக எழும்பினா என்னவேணும்னாலும் பேசலாமா?. எனக்குன்னு கேக்க யாரு இருக்கா என் அம்மா அக்கா தம்பின்னு எல்லாருமே அவங்களுக்குத்தானே பரிந்து பேசுவீங்க அதனால ஏன்?. நான் உயிரோட இருக்கணும் சாகுறேன் அவங்க செல்ல மருமகள் அந்த அன்பை கொண்டுவந்து வீட்டுல வச்சிக்கட்டும் அவ நல்லா வடிச்சி கொட்டுவா ஆசை தீர திங்கட்டும். நான் வீட்டை விட்டு வந்தது காலையில் ஆனா நீங்க  தேடினது சாயந்தரம் இதுவே அந்த மாயக்காரி அன்புக்கு ஊருல இல்லாத காய்ச்சல் வந்துடுச்சாம்னு எல்லாரும் ஓடினாங்க நேத்து வந்த அந்த வேலைக்காரியோட மகள்  அந்த வீட்டுல உள்ள என்னைவிட அவ உங்க எல்லாருக்கும் முக்கியமா போய்ட்டால்ல இது சரில்லை நான் சாகத்தான் போறேன். ” என்று இன்னும் உள்ளே இறங்கினார் வசந்தி.

 “டேய் மாபுள்ள இது சரிவராது நீ அந்தப் பக்கம் போ நான் இந்த பக்கம் போறேன் அப்போதான் அக்காவை வளைச்சி பிடிக்க முடியும்.” என்று மாறனிடம் கூறிவிட்டு வேறு வழியால் சென்றான் செழியன்.

அந்த நேரம் அந்த வழியாக வந்த ஆட்கள் பார்த்தபடி சென்றனர்.

இவர்கள் வருவதை பார்த்த வசந்தி இன்னும் உள்ளே செல்ல கால்வைத்தார். தவறுதலாக பாசியீல் கால் வைத்து வலுக்கி விழுந்தும் விட்டார்.

 இவர்கள் இருவரும் அக்கா அம்மா என்று மாற்றி மாற்றி கத்தியப்படியே அருகில் சென்றனர். 

மாறன் கோவத்தோடு மெதுவாக கால்வைத்து உள்ளே இறங்கினான் ஆங்காங்கு நின்ற ஆண்கள் அனைவரும் உதவிக்கு வந்தனர்.

அதன் பின் செழியனின் இடுப்பிளும் கயிறுகட்டி உள்ளே இறங்கி இருவரும் வசந்தியை பிடித்து மேலேதூக்கி கொண்டுவந்தனர்.

தலையில் இரத்தம் வந்தப்படியே இருந்தது உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர் இருவரும்.  

இதை   கேட்ட வீட்டில் இருந்த பெண்கள் அனைவரும் அழுது கதறியபடியே மருத்துவமனைக்கு சென்றனர். 

அவசரசிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். மற்றவர்களோ கவலையோடு காத்திருந்தனர்.

இரண்டு மாதங்களுக்கு  பிறகு.

எழிலை பரிசோதித்த டாக்டர் வெளியே வந்ததும் மூர்த்தி அவரின் அருகில் சென்றார்.” இப்போ என் பொண்ணு எப்புடி இருக்கிறா?. டாக்டர்”

அவரோ செழியனை அருகில் அழைத்து  ” ஒன்றும் பிரச்சினை இல்லை சுந்தரம் உங்க பொண்ணு அம்மாவாகிட்டாங்க நீங்க தானே?. அவங்களோட கணவர் உங்க மனைவி கொஞ்சம் வீக்கா இருக்காங்க கவனமெடுத்து பார்த்துக்கோங்க. வேற பயப்படும் படி எதுவும் இல்லை.” என்று செழியனின் கையை பிடித்துக்கொண்டு சொல்லிவிட்டு சென்றுவிட்டார் டாக்டர்.

டாக்டரின் தலை மறைந்ததும் மருத்துவமனை என்றும் பாராமல் மூர்த்தி மீண்டும்  செழியனை இழுத்து ” டேய் காமுக நாயே பொறுக்கி பயலே உன்னை மதிச்சி எவ்வளவு எடுத்து சொன்னேன் என் பொண்ணு உயிரை விட உனக்கு அவளோட உடம்பை அடையுறதுதான்முக்கியமா??” என்று இன்னும் தகாத வார்த்தைகளினால் கண்டபடி திட்டி  அடிப்பதற்க்கு செருப்பையும் கலட்டி விட்டார் மூர்த்தி.

அந்த நேரம் தான் விசயம் கேள்விப்பட்டு பரிதவித்து அங்கு வந்தான் மாறன். வந்தவன் பார்த்தது செழியனிற்க்கு மூர்த்தி செருப்பால் அடிக்க ஓங்கியதையே என்ன ஏதென்று எதுவும் பார்க்காமல் விசாரிக்காமல் அவரின் அருகில் சென்று மூர்த்தியை தன்பக்கம் திருப்பி  இரண்டு கன்னத்திலும் மாறிமாறி அறைந்துவிட்டான் கோபம் தீரும் மட்டும்.

” யாருக்கு செருப்பை காட்டுற என் மாமாவுக்கா எங்க ரெண்டு பேருக்கும் உடல் மட்டும் தான் வேற என் மாமன்தான் எனக்கு எல்லாமே நான் மதிக்கிற மனுசனுக்கு நீ செருப்பை காட்டுவியோ?.  என்ன தைரியம் உனக்கு அவருக்கு  எதுன்னா நடந்தா கேக்க ஆள் இல்லையா?. என்ன ?. இருக்கேன் என் மாமனுக்கு எல்லாமா எப்பவும் உயிரோட இருக்கும் வரை கூடவே நிழல் மாதிரி நான் இருப்பேன். செருப்பை காட்டினதுக்கே உனக்கு இந்த அடி நீ மட்டும் அடிச்சிருந்த உயிரோட புதைச்சிருப்பேன் வயசுல பெரியமனிதன் நீ புத்தி வேணாம் அவருக்கு அக்கா புருசன் எல்லாத்தையும் விட உன் பொண்ணை கட்டின மாப்பிள்ளை நெருங்கின சொந்தத்துக்குள்ள இப்புடி நடந்துகிட்டா நாளபின்ன எப்புடி அவரோட ஒட்டி உறவாடுவ உன் பொண்ணையும் பேரக்குழந்தைகளையும் எப்புடி பார்ப்ப இன்னையோட முடியிற உறவா?. இது அப்புடி தல போற காரியம் என்னதான் நடந்திருந்தாலும் பொது இடத்துல இப்புடி கீழ்தரமா நடந்துக்கிற நீ பெரியப்பான்னு உன் மேல வச்சிருந்த மரியாதையே போய்டுச்சு சீ போ.” என்று அடித்து திட்டியபடி அவரைவிட்டு தன் மாமனிடம் சென்றான். 

” மாறா வா இந்தபக்கம் இதுதான் நான் உனக்கு சொல்லிக்குடுத்தேனா?. அவர் உனக்கு பெரியப்பா எனக்கு மாமா அவர் அடித்தா என்ன தப்பு அங்கபாரு சாந்தி அக்காவை முகமே வாடி கெடக்கு ஏன்டா இப்புடி பண்ணுற. நீ எம்புட்டு சொல்லுறேன் கோபத்தை குறைன்னு கேக்கவே மாட்டியா? நீ.” என்று அவ்வளவு வலியிலும் மாறனிற்க்கு அறிவுரை சொன்னான் செழியன்.

” கையை விடு மாமா நான் பிறந்து அம்மான்னு சொல்ல முன்ன மாமான்னுதான் சொன்னேனாம்னு அப்பத்தா சொல்லும் என் அம்மா எனக்கு காட்டாத பாசம் அக்கறை எல்லாமே  நீ தான் காட்டின எனக்கு    நீ வேணும்ன்னா எல்லாரையும் பார்த்துக்கோ எனக்கு எப்பவும் முதல் நீ மட்டும் தான்.”  என்று அடிபட்டு காயத்தோடு வலியால் முகம் சுழித்து பேசிய செழியனை அழைத்து சென்று இருக்கையில் அமர்த்தினான் மாறன்.

அப்போது மீண்டும்  என்ன பேசுறோம்னு தெரியாமல்.    ” பொம்புள சோக்குக்கு அலைந்து திரியிறவனுக்கு நீ பரிந்து பேசி  என்னையவே அடிச்சி அசிங்கப்படுத்திட்டல்ல இருங்கடா உங்க ரெண்டு பேரையும் உருத்தெரியாம அழிக்கல நான் சுந்தரமூர்த்தி இல்லடா.”

“நிறுத்துங்க! என்ன நடக்குது இங்க இனி யாரும் ஒருவார்த்தை பேசக்கூடாது. எல்லாம் என்னால தான் நடந்தது.” என்றார் ஒருவர்.

யார்? அது தொடரும். 

Advertisement