Advertisement

ஓம் நமச்சிவாய.
உன் நினைவே என் சுவாசமானது.
அத்தியாயம் 11.
ஒரு மாதத்திற்கு பின்.மதுரை நீதிமன்றம்
“மணிமாறன் மணிமாறன்” என டவாலி நீதி மன்றத்தில் அழைக்கவும் மாறன் வந்து சாட்சி கூண்டில் ஏறினான்.
” வணக்கம் நான் சொல்வதெல்லாம் உண்மை” என்று சட்டப்புத்தகத்தின் மேல் கைவைத்து  வக்கில் சொன்னபடியே சத்தியம் செய்தான்.
” சொல்லுங்க மணிமாறன் உங்கமேல கொலைக்கேஸ் போட்டு உங்களிடம்  இருக்கும் இரண்டு பெண் குழந்தைகளை  கேட்டு உங்க முன்னால் மனைவி நிர்மலாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்திருக்கின்றார்கள் இதை பற்றி நீங்க உங்க தரப்பு நியாயத்தை சொல்லுங்க சார்.” என்றார் வக்கில் ஒருவர்.
” என் பெயர் மணிமாறன் தற்போது வயது முப்பது. எனக்கு இருபத்திஏழு வயதில் வீட்டில்  எங்களது அம்மாவினாள் பேசி செய்யப்பட்ட திருமணம் தான் நிர்மலாவோடு நடைபெற்றது. எனக்கு பொய் பேசுவது பிடிக்காது நான் திருமணத்திற்கு பெண் பார்க்கும்போது எனது தாயிடம் கூறினேன் குடும்ப பாங்கான பெண் தான் எனக்கு மனைவியாக வரவேண்டும் வேலைக்கு செல்லும் பெண் வேண்டாம் குடும்பத்தோடு அன்பாக ஆதரவாக அனுசரித்து செல்லும் பெண்தான் மனைவியாக வேண்டும் என நினைத்தேன் கிராமத்தில் வாழும் நான் அந்த ஊர் சூழலிற்க்கு ஏற்ற பெண்ணை தான் எதிர் பார்த்தேன். “
” எங்க அம்மாவிடமும் இதை கூறினேன் அவர்களும் சரி என்று கூறி நான் கேட்டபடி தான் நிர்மலா இருப்பதாக கூறி திருமணமும் செய்துவைத்தார் ஆனால் திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் நிர்மலா அவளது இயல்பான குணத்தை காட்ட ஆரம்பித்துவிட்டாள்.”
” சார் நீங்களே அவங்களை பிடிக்காமல் கொலை பண்ணினதா சொல்லுறாங்களே அதுக்கு பதில் சொல்லுங்க.” என்று நிர்மலாவின் பெற்றோருக்கா வாதாடும் எதிர் தரப்பு வக்கில் கேள்வி கேட்டார் மாறனை.
“அப்ஜக்சன் மை லாட் ஆரம்த்தில் நிர்மலா இறந்த நேரத்திலே இறப்பில் இவர்மேல் சந்தேகம் இருப்பதாக கூறி எனது கட்சி காரர் மணிமாறன் மீது இவர்கள் வழக்கு தொடுத்தனர் அப்போதே நன்கு தீர விசாரித்து மணிமாறனிற்கும் அந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நீங்களே இரண்டு வருடத்திற்கு முன்பே தீர்ப்பும் வழங்கிவிட்டிர்கள் மை லாட் அதே தீர்ப்பை மதுரை மாவட்ட கலெக்டர் மகேஷ் வர்மாவும் நன்கு அவரது நண்பர் கமிஸ்னர் புகழேந்தி மூலம் ஆதாரங்களை திரட்டி உண்மைகளை வெளிக்கொண்டு வந்து கொலையாளியும் அவரை அவரே தாக்கியதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்க்கொண்டு குணமாகியதும் தானே கொலையை ஒப்புக்கொண்டு தற்போது தண்டனை அனுபவித்து கொண்டும் இருக்கின்றார் தயாளன்.
அவ்வாறு இரண்டு வருடத்திற்கு முன்பே முடிவடைந்த கேஸை மீண்டும் சம்மந்தமே இல்லாமல் ரீ ஒபன் பண்ணி நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீண் பண்ணுறாங்க மை லாட்.” என்று மாறனின் தரப்பு வக்கில் அவனிற்க்காக வாதாடினார்.
” நீதி மன்ற உத்தரவின் படி குற்றவாளி தயாளனை அழைத்துக்கொண்டு வந்துவிட்டனர் மைலாட்.” 
” எஸ் ப்ரொசிட்.” என்றார் நீதிபதி.
” தயாளன் தயாளன்” என்று அழைத்தார் டவாலி.
தயாளன் கூண்டில் ஏறி நின்றதும் மாறனின் தரப்பு வக்கில் வந்தார்.
அவர் சொன்னபடியே தயாளனும் சத்தியம் செய்தான்.” தயாளன் உங்களை மீண்டும் நீதி மன்றம் அழைத்ததிற்கு இரண்டு காரணம் இருக்கின்றது அதில் ஒன்று மீண்டும் தங்களது மகளின் கொலையை நன்கு விசாரிக்க வேண்டி வழக்கு தாக்கல் பண்ணிருக்காங்க நிர்மலாவின் பெற்றோர்.”
“இரண்டாவது மாறனின் பெண் குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்குமாறும் ஒரு வழக்கு பதிவு பண்ணிருக்காங்க தயாளன்”
”  உங்க விருப்பத்தை இந்த கோர்ட் மதிக்கும் அதனால் உங்களோட விருப்பம் என்னன்னு சொல்லுங்க.” என்றார் வக்கில்.
“முதல் தரம் அவங்க வழக்கு தொடர்ந்த நேரமே நான் சொன்னது தான் சார் இப்பவும் சொல்லுறேன். என் பெயர் தயாளன் சார் இப்போ வயது இருபத்தி எட்டு சார் நாங்க நடுத்தர வர்க்கத்து குடும்பம் தான் எங்க அப்பா பேங்கல க்ளார்க்கா இருக்கின்றார் ஒரு முறை லஞ்ச  ஊழலில் கைதாகி பிணையில் வந்தவர் நான் எம் சி படிக்கும் போதுதான் நிர்மலாவும் அதே கலேஜில் யூ ஜி படித்தாள் அப்போது  தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது அது காலப்போக்கில்  காதலாக மாறிவிட்டது நானும் படிப்பை முடித்துவிட்டு வேலையில் இருந்தேன்.
 ஆனால் என் போதாத காலம் எனக்கு நன்றாக உழைக்கவேண்டும் என மனதிடமும் ஆர்வமும் இருந்தாலும் வேலை செய்த இடங்களில் ஏதேனும் ஒருவழியில் பிரச்சினை வந்துவிடும் அதனால் அந்த வேலையை விட்டுவிடுவேன் ஒரு வேலையும் நீடித்து நிலைக்கவில்லை இதுபோன்றே காலம் சென்றது எங்களது காதல் ஆரம்பித்து ஐந்துவருடம் முடிவடைந்த அன்று நான் வேலை இல்லாமல் கையில் பணம் இல்லாமல் இருந்தபடியால் நிர்மலாவிற்கு என்னால் அவள் ஆசைபட்டு கேட்ட வைர நகை செட் பரிசளிக்க முடியவில் அன்று மிகவும் தகாத வார்த்தைகளால் என்னை திட்டிவிட்டு காதலை முறித்துக்கொள்வதாக பேசிவிட்டு சென்றுவிட்டாள்.”
” உண்மையாக நேசித்தபடியால் என்னால் அவளை விட முடியவில்லை நானே சென்று பேசி சமாதானப்படுத்தி இன்னும் ஆறே மாதத்தில் கேட்டதை விட  நன்கு விலை உயர்ந்ததாக வாங்கித்தருவதாக கூறிவிட்டு அதுவரை காத்திருக்கச்சொல்லிவிட்டு என்ன பிரச்சினை வந்தாலும் சரி இந்த முறை தாக்குபிடித்து வேலை செய்து அவள் கேட்டதை செய்துவிடவேண்டும் என நினைத்து நிர்மலாவிடம் சொல்லிக்கொண்டு சென்னை சென்றுவிட்டேன் அங்கே எனது நண்பன் மூலம் வேலைகிடைத்தது நல்ல சம்பளம் கேட்ட ஆறு மாதத்தை விட முன்னறே பணம் அனுப்பிவிட்டேன் என்னால் ஊருக்கு  செல்லமுடியவில்லை வேலை அதிகம் லீவ் கிடைக்கவில்லை நிர்மலாவின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு அதை எடுத்து வாங்கிக்கொள்ளும் படி கூறினேன் அதே போல் என்னுடைய செலவை தள்ளி அதிகமாகவே வீட்டிற்கும் பணம் அனுப்பினேன், இவ்வாறே காலம் சென்று ஒரு வருடமாகிவிட்டது. “
“புது வருட விடுமுறையில் தான்  நான் மீண்டும் ஊருக்கு வந்தேன் அப்போது நாங்க இருவரும் மகாபலிபுரம்  வந்தோம் அங்கு தங்க நேர்ந்து விட்டது அந்த நேரம் இருவரும் உறவு வைத்துக்கொண்டோம். அதன் பிறகு அவளை சீக்கிரம் திருமணம் செய்து இன்னும் நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்து அதே வேலையில் இருந்தேன் அதே போன்று வேலை பளுவின் மத்தியில் ஐந்து மாதத்தின் பின் விடுமுறையில் வந்தேன்.”
” வந்து நிர்மலாவை பார்க்க சென்றபோது அவள் மாறனை திருமணம் செய்து சென்றுவிட்டதாக தெரியவந்தது என்னால் நம்பவும் இயலவில்லை என்ன பண்ணுவது என்றும் புரியவில்லை அதன் பின் நிர்மலாவை பார்ப்பதற்க்கா காத்திருந்தேன் ஒரு முறை வெளியே பார்த்தேன் குழந்தை உண்டாகி இருந்தாள் அப்போது என்னை பார்த்துவிட்டு பேசாமல் சென்றுவிட்டாள் என்னால் அந்த ஏமாற்றத்தை தாங்க இயலாமல் குடிக்கு அடிமையானேன்.”
” திருமணம் முடித்து குழந்தையும் பிறக்க போகின்றது நாம் இனி தொல்லை பண்ணவேண்டாம் என நான் ஒதுங்கியே இருந்தேன் மேலும் மூன்று மாதம் கழித்து நாங்கள் இருவரும் ஒரு இடத்தில் சந்திக்க நேர்ந்தது அப்போது நிர்மலாவே என்னிடம் பேசவந்தாள் அப்போது எதுக்கும் இருக்கட்டும் என நான் வீடியோ ஆன் பண்ணிவைத்துவிட்டுதான் பேசினேன்.
அதில் நிர்மலாவும் நானும் பேசியவை பதிவாகி இருந்தது அதை நான் இதே வக்கிலிடம் தான் ஒப்படைத்தேன் அவரும் கோர்ட்டில் உங்களிடம் போட்டுக்காட்டினார். அதில் இருந்தது இதுதான். மாறன் 12 படித்தவராம்  அது அவளிற்கும்  தெரியுமாம் ஆனாலும் அவங்க அம்மா அவளை மாறனிற்கு தான் திருமணம் செய்து வைப்பதாக கூறி அவசரமாக முடித்துவிட்டார்களாம் அவளும் என்னைவிட பணம் படைத்த குடும்பம் என நினைத்து சொகுசாக வாழலாம் என திருமணம் முடித்தாளாம் அப்போ அவள் என்னுடைய குழந்தையை வயிற்றில் சுமப்பது தெரியாதாம் ஆனால் மாறனுடன் வாழ்வை ஆரம்பிக்கவில்லையாம் ஆனால் எப்படி கர்பம் என மாறனும் தன்னிடம் கேட்கவில்லையாம் அதனால் அவளும் அதை வெளியே சொல்லவில்லையாம் குழந்தையை கலைப்பதற்கு சென்றாளாம் மூன்று மாதம் கடந்து விட்டது இனி முடியாது என கூறிவிட்டார்களாம்.
அதனால் குழந்தையை சுமக்கின்றாளாம் அங்கு மாறனின் வீட்டில் வேலைகள் அதிகமாம் அவளால் அந்த வீட்டில் வாழமுடியவில்லையாம் அதனால் குழந்தை பிறந்ததும் என்னோடு வந்து விடுவாளாம் நாங்கள் இருவரும் திருமணம் செய்து எங்கேனும் சென்று விடலாம் என கூறினாள்.
நானும் அப்போது சரி என்றேன் என்மேல் சந்தேகம் வராமல் இருப்பதற்காக.
அவள் சொன்னது போன்று குழந்தை பிறந்ததும் ஒரு மாததின் பின் எனக்கு போனில் அழைத்தாள் நானும் பேசிவிட்டு இறுதியில் வருவதாக சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
சொன்னது போன்று மாறன் கட்டிய தாலியை கழட்டிவைத்துவிட்டு வந்தாள் குழந்தை எங்கே என்று கேட்டேன் இரண்டு பெண் குழந்தை பிறந்திருப்பதாக சொன்னாள் அவர்கள் வேண்டாம் அழைத்து வந்தால் ஊர் சுற்றி சுற்றுலா சென்று மகிழ்வாக வாழமுடியாதாம் இடையூறுகள் வருமாம் அந்த கட்டுபட்டி  வீட்டில் அடைந்து வேலைகள் செய்து குழந்தைகள் வளர்த்து என சாதாரண குடும்ப வாழ்வை அவளால் வாழமுடியாதாம் அதனால் தான் பணமும் நகையும் எடுத்துக்கொண்டு  வந்திருக்கின்றாளாம் அவை முடியும் வரை சுற்றிவிட்டு பின் சென்னையில் நல்ல வேலையில் அமர்ந்து வாழலாம் என கூறினாள்.
என்னுடைய உண்மை காதலை வேறு விதத்தில் பயன்படுத்தி கொச்சைபடுத்தி பேசி எனக்கும் உண்மையாக இல்லை கட்டிய கணவனிற்கும் பெற்ற குழந்தைகளுக்கும் உண்மையாக இல்லை எங்கள் அனைவரையும் ஏமாற்றி விட்டு உல்லாச வாழ்க்கை தேடினாள் அதனால் குழந்தைகள் இருவரும் மாறனிடமே நல்ல பழக்கவழக்கத்தோடு நன்றாக வளரட்டும் என நினைத்து நானே அவளை காதலனையும் கணவனையும் ஏமாற்றி விட்டதால் மேலும் என்னிடம்  போரடித்தால் வேறு பணம் படைத்த ஆணை தேடுவாள் என அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு குழந்தைகளின் எதிர்காலத்து வாழ்வையும் மனதில் வைத்தே திட்டமிட்டபடி தாலி போடுவது போன்று கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் நிர்மலாவின் கழுத்தை அறுத்துவிட்டேன்.
இனி நான் யாருக்காக ஏன்?. வாழவேண்டும் என நினைத்து என்னை நானே தாக்கிக்கொண்டேன் ஆனால் என்னை யாரோ காப்பாற்றினார்கள் நானும் பிழைத்து நிர்மலாவை கொலை பண்ணியதால் ஆறு மாத மருத்துவ கண்கானிப்பில் இருந்து குணமாகி ஒன்றறை ஆண்டு சிறை தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன்.  இந்த கொலைக்கும் மாறனிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை இதுவே உண்மை அதர்க்கான ஆதாரத்தை நான் வீடியோவாக கூர்ட்டில் கொடுத்தும் விட்டேன்.” என்று நிர்மலாவின் கொலை பற்றிய உண்மையை சொன்னான் தயாளன்.
எதிர் தரப்பு வக்கில் கேள்வி கேட்டார்.
” ஏன் பா தம்பி கிளிப்பிள்ளை தெரியுமோ உனக்கு அப்படிதான் இருக்கு நீ சொல்லுறது அந்த வீடியோல இருக்குறதும் நீ  சொல்லுறதும் சரிதான் நீ நிர்மலாவை கொலை பண்ணி தண்டனை அனுபவிக்க எவ்வளவு பணம் வாங்கின மாறனிடம்.” என்றார் எதிர் தரப்பு வக்கில்.
” அப்ஜக்ஷன் மை லாட்.” மாறனின் வக்கில்.
” எஸ் ப்ரொசிட்.”
” என்னிடமும் ஒரு சிறிய வீடியோ படம் இருக்கின்றது மைலாட் அதை தாங்கள் பார்க்குமாறு வேண்டுகின்றேன்.” எனக்கூறி செழியனும் மாறனும் கிடைத்த நேரத்தில் நிர்மலாவின் குடும்பத்தை தொடர்ந்து எடுத்த வீடியோ காட்சிகள். 
அவர்களுடன் சமாதானம் பேசுவது போன்று அவர்களின் வீட்டிற்குள் சென்று அங்கும் கெமராவை வைத்துவிட்டு வந்துவிட்டனர். இதெல்லாம் கலெக்டர் மகேஷ்வர்மாவின் திட்டங்கள்.
அவர்களும் எங்கு வைத்து பேசினாலும் மாட்டிவிடுவோம் என நினைத்து வீட்டிலே அவர்களின் வக்கிலை அழைத்து மாறன்தான் கொலை பண்ணியதாக பொய்சாட்சி தயாரித்து கேஸை வாதாடி இழுத்தடிக்கும் படியும் அது முடியவில்லை எனில் குழந்தையை கேட்டு கேஸ் போடும்படியும் அப்போதுதான் சமாதானம் என்ற பெயரில் பணமாகவோ சொத்தாகவோ ரொக்கமாக வாங்கமுடியும் கிராமத்தவன் மானம் போகக்கூடாது என்று கேட்டதை கொடுத்துவிட்டு போவான் அதில் நான்கில் ஒருபங்கு உனக்கு சம்பளம் மிச்சம் வருவதை நாங்கள் இரண்டு குடும்பமும் பங்கிட்டுக்கொள்வோம் என கூறியிருந்தனர்.
இதில் தயாளனின் பெற்றோரும் கூட்டு சேர்ந்துள்ளனர் மகன் தற்போது சிறையில் உள்ளான் அவனால் தங்களுக்கு இனி ஒன்றும் தேராது உழைத்த நேரத்தில் அவன் அவனிற்கு என எதுவும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை கை செலவிற்கு பணம் எடுத்துக்கொண்டு மிகுதியை அப்படியே எங்களிற்கு அனுப்பி விடுவான் தயாளனின் தந்தையின் சம்பளப்பணம் அவர்களின் ஆடம்பரசெலவிற்கு போதவில்லை இனி லஞ்சம் வாங்கினால் கேள்வியின்றி பணி நீக்கம் செய்யப்படுவீர் என எச்சரிக்கை செய்தே பிணையில் அவரை விடுவித்தனர் அதனால் எங்கள் இரண்டு குடும்பத்தின் பேரப்பிள்ளைகளும் அங்கு வளர்வதை விட இங்கு வளர்ந்தால் அதை காட்டி செலவிற்கு பணம் வாங்களாம் என திட்டமிட்டு வக்கிலிடம் பேசியதை வீடியோவாக பதிந்து விட்டது சிறிய மைக்ரோ கேமரா.
 பின் அதை அவர்களின் வீட்டிற்கு கேஸ் போடும் பையனின் மூலம் வாங்கி பார்த்துவிட்டு மாறனிடம் கொடுத்துவிட்டான் மகேஷ்வர்மா.
இதைதான் தற்போது நீதிபதியும் பார்த்தார்.
அதை பார்த்துவிட்டு தயாளனிடம் கேட்டார்.” மருத்துவ டி என் ஏ ரிப்போர்ட்டும் குழந்தைகள் இருவரும் உங்களுடையது என கூறுகின்றது குழந்தைகளின் தந்தையாக உங்களின் முடிவு என்ன மிஸ்டர் தயாளன்.”
” நீதிபதி ஐயா என்னோட பதில் என்னவென்று அந்த வீடியோ பதிவை பார்த்தே தாங்கள் தெரிந்திருப்பீர்கள். இந்த கயவர்களிடம் அந்த பெண் செல்வங்கள் வளர்ந்தால் நாளை அவர்களும் அடுத்த நிர்மலா ஆகி விடுவார்கள் மாறன் போன்ற நன்மதிப்பு கொண்ட மனிதனிடமும் அவர்களின் குடும்பத்திலும் குழந்தைகள் வளர்ந்தால் தான் நாளை அவர்களும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் நல்ல மதிப்பான இடத்தில் இருப்பார்கள்.
நான் அவர்களுக்கு தந்தையாக தகுதியற்றவன் அதனால் பெண் குழந்தைகளை மாறன் அவரின் மனைவியே நல்லபடியாக வளர்க்கட்டும் அவர்கள் தத்தெடுத்தும் விட்டனர் எனது அனுமதியுடன் அதனால் அவர்கள் தான் குழந்தைகளின் பெற்றோர்.
இதில் எந்த மாற்றமும் இல்லை  குழந்தை இவ்வுலகிற்கு வர காரணமாக இருந்தபடியால் நான் இந்த முடிவை எடுத்திருக்கின்றேன்.
பாசம் பணம் என எந்த காலத்திலும் என்னோட பொற்றோர் நிர்மலாவின் பெற்றோர் யாரையும் குழந்தையை பார்ப்பதற்கு கூட அனுமதிக்க வேண்டாம். இதுவே எனது விருப்பம் வேண்டுகோள். ஐயா.” என்றான் தயாளன்.
அதன் பின் நீதிபதி பொய் வழக்கு தொடுத்து பணத்திற்க்காக பித்தலாட்டம்  பண்ணி கோர்ட்டின் நேரத்தை வீண் பண்ணியதற்கும் பெருந்தொகை ஒன்றை அபராதமாக கட்டிவிட்டு செல்லும்படி கடுமையாக இனி இவ்வாறு நடந்துகொண்டால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பிவைத்தார் இரண்டு குடும்பத்தினரையும். 
பணம் பறிக்க வந்தகூட்டம் இருந்த பணத்தையும் இழந்துவிட்டு சென்றனர்.
மேலும் வக்கிலையும் தற்காலிக பணி நீக்கம் செய்து எச்சரித்தார்.
அதன் பின் வரகின்ற காந்தி ஜெயந்தியை முன்னிட்டு. நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நிபந்தனையில் யாரும் எதிர் பாராதபடி தயாளனின் நேர்மையான குணம் மற்றும் நல்ல பழக்கவழக்கத்தினால் ஒரு இளைஞனின் வாழ்க்கை சிறையில் வீணாககூடாது என்ற எண்ணத்தில் கலெக்டர் மகேஷ்வர்மாவின் சிபாரிசில் விடுதலையாகினான் தயாளன்.
கோர்ட்டிலே கலைச்செல்வி தமிழிச்செல்வி என இரண்டு பெண் குழந்தைகளும் இனி மணிமாறன் அன்புக்கொடியின் குழந்தைகள் அவர்களின் சொந்தத்தை தவிற வேறு எவருமே குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியாது என்று தீர்ப்பு கூறினார் நீதிபதி.
அத்தோடு இந்த கேஸ் முடிவடைந்து கோர்ட் கலைந்தது.
கோர்ட்ல் இருந்து வெளியே வந்ததும் 
” மாறன் அண்ணா உங்க ரெண்டு பேருக்கும் மிக்க நன்றி ணா உயிர் பிழைத்தபின் ஏன்டா வாழுறோம்னு இருந்தது இப்புடி சிறையிலயே செத்துடுவோம்னு நினைத்தேன் நீங்க ரெண்டு பேருக்கும்தான் என்னையும் மனிதனா மதிச்சு வந்து பார்த்து பேசி பேசியே எனக்கும் குடும்பம் குழந்தைனு வாழணும்னு ஆசை வந்தது அதுக்கு நான் இப்போ வெளிய வரக்காரணம் நீங்க ரெண்டு பேரும் மகேஷ் சார் கமிஸ்னர் புகழ் சார் நீங்க நாலு பேர்தான். 
என் வாழ்க்கையில் எப்பவும் உங்களை மறக்கமாட்டேன் இந்த இரண்டு வருடத்தில் என்னை பார்க்க ஒருபோதும் என்னை பெத்தவங்க ரெண்டு பேரும் வரவேயில்லை இல்லாத நான் அவங்களுக்கு இல்லாமலே போகட்டும் நான் உங்களோட உங்க வீட்டுக்கு வரட்டுமான்னா?.”
” அட என்ன அண்ணானு சொல்லிட்டு வரலாமான்னா கேக்குற வா தயா நம்ம வீட்டுக்குதான் போகப்போறோம். அத்தோட இனி என்னோட ஒரே வேலை உனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கிறதுதான்.” என்றான் மாறன்.
” அது வந்து அண்ணா எனக்கும் இப்போ வாழணும்னு ஆசை வந்துட்டு உங்க மனைவி மாதிரி கிராமத்து குடும்ப பொண்ணா பாருங்கண்ணா அதுக்காக வேலைக்கு  போற பொண்ணுங்க தப்பானவங்க இல்ல நிர்மலா மாதிரியும் இருக்குறாங்க சூடு கண்ட பூனை  அதனால இனி ஒரு ரிஸ்க் எடுக்க நான் தயாரில்லண்ணா அப்புடி ஒரு பொண்ணு கிடைத்தா சொல்லுங்க நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.
அதோட அந்த பொண்ணையும் நான் என்னோட சென்னை கூப்பிட்டு போயிடுவேன் இங்க இருந்தா குழந்தைகளை பார்த்தா கொஞ்சத்தோனும் மனித மனம் எப்போ எப்புடி மாறும்னு சொல்லமுடியாது அதனால நாங்க சென்னையிலயே இருக்குறோம் எப்பன்னாலும் வந்து உங்களை எல்லாரையும் பார்த்துட்டுப்போறோம்.
நான் இப்போ ஊருக்கு வரலண்ணா நான் சொன்னமாதிரி பொண்ணுபாருங்க வாறேன் நான் மகேஷ் சாரை பார்த்துட்டு அப்புடியே சென்னை போறேன் அங்க புகழ் சாரை பார்த்துக்கிறேன். 
ப்ரெண்டோட தங்கி வேலை பார்க்கிறேன் கல்யாணத்துக்கு ஒருமாதத்திற்கு முன்ன சொல்லுங்கண்ணா அங்க ஒரு வீடு பார்த்து எல்லாம் செட் பண்ணிவைப்பேன் கொஞ்சம் கொஞ்சமா இப்போ நான் ஒண்ணு தருவேன் வேணாம்னு சொல்லக்கூடாது இந்தாங்க இது நான் உள்ள வேலை செய்ததுக்காக தந்த பணம் இதுல உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் சின்னதா தங்கத்துல எதுனா என் நியாபகமா வாங்கிப்போடுங்கண்ணா அதை எப்பவும் கலட்டாதிங்க பிலீஸ் சரியா நான் போயிட்டுவாறேன்.” பணத்தை மாறனின் கையில் வைத்துவிட்டு சென்றான் தயாளன்.
அதன்பின் மாறனும் செழியனும் ஒரு உணவகத்தில் பழச்சாரு குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
” ஏன் மாறா நிர்மலா அதோட உண்மை குணத்தை காட்டி தினமும் வீட்ல சண்டை போடவும் அத்தையை எதுத்து மரியாதை இல்லாமல் பேசவும் தானே நீ வசந்தி அக்கா பொய் சொல்லி ஏமாற்றி கல்யாணம் பண்ணிவச்சுடுச்சின்ற கோவத்துலயும் தானே நீ வீட்டை விட்டு வெளிய வந்த அதுதான் இப்போ நிர்மலாவும் உயிரோட இல்ல நீ எதிர்பார்த்த மாதிரியே குடும்ப பாங்கான பொண்ணாதானே அன்பு கிடைச்சிருக்கா.  “
“நீ இனிமேல் பெரியவீட்டுக்கு போகலாம்ல அதுதான் வழக்கு  பிரச்சினை எல்லாம் முடிஞ்சுதே இனிமேல் ஏன் இங்க இருந்து கஷ்டப்படுற நீ இதுவரை அகிலம் அதைக்கு மட்டும் தான் நடந்த உண்மை எல்லாம் தெரியும் குழந்தை பற்றி நிர்மலா இறப்பு பற்றி எல்லாமே ஏன் இன்னைக்கு நாம வழக்கு விசயமாதான் மதுரை வந்திருக்கோம்னும் தெரியும் மற்ற எல்லாருக்கும் குழந்தைகள் உனக்கு பிறந்ததாதான் தெரியும் அதனால குழந்தை பற்றி பிரச்சினை இல்ல இன்னும் என்ன உனக்கு வசந்தி அக்கா  குடும்பத்தை பார்த்துக்கிற அழகு தான் ஊருக்கே தெரியும் கவியாவது இடையில அன்பு கையால சாப்புடுக்கிறான் ஆனா அத்த மாமா எல்லாரும் பாவம் காலையில பட்டினி மதியம் ருசியில்லாத நாக்கு செத்தசாப்பாடு தானே சாப்புடுறாங்க அவங்களை அந்த கொடுமையில இருந்தாவது காப்பாத்து மாறா அதுக்கு நீயும் அன்பு அங்க போனாதானே அன்பு அந்த குடும்பத்தை நல்லா பார்த்துக்கும்.” என்றான் செழியன்.
” நீ சொல்லுறது சரிதான் மாமா இன்னும் கொஞ்சகாலம் போகட்டும் தயாளனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் முடிக்கனும். பூங்கொடி சடங்காகிட்டு விசேசம் பண்ணுறதுக்கு முதல் இரண்டு அறையை புதுசா பெரியதாக கட்டி வீட்டை பெருசா கட்டனும் ராசாத்தியம்மா வீட்டை. அடுத்து அதுக்கெல்லாம் மேல நாம பண்ணிருக்க இயற்கை விவசாயம் நல்லபடியா முடியனும். 
” கொடி ஏன் இப்புடி பொய் சொன்னானு தெரியனும் அங்க போய்ட்டு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து  வாழாமல் சண்டை போடுறதை அப்பத்தா பார்த்தா தாங்கிக்காது அதுக்கு என்னை பற்றிதான் கவலை அதிகம் மேல சொன்னது எல்லாத்தையும் பண்ணிட்டு கொடியோட பேசி ஏன் இப்புடி பண்ணினானு கேட்டு இந்த பிரச்சினையை சரி பண்ணணும்.
என்னை பிடிச்சிருக்குனு சொல்லியிருந்தாலோ இல்ல வீட்டால கொடியை பார்த்து கல்யாணம் பண்ணிக்க கேட்டிருந்தாலோ இப்ப இல்லன்னா ஒரு ரெண்டு மூணு வருசம் கழித்தாவது நான் கல்யாணம் பண்ண சரினு சொல்லியிருப்பேன் மாமா உனக்கே நல்லாத்தெரியும் எனக்கு பொய்பேசுறது பிடிக்காதுனு ஆனா கொடியும் பொய்தானே சொல்லி என் வாழ்க்கைக்குள் வந்திருக்கா என் மனசு மாறி அவளையும் ஏற்றுக்கொண்டு தான் பெரியவீட்டுக்கு போவேன் மாமா இதெல்லாம் ஒவ்வொன்றாக நடக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் மாமா சரியா அதை விடு ஊருக்கு முன்ன நான் ரெண்டு குழந்தைக்கு அப்பா ஆனா நீ இன்னும் எழிலோட வாழ்க்கையை ஆரம்பிக்காம இருக்கியே மாமா முதல் உன்னோட வாழ்க்கையை பாரு.
” நீ என்மேல வச்சிருக்க பாசம் அக்கறை அன்பு அதெல்லாம் நானும் வச்சிருப்பேன்ல மாமா வயதும் முப்பத்திமூணு ஆகப்போகுது இன்னும் தாமதிக்காம வாழப்பாரு மாமா சரியா நான் இப்போ அப்பத்தாவை தனிய பார்த்து நீதீமன்றத்துல நடந்ததை சொல்லனும் போய்ட்டுவாறேன் மாமா நீயும் வீட்ட சீக்கிரம் போ மாமா.” என்று மாமனுக்கே வாழ்க்கை பாடம் எடுத்துவிட்டு சென்றான் மணிமாறன்.
இந்த ஒரு மாதத்தில் இந்த வலக்கை சரி பண்ணுவதற்கு மகேஷ் சொன்னது போன்று சாட்சிகள் தேடியதும்.
புதுவகை நெல்வாங்கி இயற்கை முறையில் கலப்பை  வைத்து உழவு பண்ணி பண்டய காலங்களில் எவ்வாறு இயற்கை முறையில் விவசாயம் செய்வார்களோ அது போன்று விழா எடுத்து நாத்து நடவு செய்தே புதிய வகை நெல்லை விதைத்தனர் மாறனும் செழியனும்.
அன்பிற்கு வேலையே இந்த ஒருமாத காலத்தை ஓட்டிவிட்டது. அம்மா வீட்டிற்கு செல்வது அங்கு வேலைபார்ப்பது எழிலிற்கு சமையல் சொல்லித்தருவது கவிமாறனிடம் பெரியவீட்டிற்கும் காலை உணவு மதியம் இரவு குழம்பு வகைகள் என அதிகம் செய்து அங்கும் கொடுத்துவிடுவது பொண்ணுங்களை கவனிப்பது என அன்றாட வாழ்க்கை அன்புக்கொடியை இந்த ஒருமாதமும் இழுத்துச்சென்றது.
வசந்தி முன்பே அதிகம் செழியனின் வீட்டில் இருக்க விரும்பமாட்டார் ஆதனால் பெரியவீட்டு மருமகளாகியதும் அந்த வசதியான வாழ்க்கை பிடித்துவிட்டது வேறு எந்த வேலையும் தன்னால் செய்யமுடியாது என கண்டிப்பாக சொல்லிவிட்டு ஏதோ கடமைக்கு செய்வது போன்று அவருக்கு எது மிகவும் எளிதாக சமைக்க முடியுமோ அதை செய்துவிட்டு கடமைமுடிந்தது என  அவரின் சொகுசை பார்க்க சென்றுவிடுவார்.
அதேபோன்றுதான் சாந்திக்கு போட்டியாக தம்பி தனக்கும் ஏதேனும் செய்வான் என அங்கு சென்றார் ஆனால் முன்புபோன்று ஒருநாள்கூட அங்கு அவரால் இருக்கமுடியவில்லை பெரியவீட்டில் சொகுசாக இருந்துவிட்டு இங்கு அனைத்திற்கும் கஷ்டமாக ஆட்கள் அதிகம் சிறியளவு வீடு என தடுமாறினார் ஆனால் அவராகவே இங்கு வந்துவிட்டு மீண்டும் தானே செல்வது கேலிக்கூத்து ஆகிவிடும் என நினைத்து யாரும் வந்து அழைத்ததும் செல்லலாம் என இருந்தார் அதே போன்று அகிலம் பாட்டி வந்து அழைத்ததும் சாயந்தரமே சென்றும் விட்டார்.
சாந்தியோ மூர்த்தி வந்து அழைத்ததும் சென்றுவிட்டார் அன்றே சாயந்தரம் சீர்வரிசை வந்து சேரவும் அதை செழியன் எடுக்க மறுத்துவிட்டான்.
அவனது உழைப்பில் என்ன முடியுமோ அதை வைத்துவாழலாம் அவனின் அக்கா இருவருக்கும் எந்தவித சீரும் செய்து திருமணம் முடிக்கவில்லை அதனால் இது எதுவும் வேண்டாம். என கண்டிப்பாக மறுத்துவிட்டான் அந்த மனவருத்ததில் சாந்தி அங்கு மகளுடன் இருந்து சமையல் சொல்லிக்கொடுத்து  ஏனையவற்றையும் சொல்லிக்கொடுத்து இனியாவது தனது தாய் பூமணிக்கும் ஒய்வு கொடுக்கலாம் என நினைத்துவந்தவர் செழியன் சீர் எதுவும் வேண்டாம் என மறுக்கவும் திரும்பி கணவனுடனே வந்துவிட்டார் அதன் பின் மீண்டும் இதுவரை அங்கு செல்லவில்லை.
மீண்டும் மனைவி தான் அழைத்ததும் வந்துவிட்டதால் வீட்டில் வேலைக்கு ஆட்கள் வைத்தார் மூர்த்தி அதனால் சாந்திக்கு வேலைகள் மிகவும் குறைக்கப்பட்டது 
சாந்தியின் மேற்பார்வையில் உணவு பட்டியலின் படியே தினமும் சமையல் நடந்தது. அதனால் மாமியாரும் மருமகளும் அகிலம் பூமணி என நால்வரும் கோவில் செல்வது அதிக நேரம் தங்களது குடும்பம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை பற்றி பேசுவது என அவர்களும் இந்த ஒருமாத காலத்தை கடந்துவிட்டனர்.
எழிலோ அன்பின் சமையல் போதனையில் நன்றாக தேர்ச்சி பெற்று பூமணியிடம் கேட்டு செழியனிற்கு பிடித்தமான உணவை செய்து அவளின் அன்பினால் பாரமான மாமனின் நெஞ்சை மயிலிறகினால் வருடுவதுபோன்று அன்போடு நடந்துகொள்வாள்.
மூர்த்தி நினைத்து பயந்தது போன்றே நேர்மறையான மருத்துவ ரிப்போர்ட்த்தான் எழிலிற்கும் வந்துவிட்டது அதில் நன்கு பயந்துவிட்டார் மூர்த்தி.
மகளின் வாழ்வா ?. உயிரா?.  யோசித்து ஒருமுடிவோடு செழியனை சந்தித்தார்.
செழியனை சந்தித்த மூர்த்தி அவனின் கையை பற்றி கண்ணீர்விட்டு அவரின் உதாசீனத்திற்கு மன்னிப்பு கேட்டு அவர்களை ஒதுக்கிவைத்ததற்க்கான காரணத்தையும் சாந்தியைபற்றியும் அதேபோன்று எழிலிற்கும் இருப்பதாகவும் அந்த ரிப்போர்ட்டையும் காட்டி எழில் உயிரோடு நீண்ட காலம் வாழவேண்டும் என அதற்கு ஒரு சத்தியமும் கேட்டுக்கொண்டார்.
செழியனா?.  எழிலோடு வாழமாட்டேன் என்கின்றான்.
மூர்த்தி அவனிடம் பெற்றுக்கொண்ட சத்தியம் தானே அவனை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்லவிடாமல் தடுத்துவைத்திருக்கின்றது.
இவர்கள் இருவரும் பேசியதையும் ஒருவர் கேட்டுவிட்டார் அவரின் மனதிலும் பயம் கவலை சூழ்ந்து கொண்டது.
யார் அது ??. தொடரும்.

Advertisement