Advertisement

ஓம் நமச்சிவாய.
உன் நினைவே என் சுவாசமானது.
அத்தியாயம் 10.
செழியனின் வீட்டில்.
சாந்தி மருத்துவமனையில் இருந்து வந்த அன்று மாலை வசந்தியும் அங்கு வந்துவிட்டார்.
வசந்தி வந்த நோக்கம் சரியில்லை என புரிந்துகொண்ட செழியன் உடனே மாறனிடம் சொல்லிவிட்டான் அவனும் இன்று காலை அகிலம் அப்பத்தாவை அழைத்துக்கொண்டு தற்போது தான் வந்திருந்தான்.
” என்னம்மா வசந்தி திடீரென்று யாருகிட்டயும் சொல்லாம அம்மா வீட்டுக்கு பொசுக்குனு பொட்டிய தூக்கிட்டு வந்திருக்க நீ என்ன முடிவு இனி நிரந்தரமாக இங்கயே இருக்கப்போறியா?. என்ன உன்னை கட்டி ரெண்டு பிள்ளையை பெத்த சுகத்தை தவிர நீ ஒண்ணும் பண்ணல அந்த வீட்டுக்கும் சரி உன் புருசனுக்கும் சரி தினமும்  வெளிய போற என் மகனும் உன் மகனும் காலையில பட்டினியாத்தான் போறாங்க மேல் வேலைக்கு ஆள் இருந்தும் சமைக்க மட்டும் உன்னால முடியலன்னா என்ன பண்ணுறது அவனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணுற காலமும் கடந்துடுச்சி நீ அங்க இருக்குறதும் சரி இங்க இருக்குறதும் ஒண்ணுதான் பெரியவீட்டு மருமகளாவே  இல்ல நீ.”
” நம்ம குடும்பத்துப்பெண்கள் தான் அவங்க கையால சமைத்து அன்போடயும் ஆசையோடயும் புருசன் பிள்ளைகளுக்கு அவங்களுக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து சமைத்து பரிமாறி அவங்க வயிற்றையும் மனசையும் நிறைத்து பார்த்துப்போம் அதோட ஏனைய வீட்டு வேலைகள் எல்லாமே நாங்கதான் பண்ணுவோம் ஆனா உனக்கு உடம்பு வளையாது மேல் வேலைக்கு ஆள் இருக்கு சமைக்க மட்டும் செய்ற வேலையை நீ பண்ணுறதேயில்ல நீ இல்லாத நாள் அன்புதான் வந்து சமைத்துவைத்துட்டு போனா உன் பிள்ளைகளுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்னு உனக்கு தெரியுமா?. அதுவும் இல்ல.”
” உனக்கு அந்த வீட்ல என்ன தான் பிரச்சினை உன் புருசன் உன்னை அடிச்சு கொடுமை பண்ணுறானா?. இல்ல நான் தான் மாமியா கொடுமை பண்ணுறேனா?. சீர்வரிசை கேட்டோமா?.  நீ பகட்டுக்கு அதிக விலையில எடுக்கிற சேலைக்கு இதுவரை நாங்க யாராவது எதுனா சொன்னோமா?. நீ தான் மூர்த்தி வேணாம் நெடுமாறன் வேணும்னு கட்டிக்கிட்ட அப்போ ஆசைபட்டு கட்டின நீ எப்புடி உன் குடும்பத்தை பார்த்துக்கனும் செஞ்சியா நீ இல்லயே?. “
” இங்க பாரு வசந்தி நீயே மாமியாராப்போயிட்ட நான் இன்னும் உனக்கு அறிவுரை சொல்லிட்டு இருக்கமுடியாது சரியா?. அம்மா வீட்டுக்கு ஒரு பொண்ணு நல்லது கெட்டதுக்கு பண்டிகைக்கு வரனும் சீராடனும் புகுந்த வீட்டுக்கு வந்துடனும்.”
” நம்ம அன்பை எடுத்துக்கோ நேத்து பூங்கொடி சடங்காகிட்டா அதுக்கு போய் மூத்த மகளா அவளும் மரு(மக)னா மணியும் எடுத்துக்கட்டி எல்லா வேலையும் முடிச்சிட்டு ராசாத்திக்கு முழு ஆதரவா இருந்துட்டு அன்பு அவளுக்குனு குடும்பம் இருக்குனு வீட்டுக்கு வந்துட்டாள் மருமகள்னா அப்புடி இருக்கனும் இதுக்குமேல சொல்லுறதுக்கு எனக்கு எதுவுமில்ல வசந்தி இதோ உன் தம்பி அம்மா அக்கானு உன் பிறந்த வீட்டு குடும்பத்துக்கு முன்னுக்குதான் நான் எல்லாமே பேசுறேன் இனி நீ தான் அங்க வரப்போறியா இல்ல நிரந்தரமாக இங்கயே இருக்கப்போறியானு முடிவெடுக்கனும் வர எண்ணம் இருந்தா இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள வீட்டுக்கு வரனும் இனி தேவையில்லாம இங்க வந்து தொல்லை குடுக்கக்கூடாது என்ன புரிஞ்சிதா?. என்று அகிலம் இவ்வளவு பேசியும் தலையை மட்டும் ஆட்டினாள் வசந்தி.
வந்தவர்களக்கு எழில் பழச்சாறு கொடுத்தாள் அதை வாங்கி குடித்துவிட்டு பூமணியும் அகிலமும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது முத்தரசியும்  சாந்தியை பார்க்க வந்துவிட்டார்.
இனி என்ன சம்மந்திகள் மூவரும் பேச்சில் ஈடுபட்டுவிட்டனர்.
“அம்மா இந்தா இந்த பழச்சாறை குடிம்மா கொஞ்சமும் மிச்சம் வைக்காம குடுச்சிட்டு என்ன சமைக்கனும்னு சொல்லு சமைச்சிடலாம்.” என்றாள் எழில்.
மாமனும் மருமகனும் மல்லிகை பந்தலின் கீழ் இருந்து அதிலிருந்து வந்த மல்லிகை வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தபடி பேசிக்கொண்டிருந்தனர் அப்போதுதான் எழில் என்ன சமைக்கலாம் என கேட்டது காத்துவாக்கில் அவர்களது காதில் விழுந்தது.
” ஏன்ம்மா அன்பு தங்கையே நீ சமைத்து சாப்புட்டு அதனால வாற பின்விளைவுக்கு இந்த பாடி தாங்காது தாயே ஆளை விடு கொடி நல்லா சமைத்து வச்சிருப்பா சின்ன வயசுல அப்பத்தா கையால சாப்புட்ட ருசி அதுக்கு பிறகு அவளோட கையால தான் சாப்பிடுறேன் இந்த பரிசோதனைக்கு நான் எலி இல்லம்மா  இந்தா நிக்கிறாரே வைரம் பாஞ்ச கட்டை ஆசை அன்பு மாமா அவருக்கு தலை எழுத்து சமைக்கவே தெரியாத தத்தி அவரோட சூப்பிய கட்டியிருக்காரு வேணும்னா ஆசையா உன் புருசனுக்கு சமைத்து கொடு தாயே கொடி அளவுக்கு நீ சமைக்க பழகினா உன் சமையலை நம்பி சாப்புடுறேன் இப்போ இந்த அண்ணா சாப்புடலனு கவலை படாத  அண்ணா விரும்பி சாப்புடுறதுக்கு என்ன எப்புடி சமைக்களாம்னு உன் மதனி கொடிக்கிட்ட சமையல் கத்துக்கிட்டு தீவிரமா தீயா வேலை பண்ணு நீயும் அடுத்த சமையல் சக்கரவர்த்தி ஆகலாம் தங்கையே புரிஞ்சிதா?.” என்று மாறன் கேட்க பாசமாக அண்ணனையும் கணவனையும் பார்த்தாள் எழில்
” ஏன்யா காட்டான் அண்ணே எப்புடி என்னை கலாய்க்குது நீயும் புருசன்னு எதையும் தட்டி கேக்காம சும்மா நிக்கிறியே மாமா இதெல்லாம் நல்லா இல்ல ஆமா உன் வாய் பேச்சிக்கா   நானும் நல்லா சமைத்துகாட்டுறேன் அண்ணே அப்புறம் சொல்லு இந்த எழிலோட சமையலை  எப்பவும் இந்த எழில் சாந்தமா இருக்க மாட்டா மாமா நீயும் சூதானமா நடந்துக்கோ அம்புட்டுதான் மாமா.” என்று அண்ணனிடம் ஆரம்பித்து மாமானை ஒரு வழியாக்கி விட்டுத்தான் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
” மாமா வா கொஞ்சம் வெளிய போகனும்.”
” என்ன?. மாறா எதுனா பிரச்சினையா?.”
” வா மாமா சொல்லுறேன்.” என்று அழைத்துக்கொண்டு  அவர்களின் வீட்டில் செய்திருக்கும் சிறிய தோட்டத்திற்கு சென்றான் மாறன்.
” இந்தா மாமா இந்த கடிதத்தை படிச்சிப்பாரு. படிச்சிட்டு என்ன பண்ணலாம்னு நீயே ஒரு வழி சொல்லு மாமா எப்புடி யோசித்தாலும் என்னக்கு பிடி பட மாட்டேங்குது.” என்று மாமனிடம் கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கு ஓரமாக இருந்த கல் பெஞ்சில் இருந்தான்.
” அத்த செழியனுக்கும் வயது ஏறுது நான் இப்போ குணமாகிட்டேன் இன்னும் ஏன் எழில் என்னோட படுக்கனும் சாந்திமுகூர்த்தம் ஏற்பாடு பண்ணலாமே அப்போதான் அவங்களும் பேசி பழகி வாழ்க்கையை ஆரம்பிக்க பார்ப்பாங்க என்ன செய்யலாம்னு நீங்க மூணு பேரும் பேசி நாள் பார்த்து முடிவு பண்ணுங்க இப்ப என்னை ஓய்வெடுக்க சொன்னா எழில் இங்க இருக்குறத பார்த்தா குதிக்கப்போறா நீங்க இதை பாருங்க நான் உள்ள போறேன்.” என்று மகளின் வாழ்வை பற்றி கவலையுடன் சென்றார் சாந்தி.
” ஏன்மா எழில் இன்னைக்கு ஆட்கள் கூட இருக்குறோம் அன்பை கூப்பிட்டுக்கோ உதவிக்கு ” என்று எழிலிடம் சொல்லிவிட்டு மீண்டும் அவர்களின் பேச்சில் கலந்துகொண்டார் அகிலம்.
அகிலம் முத்தரசி பூமணி மூவரும் எழுந்து அன்பு வீட்டிற்கு சென்றனர்.
” மணி நாங்க அன்பு வீட்டுக்கு  போறோம் நீ கொஞ்சம் வந்து அன்பை வண்டில ஏத்திட்டு வா ராசா பாவம் எழில் ஒத்தையில் கஷ்டப்படுறாளே.” என்று கூறிவிட்டு மூவரும் பேசியபடியே சென்றனர்.
” மாமா நீ போ கறி வாங்குற வேலையை பார்த்துட்டு வா சாயந்தரம் இந்த கடிதத்தை என்ன பண்ணலாம்னு ஆற அமர பேசலாம் நான் வீடுவரை போய்ட்டு வாறேன்.” என்ற படி சென்றான் மாறன்.
அவனது புல்லட்டில் வேகமாக சென்ற மாறன் ” ஏய் சுண்டெலி எங்க இருக்க வா இங்க ” என்றான்.
அவளும் சமையல் செய்து கொண்டிருந்தாள்.
” என்னவாம் இப்ப இங்க சுண்டெலி விக்கிறதில்ல எனக்கு அடுப்புல வேலை இருக்கு சின்னையா என்னன்னு சொல்லுங்க.”
” ஏய் என்னடி லந்தா பேச்சி ஒரு தினுசா இருக்கு சின்னையாவாம்ல போட்டேன்னா ரெண்டு போ போய் சேலையை மாத்திக்கிட்டு கெளம்பு மாமா வீட்டுக்கு போகனும்  அழகிகள் மூவரும் ஏதோ மாநாடு போட வாறாங்க இங்க அவங்க பொண்ணுங்களை பார்த்துப்பாங்க நீ சீக்கிரம் கெளம்பு.” என சொல்லிவிட்டு அவனது பட்டுக்குட்டிகளை கொஞ்ச சென்றான் மாறன்.
“ப்ப ப்ப பா ” என்று அவர்களது மொழியில் மாறனை அழைத்தனர் இருவரும் அதில் குதுகலமானவன் அவர்களின் அருகில் நெருங்கி சென்று விளையாட்டு காட்டி அள்ளி கொஞ்சினான்.
பாதையில் பார்த்தவர்களோடு நின்று பேசியபடியே ஒருவாறு  மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
” ஏன் மா அன்பு கெளம்பிட்டியா?. உன் பொண்ணுங்களை நாங்க பார்த்துக்கிறோம் நீ போ ம்மா போய் எழிலுக்கு சொல்லிக்கொடுத்தபடி சமையல் பண்ணு எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்.” என்றார் அகிலம்.
அன்பு வந்ததும் அவளை புல்லட்டில் ஏற்றிக்கொண்டு சென்றான்.
சென்றவன் பாதி வழியில் ஒரு மரத்தின் கீழ் நிப்பாட்டி இறங்கினான்.” ஏன் கொடி முகம் வாடிக்கெடக்கு நேத்து அடிச்சது தப்புதான் நீ தப்பு பண்ணமாட்டனு தெரிஞ்சும் நான் அடிச்சிட்டேன் இனி இப்புடி நடக்காது எதையும் மனசுல வச்சிக்காத உன்னை பிடிக்காதுனு இல்ல நிர்மலா என்னை நம்ப வச்சி ஏமாத்திட்டா நீயும் பெரிய பொய்யை சொல்லி தான் என் வாழ்க்கை உள்ள வந்துட்ட அது தப்புதானே இனி காலத்துக்கும் நான் உன்னை தொட்டு ஏமாத்திட்டேன்னு தானே இந்த ஊர் பேசும் ஆனால் அப்புடி இல்லன்னு நம்ம ரெண்டு பேருக்கும் தான் தெரியும் நீ என்ன காரணம் சொன்னாலும் என்னால பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாது நான் அதை மறந்தால் தான் உன்னோட நிம்மதியா வாழ முடியும் அதுவரை எனக்கு அது உறுத்திக்கிட்டே இருக்கும் இரவே பேசலாம்னு தான் இருந்தேன் அத்த வீட்ட இருந்து வர தாமதமாகிட்டே  இனி நீ தான் நான் மண்ணுக்குள்ள போற வரைக்கும் என் பொண்டாட்டி அப்போ சேர்ந்து வாழத்தானே வேணும் நமக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க அவங்களை நல்லபடியா பார்த்துப்போம் காலம் தான் இதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லனும் நீ கலகலப்பா பேசுறது எனக்கு பிடிக்கும் இனி இப்புடி மூஞ்ச தூக்கி வச்சிகிட்டு சின்னையான்னு சொல்லுற வேலை பார்த்த கொன்னுடுவேன் வா வந்து ஏறு முகத்தை சிரித்த மாதிரி வச்சிக்கோ கொடி.” என்றான் மாறன்.
” ஐயஹோ!. ஒரு நேரம் பேசாம இருந்ததுக்கே கொடி எல்லாம் சொல்லுறாரு இப்புடி தன்மையா பேசுறாரு அப்போ கூடிய சீக்கிரம் முழுமையாக ஏற்றுக்கொள்ளுவாரு நம்மை நன்றி மீனாட்சி தாயே சீக்கிரம் எங்க வாழ்க்கை செழிக்கனும்.” என்று மனதில் நினைத்து தாய்க்கு நன்றி கூறி கணவனுடன் சென்றாள் அன்பு.
அன்பு அங்கு சென்று சாந்தியை பார்த்துவிட்டு எழிலோடு சமையலறைக்குள் சென்றாள்.
“மதினி நீங்கதான் எனக்கு சமைக்க சொல்லித்தரனும் கூடவே எல்லா வேலையும் பண்ணுறேன் அதோட நீங்க எப்புடி பண்ணுறதுனு சொல்லி தந்துகிட்டே பண்ணுங்க சரியா?.” என்றாள் எழில்.
” சரிங்க சித்திமா.”
” என்ன நீங்க என்னைபோய் சித்தினு சொல்லுறிங்க எழில்னு பேரச்சொல்லுங்க.”
” அப்போ நீங்க என்னைவிட மூத்தவங்க என்னை போய் மதினினு சொல்லுறிங்க அன்புன்னே சொல்லுங்க.” என்றாள்.
அதன் பின் சமையல் வேலை துரிதமாக நடந்தது அன்பும் என்ன எப்படி செய்யவேண்டும் என சொல்லிக்கொண்டே அடுப்பிலும் வேலை பார்த்தபடி இருந்தாள் அவ்வப்போது மாமனும் மருமகனும் வந்து எட்டிப்பார்த்தபடி இருந்தனர். 
ஒரு வழியாக சமையல் முடித்து அறையை சுத்தம் செய்து விட்டு ஆண்கள் இருவருக்கும் சாந்தி வசந்தி க்கும் சூப் கொடுத்தனுப்பினாள் எழிலிடம். அப்போது அங்கு வந்த கவி ” ஹாய் அத்த எனக்கும் சூப் தா கொலப்பசியில வந்திருக்கேன் மதினி உங்க கைப்பக்கும் சொல்ல வார்த்தையே இல்ல அகராதியிலயே அந்த ஞானத்துல கொஞ்சம் எடுத்து எங்க அத்தைக்கும் கொடுங்க மாமா நல்ல சாப்பாடு சாப்புடட்டும்.” என்று எழிலை வாரினான் கவி.
டொய்ங் னு சத்தம் கேட்டது கவி தலையை தடவியபடி இருந்தான்         ” ஏன்டா தடியா நான் உனக்கு அத்தையா?. ஓழுங்கா தங்கச்சினு முதல் சொன்னமாதிரி சொல்லு இல்லன்னா நல்லா வாங்குவ பார்த்துக்கோ என் கையால.” 
” இதென்னடா கொடுமை மாமாவை கட்டினா அத்தைனுதானே சொல்லனும் அப்போ நான் சொன்னது சரிதானே மாமா.”
” டேய் மருமகனே அப்போ உனக்கு சோறு வேணாம்  அப்புடித்தானே.”
” ஐயோ என்ன மாமா சொல்லுற அதுதானே முக்கியம் நமக்கு இந்த ஆராச்சி தேவையா இல்லவே இல்ல என்ன எழில்.” என்று அந்தர் பெல்ட்டி அடித்தான் கவிமாறன்.
ஒருவழியாக நல்லசிவமும் அங்கு வர மூர்த்தியை தவிர்த்து அனைவரும் ஒன்றாக அன்பும் எழிலும் பரிமாற ருசியான உணவை உண்டனர் மதியம்.
அதன் பின் முத்தரசி மூர்த்திக்கும் அகிலம் நெடுமாறனிற்கும் உணவை எடுத்துக்கொண்டு சாயந்தரம் பார்க்கலாம் என பிரிந்து அவர்களது வீட்டிற்கு சென்றனர்.
முத்தரசி வீட்டிற்கு சென்று சற்று நேரத்தில் தான் மூர்த்தி வந்தார்.
” ஏன்யா ராசா வா வந்து சாப்புடு உன் மக அப்பாக்கு குடுத்தனுப்பினா எடுத்துவைக்கவா?.”
” ம் அரசி குட்டி என்னம்மா பண்ணுறா நல்லா இருக்காளா?.” 
“ம் ஆமாம் பா அவதான் சாந்தியை பார்த்துக்கிறா சாந்தியும் இப்ப கொஞ்சம் நல்லா ஆகிட்டு அதனால நம்ம பொண்ணுக்கு சீர் குடுக்கலாம் ராசா இன்னைக்கு நாள் நல்லா இருக்கு சாந்திமுகூர்த்தம் வைக்கலாம்னு முடிவெடுத்துருக்கோம் சாயந்தரம் நான் அங்க போகனும் அப்போ நீயும் வந்தன்னா எழிலை பார்த்து ஆசிர்வாசம் பண்ணின மாதிரி இருக்கும் சீரை பற்றி பேசின மாதிரியும் இருக்கும் இன்னும் கிடைக்காத வசந்தியை பற்றி யோசிக்காம சாந்தியை பார்த்துக்க யோசிப்பா புள்ள ஒரு சுத்து இளைச்சிட்டா யோசிக்கவே கூடாதுனு சொல்லிருக்காங்க ஆனா கவலையாதான் இருக்கு சாந்தி அந்த பொக்கிசம் உன் வாழ்கைக்கு வேணும் ராசா புரிஞ்சிக்க.” என்று மகனுக்கு சொல்லிவிட்டு அவர் சாப்பிட்டதும் அவரும் சற்று நேரம் படுக்க சென்று விட்டார் முத்தரசி.
சாப்பிட்டு முடிந்ததும் டாக்டரை கைபேசியில் அழைத்த மூர்த்தி ” சார் நான் கேட்டது என்னாச்சி எது நடக்கவே கூடாதுனு நினைத்தேனோ என் கையை மீறி அது நடக்கப்போகுது உங்க பதில்லதான் எல்லாம் இருக்கு சார் அவங்க மூணு பேரும் ஒரே ரெத்தம் எனக்கு பயமா இருக்கு சார் என் பொண்ணு வாழ்க்கையே இதுலதான் இருக்கு கொஞ்சம் சீக்கிரம் என்ன பதில்னு பார்த்து சொல்லுங்க சார் என்  மச்சான் என் பொண்ணை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பான் இருந்தாலும் பயமா இருக்கு ஒரு தகப்பனா எனக்கு நான் எவ்வளவு முயற்சி செய்தேன் சாந்தி அவ குடும்பத்தோட பேசக்கூடாது தொடர்பு வச்சிக்ககூடாதுனு ஆனா எல்லாமே என்னை மீறி நடந்துடுச்சி சாந்தி அன்னைக்கு நெஞ்சை பிடிச்சிக்கிட்டு விழுந்ததும் எனக்கு உசுரே போயிடுச்சி அந்த நேரத்துல தாலி கட்டச்சொல்லவும் எனக்கு ஒண்ணும் பண்ண முடியல சார்.”
” நீங்க சொல்லுறது புரியுது சுந்தரம் இன்னும் ரெண்டு நாள் ஆகும் ரிசல்ட் வர அதுவரை நாம கடவுளை வணங்குறதை விட வேற ஒண்ணும் பண்ணமுடியாது சில மெடிக்கல் மிறாக்கில் நடந்திருக்கு உங்க பொண்ணுக்கும் அப்புடி இருந்ததுன்னா கடவுள் முடிச்சு போட்டிருக்க மாட்டாரு அவங்க ரெண்டு பேருக்கும் அப்போ அதுவே நமக்கு ஐம்பது வீதம் பாஸிட்டிவ் தானே ஒண்ணும் பயப்படாதிங்க நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.” என்று பேசிவிட்டு வைத்துவிட்டார் டாக்டர்.
அதன் பின் மாலை முத்தரசியுடன் சென்ற மூர்த்தி ” நம்ம பொண்ணுக்கு சீர் செய்யனும் வா நம்ம வீட்டுக்கு போவோம் சாந்தி.” என்றாறே.
மாலை நேரம்.
” என்னடா மாறா கடிதத்துல இப்புடி இருக்குது நீ குடுக்கப்போறியா.? 
பொண்ணுங்களை “
” என்ன மாமா எல்லாம் தெரிஞ்ச நீயே இப்புடி கேக்குற நான் எப்புடி என் செல்லங்களை விட்டு இருப்பேன். அவங்களுக்கே அவ்வளவு இருந்தா இந்த மணிமாறனுக்கு அதுக்கும் மேல இருக்குனு அவங்களுக்கு என்னோட வழியில காட்டுறேன்.”
” மாறா இது அவசரப்பட்டு பண்ணுற காரியமில்லை பொறுமையா இரு அவங்க அடுத்ததா என்ன பண்ணுறாங்கன்னு பார்களாம் நாமலா ஆரம்பத்துல எதுவும் பண்ணப்போய் அது தப்பா போயிடக்கூடாது புரிஞ்சதா?.”
” விடு மாமா பார்த்துக்கலாம் நான் தப்பானவன் இல்ல எந்த தப்பும் பண்ணல பொய் களவு எதுவும் பண்ணல என் பக்கம் நியாயம் இருக்கு எது நிலைத்து நிக்குது பொறுத்திருந்து பார்க்களாம் மாமா.”
” அவங்களா?. நானா?.”
 நடந்தது என்ன?.
 நினைவு தொடரும்.

Advertisement