Advertisement

ஓம் நமச்சிவாய.

உன் நினைவே என் சுவாசமானது. 

அத்தியாயம் 09.

மாறனின் வீட்டில்.

மாறனும் செழியனும் ஒரே மாதிரி வேறு நிறத்தில் மேற்சட்டை (சேட்) எடுத்து இருவரும் மாறி பரிசளித்துக்கொண்டனர்.

அந்த சட்டையை உடுத்திக்கொண்டு விவசாய கந்தோரில் இன்று நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு செல்வதற்காக அந்த சட்டையை தேடினான் ஆனால் அது கையில் இன்னும் கிடைக்கவில்லை.

இரண்டு அறையிலும் தேடிவிட்டான் அந்த நேரம் பார்த்து அன்பும் வீட்டில் இல்லை பிள்ளைகளின் உடை வைக்கும் பீரோவை தவிற மற்றதை கிண்டி பார்த்துவிட்டான்.

கிடைக்காத கோபத்தில் வேட்டிகட்டி உள்பெனியன் அணிந்து வாசலை பார்த்தபடியே இருந்தான் மாறன்.

அவன் இருந்து வெகுநேரம் கழித்தே அன்பு வெளியே சென்றவள் வீடு திரும்பினாள்.

அவளும் வீட்டு வாசல்படி மிதிக்கவும் பிள்ளைகளும் கத்த ஆரம்பித்தனர்.

நீண்ட நேரமாக அன்பை அருகில் காணாமல் தான் அவளை தேடி கத்துகிறார்கள்.

அது புரியாத மாறனோ பசியில் கத்துவதாக நினைத்து இருக்கையில் இருந்து எழுந்து வீட்டிற்கு வெளியவே அன்பை நிற்கச்சொன்னான்.

“ஏய் அங்கயே நில்லு உள்ள வந்த காலை வெட்டிடுவேன்டி சுண்டெலி. என்ன காரியம் பண்ணி வச்சிருக்க அது மட்டுமில்லாம ஊர் சுத்த போய்ட்டு வாறிங்களோ உள்ள வராதடி அப்புறம் முட்டி போட வச்சிருவேன் பார்த்துக்கோ.” என்றான் மணிமாறன்.

” மாமா இனி இப்புடி பண்ண மாட்டேன் இந்த முறை விட்டுடுங்களேன்.”

” இல்லவே இல்ல அதுக்கு வாய்ப்பே இல்ல சுண்டெலி.”

” இல்ல மாமா பொண்ணுங்க கத்துறாங்க என்னை காணாம தேடுவாங்க அதிகமா கத்தினா தொண்டை வறண்டுபோய்டும் சொன்னா கேளுங்க மாமா.”

” ஏய் முடியவே முடியாதுடி நீ வெயில்ல வெளியவே நில்லு இவ பெரிய கரினாகப்பூர் இவளை காணாம ஏங்கிப்போய்டுவாங்களாம்ல நீ இல்லாத இந்த ரெண்டு வருசமும் நான்தான் என் பொண்ணுங்களை பார்த்துக்கிட்டேன் இனியும் அதே மாதிரி பார்த்துக்கமுடியும் நீ வெளியவே நில்லு.” என்று அன்பை திட்டியபடியே பால் கலந்து எடுத்துச்சென்றான் மாறன்.

இரண்டு வயதே ஆன கலையும் தமிழும் தாய்ப்பால் இல்லாததால் சற்றே போசாக்கு குறைந்த பிள்ளைகள் போன்று தாமதமாகதான் நடைபயின்றனர்.

மெதுவாக வெளியே எட்டிப்பார்க்கும் அரிசி பல்லை காட்டி மயக்கும் புன்னகை சிந்தி வசிகரித்தனர் இருவரும்.

அன்பு போகும் போதுதான் சுடுநீரில் குளிக்கவைத்து பருப்புசாதம் மசித்து இருவருக்கும் உணவு கொடுத்து ராசாத்தியம்மாளிடம் விட்டுவிட்டு அகிலம் வரச்சொன்னதால் அந்த வீட்டிற்கு சென்றாள்.

பள்ளிக்கு போன பூங்கொடி இடையில் வீட்டிற்கு வந்திருக்கின்றாள் என ஒரு பெண் கூறவும் வீட்டிலும் ஒருவரும் இல்லாமல் இருந்ததனால் என்னவோ ஏதோ என பயத்துடனே தோட்டக்கார சுப்பையாவிடம் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுமாறும் தான் என்னவென்று பார்த்துவிட்டு சீக்கிரம் வருவதாகவும் கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றார் ராசாத்தியம்மா.

அன்பும் மாறனும் வீட்டில் இல்லை ராசாத்தியம்மாளிடம் விட்டுவிட்டு தான் அன்பு அகிலம் வீட்டிற்கு சென்றாள் ராசாத்தியும் அவசரவேலையாக சென்றுவிட்டார்.

விவசாயகந்தோர் கூட்டத்திற்கு செல்வதற்கு வீட்டிற்கு வந்த மாறன் பார்த்தது பிள்ளைகள் இருவரும் அழுது அழுது விரைத்துப்போய் இருந்ததைதான்.

அவர்களை சுப்பையாவினாலும் சமாதானப்படுத்தமுடியவில்லை.

மாறன் இருவரையும் தூக்கி முகம் கழுவி சமாதானப்படுத்தி படுக்கவைத்துவிட்டுதான் அவனது சட்டையை தேடினான் அவனது அவசர நேரத்திற்கு அதுவும் கிடைக்காமல் சண்டித்தனம் பண்ணியது இந்த கோபத்தைதான் அன்பிடம் காட்டிவிட்டு மீண்டும் அழும் பிள்ளைகளுக்கு பால் கழந்து எடுத்துச்சென்றான்.

அவளர்களும் அதனை குடிக்காமல் கலை தட்டியும் விட்டாள் பாலை அவனது பொறுமை கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிட்டது.

கூட்டத்திற்கும் நேரம் ஆகிவிட்டது வேறு சட்டையை போட்டுவிட்டு போகலாம் என்று திரும்பி அடுத்த அறைக்குள் வந்தான் அங்கே அன்பின் உடைக்கு இடையில் அவனது அந்த சட்டையின் காலர் தெரிந்தது. அதை பிடித்து இழுத்து எடுத்தவன் பார்த்தது அந்த சட்டையில் இருக்கும் கறிபிடித்த பெரிய ஓட்டையை இது அன்பின் வேலை என புரிந்தவன் அவளின் மேல் கோபம் இன்னும் அதிகமானது.

மாறன் அந்த கோபத்துடன் அறையை வீட்டு வெளியே வந்தான் அப்போது அன்பும் மாறனின் பேச்சை மிறி உள்ளே வந்து அவன் மீது  மோதி நின்றாள் அன்பு.

” யோவ் மாமா நானும் எவ்வளவு சொல்லுறேன் பொண்ணுங்க என்னைதான் தேடுறாங்க அதனாலதான் அழுகுறாங்கனு அத காதுலயும் கேக்காம பால் கலந்து எடுத்துட்டு போய் குடுத்திங்க உங்க பொண்ணுங்க குடிச்சாங்களா?. இல்லல்ல அது தெரியாம என்னை உள்ள வரக்கூடாதுன்னா என்ன அர்த்தம் ஓரமா நில்லுங்க நான் போய் பட்டுக்குட்டிகளை சமாதான படுத்திட்டு வாறேன்.”

” ஏய் நில்லு நில்லுன்றன்ல நில்லுடி” என்று கையை பிடித்து இழுத்து நிருத்தினான் அன்போ கால் தடுமாறி அவன் மீதே சாய்ந்துவிட்டாள்.”

அவளை தாங்கி பிடித்து நிறுத்தியவன் ” என்னடி இது  என்ன பண்ணிவச்சிருக்க நீ இந்த சட்டை எனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியுமா??. உனக்கு அது எப்புடி நேத்து வந்தவளுக்கு தெரியும். இது போன வருசம் என் பிறந்த நாளைக்கு அன்பு மாமா எடுத்துக்கொடுத்தது எவ்வளவு பத்திரமா வச்சிருக்கேனு தெரியுமா? அதைப்போய் எரிச்சு வச்சிருக்க இன்னைக்கு இதைதான் நானும் மாமாவும் ஒண்ணா ஒரே மாதிரி போட்டுகிட்டு கூட்டத்துக்கு போகலாம்னு பேசிக்கிட்டோம் அதைப்போய் இப்புடி பண்ணிவச்சிருக்கியேடி உன்னை என்ன பண்ணலாம். உன்னை நம்பி தானே என் பொண்ணுங்களை விட்டுட்டு போனேன் அவங்களை பார்த்துக்கிறத விட உனக்கு என்ன வேலை அவங்களையும் தனிய தோட்டக்கார சுப்பையாட்ட விட்டுட்டு போற அளவுக்கு அம்மணிக்கு என்ன வேலைனு தெரிஞ்சுக்கலாமா?.” என்று அவளின்மேல் உள்ள கோவத்தில் திட்டினான் மாறன்.

அன்போ அவன் திட்டியதை நின்று கேட்டபடி மெதுவாக நடந்து அறைக்குள் சென்றுவிட்டாள்                ” செல்லப்பொண்ணுங்களா அம்மாவை தேடினிங்களா இதோ வந்துட்டேன் இனி கத்தக்கூடாது சமத்தா இருக்கனும் பட்டுக்குட்டி” என்று பொண்ணுகளுடன் பேசி கொஞ்சியபடியே அவர்களை துடைத்து வேறு உடை உடுத்தி விளையாட்டு பொருட்களை கொடுத்து விளையாட விட்டாள்.

அவர்களும் இவ்வளவு நேரம் அழுததிற்கு மாறாக அன்பை கண்ட சந்தோசத்தில் குதுகழித்து சிரித்தபடியே இரட்டைகள் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

மாறனோ அவன் பேசுவதை அன்பு கேட்கின்றாள் என நினைத்தான் 

ஆனால் அவளது குரலோ பிள்ளைகளிடம் கேட்கவும்  வேகமாக சென்றவன் அன்பை இழுத்துக்கொண்டு வெளிய வந்து அவளை அறைந்துவிட்டான்.

அப்போதுதான் வீட்டின் உள்ளே வந்த செழியனும் அதை பார்த்துவிட்டான் கோவமே படாத செழியனே மாறனை திருப்பி அவனையும் அறைந்துவிட்டான்.

அந்த சத்ததில் திரும்பிய அன்பு “ஐயோ சித்து என்ன காரியம் பண்ணிட்டிங்க நான் தான் தப்பு பண்ணிட்டேன் அதுதான் அவுக கண்டிச்சாக அதுக்கு நீங்க திரும்பவும் அடிச்சுப்புட்டிங்களே” என்று நடந்ததை சொன்னாள் அன்பு.

” ஏய் என் மாமா என்னை அடிக்கும் கொல்லும் உனக்கு என்னடி எங்களுக்குள்ள நீ உள்ள வராத நாங்க ஒண்ணாவும் சுத்துவோம் என் மாமா நான் தப்பு செய்தா கண்டிக்கவும் செய்யும் அதுக்காக எல்லாம் நான் அதோட கோவிக்கமாட்டேன் நீ ஓரமாக போ.” என்றான் மாறன்.

” மாறா என்னடா இது எனக்கு முன்னாலயே நீ அன்பை அதட்டுற இது சரியில்ல புருசனை பற்றியோ அவனோட வேலை பழக்கம் நண்பர்கள் என எல்லாமே பொண்டாட்டிக்கு தெரிஞ்சிக்கனும் கேக்குற முழு உரிமையும் இருக்குது இதை புரிந்து கொண்டு நடந்துக்கோ இனிமேல்.

 கையை கட்டி வாயை பொத்தி              ” சரிங்க மாமா” என்றான் மாறன்.

அதை பார்த்து அன்பு சிரித்துவிட்டாள்.

” தப்பே பண்ணிருந்தாலும் பொண்ணை கை நீட்டி அடிக்ககூடாதுனு அவனுக்கு எத்தனை முறை சொல்லுறது மா அன்பு  தாரம் தாய்க்கு சமம் தப்பு பண்ணினா அவங்க அம்மாவையும் இப்புடிதான் கை நீட்டி அடிப்பானா?.  இது இரண்டாவது முறை மாறா அன்னைக்கு பஞ்சாயத்துலயும் பொசுக்குனு கை நீட்டிட்ட அப்பவே நானும் உன்னை அடிச்சேன் உன் கோபத்தை குறைனு நானும் சொல்லுறேன் நீ கேக்க மாட்டேங்கிற மாறா  நம்மை மீறின கோபம் நமக்கு நம்மை சார்ந்தவங்களுக்கும் நல்லது இல்லனு சொல்லுறேன் நீ அதை கேக்கவே மாட்டேங்கிற மாறா இனி இப்புடி கை நீட்டினா என்னோட பேசவே கூடாது அம்புட்டுத்தான் சொல்லிட்டேன்” மாறனிற்கு அடித்த கன்னத்தை தடவி விட்டான் செழியன்.

” இல்ல மாமா எல்லாம் இவளாலதான் நீ வாங்கி தந்த சட்டையை எரிச்சுட்டா அதுதான் கோபம் வந்துடுச்சி மாமா.” என்று முப்பது வயதிலும் சிறு பிள்ளை போன்று காரணம் சொன்னான் மாறன்.

” இங்க பாரு மாறா அன்பு அப்புடி செய்யுற பொண்ணு இல்ல கசங்கி இருந்தத தேய்க்க எடுத்து தேய்ச்சிருக்கு அது கை தவறி கறி கொட்டுபட்டுடுச்சாம் இதுக்கு அன்பு என்ன செய்யும் நான் தான் உயிரோட இருக்கனே அது இல்லன்னா இன்னொரு சட்டை வாங்கித்தாறேன் நீ வா கூட்டத்திற்கு நேரமாகிடுச்சி.” என்றான் செழியன்.

அன்பு இருவருக்கும் குடிப்பதற்கு மோர் கொண்டுவந்து கொடுத்தாள் அதை செழியன் வாங்கி குடித்தான் மாறன் வாங்கவில்லை ” இங்க பாருங்க மாமா நான் தப்பு பண்ணினேன் நீங்க அதுக்கு அடிச்சுபுட்டிங்க அதுக்கும் இதுக்கும் சரியாகிவிட்டது சும்மா சாப்பாட்டுல உங்க கோபத்தை காட்டாதிங்க இந்தாங்க வாங்கி குடிங்க.” என்று அவனது கையில் வைத்துவிட்டு சென்றாள் அன்பு.

“இங்க பாரு மாப்புள உங்க அம்மாவை சீக்கிரம் முடிஞ்சா இன்னைக்கே அகிலம் அத்த வீட்டுக்கு அனுப்பிறனும் வசந்தி அக்கா இருக்குறதால அம்மாவாலயோ சூப்பியாலயோ நிம்மதியாக சாந்தி அக்காவை கவனிக்க முடியல அது போரபோக்கை பார்த்தா ஓய்வு எடுக்கவந்த சாந்தி அக்காவே உங்க அம்மாக்கு வேலை செய்யனும் போல காய்ச்சல் நல்லாவே விட்டு குணமாகிடுச்சி சாந்தி அக்கா அங்க இருக்கவும் வேணும்னே உங்க அம்மா வந்து இருந்து அடாவடி பண்ணுது இதை நீதான் நாசுக்கா பார்க்கனும்  மாப்பிள்ளை.”

” அட என்ன மாமா நீ எங்க அம்மால்லாம் ஒரு ஆளா? என்ன சொல்லிட்டல்ல அப்பத்தாவை கூப்பிட்டு வந்து எங்க அம்மாவை அங்க இருந்து தூக்கிடுறோம்.  கவலையை விடு மாமா நீ.” என்று மாமனுக்கு ஆறுதல் சொன்னான் மாறன்.

இருவரும் பேசியபடியே மாறனின் புல்லட்டில் விவசாய கந்தோரிற்கு சென்றனர் அவர்களும் வர கூட்டமும் ஆரம்பித்தது.

அதில் மாறனும் செழியனும் கேட்டிருந்த சிவப்பு விதை நெல் இரண்டு நாளில் வருவதாகவும் அதை யாரும் இவ்வூரில் இதுவரை விதைத்தது இல்லை இது சவாலான ஒன்று என்றும் அதை மாறனும் செழியனும் சேர்ந்து வெற்றிகரமாக இடைப்போகம் விதைத்து செய்து காட்டுவதாக கூறியிருக்கின்றார் அவர்களது வேலை வெற்றி பெற வாழ்த்துவதாகவும் கூறி கூட்டத்தை முடித்தனர். 

இருவரும் நெல் விதைப்பு பற்றி பேசியபடியே மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு ராசாத்தியம்மா இருந்தார்.

” வாங்க அத்த என்ன மொகமெல்லாம் வாடிக்கெடக்குது.” என்றான் மாறன்.

” அது ஒண்ணுமில்ல சின்னையா பூங்கொடி பெரியமனுசியாகிட்டா அதை பார்க்கத்தான் நான் புள்ளையை ஓத்தையில வாசல்ல நிக்க கூடாதேனு ஓடினேன் அன்பு மேல தப்பில்லங்கையா.”

” எத்தனை முறை சொல்லுறது சின்னையானு கூப்பிடாதிங்கனு இனி இப்புடி கூப்பிட்டா நான் என்னன்னு கேக்க மாட்டேன் அத்த புரிஞ்சதா?.”

” பழக்கதோசம் மாப்பிள்ளை  இனி மாத்திகிறேன்” என்று தலையாட்டினார் ராசாத்தி 

“அதுக்கென்ன பூங்கொடி விசேசத்தை பெருசா கொண்டாடிடுவோம்.” என்றான் மாறன்.

” நான் அன்பை கொஞ்சம் வீடுவரைக்கும் கூப்பிட்டு போகவா? மாப்பிள்ளை.” 

” இதை கேக்கனுமா அத்த அக்காவா அவ முன்னின்று  செய்யனும்தானே நீங்க போங்க நான் கூட்டியாறேன் அதுதானே முறை.” என்றான் மாறன்.

மாறனின் பேச்சை கேட்டு சந்தோசத்தோடு சென்றார் ராசாத்தி.

” மாமா நீ கொஞ்சம் அம்மாச்சியை கூப்பிட்டு வா பொண்ணுங்களுக்கு துணையா இருக்கட்டும் நான் இவளை அங்க விட்டுட்டு அப்பத்தாவை ஏத்திக்கிட்டு வீட்டு வாறேன் அம்மாவை ஒரு வழி பண்ண.

” சரி மாப்பிள்ளை” என்று கெளம்பினான் செழியன்.

அதன் பின் அன்பு ரெடியாகினாள் அவளை அழைத்துச்செல்ல அறைக்குள் வந்த மாறன் அவளது இயற்கை அழகில் லயத்து நின்றுவிட்டான் மல்லிகை வாசம் ஆளை தூக்கியது.

” மாறா கட்டுப்பாடு ரொம்ப முக்கியம் இவ பொய் சொல்லி உன் வாழ்க்கைக்குள் வந்திருக்கா மனச அவ பக்கம் திருப்பிறாத நீ அவ மேல கோபமாக இருக்குற அதை நினைவில் வைத்துக்கொள்.” என்று அவனுக்கு அவனே பேசியபடி உள்ளே வாந்தான்.

” ஏய் இந்தாடி பெரியவீட்டு மருமக இப்புடியா ஒரு விசேசத்திற்கு போறது இந்தா இதுல நகை இருக்கு போட்டுக்கோ.” என்றான் மாறன்.

அவளும் மறுக்காமல் போட்டுக்கொண்டாள்.

அதன் பின் பூமணி வந்ததும் இருவரும் ராசாத்தியம்மாவின் வீட்டிற்கு சென்றனர்.

முதல் முதலாக கணவனுடன் புல்லட்டில் செல்வதால் பயத்துடன் கண்ணை இருக்கி மூடியபடி மாறனின் சட்டையை இருக்கி பிடித்தபடியே வந்தாள் அன்பு.

நல்ல நேரம் பார்த்து மஞ்சள் தண்ணீர் ஊற்றி குடிசை கட்டி பூங்கொடியை உள்ளே அழைத்து சென்றதும்  வந்தவர்களுக்கு பலகாரம் காப்பி குடுப்பது என வேலை இழுத்துக்கொண்டது அன்பை மாறனும் அவ்வீட்டு ஆண்பிள்ளையாக வேலைகளை செய்தான்.

அவன் வேலை செய்வதை பார்த்து ரசித்தபடி நின்றாள் அன்பு அதை பார்த்த மாறன் அவளின் அருகில் வந்து “ஏய் என்ன பார்வைடி இது கண் களண்டு கீழ விழப்போகுதுடி பார்த்து பத்திரம்.” என்றபடியே வேறு வேலையை பார்க்கச்சென்றான்.

ஒருவழியாக இரவை நெருங்கவும் வந்தவர்களும் சென்றுவிட்டனர்.

” ராசாத்தி அன்பு சடங்காகினது தான் எங்களுக்கு தெரியாம போயிடுச்சு பூங்கொடி க்கு நல்ல நாள் பாரு சிறப்பா செஞ்சிடலாம் யாரும் இல்லனு கவலையை விடு அதுதான் சிங்கம் கணக்குல உனக்கு ஒரு மாப்பிள்ளை இருக்கானில்ல நாங்க இத்தனை பேர் இருக்குறோம் விட்டுடுவமா என்ன நீ நல்லா சத்தானதா குடுத்து முட்டையும் குடுத்து புள்ளையை நல்லா தேற்றிவிடு சரியா நாங்க போயிட்டு வாறோம்” என்று கெளம்பினார் அகிலம்.

” அம்மா இருமா நாளைக்கு வாறேன் கண்ணா அக்கா போயிட்டுவாறேன்.” என்று பத்துவயது தம்பியை தலையை தடவிச்சென்றாள் அன்பு.

 “மாமா அத்த வீட்ட இருந்து வர தாமதமாகிடுச்சு இன்னைக்கு மட்டும் உன் அக்காவோட தொல்லையை சமாளி நாளைக்கு காலையில் வந்து கூப்பிட்டு வாறோம் பாவம் இவளும் ஒத்தையில எம்புட்டு வேலை பார்ப்பா அப்பத்தாவை பார்க்க போனவ அங்கையும் சமைத்து வச்சிட்டு வந்திருக்கா இங்க அவங்க அம்மா வீட்ல இன்னைக்கு கடும் வேலை வீட்லயும் வேலை அதிகம் ஆஞ்சி ஓஞ்சி தெரியுறா இந்த அம்மா நல்லா தன்னோட வீட்டை பார்க்காம நல்லா வெட்டியா பொழுதை கழிக்குது அதுக்கு ஒரு முடிவை கட்டுறேன் சரி நேரம் போயிடுச்சி நீ வீட்டுக்கு போ மாமா.” என்று செழியனை அனுப்பி வைத்துவிட்டு அவனது வீட்டிற்கு வந்தான் மாறன்.

வந்தவன் அன்பின் அறையை எட்டி பார்த்தான் பிள்ளைகளை அணைத்தபடி அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

விலகி இருந்த போர்வையை வடிவாக போர்த்திவிட்டு அவனது இடத்தில் படுத்துவிட்டான் மாறன்.

அடுத்த நாள்.

காலை எழுந்ததும் அவனது வேலைகளை முடித்துவிட்டு வயலிற்கும் சென்று வந்து காலை உணவை உண்டுவிட்டு செழியனின் வீட்டிற்கு செல்வதற்கு வெளியே வந்தான்.

அப்பொழுது கடிதம் ஒன்று வந்தது அதை வாங்கி பிரித்து படித்துப்பார்த்தவன் வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு அன்பு இல்லை என்றதும் சட்டை பையில் வைத்துவிட்டு  உள்ளே சென்று பிள்ளைகளின் அருகில்  வந்து கண் மூடி படுத்துவிட்டான்.

அவன் உள்ளே வந்தது அன்பிற்கு தெரியாது.

அன்பிற்கு தெரியாமல் என்ன கடிதமோ.

நினைவு தொடரும்.

 

Advertisement