Advertisement

  1. ஓம் நமச்சிவாய.

  2. உன் நினைவே என் சுவாசமானது.

  3. அத்தியாயம். 17

  4. அன்புக்கொடி  மிகுந்த சந்தோசத்தோடும் உற்சாகத்தோடும் பெரியவீட்டில் வளையவந்தாள். 

  5. நீண்ட வருடத்திற்கு பிறகு அகிலத்தின் பொறுப்பில் இருந்தது போன்று அவ்வீடு லட்சுமிகடாட்சத்தோடு காட்சியளித்தது. அதை பார்த்து வீட்டு பெரியவர்கள் மற்றும் கவி நெடுமாறன் என அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி. அத்தோடு மாறனிற்கு மாமன் செழியன். அப்பா ஆனதை கொண்டாடி தீர்த்துவிட்டான்.

  6. தனக்கு தாய் மாமா அவனை விட்டு இவன் திருமணம் முடித்ததும் அவனது குழந்தை இல்லையென்றாலும் ஊரின் பார்வைக்கு இரண்டு குழாந்தைக்கு தகப்பன் மாறன் இப்படி குடும்பமாக இருக்க செழியன் இரண்டு வயதிற்கு பெரியவன் மாமன் வேறு அவனிற்கு ஒரு திருமண வாழ்க்கை செழியக்கவில்லை அமையவில்லை என்கின்ற குற்ற உணர்வு மனதை குத்திக்கொண்டிருந்தது. அது தற்போது செழியன் திருமணவாழ்வில் அடுத்த பதவியையும் அடைந்துவிட்டான் என்பதை அறிந்து மாமனை அழைத்துக்கொண்டு கோவில் சென்று அவன் வைத்த நேர்த்திக்கடனை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அன்று மூன்றுவேலை உணவையும் ஊர்மக்களை பொதுவாக அழைத்து தடல்புடலாக விருந்தும் கொடுத்தான்.

  7. ஊர் மக்களும் வயிறார உண்டுவிட்டு மனதார இருவரையும் இதே ஒற்றுமையோடு வாழவேண்டும் என வாழ்த்திவிட்டு சென்றனர்.

  8. பெண்கள் இருவரும் அகிலத்தின் பொறுப்பில் இருப்பதால் அன்பு பொறுமையாக அழகாக அனைத்தையும் செய்து வீட்டு பெரியவர்கள் ஊரார் என அனைவரிடமும் நற்பெயர் பெற்று பூரிப்போடு இருக்கின்றாள்..

  9. ” அன்பு இங்க வாம்மா.” என்றார் அகிலம்..

  10. ” இதோ வாறேன் மா..” என்றுவிட்டு பிள்ளைகளுக்கு ஆற்றிய பாலை எடுத்துக்கொண்டு கண்ணனோடு விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு கொடுத்தாள்..

  11. அவள் செய்வதை பார்த்த அகிலம்      ” பேரனுக்கும் பால் கழந்து குடு அன்பு ” என்றார்.

  12. ” இல்ல பாட்டி நான் வரும் போதுதான் சாப்பிட்டு வந்தேன் அக்கா கேட்டுச்சி வேணாம்னு சொல்லிட்டேன்..” என்றான் கண்ணன்.

  13. ” இது கொஞ்சமும் சரியில்லை மா அன்பு இதுதான் உன் வீடு எங்களுக்கு இந்த வீட்ல என்ன உரிமை இருக்கோ அது உனக்கும் சம்மந்தி வீட்டுக்கும் சரிசமமாக இருக்கு பூங்கொடியோ சம்மந்தியோ வந்தாலும் கூட தண்ணி மட்டும் குடிச்சிட்டு போறாங்க நானும் கேட்டா இதேதான் சொல்லுறாங்க எனக்கு தெரிஞ்சளவில நம்ம வீட்டுல ஒரு சொல் தப்பா சொல்லுறதுக்கு வசந்திய தவிர யாரும் இல்ல ஆனா இப்ப வசந்தியும் உயிரோடு இல்ல அதனால  நீங்க இங்க சாப்பிட்டா குடிச்சா நாங்க எதுனா தப்பா நினைப்போம்னு நீங்களாவே நினைச்சா அது முட்டாள் தனம் அன்பு.”

  14. ” இது அவங்களுக்கும் சொந்த வீடுதான் நானும் கேட்டேன் சம்மந்தியம்மாகிட்ட இங்கயே இருந்துடுங்கன்னு அதுக்கு பொண்ணு குடுத்த வீட்டுல கை நனைத்தாலே தப்பு இதுல எப்புடி இங்க வந்து இருக்கிறதுனு கேக்கிறாங்க.  அதனால நான் எதுவும் பேசாம விட்டுடேன் நீ தான் அவங்க சங்கோஜத்தை போக்கி தினமும் இங்க வரவைக்கனும் சரியா போ போய் பாதாம் கலந்து கண்ணனுக்கு பால் எடுத்துட்டு சீக்கிரமாக வா பேசணும்…” என்றார்.

  15. மருத்துவமனையில் டாக்டர் எழில் கொஞ்சம் வீக்காக  இருப்பதாக சொன்னவுடன். வீட்டிற்கு  வந்ததிலிருந்து செழியன் எழிலை ஒருவழியாக்கி விட்டான். ஆரம்பத்தில் திட்டினான் ” ஏன்டி நீ மனுசனை ஒருவழியாக்கிடுவியாடி பிள்ளை கண்டிப்பா பெத்துக்கனுமா??.  எதுனா பிரச்சினை வந்துடுச்சினா நான் என்ன பண்ணுவேன். “என்று மீண்டும் கோபமாக சுத்தினான் செழியன் இது அவர்களது செல்ல ஊடல் என நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் சாந்தி.. 

  16. ஆனால் இது நாளுக்கு நாள் அதிகரிக்க மகளின் முகவாட்டம் பொறுக்கமுடியாமல் செழியனிடம் பேசினார்..

  17. செழியனை தனியாக அழைத்து           ” நானும் புருசன் பொண்டாட்டி செல்லமா சண்டை போட்டுக்குவிங்கனு நினைத்து கேக்காம விட்டுடேன் ஆனா நீயோ இன்னும் எழிலோட ராசியாகல போலயே புள்ள முகம் வாடிக்கெடக்கு அன்பு.  இதை வளரவிடாத மசக்கையான நேரத்துல புருசனைதான் அதிகம் தேடும்.  அதுதான் இன்னும் பத்து நாளையில அறுவடைதானே உங்க புதிய விவசாய முறை வெற்றியளிச்சிடுச்சி நீ அப்பா ஆகிட்ட காத்திருந்ததுக்கு கை மேல நல்ல பலன் கிடைச்சிருக்கு உங்க மாமா மாதிரி கண்டதையும் மனசுல வச்சிக்காம எழிலோட அன்பா ஆசையா பேசு அக்கறையா கவனிச்சிக்கோ இளமை கால வாழ்க்கை நீ வா னு கேட்டாலும் இனி கிடைக்காத ஒன்று அதனால தொழிலையும் பார்த்துக்கோ. பிள்ளை உண்டான ராசி நல்ல செல்வாக்கா வளர்ந்து வரணும் நீ பிறந்த ஊரிலயே அதனால கோபத்தை தூக்கி தூரப்போட்டுட்டு ரெண்டு பேரும்  சந்தோசமாக இருங்க. அதை பார்த்துதான் நானும் அம்மாவும் சந்தோசமாக இருப்போம்..” என்றார் சாந்தி.

  18. ” நானும் சந்தோசமாக இருக்ககூடாதுனு இல்லக்கா பயம்தான் கோபமாக வருது நீங்க சூப்பி வாயால சொன்னதைதான் கேட்டிங்க நான் அவளோட கழுத்தில கத்தியை பார்த்ததுமே பாதி உயிர் போயிடுச்சிக்கா அதுக்கு மேல வைத்தியர் வேற சத்துகுறைபாடுனு நல்ல சத்தான சாப்பாடு குடுத்து கவனமாக பார்த்துக்கோங்கன்னு சொல்லுறாரு அதுதான் இது எல்லாம் அவளோட பிடிவாதத்தால வந்ததுதானேன்னு நினைத்தாலே கோவம் கோவமா வருது சரி இனி   சூப்பிய  நல்லபடியா கவனிச்சு பார்த்துக்கிறேன் அக்கா நீங்க அதை நினைத்து கவலைப் படாதீங்க. ” என்று அக்காவை சமாதானப்படுத்தி விட்டு சென்றான் செழியன்.

  19.  சரி என்று தம்பி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து சாந்தியும் தன் தம்பி சொன்னால் செய்வான் என்பதை தெரிந்து வைத்திருந்தார்.

  20.  அவரின் நினைப்பை பொய்யாக்காமல்   கவனிக்கிறேன் பேர்வழினு எழிலை  ஒரு வழி படுத்திவிட்டான்.

  21.  எழிலோ போதும் போதும் என்ற அளவுக்கு உடனடியாக கிடைக்கின்ற பழங்கள் காய்கறிகள் மீன் முட்டை உடனடி பழத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பழச்சாறு பழவகையான உணவுகளை டாக்டர் சத்துக்குறைபாடு  என்று சொன்ன ஒரே காரணத்துக்காக  விதம் விதமாக கொடுத்து  எழிலை திக்குமுக்காட வைத்துவிட்டான்.

  22.  அன்று இரவு அறுவடை நெருங்குவதனால்  மிகுந்த தாமதமாக வீட்டிற்கு வந்தான்.  செழியனை எழில் சந்திப்பதில்லை மசக்கை சோர்வினால் அவள் நேரத்துடன்  உறங்கி விடுவாள் ஆனால் இன்று சந்தித்து விட்டு தான் உறங்க வேண்டும் என்று அவனுக்காக காத்துதிருந்தாள்..

  23.  மாறன் செழியனை நேரத்துடன்  வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தான் ஆனால் செழியனோ  அவன் தற்போதுதான் மதுரை வரை சென்று வந்துள்ளான்.  என்பதனால் மீண்டும் தனியாக அவனை வேலை செய்ய விட்டுவிட்டு வீட்டிற்கு வர மனமில்லாமல் இருவரும் ஒன்றாகவே வந்து செழியனை மாறன் இறக்கி விட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்றான் மாறன்.

  24.  வழமைபோன்று தற்போது சாந்தி வீட்டில் இருப்பதால் செழியன் வரும் நேரத்திற்கு காத்திருந்து உணவு கொடுத்து விட்டு அவரும் உறங்குவார் இன்று எழில் உறங்காமல்  இருப்பது தெரியாமல்  சாந்தியும் காத்திருந்தார் செழியன் வந்ததும் அவன் குளித்து விட்டு உணவு அருந்துவதற்கு வரவும் சாந்தி பரிமாறினார் அதை சாப்பிட்டுவிட்டு அவரையும் படுக்க அனுப்பிவிட்டு தினமும் இரவில் அவனது வழமைபோன்று உண்ட உணவு செரிப்பதற்கும் வீடு தோட்டம் என்று ஒரு முறை அனைத்தையும் சுற்றி வருவதும் வழக்கம் அதேபோன்று இன்றும் சுற்றிவிட்டு அனைத்தையும் சரி பார்த்து விட்டு  முன் வாசல் கதவை சாத்தி விட்டு லைட்டை அனைத்து விட்டு அனைத்தையும் முடித்துவிட்டு அறைக்குள் வந்து லைட்டை போட்டான். அவனுக்காக காத்திருந்த எழில் எழுந்து வந்து அவனை  இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

  25.  அவன் வரும் இந்நேரத்திற்கு ஆழ்ந்த உறக்கத்தில் வயிற்றின் மேல் பாதுகாப்பாக கை வைத்து படுத்து இருக்கும் மனைவியை தான் பார்ப்பான். ஆனால் இன்றோ அவனுக்காக காத்திருந்து அவனை மிகவும் தேடி அவன் வந்ததும் மெதுவாக எட்டுக்கள் வைத்து வந்து அவனை அணைத்த மனைவியை சற்றும் அவன்  எதிர்பார்க்கவில்லை அவள் அணைத்ததும் திக்குமுக்காடிப் போய் விட்டான்.

  26. ” ஹேய் சூப்பிமா என்னடி இப்படி பண்ணுற பாரு வயிறு அமர்த்துபடுது. ” என்று கூறி   பாதுகாப்பாக கைவைத்து அவளை பின்புறமாக  திருப்பி தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

  27. தற்போது தான் மூன்று மாதமாகப்போகின்றது ஆனாலும் அனைத்திலும் இருவரும் மிக கவனமாக இருந்தனர் அதிர்ந்து நடக்கவோ பேசவோ மாட்டாள் எழில்..

  28. ” மாமா இனிமேல் கொஞ்சம் நேரத்துதோடு  வீட்டுக்கு வாங்க மாமா எனக்கு உங்களை ரொம்ப தேடுது அம்மாவோட பாசத்தை தவற விட்டுட்டேன்னு ரொம்ப கவலைப்பட்டேன் இப்போது திகட்டதிகட்ட அம்மாவோட கவனிப்பையும்  அக்கறையோடான பாசத்தையும்  நாள் முழுக்க அனுபவிக்கிறேன்.  இப்ப இந்த நேரத்துல உங்கள ரொம்ப தேடுது மாமா நீங்க கொஞ்சம் நேரத்தோடு வீட்டுக்கு வாங்க மாமா.. ” என்று அவள் ஏக்கமாக  கூறவும் அதை தாளமுடியாத அவன் மெதுவாக  அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அவன் வாகாக சாய்ந்து கொண்டு  அவளையும் தோளில் சாய்த்துக் கொண்டு தலையை தடவி நெற்றி முத்தம் வைத்து சற்று நேரம்  பிள்ளையை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

  29.  மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து சென்றவனை மீண்டும்  பார்க்க வேண்டுமென்று இரவிற்குள் தேடி ஏக்கங்களை  மனதில் சுமந்து இருந்தாள். அதற்கு வடிகாலாக மிகவும் தாமதமாக வந்தாலும்  அவனை எதுவும் கேள்வி கேட்காமல் அவனை பார்த்ததே போதும் என்று அவனுடன்  சற்று நேரம் பேசிவிட்டு  பேசுவதையும் தலை வருடலையும் அவன் தந்த ஈரமுத்தத்தையும்  சுகமாக அனுபவித்துக் கொண்டே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் எழில்.

  30.  அவனும் அவளை ரசித்துப் பார்த்துவிட்டு வசதியாக தலையணைகளை வைத்து  படுக்க வைத்து விட்டு அவளது அருகில் படுத்து உறங்கிவிட்டான்..

  31.  அகிலத்தின் கட்டாயத்தினால் பாதாம் கலந்து கண்ணன் குடிப்பதற்கு ஏற்றவாறு இளஞ்சூட்டில் பால்  எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள் அன்பு.

  32.  கொடுத்துவிட்டு கண்ணனிடம் தனது பிள்ளைகளை கவனமாக பார்க்க சொல்லிவிட்டு இருவரும் அவர்களது பெரிய வீட்டில் செய்திருக்கும் தோட்டத்திற்கு நடந்து சென்றனர்.

  33. ” என்ன அன்பு இன்னும் ராசா உன்னை ஏற்றுக்கொள்ளவில்லையா??..” என்றார் அகிலா.

  34. ” சீ போங்க பாட்டிமா.. “

  35. ” ஏய்  என்னடி உன்னிடம்  தான்  கேட்கிறேன் இப்படி சிலுர்த்துக்கிறவ.”

  36. ” அது வந்து பாட்டி இப்போ எங்களுக்கு ரெண்டு பாப்பாங்க இருக்காங்க தானே கலையும் தமிழும் அதனால எங்களுக்கு ஏற்பாடு பண்ணி கொடுத்த  மொதராத்திரி அன்னைக்கு  அவருக்கு என்னை புடிக்குமாம் ஆனால் மனைவியாக  வாழ்கையை இப்போதைக்கு ஆரம்பிக்க நாள் வேணுமாம் இந்த அறுவடை முடியட்டும்னு சொன்னார் பாட்டி..” என்றாள் அன்பு.

  37. ” அடிப்போடி கூறுகெட்டவளே ஆம்பளைங்க அப்புடிதான் சிலுர்த்துக்குவானுங்க நாமதான் பொம்பளைங்க முந்தானையில முடிஞ்சிக்கனும் எல்லாத்துக்கும் உங்களுக்கு நாங்களே திட்டம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்ன??.. இனி இதுக்கு வேற தனியா சங்கம் கூடனுமா நாங்க.  எம்புட்டு வேலை வைக்கிறிங்க இந்த தல்லாத வயசுல உங்களை சேர்த்துவைக்க யோசிக்கிறதே பெரியபாடு போங்க..” என்று ஆதங்கத்தோடு பேசி அனுப்பினார் அகிலம்..

  38. அவர் சொன்னது போன்றே பெண்களை கண்ணனின் பொறுப்பில் விட்டுவிட்டு சாயந்தரம் அவர்களின்  சங்கத்தை கூட்டிவிட்டார்.

  39. மதுரை வரை சென்றுவிட்டு இரவு எழுமணியளவில் தான் வீட்டிற்கு வந்தான் மாறன்.. 

  40. ” ஏன்டி கொடி எங்க யாரையும் காணோம் வீட்ல?..” என்று வந்தவனுக்கு காப்பி போட்டவளின் இடையை இறுக்கி அணைத்து கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான் மாறன்..

  41. ” ஏன் மாமா யாராவது வந்திரப்போறாங்க விடுங்க கேள்வி கேட்டிங்க பதில் சொல்லுறதில்லையா?? நான்..” என்று முனங்கினாள் கொடி..

  42. ” ஆமா அவங்க என்ன லண்டனுக்கா போயிட்டாங்க எங்களுக்கும் தெரியும் எங்க போயிருப்பாங்கன்னு இதெல்லாம் நல்லா இல்லடி சொல்லிட்டேன் பிரியாணிதான் இப்ப வேணாம்னு சொன்னேன் அதுக்காக புளியோதரை வேணாம்னு சொல்லலயே உண்மையிலயே உங்க அம்மா சரியாதான் பேரு வச்சிருக்காங்க கொடினு என் கை பட்டாலே வலிக்கும் போலடி அப்புடி மென்மையாக இருக்கு அதிகமாக வேலை பண்ணாத இடுப்பு உடைஞ்சிடும் கொடி இடையழகி.. ”  என்று அவளை கொஞ்சிக்கொண்டே இடையின் மென்மையை சோதித்தான் மணிமாறன்..

  43. அப்போது “மதினி” என்று அழைத்தபடியே கவி வந்தான்..

  44. அந்த சத்ததில் சட்டென்று மாறன் அவளை விட்டு தள்ளிப்போய் சமையலறையின் பின்வழியாக வயலிற்கு மீண்டும் சென்றுவிட்டான்.

  45. அவன் சிரித்தமுகத்தோடு வருவதை பார்த்த செழியன்  மருமகனின் வாழ்க்கை  செழிக்க நீண்ட நாட்கள் இல்லை என்பதை புரிந்துகொண்டு அமைதியாகிவிட்டான்..

  46. ஒரு மாதத்திற்கு  பின்.

  47. ஒரு வழியாக அவர்களின் இயற்கை உரத்தின் மூலம் செய்யப்பட்ட சவாலான நெல் விதைப்பு  அவர்களின் அயராத உழைப்பினை பார்த்து  அந்த பூமித்தாய் பூரித்து அபரிவிதமான பலனையும் வெற்றியையும் அள்ளி வழங்கியுள்ளார்..

  48. புதிரெடுத்த பொங்கல் கலவெட்டிப்பொங்கல் என அவர்களும் மென்மேலும் பூமித்தாயை மகிழ்வித்தனர்..

  49. மணிமாறன் அன்புக்கொடி தம்பதியினர். புரியோதரை வரை போதுமென்று தற்போதைய வாழ்வை வாழ்கின்றனர்..

  50. அன்புச்செழியன் எழிலரசி தம்பதியினர். வாழ்வை அனுபவித்து வாழ்கின்றனர்..

  51. இன்று எழிலை பரிசோதனைக்கு அழைத்துச்சென்றான் செழியன்.

  52. அவர்களின் முறை வந்ததும் டாக்டரிடம் சென்றனர். எழிலை ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு அந்த மகப்பேற்று பெண் மருத்துவர் லட்சுமி வயது 55 இருக்கும் அவர் கூறியதை கேட்ட செழியனும் எழிலும் வெவ்வேறு விதமான முகவடித்தை காட்டினர்..

  53. எழில் ஆச்சரியம் சந்தோசம் என்றாள் செழியன் அதிர்ச்சி பயம் இயலாமை போன்ற அவர்களின் மனநிலைக்கு ஏற்றமாதிரியாக ரியாக்சனை காட்டினர்.. 

  54. ” எனக்கு ரொம்ப பயமா இருக்கு அம்மா இது எப்படி சாத்தியம் ஆகும் நான் இது மாதிரி இதுவரை கேள்விபட்டதே இல்லயே.. 

  55. இதனால எதுனா பிரச்சினை வருமா??.. என் மனைவிக்கு.” என்றான் பதட்டத்தோடு..

  56. ” கொஞ்சம் அரிதான விசயம் தான் ஆனா நடந்திருக்கு நம்ம தமிழ் நாட்டுல எனக்கு தெரிஞ்சு இவங்க இரண்டாவாது பெண். எங்க அம்மா டாக்டராக இருக்கும் போது ஒரு பெண்ணுக்கு இப்படி ஆகியிருக்கு ஆனா ஒண்ணு அதுல ஒரு குழந்தைதான் காப்பாத்தினதாக சொன்னாங்க.. இப்ப எவ்வளவோ நவீன மருத்துவ வளர்ச்சியடைந்த காலம் அதனால பயப்படவேண்டாம் என் முப்பது வருட மகப்பேறு அனுபவத்தையும் பயன்படுத்தி உங்க மனைவி பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன் நீங்க பண்ணவேண்டியது ஒண்ணுதான் இவங்களை ரொம்ப கவனமாக ஆரோக்கியமான உணவுகளை குடுத்து சின்ன வேலைகளை செய்யவைத்து உடற்பயிற்சி நடைபயிற்சி இப்புடி பண்ணவைத்து அதிக தண்ணீர் குடிக்கவைத்து ஓய்வெடுக்கவைத்து முக்கியமாக உங்க மனைவி மனதளவிலயும் ஆரோக்கியமாக இருக்கனும் மிஸ்டர் செழியன் நான் சொன்னது எல்லாம் தொடர்ந்து பண்ணுங்க நல்லா ஆன்மிக புக் படிக்கவைக்க அவங்களுக்கு பிடித்ததை செய்யவைங்க கூடவே இருந்து பார்த்துக்கோங்க தடை சொல்லி மன சோர்வை ஏற்படுத்தாதிங்க இவ்வளவுமே தாராளமாக தொடர்ந்து பண்ணினா போதும்.. இந்த சத்து மாத்திரையை தவறாம கொடுங்க அடுத்த மாதம் செக்கப்புக்கு வாங்க குழந்தை அசைவை பார்க்கலாம் உங்க வீட்டு பெரியவங்க இருந்தா இதை சொல்லுங்க நான் சொன்னதுக்கு மேல அவங்க பார்த்துப்பாங்க இப்ப போய்ட்டுவாங்க..” என்றார் டாக்டர் லட்சுமி..

  57. மூர்த்தியின் காரில் தான் வந்தனர் அதிலே மீண்டும்  கவனமாக வீட்டுக்கு அழைத்துச்சென்றான் செழியன்..

  58. வீட்டுக்கு அவர்கள் சென்ற நேரம் அகிலம் பூமணி ராசாத்தி முத்தரசி என அனைவரும் செழியனின் வீட்டு மல்லிகை பந்தலின் கீழ்  தான் அமர்ந்திருந்தனர். 

  59. இவர்கள் வந்ததும் எழிலின் கையை பிடித்து அழைத்துசென்ற அன்பு அவளை இருக்கையில் அமரவைத்து இருவருக்கும் பழச்சாறு எடுத்துவந்து கொடுத்தாள் அதை குடித்துவிட்டு அவனும் அமர்ந்தான்..

  60. ” வைத்தியர் என்ன சொன்னாங்க செழியா??.. ” என்றார் முத்தரசி..

  61. ஒருவர் பின் ஒருவராக கேட்கவும் டாக்டர் சொன்னதை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான் செழியன்.

  62. அதை கேட்டவர்கள் திகைத்துவிட்டனர்..

  63. நினைவு தொடரும்..

Advertisement