Advertisement

ஓம் நமச்சிவாய..

உன் நினைவே என் சுவாசமானது..

அத்தியாயம் 16. 

முதலிரவு நாளில் இருந்து இரண்டு மாததிற்க்கு பின்.. 

அன்று காலை எழுந்து அவள் செய்யும் வழமையான வீட்டு வேலைகளை செய்து முடித்துவிட்டு காலை உணவிற்கு  இட்லி ஊற்றி இரண்டு வகை சட்னி செய்து ஏனைய வேலைகள் என அனைத்தும் முடிந்ததும் வயலுக்கு சென்ற மாமனை பார்த்திருந்தாள் எழில்..

” எழிலு” 

” சொல்லுங்க அம்மாச்சி இதோ வாறேன்.” என்று அடுப்படியில் சாம்பார் கொதித்ததும் அடுப்பை அனைத்துவிட்டு வந்தாள்.

” என்ன அம்மாச்சி.”

” இப்புடி இருடா தங்கம் உன் மாமனோட சந்தோசமாக வாழுறியா??..  திடீரென்று நடந்த கல்யாணம் அம்மா வீட்டுல வசதியா வளர்ந்த நீ இங்கவந்து எல்லா வேலையும் பண்ணி பாரு முகமே சோர்ந்துபோய் கெடக்குது டா..” என்று முகத்தை கைகளால் தடவி கொஞ்சினார் பூமணி..

” என்ன அம்மாச்சி இப்புடி கேட்டுடிங்க அம்மா வீட்ல இருக்கும் போது அம்மா அப்பாக்கு செல்லப்பிள்ளையா இருந்தேன் ஆரம்பத்துல அம்மாவை மதிக்கல ஆனா அம்மாவை தேடும் போது கல்யாணம் நடந்திடுச்சி இப்போ என் வீட்டுக்கு என் அம்மாச்சி மாமாக்கு எனக்குனு பண்ணுறேன் இவ்வளவு கஷ்டப்பட்டு அம்மா சித்தி மாமா என எல்லாரையும் வளர்த்திங்க சித்தி தான் இப்போ உயிரோட இல்ல நான் வேற வீட்டுக்கா?.  வந்துருக்கேன் என் அம்மா பிறந்தவீட்டுக்குதானே வந்திருக்கேன்.  இதுல எனக்கு என்ன கஷ்டம் அம்மாச்சி பக்கத்துலயே இருந்து ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து பக்குவமாக சொல்லித்தாறிங்க மாமா இன்னொரு அம்மா எனக்கு அம்மாகிட்ட அனுபவிக்கத்தவறின அன்பு பாசம் எல்லாம் இரண்டு மடங்கா கிடைக்குது இதுல நான் எங்க கஷ்டப்படுறேன்.”

” அங்க அம்மா சமைத்துவைத்து தட்டுல பரிமாறி தரும் அதை சாப்பிட்டு காலேஜ் போவேன் வீட்டுல அப்பத்தாவோட வம்பிலுத்து செல்லமா திட்டுவாங்குவேன் அப்பாவோட ஜாலியா  நேரம் செலவிட்டு இரண்டு  பேரும் பேசிக்குவோம்.  ஆனா இதுமாதிரி அம்மாவோட இருந்ததில்ல அது மனசுல குத்திக்கிட்டே இருக்கு என் அம்மாதானே வா ம்மானு கூப்பிட்டா இப்போ வந்து என்கூட இருக்கும் அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல இந்த ஆடு மாடு கோழி தோட்டம் வீட்டுவேலை மாமாக்காக பார்த்து பார்த்து சமைக்கிறது என எல்லாமே என்னை உயிர்ப்போட உற்சாகமாக தான் வைச்சிருக்கு. அங்க இருந்ததைவிட இரண்டு  மடங்கு சந்தோசமாக இருக்கிறேன் அம்மாச்சி.  நானே என்னிடம் இப்புடி ஒரு மாற்றம்  வரும்னு எதிர்பார்க்கல நானும் இப்புடி சமையல் பண்ணி பொறுப்பா குடும்பத்தைபார்க்த்துக்குவேன் அப்புடின்னு எனக்கே இப்போதான் தெரியுது குடும்பத்தை பார்த்துக்கிற மாதிரி வரும் காலத்துல மாமாவோட விவயாசம் பயிற்ச்செய்கை என எல்லாத்துலயும் நான் கூடவே இருக்கணும் அதுதான் இன்னும் எனக்கு சந்தோசம்..”  என மனம்விட்டு அவளது அம்மாச்சியிடம் பேசினாள்..

அவர்கள் இருவரும் பேசியதை கேட்டபடியே வயல் வேலையை முடித்துவிட்டு தண்ணி கட்டிவிட்டு வந்தான்.  வந்தவன் தனது அம்மாவும் சூப்பியும் பேசுவதை சற்றுநேரம் நின்று  அவனின் மனைவி மனம்விட்டு பேசிக்கொண்டிருந்ததை கேட்டான்.

” இவளுக்குள்ள இப்புடி ஒரு அழகான குடும்ப பெண் அவதாரத்தை நாம எதிர்பார்க்கலயே. சூப்பிக்குள்ள நல்ல மாற்றம்தான் இப்புடியே இருந்தா சரிதான்.” என்று நினைத்துக்கொண்டு கை கால் முகம் கழுவி விட்டு வீட்டிற்குள் வந்தான் செழியன்..

அவன் வந்து அமர்ந்ததும் எழில் சமைத்ததை எடுத்துவைத்தாள் அவனோ அவளது முகத்தை  கூட நிமிர்ந்து  பார்க்கவில்லை. அவளுக்கு  மனதில் வலித்தாலும் அதை அவனின் முன் காட்டவில்லை தட்டில் இட்லி வைத்து சட்னி வைத்தாள். அவள் என்ன வைக்கிறாள் என எதுவும் பார்க்காமல் வைத்ததை உண்டான் அவனை தொடர்ந்து பூமணி வந்தார்..

” வாங்க அம்மாச்சி தட்டு வைக்கிறேன்..” என்று அவருக்கும் உணவு பரிமாறினாள்..

” ஏன்மா இத்தனை வகையா பண்ணணுமா??.. ஒரு சட்னியே போதும் இரண்டு சட்னி சாம்பார் ஏன் உன்னை வருத்தீக்கிற??.. இனி இப்புடி பண்ணாத இல்லன்னா நானே பண்ணுறேன் கண்ணு சரியா??..” என்றார் அக்கறையில்.

” ஐயோ! அம்மாச்சி திரும்பவும் சொல்லுறேன் இதெல்லாம் எனக்கு எந்த கஷ்டமும் இல்ல சரியா சாப்புடுங்க இன்னும் இட்லி வைக்கிறேன்..” என்றாள் பாசமாக. அதை பார்த்து கண்கலங்கினார் பூமணி.

” ஏன்மா உன் பேத்தி இன்னும் சூப்பி தரலன்னு விரலை வாயில வச்சி சூப்பிகிட்டு இருந்த சூப்பினு நினைச்சிட்டியாமா??.. அக்கா வீட்ல வேலையே இல்லமா இருந்தா இப்போ இங்க வந்து குனிந்து நிமிர்ந்து ஏதோ வேலை பண்ணுறா அதையும் செல்லம்குடுத்து கெடுத்துடாதம்மா ஒரு மாமியாரா நடந்துக்கோ அம்மாச்சி அவதாரத்தை கொஞ்சம் மாத்திக்கோ மா..” என்றான் அன்பு.

” அம்மாச்சி நீங்களும் நானும் பேசிகிட்டு இருக்குறோம்ல ஊடால என்னவாம் பொறாமை பொங்குது என் மாமனுக்கு..” என்று அவளும் உணவை உண்டுவிட்டு பாத்திரங்களை எடுத்துச்சென்றாள். கழுவி சுத்தப்படுத்திவைத்துவிட்டு வரும்பொழுது தான் தலை சுற்றி கிழேவிழுந்தாள் விழும்போது மேசை அருகில் இருந்ததனால் அதில் தலை மோதி கிழே சரிந்துவிட்டாள்..

அறையில் உடை மாற்ற சென்ற செழியனுக்கு சத்தம் கேட்டு ஓடி வந்தான். வந்தவன் எழில் கீழே விழுந்துகிடந்தாள் தலையில் அடிபட்ட இடத்தில் இரத்தம் வந்தபடியே இருந்தது பூமணி ஓடிச்சென்று காப்பி பொடி எடுத்துவந்து காயத்தில் வைத்துவிட்டார்..

செழியன் வேகமாக கைபேசியில் அகிலத்தை அழைத்து விபரம் சொல்லி கவியை கார் எடுத்துவரச்சொன்னான். 

கவியும் அவசரம் புரிந்து அகிலத்தையும் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்து எழிலை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அகிலம் தான் முத்தரசியிக்கு விபரம் சொல்லி மூர்த்தி சாந்தி என அனைவரும் வந்தனர்..

வந்த மூர்த்தி எழிலின் தலையில் காயத்தை பார்த்ததும் ஆரம்பத்திலேயே அடித்துவிட்டார்.. அதை பார்த்த கவிதான் தடுத்து இருவரையும் பிரித்து அழைத்துவந்தான்.. அதிலிருந்து தான் மூர்த்தி செழியனை கோபத்தோடு பல்லைகடித்து முறைத்தபடியிருந்தார்.

எழிலை டாக்டர் பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான். மூர்த்தி செழியனை அடித்தும் சும்மா இருக்காமல் வாயில் வந்த வார்த்தையால் திட்டிவிட்டு இறுதியில் செருப்பையும் தூக்கிவிட்டார்..

அப்போதுதான் மாறன் வந்து மாமனை காப்பாற்றி மூர்த்தியையும் திட்டிவிட்டு அருகிலிருந்த இருக்கையில் அமரவைத்தான்..

அப்போது மீண்டும்  என்ன பேசுறோம்னு தெரியாமல்.                      ” பொம்புள சோக்குக்கு அலைந்து திரியிறவனுக்கு நீ பரிந்து பேசி  என்னையவே அடிச்சி அசிங்கப்படுத்திட்டல்ல இருங்கடா உங்க ரெண்டு பேரையும் உருத்தெரியாம அழிக்கல நான் சுந்தரமூர்த்தி இல்லடா.” என்று கத்தி கர்ஜித்தார். மூர்த்தி ..

” அட சும்மா நிறுத்துங்க நானும் பார்க்கிறேன் அதிகமாக பேசிட்டிங்க என் தம்பியை பொறுமையாக இருந்தேன் ஆனா அழிக்கிறளவுக்கு அப்புடி என்ன தப்பு பண்ணிட்டான் நீங்க நினைக்கிறிங்க உங்களுக்கு மட்டும்தான் விசயம் தெரியும்ன்னு அதுதான் இல்ல என் உடம்புல என்ன மாற்றம் நடக்குது,என்ன பண்ணுதுன்னு தெரியாம இருக்க நான் என்ன குழந்தையா??..”

” உங்களை வேற கல்யாணம் பண்ணிவைக்கதான் டாக்டர் என்னிடம் அவ்வளவு சொல்லியும் நான் உங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணவிடல ஆனா நீங்க வேற கல்யாணம் பண்ண முடியவே முடியாதுனு சொல்லிட்டிங்க அதுல இருந்துதானே என்னோடயும் சுத்தமாக பேசாமவிட்டிங்க அப்பவும் ஏன் நான் உங்களை வேற கல்யாணம் பண்ணச்சொன்னேன்னு கடைசி வரை நீங்க யோசிக்கவே இல்லயே..”

” அப்புடி யோசிச்சிருந்தா எனக்கு என்ன பிரச்சினைனு தெரிஞ்சிடுச்சின்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும் அதுவும் இல்ல முட்டாள் மாதிரி தாம்பத்தியம் தான் வாழ்க்கைனு நினைத்து  அது இல்லாட்டி புருசனும் பொண்டாட்டியும் பேசிக்ககூடாதுனு இருக்கா என்ன??.. நீங்க தான் அப்புடி வாழ்க்கையை கெடுத்துக்கிட்டிங்கன்னா ஏன் என் தம்பியையும் என் பொண்ணோட சேர்ந்து வாழக்கூடாது குழந்தை உண்டாக கூடாதுனு சொல்லி சத்தியம் வேற வாங்கியிருக்கீங்க ஏன் இப்புடி எதையும் புரிஞ்சிக்காம எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாம் பண்ணுறிங்க??…” என்று இதுநாள் வரை இருந்த மொத்த கோபத்தையும் கொட்டி தீர்த்தார் சாந்தி..

” அக்கா போதும் நிறுத்து பொது இடத்துல ஏன் குடும்ப விசயத்தை பேசுற இதெல்லாம் தப்பு இனி பேசாத..” என்றான் செழியன்.

” டேய் அன்பு நீ நான் தூக்கி வளர்த்த என் புள்ளடா உன்னை போய் வாய்க்குவந்த மாதிரி பேசி அடிச்சு அசிங்க படுத்திருக்காரு உன் மாமா அதுவும் பொது இடத்துலதானே நடந்துச்சி. அப்போ இதுக்குமட்டும் என்ன இங்க சுத்தி நிக்கிற எல்லாரும் என் சொந்தம் அதனால பரவாயில்லை.. நீ சும்மா இரு..” என்று அவனை அடக்கிவிட்டு மீண்டும்  பேசினார். சாந்தி.

” எனக்கும் இப்புடி ஒரு பிரச்சினை இருக்குதுனு தெரிந்ததும்  என் பொண்ணை பற்றி பார்க்காமலோ கவலை படாமலோ இருப்பேனா நான் எழில் சடங்காகின கொஞ்ச நாள்லயே நான் அவளை சோதிச்சு பார்த்துட்டேன் நானும் அத்தையும் அகிலா அத்தையும் பார்த்து இரண்டு மூன்று டாக்டரிடம் பேசிட்டோம் எனக்கு வந்தளவுக்கு பிரச்சினை இல்லன்னவும் தான் நான் அம்மா வளர்த்த பிள்ளை என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். அதுவும் உங்களுக்கு  இப்போதான் அம்மா சொல்லி தெரியும். ஆனா எனக்கு  முன்னமே தெரியும். ஆனா எந்த இடத்துலயும் சின்ன விசயத்துல கூட அம்மா அதை காட்டினதில்லை. அதனால செழியனுக்கு எழிலை கட்டிக்கொடுத்தா ரெத்த சொந்தம் இல்ல.  அதனால ஒண்ணும் இரண்டு பேருக்கும் எதுவும் பிரச்சினை இல்லன்னு தெரிஞ்சிதான்  இந்த கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்காக வராத மாரடைப்பை வந்ததா நடிச்சி கல்யாணம் பண்ணி வச்சிட்டு இங்க வந்து நல்லா ஓய்வெடுத்தேன் இந்த விளக்கம் போதுமா ??.. எந்த ஊர்ல மாரடைப்பு வந்தும் கல்யாணம் பண்ணி வைக்கிற வரை பொறுமையா இருக்கிறாங்க ??.. எதையும் யோசிக்க மாட்டிங்க நீங்க நினைக்கிறதுதான் சரின்னு ஒத்தபிடியில நின்னிங்க அதை உடைத்து என் பொண்ணு நல்லா வாழனும்னு தான் நான் இப்புடியெல்லாம் பண்ண வேண்டியதா போச்சி..”

” இதெல்லாம் விட நீங்க கடைசியாக செழியனிடம் சத்தியம் வாங்கினதும் தெரியும் அதை பற்றி அத்தைங்ககிட்ட கேட்டேன் அவங்கதான் எழிலை அப்புடி பண்ணி செழியனை மடக்கச்சொன்னாங்க அதுபடி செய்ததனால் தான் இதோ என் பொண்ணு அம்மாவாகிட்ட இல்லன்னா அந்த உப்பில்லாத சத்தியத்தை காப்பாத்துறேன் பேர்வழின்னு என் அருமை தம்பி சந்நியாசி ஆகி காவிதான் கட்டிருப்பான்.  எனக்கு  வந்த புருசனும்  தம்பியும்  ரெண்டும்  கூமுட்டைங்க ஒண்ணு நடந்தா அதுக்கு மாற்றுவழி தேடனும் இல்லன்னா தெரிஞ்சவங்கலிடம் யோசனை கேக்கனும் இது எதுவும் பண்ணாம ஒரு பிரச்சினை பற்றி உங்களுக்கு தெரிஞ்சபடியால என்ன பண்ணுநீங்க என்னை வீட்டு ஒதுங்கினிங்க பேச்சோ ஒரு பார்வை பரிமாற்றமோ எதுவும் இல்ல இப்புடியே முப்பத்தியொரு வருச வாழ்க்கை சூனியமாக போனதுதான் மிச்சம்..” 

” எல்லா விசயமும் எனக்குத்தெரியும் சரியா?.  அதனால தியாகம் பண்ணுறேன்னு இனியும் என்னோட பேசாம இருக்ககூடாது இப்ப நம்ம பொண்ணு உண்டாகியிருக்கிறா நான் அம்மா வீட்டுல தான் இருக்கப்போறேன் ஒழுங்க மூணு நேரமும் அங்க வந்திடனும் சாப்பாட்டுக்கு அத்தையும் கூப்பிட்டுக்கிட்டு சரியா?? இப்போ ஒழுங்க என் தம்பி செழியனிடமும் மகன் மாறனிடமும் இங்கயே இப்பவே மன்னிப்பு கேளுங்க..” என்றார் சாந்தி..

அவர் சொன்னதை கேட்டதும் அடித்துவிட்டார் மூர்த்தி சாந்திக்கு.      ” ஏன்டி எருமை உனக்கு உன் உயிர் மேல அக்கறை இல்லயா??. ஒரு கல்யாணம் பண்ணி வைக்க நீ ஹார்ட் அட்டாக் வந்தமாதிரி நடிச்சியா?? அப்போ சர்ஜரி செய்தது எல்லாம் பொய்யா??.  இந்த டாக்டரும் இத்தனை வருசம் உனக்கு எல்லாத்தையும் சொல்லிட்டு இப்ப மாரடைப்புனு உன்னோட நடிப்புக்கு அவரும் உடந்தையா   உன்னை நான் இந்தளவுக்கு நினைக்கவே இல்ல சாந்திமா…” என்றார் கவலை தொனித்த குரலில்..

” நான் அப்புடி பண்ணாம இருந்திருந்தா என் பொண்ணு வாழ்க்கை எங்கயோ எப்பிடியோ கஷ்டப்பட்டிருப்பாள் எனக்கு தம்பி இருக்கும் போது நான் ஏன்?. என் பொண்ணை வெளிய கட்டி குடுக்கனும் குடுத்து என் பொண்ணு எப்புடி இருக்கிறாளோ என்ன பண்ணுறாலோன்னு ஏன் நானும் தவிச்சி என் பொண்ணும் கஷ்டப்படனும்  ஆரோக்கியமாக இருக்கிற நான் என் பொண்ணுக்காக இதை கூட பண்ணமாட்டன்னா என்ன??…” என்று சாந்தி மனவருத்ததோடு கேட்கவும்.

மீண்டும் மூர்த்தி கோபத்தில் திட்டப்போனார். 

அப்போதுதான் கண்முழித்த எழில் எழுந்து வந்தாள். வந்தவள் நேராக முதலில் செழியனைதான் பார்த்தாள். அவனிருந்த கோலத்தை பார்த்துவிட்டு  என்ன நடந்திருக்கும் என யூகித்து தந்தையை முறைத்துப்பார்த்தாள்.       

“நிறுத்துங்க! என்ன நடக்குது இங்க இனி யாரும் ஒருவார்த்தை பேசக்கூடாது. எல்லாம் என்னால தான் நடந்தது.” என்றாள்.

எழில் போட்ட சத்ததில் சாந்திதான் அவளின் அருகில் சென்றார்.. ” வாடா எழில் வந்து இரு நீ அம்மாவாகிட்ட பாரு சோர்ந்துபோய் இருக்கிற எல்லாம் வீட்ட போய் பேசிக்கலாம் தங்கம்..” என்றார்.

மாறன் சென்று அனைவருக்கும் பழச்சாறு வாங்கிவந்து கொடுத்தான் மூர்த்தியை தவிற மற்றவர்கள் வாங்கி குடித்தனர்.

” இல்லம்மா இப்பவே பேசி முடிச்சிடனும் அப்பா மாமாவை எப்புடி அடிச்சிருக்காரு பார்த்தியாமா நான் ஒரு இக்கட்டான நிலைமையில வச்சிதான் மாமாவோட வாழ்ந்தேன் பிள்ளையை பெத்துக்கிறதுக்காகவும் நான் சந்தோசமா காலம் முழுக்க என் மாமா. எங்க  குழந்தையோட வாழனும்னு  நினைத்து அதனால தான் அப்புடி  பண்ணினேன். இல்லன்னா அப்பா வாங்கிய  சத்தியத்தை மனசில வச்சிக்கிட்டு என் மாமா என்னை திரும்பியும் பார்த்திருக்கமாட்டாரு அது அவரோ பெருந்தன்மையான குணம். அதனாலதான் நான் அப்புடி பண்ணினேன் ப்பா அதுக்காக எதையும் தீர விசாரிக்காம நீங்க மாமாவை இப்புடி காயப்படுத்திருக்க கூடாது உங்க பொண்ணா நான் இருந்த வரை நீங்க நல்ல அன்பான அப்பாவா அக்கறையா பார்த்துக்கிட்டிங்க இப்பையும் அதெல்லாம் என் மேல இருக்கு.  அதுக்காக நான் இல்லாத நேரத்துல நீங்க எப்புடி என் புருசன் மேல கை வைக்கலாம்??..  இது ரொம்ப தப்பு ப்பா மாமாவா இருக்கவும் பொறுமையா இருந்துடுச்சி. இதுவே என்னை வேற யாருக்கும் கட்டிக்கொடுத்திருந்திங்கன்னா இப்புடிதான் கை வைத்திருப்பிங்களா??.. இல்ல அவங்கதான் யாரும் உங்களை சும்மா விட்டுடுவாங்களா??.. இனிமே என் மாமாவை நீங்க ஒத்த வார்த்தை சொல்லக்கூடாது அப்புடி மீறி சொன்னிங்க நமக்குள்ள பேச்சிவார்த்தையே இல்லாம போய்டும் புரிஞ்சிக்கங்க ப்பா… ” என்றாள். ஆதங்கத்தோடு.

முதலிரவு அறையில்.

செழியன் யோசையோடு கட்டிலில் இருந்தான். அப்போது உள்ளே வந்தவள் பாலை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு  பழம் வெட்டுவதற்க்கு வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு அவன் பார்க்குமாரு நின்று கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு நின்றாள். எழில்,

அதை பார்த்து பதரிய செழியன் கத்தியை எடுக்குமாறு கெஞ்சவும் அவள் சொல்வதை கேட்பதாக இருந்தாள் எடுப்பதாக சொன்னாள்.

அவனும் சரி என்று சொல்லிவிட்டு என்னவென்று கேட்டான்.

” மாமா நான் சொல்லவாறதை கோபப்படாமல் கேட்கணும் நீங்களும் அப்பாவும் பேசினதை நானும் அம்மாச்சியும் கேட்டுடோம் எனக்கே ரொம்ப மனகஷ்டமா ஆகிடுச்சி மாமா.  அம்மாச்சியும் நீங்க உடனே சத்தியம் பண்ணி குடுத்துடிங்க அதையே நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டாங்க எனக்குமே இந்த முட்டாள் வேலை பிடிக்கவே இல்ல  உங்களோட சந்தோசமாக வாழணும் மாமா. அதனால பெரியவங்க பார்த்து ஆரம்பித்த இன்னைக்கு நாம நம்மலோட வாழ்க்கையை ஆரம்பிக்கணும் மாமா அதுக்கு நீங்க இல்லணு சொன்னா நான் ஏன் வாழணும்??..  அறுத்துகிட்டு செத்துப்போறேன். ” என்றாள்.

 அவள் சொன்னதை கேட்டுவிட்டு முடியாது என்று சொன்னான் அதனால் அவளுக்கு ஏதேனும் ஆகிவிடும் என்று ஆனால் அவளோ கத்தியை அழுத்தினாள் அதில் பயம்கொண்டு அறைமனதோடு சம்மதித்தான்.

அவ்வாறுதான் ஏனோ தானோ என்று காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் அவர்களின் தாம்பத்தியம் அங்கு கடமைக்காக நடைபபெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை கோபத்திலும் குற்றவுணர்விலும் எழிலுடன் பேசுவதுமில்லை முகம் பார்ப்பதும் இல்லை ஆனால் இன்று அவள் கீழே விழுந்ததும் ஏதேனும் நடந்துவிட்டதோ என பயந்து தான் மருத்துவமனையில் சேர்த்தான் மூர்த்தியின் சத்தியத்தை காப்பாற்றவில்லை அவளும் படுத்திருக்கின்றாள் அந்த குற்றவுணர்வினால் மூர்த்தி  அடித்தது திட்டியது என அனைத்தையும் தாங்கி கல் போன்று இருகி நின்றான்.

அப்போதான் டாக்டர் வந்து எழிலுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை என கூறி தான் அப்பாவாகப்போவதையும் கூறினார் அதை கேட்டதும் என்னவிதமாக உணர்ந்தான் என செழியனுக்கு தெரியவில்லை  கண்கள் கலங்கிவிட்டது அவன் அப்பா என்பதை ஏற்றுக்கொள்ள தவித்துப்போனான்.

எழில் பேசியதும் தாதி ஒருவர் வந்து டாக்டர் செழியனையும் எழிலையும் அழைத்ததாக கூறினாள்.

அப்போது ஆளுக்கு முதல் மூர்த்தி செல்லப்போனார் அவரின் கையை பிடித்து நிறுத்திய சாந்தி ” இப்போ நீங்க ஏன் ??. முந்திரிக்கொட்ட மாதிரி தொட்ட எல்லாத்துக்கும் முந்துறிங்க உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டிங்க இனிமே அப்பாவா ஒதுங்கி நில்லுங்க அவளோட புருசன் தான் இனி எல்லாம் முன்ன நிக்கனும் அந்த தாதி பொண்ணும் செழியனைதான் வரச்சொல்லிட்டு போறாள் பொண்ணோட அப்பாவை இல்ல புரிஞ்சிதா வாங்க நாம எல்லாரும் வீட்டுக்கு போகலாம். நீங்க எப்ப அவங்களிடம் மன்னிப்பு கேட்க்கப்போறிங்க??.. ” என்றார் சாந்தி.

” நான் ஏன் மன்னிப்பு கேட்கணும் அதெல்லாம் முடியாது.” என்றார் மூர்த்தி.

” அக்கா நீ என்ன பேசுற மாமா எங்களிடம்  மன்னிப்பெல்லாம் கேட்க்கத்தேவையில்லை  அவருடைய கோபத்துல எனக்கு அரசி மேல வச்சிருந்த பாசம் தான் தெரிந்தது அவளுக்கு என்னவோன்னு துடிச்சிப்போயிட்டார். அதனால மாமா மேல எந்த தப்பும் இல்லை நீ இனி இப்புடி பேசாத அக்கா மாமா நீங்க எனக்கு  அப்பா மாதிரி அப்பா அடிச்சா தப்பே இல்லன்னாலும் பிள்ளைக்கு கோபம் வராது அதனால நீங்க அக்கா பேசினதை மனசுல வச்சிக்காதிங்க மாமா. நீங்க வீட்டுக்கு வாங்க.” என்று கூறிவிட்டு எழிலின் கையை பிடித்து டாக்டரின் அறைக்குள் அழைத்துச்சென்றான்.

” வாங்க மிஸ்டர் அன்பு உட்காருங்க.”

” வணக்கம் ஐயா.. நீங்க வரச்சொன்னதாக சொன்னாங்க..”

” ஆமாம் உங்க மனைவிக்கு ஒரு வித்தியாசமான பிரச்சினை இருக்கு அது உங்களுக்கு தெரியுமா?.” என்றார்.

” தெரியும் ஐயா அதனால அரசிக்கு எதுனா ஆபத்து வரும்னா இந்த குழந்தையை கலைச்சிடுங்க..”என்றான் 

” இல்ல டாக்டர் மாமா சொல்லுற மாதிரி செய்யவேணாம் நான் எங்க பாப்பாவை வலிக்க வலிக்க பெத்துக்கனும்.” என்றாள்.

எழில் சொன்னதை கேட்டு முறைத்த செழியன். டாக்டரின் பதிலுக்காக காத்திருந்தான்..

தொண்டையை செருமிக்கொண்ட டாக்டர். இது என்னோட கெஸ்ஸிங்தான். நீங்க அடுத்தமாத செக்கப்க்கு வாங்க தெரிந்திடும். இப்போ போய்ட்டு வாங்க எழில் வீக்கா இருக்கிறாங்க ரொம்ப கெயார் ஃப்புள்ளா பார்த்துக்கொள்ளுங்க மிஸ்டர் செழியன் டேக் கெயார் மிஸ்ஸஸ் செழியன்..” என்றார்.

சுவாசம் தொடரும்… 

Advertisement