அதற்குள் இவள் உள்ளே சென்று எப்பொழுதும் போல ரெப்பிரஷ் ஆகிக் கீழே வர..,

தேவகி தான் அவள் கையில் டீ டம்ளரை கொடுத்து விட்டு “அவன் ஏதோ கோவத்துல இருந்திருப்பான் போல கண்டுக்காத” என்றார்.

” ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.,  நான் பார்த்துக்கிறேன்”.., என்று விட்டு  கிச்சனுக்குள் வேலை செய்வதற்கு சென்றாள்.,

நந்தனுக்கும்., அவன் நண்பனுக்கும்  சேர்த்து டீ எடுத்துக் கொண்டு தேவகி வெளியே வந்தார்….

“ஏண்டா அந்த பிள்ளை ட்ட  அப்படி கத்தின., கொஞ்ச நேரத்தில் முகம் மாறிப் போச்சு தெரியுமா.., எப்பவும் இருக்கிற மாதிரி  உன்கிட்ட சிரிச்சிட்டே உள்ளே வந்தா தான்..,  எப்பவும் முகத்துல இருக்கற அந்த சிரிப்பு இல்ல., ஏதோ ஒரு யோசனையோடு  இருக்கா.., உனக்கு ஆபீஸ்ல ஆயிரம் டென்ஷன் இருக்கும் அதெல்லாம் ஒன்னும் தெரியாத பிள்ளை ட்ட காட்டுவீயா”.., என்று சொல்லவும்….

“ஏன்மா நீங்க வாசலில் நின்னு எட்டி எட்டிப் பார்க்கிறீங்க., அவ மெதுவா வர்றா  ன்னு சொல்லி ஒரு சத்தம் போட்டேன் இது தப்பா”., என்று கேட்டான்.,

“நான் தான் நீ வந்தவுடனே சொன்னேன்ல.., அவ வர ஒரு மணி நேரம் லேட்டாகும் ன்னு சொன்னேனா இல்லையா., சரி இருட்ட ஆரம்பிச்சிட்டே  பிள்ளையை காணும் எட்டி பார்த்தேன்., அதுக்கு கத்துவீயா.,  நீ உன் வேலையை பாரு”., என்று இவரும் பதிலுக்கு சத்தம் போட்டு விட்டு செல்ல..,

நந்தனின்  நண்பனோ “உங்க வீட்டுல அம்மாக்கும் பிள்ளைக்கும் சண்டை வரும் போல.., மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வராது போலையே”., என்று சொல்லி சிரித்துக் கொண்டான்…

“நீ வேற இப்ப நான் திட்டினது இன்னும் கொஞ்ச நேரத்துல  ஸ்வேதா காதுக்கு போயிரும்., ஷியாம் காதுக்கு போயிரும்.,  எல்லாம் ஆளாளுக்கு கூப்பிட்டு இன்னிக்கு நைட்டு வரைக்கும் எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க.., இந்த அம்மணி அப்பவும் கண்டுக்காம உட்காந்து வேடிக்கை பார்ப்பா., ஆனா நான் அட்வைஸ் வாங்குவதையும் வாய்திறந்து ஒண்ணுமே சொல்ல மாட்டா.., நல்ல பிள்ளை மாதிரி வந்து ரூமுக்கு போனதும்.., எனக்கு  அப்போ அங்க வந்து ரெண்டு அடி  விழுந்தாலும் விழும்” என்று சொல்லவும்….

அவனோ சிரித்தபடி “சரி விடுறா எல்லாம் வரும் போது பார்த்துக்கொள்ளலாம்”., என்று சொன்னான்.,

நந்தன் சட்டென்று முகம் மாறியவன் “இந்த பிசாசு ஏதும் பிரச்சனை பண்ணிடுமோ ன்னு பயமா இருக்குடா..,  நிவேதா பீல் பண்ணக்கூடாது.,  கண்டிப்பா சந்தேக பட மாட்டா..,  சின்னதா மனசுல ஒரு தப்பான பீல் வந்துட்டா கூட லைஃப்ல கடைசி வரைக்கும் இந்த தப்பான எண்ணமும் இருக்கும் வரை உறுத்திக் கொண்டே இருக்கும்.., அது நினைச்சா தான் பயமா இருக்கு…,

இவை என்னென்ன பண்ணி வைக்க போறேன்னு தெரியலையே” என்று சற்று பதட்டத்தோடு சொன்னான்.,  வெளியே சிரித்து பேசினாலும் அவன் மனதில் இருக்கும் வருத்தம் அவன் நண்பனால் புரிந்துகொள்ள முடிந்தது….

டீ குடிப்பதற்காக காம்பவுண்டுக்குள் நின்று பேசிக் கொண்டிருக்க…,

தற்செயலாக பின்புற வாசல் வழியாக கிச்சனில் இருந்து எடுத்து வந்ததை கொட்டுவதற்காக வெளியே வந்தவள்..,  அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டாள்., அப்போது அவளால் புரிந்து கொள்ள முடிந்தது வெளியே சாதாரணமாக பேசினாலும் நந்தன் மனதிற்குள் ஒரு பதட்டத்தோடு இருக்கிறான் என்பது…

எதையும் கண்டுகொள்ளாமல் இரவு உணவிற்கான வேலையை செய்யத் தொடங்கினாள்.,

அவள்  மனமும் நந்தன் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தது.., என்ன பிரச்சனை பண்ணுவாள் என்று ஓரளவுக்கு தெரிந்தாலும்.., அதை வைத்து என்னென்ன செய்ய காத்திருக்கிறாள் என்பது தெரியவில்லை., சரி எது வந்தாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு தான் இரவு உணவை முடித்து கொண்டு அறைக்கு திரும்பினாள்.,

நந்தன் நினைத்தது போல ஆளாளுக்கு அறிவுரை சொன்னாலும்.,  சிரித்தபடி அம்மாவிடமும் அப்பாவிடமும் “உங்க மருமக ட்ட தோப்புக்கரணம் போட்டுறட்டுமா..,

ஒரு வார்த்தை திட்டுனதுக்கு இந்த பேச்சாடா சாமி.., ஊர்உலகத்தில் ஒவ்வொருத்தன் பொண்டாட்டிய  அத்தனை திட்டுறான்., அவன் எல்லாம் ஒருத்தர் தட்டிகேட்பது கிடையாது.., நான் ஒரே ஒரு வார்த்தை., அதுவும் கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துல எனக்கு தெரிஞ்சு ஒரே தடவை  இன்னைக்கு தான் திட்டி பேசி இருக்கேன்னு நினைக்கிறேன்..,  அதுக்கே இப்படியா”,  என்று அவன் உணவு உண்ணும் போது சொன்னதை நினைத்து கொண்டாள்.

அறையில் உள்ளே வந்தவளுக்கு  அவன் கண்ணை இறுக மூடி படுத்திருந்தது தான் தெரிந்தது., நெற்றிக்கு மேலே கையை வைத்து ஆழ்ந்த யோசனையில் இருந்தவனை கண்டவளுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும்., ஒருபுறம் கஷ்டமாக இருந்தது..,

‘தான் ஆவது முழுவதும் கேட்டிருக்கிறோம்.., அவனுக்கு என்னவென்றே தெரியாத சூழலில் அவன் மனம் கண்டிப்பாக ஒரு வித பதட்டத்தோடு தான் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு.., என்னை திட்டினதுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கணுமே’., என்று யோசித்துக் கொண்டே உள்ளே வந்தாள்….

வந்து அவளிடத்தில் படுத்த பிறகும் அவனிடம் எந்த அசைவும் இல்லை..,  விளக்கை எல்லாம் அணைத்து இரவு விளக்கை ஒளிர விட்டு பின்பும் கூட..,

அவன் எப்பொழுதும் இவளை இறுக்கி அணைக்கும் அந்த அணைப்பும்.., இவள் மேல் கையை போடும் அந்த எண்ணமும் இல்லாமல்.., அவன் தன் சிந்தனையிலேயே உலண்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தவள்  அவன் அருகில் சென்றாள்..

வேகமாக அவன் நெற்றியின் மேல் வைத்திருந்த..,  அவன் வலது கையை இழுத்து  தன் மேல் போட்டுக் கொண்டு அவள் கால்களை எடுத்து அவன் காலில் வைத்தாள்..,

அவன் எதுவுமே சொல்லாமல் அணைத்து கொண்டாலும்.., அந்த அணைப்பில் உயிர்ப்பில்லை என்பதை உணர்ந்தவள்..,

“ஐயோ கடவுளே., நான் என்ன பண்ணுவேன்”., என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே திரும்பிப் பார்த்தவள்.,  அவன் கண் மூடி படுத்திருக்கும் விதத்திலேயே அவன் முகத்தில் தெரிந்த சோர்வு அவளுக்கு கஷ்டமாக இருக்க..

மெதுவாக அவன் அருகில் நெருங்கி “லைசன்ஸ் பார்ட்டி”., என்றாள்.,

அவனிடம் எந்த சத்தமும் இல்லை என்றவுடன் மீண்டும் அவன் டி-ஷர்ட்டின் கழுத்துப் பகுதியை இழுத்து “லைசென்ஸ் பார்ட்டி காது கேக்கலையா”., என்றாள். அவன் அமைதியாக இருக்கவும்..,

“கூப்பிடுறது கேக்குதா இல்லையா”.,  என்றாள்

“கேட்குது”., என்றான்..

“என்ன ஆச்சு..,  இன்னைக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்”., என்றாள்.,

அவன் தலைமுடியில் விரலை விட்டு  கலைத்தபடி..,

“மூட் ஆப்., டென்ஷன் சாரி..,   ஏதோ அப்ப கோபத்துல  கத்திட்டேன்”.., என்று கண்ணை திறக்காமல்  சொல்ல..,

“ஏதாவது  திட்டனும் னா..,  நீங்க தனியா சொன்னா ஒன்னும் தெரியாது.., அதுவும் வீட்டு வாசலில் வச்சு., உங்க பிரெண்ட்  பக்கத்துல வச்சி திட்டுறீங்க.,  அதுதான் எனக்கு கோபம்..,

ஆனால் திட்டுனதுக்கு கண்டிப்பா பனிஷ்மென்ட் உண்டு தெரியுமா”., என்று அவன் மேல் கையை போட்டு அணைத்த படி பேசிக்கொண்டிருந்தாள்.,

“அடிக்கணுமா அடிச்சுக்கோ”.,என்றான்.,

” இல்லை” என்றாள்.

“வேற என்ன” என்றான்.

“கண்ணை திறந்து பாருங்க” என்றாள்.,

திறந்து பார்க்கவும்.,  அவன் முகத்துக்கு அருகில் அவள்  முகம் இருக்க.,

சிரித்தபடி “பயந்துட்டீங்களா”., என்றாள்.

அவனோ “போடி” என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்ணை மூட போக..,

அவன் கன்னத்தை பிடித்து ஆட்டி அவனை கண் திறக்க வைத்து பார்த்துக் கொண்டிருந்தவள்..,

அவன் பார்க்கும்போதே முதன்முதலாக அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தவள்.., உதட்டை கன்னத்தில் இருந்து எடுக்காமலேயே நேராக வந்து அவன் உதட்டில் அழுத்தமாக.., ஆனால் மேலோட்டமாக ஒரு முத்தம் வைத்தாள்.

சற்று நேரம் அவள் என்ன செய்கிறாள் என்று புரியாமல் இருந்தவன்.., பின்பு “ஏய் பூனைக்குட்டி  இப்ப என்ன பண்ண”., என்றான்.,

கடுப்போடு  ” ம்ம்ம்.., பால் வாசம் அடிக்குதா ன்னு., மோப்பம் பிடிச்சேன்.., வேஸ்ட் கொடுத்தது எல்லாம் வேஸ்ட்” என்று சொல்லவும்..

“ஏய் நிஜமாவா.,  இது கனவில்லையே” என்று சொல்ல..,

மீண்டும் அவன் அருகில் சென்றவள் அவன் கன்னத்தை மெதுவாக ஆனால் சற்று வலிக்கும்படி கிள்ளி வைத்தவள்..,

“இப்ப தெரியுதா கனவில்லை.,  மூட் ஆப்  சொன்னீங்க இல்ல.., அதுதான் மூட் சேஞ்ச் பண்ணி விட்டேன்”.., என்று சொல்லவும்..,

சமாதான முத்தம் தொடங்கி., சம்சார முத்தம் வரை சென்று.,  அவளிடம் சம்மதம் பெற்ற படி அவர்களுக்கான வாழ்க்கையை அழகாக தொடங்கி கொண்டனர்..,

” பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை அவை என்றும் சிரித்துக் கொண்டே இருக்கின்றன“.,

                                        – சார்லிசாப்ளின்.