நிவேதாவோ தலையை மட்டும் ஒரு மார்க்கமாக ஆட்டி வைத்தாள்.
அவளோ., “எனக்கு ரொம்ப வசதியா போச்சு”., என்ற படி பேச்சைத் தொடர்ந்தாள்.,
“நான் ஒன்னு தர்றேன்., அதை கல்யாணப் பொண்ணு கையில கொடுத்துடுங்க”., என்று சொன்னவள்.
ஒரு பேப்பரை மடித்து நீட்ட நந்தன் ஏய்ய் என்ற சத்தத்தோடு அதைப் பறிக்க போக.., அதற்குள் நிவேதா கையில் வாங்கியிருந்தாள்.
“மறக்காமல் கொடுத்துருங்க., அதுல தான் என் வாழ்க்கையே இருக்கு”என்று சொல்லவும்.,
எதிர் வீட்டு பெண்ணைப் பார்த்து… “நீங்க பெரிய ஆளுங்க.., இவ்வளவு சின்ன பேப்பரில் வாழ்க்கையவே வைச்சிருக்கீங்க பாருங்க., சூப்பர்” என்று சொல்லி தன் சுடிதார் பாக்கெட்டில் திணித்துக் கொண்டாள்..,
நந்தனும் நிவேதாவிடம் பேச தொடங்கியிருந்தான்.,
” ப்ளீஸ் பூனைக்குட்டி அதை கொடுத்துட்டு போயிரு” என்று சொன்னவனிடம்.,
“எதுக்கு” என்று பதில் கேள்வி கேட்கவும்.,
“கீழ கொண்டு போய் கொடுக்காத பிரச்சனையாயிடும்., இவ என்ன., என்ன., எழுதி இருக்கான்னு தெரியாது., பிரச்சனை ஆயிடும் புரிஞ்சுக்கோ”., என்று சொன்னான்.
நிவேதாவும் அந்த பெண்ணை பார்த்து “என்ன எழுதி இருக்கீங்க”., என்றாள்.
“அது உனக்கு தேவையில்லாதது பாப்பா”.., என்றாள்.
“என்னது பாப்பாவா”., என்றாள்.
“இவன் உன்னை பூனைக்குட்டி ன்னு., கூப்பிடும் போது ஒன்னும் சொல்லல., நான் பாப்பா ன்னு கூப்பிட்டா மட்டும்., பாப்பா வா ன்னு கேட்குற”., என்றாள்.
“ஹலோ மரியாதையா பேசுங்க.., நீங்க பீப்பா மாதிரி இருக்கீங்க ன்னு., என்னைய பாப்பா னு சொல்லக்கூடாது”., என்றவள் “உங்க பேர் என்ன.,? என்று அதிகாரமாகவே கேட்டாள்.
“என் பேரு மஞ்சரி” என்றாள் அந்த எதிர் வீட்டு பெண்…
“சரி பொண்ணு கையில எதுக்கு கொடுக்கணும்”., என்றாள்.
“அது எதுக்கா இருந்தா உனக்கு என்ன”., என்று சொன்னாள்.
அதற்குள் அவன் நண்பர்களும் “தயவு செய்து அந்த லெட்டரை கீழே கொண்டு போய் கொடுக்காதமா., நல்லகாரியம் நடக்கும் நேரத்தில் பிரச்சனை வந்துற கூடாது”., என்றனர்.
அவளுக்கு ஓரளவுக்கு புரிந்தது., ‘இது அவர்கள் பேசிக்கொண்டிருந்த பெண்ணா இருக்குமோ’ என்று மெதுவாக திரும்பியவள். “சரி கொடுக்கிறேன்” என்று சொல்லவும் அவன் நண்பர்களும் முகம் இறுக., அவனும் முகம் இறுகி நின்றான்.
அதே நேரம் மஞ்சரி பேசத் தொடங்கினாள்., “எப்படியும் இந்த பொண்ணு கூட கல்யாணம் நின்னுரும் னு நினைக்கிறேன்.., கீழே பொண்ண காணோம்னு தேடிட்டு இருக்காங்க”., என்று சொல்லவும்..,
நிவேதா மறுபடியும் திருதிருவென முழிக்க தொடங்கினாள்., “என்னது பொண்ண காணோமா”., என்று நண்பர்கள் கேட்டனர்.
அதே நேரம் மாடிப்படி அருகே ஷியாம் வருவது தெரிந்தது., அவர்கள் நிவேதாவோடு மஞ்சரியும் நின்று பேச்சுவார்த்தை நடத்துவதைக் கண்டு ஷியாம் பார்த்துக்கொண்டிருந்தவன்., என்ன என்று செய்கையில் கேட்டதற்கு…,
“செய்கையில் மெதுவாக கையை காட்டி பேசாதீர்கள் அங்கே நில்லுங்க”., என்று சொன்னாள்.
அப்போது தான் நண்பன் ஒருவன் “டேய் நீ என்ன னா., பொண்ண பார்க்காமலேயே அவ தான் என்னோட வொய்ப்., லைஃப் ன்னு, சொன்ன., ஆனா வேற என்னமோ சொல்லுறாங்களே டா”.., என்று மறுபடி வாய் விட்டான்.
“பொண்ணு யாருன்னு தெரியாம சம்மதிச்ச.., ஹீம்…, அந்த அளவுக்கு உங்க அம்மா மேல நம்பிக்கை”., என்றால் நக்கலான குரலில் மஞ்சரி.
அதைக் கேட்டவுடன் ஷியாமோ ‘பொண்ணு பார்க்கலையா’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.,
‘அப்போ கூட நின்னு பேசிட்டு இருக்குறது யாரு ன்னு நினைத்துப் பேசிட்டு இருக்கானோ’., என்று நினைத்துக் கொண்டான்.
அதே நேரம் மஞ்சரி மீண்டும் பேசத்தொடங்கினாள். “பொண்ண பார்க்காமலேயே அவ உன்னோட லைஃப் ஆ.., இப்ப ஓடிப்போய்ட்டாலே என்ன செய்ய போற”… என்றாள்.
நந்தன் முகம் வாடுவதை கண்ட நிவேதா..,
“நீங்க ஏங்க தப்பாவே பேசுறீங்க.., இங்கதான் எங்கயாவது இருப்பாங்க.., எல்லாம் நல்லபடியா கல்யாணம் நடக்கும் நீங்க போங்க”., என்றாள்.
“ஹலோ நான் கல்யாணத்தை நிறுத்த தான் உன் கையில லெட்டர் குடுத்து இருக்கேன்., என்ன நடக்கும் ங்கிற”., என்றாள்.
“உங்களுக்கு கல்யாணத்தை நிறுத்தனுமா” என்றாள்.
ஆம் என்று மஞ்சரி சொன்னவுடன்..,
“சரி அப்போ இப்படியே என் கூட கீழ வாங்க.., எதுக்கு லெட்டர் கொடுத்து கல்யாணத்தின் தடுக்கீங்க.., வாங்க நீங்களே வாய் வார்த்தையா சொல்லிட்டீங்கனா நின்னுரும்”., என்று சொல்லவும்.
நந்தனோ நிவேதாவை முறைத்தான்.,
கண்டு கொள்ளாத நிவேதா மஞ்சரியிடம் பேசத் தொடங்கியிருந்தாள்.
“அது எப்படி சொல்றீங்க., ஒரு வேளை லட்டரை கொண்டு கொடுத்தாலும் படிக்கனும் இல்ல.. ஒருவேளை படிச்சாலும் நிறுத்தனும் இல்ல”.., என்று கேட்டாள்.
“கண்டிப்பா நின்னுரும்., ஏன்னா நான் இவன லவ் பண்றேன்.., அதை தான் கதை கதையா எழுதியிருக்கேன்”., என்றாள்.,
“நீங்க லவ் பண்றீங்க சரி.., அவங்க உங்களை லவ் பண்றாங்களா”., என்று கேட்டாள்.,
மஞ்சரியோ “எனக்கு அதெல்லாம் தெரியாது.., இந்த கல்யாணம் நடக்கக் கூடாது., அவ்வளவுதான்”.., என்று சொன்னாள்.
“இங்க பாருங்க உங்க ஒன் சைடு லவ்காக நான் தூது போக முடியாது.., புரிஞ்சிசுங்களா., அவங்களும் உங்களை லவ் பண்றேன்னு சொல்ல சொல்லுங்க.., கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்துவதற்கு., கீழே போய் நானே பேசுறேன் “.., என்றாள்.
நந்தன் அவளை முறைத்துப் பார்த்தப்படி., “பூனைக்குட்டி பேசாமல் இரு”.., என்றான்.
அவளோ அவன் முறைப்பைக் கண்டு கொள்ளாமல்., “ஓகே இப்ப சொல்லுங்க” என்று சொல்லவும்.,
மஞ்சரி அவளை பார்த்த படி அமைதியாக நின்றாள். இவள் நந்தனை பார்த்து திரும்பி “நீங்க இந்த பொண்ண விரும்புறீங்களா” என்று கேட்டாள்.
“இதுவரைக்கும் என்னோட லைஃப் ல லவ் இல்லை., அதுவும் இருந்திருந்து இந்த மூஞ்சிய வா”., என்று அவன் சொல்லவும்..
“எவ்வளவு திமிர் இருந்தா என்ன பத்தி இப்படி சொல்லுவ.., இதுக்காகவே இந்த கல்யாணத்தை நிறுத்துறேன் பாரு”., என்று மஞ்சரி பேசவும்
நிவேதா மஞ்சரியிடம் “ஒருவேளை இந்தக் கல்யாணம் நிக்கலைன்னா என்ன பண்ணுவீங்க”.., என்றாள்.
அதற்கு மஞ்சரி “நான் இவன் பேரை எழுதி வச்சுட்டு செத்துப் போயிருவேன்”., என்று சொன்னவள் “அதுமட்டுமில்லாம அப்படி இவன் பேரை எழுதி வச்சுட்டு செத்து போயிட்டா., இவனுக்கு வேலை போய்விடும்” என்று சொன்னாள்.
“ஓ இதுதான் விசயமா”.., என்று சொன்னவள்
செல்போனை கையில் வைத்துக் கொண்டே மஞ்சரி அருகில் சென்றவள்..,
மஞ்சரியின் கையை பிடித்து இழுத்தபடி “வாங்க.., நம் இரண்டாவது மாடியில் இருக்கோம்., இங்க கைப்பிடி சுவர் கூட உயரமா தான் இருக்கு., இங்க இருந்து குதிச்சீங்க னா ஸ்பாட் அவுட்., பாத்துக்கோங்க..,
நானே சொல்லிடுறேன் இவங்க தான் புடிச்சு தள்ளி விட்டாங்க ன்னு., எப்படி நல்ல ஐடியா வா இருக்கா.., கீழே குதிங்க”., என்று சொல்லவும்.
மஞ்சரி கையை உதற முயற்சி செய்ய.., நிவேதாவின் பிடியோ அழுத்தமான பிடியாக இருந்தது.,