போட்டோவை  மீண்டும் அதை மாற்றி மாற்றி திரும்பிப்பார்க்க நந்தனுக்கு தான் கஷ்டமாக இருந்தது., முத்தம் கொடுப்பது போல உள்ள போட்டோ தான் என்றாலும்..,  அப்படி போட்டோவை பார்க்கும் போது யாராக இருந்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கும்.,

நிவேதாவும் நிதானமாக ஒவ்வொரு போட்டோவாக பார்த்துவிட்டு “இதை என்ன செய்யலாம்”., என்று கேட்டாள்.,

மஞ்சரி “ஏன் என்ன செய்யப் போற., அது உனக்கு எவிடன்ஸ் காட்டுவதற்காகத்தான் கொண்டு வந்தேன்”., என்று சொல்ல.

Advertisements

நிதானமாக கவரில் எடுத்து வைத்தவள் “நான் இப்போ உன்ன கம்ப்ளைன்ட் பண்ணினா.,  நீ என்ன பண்ணுவ”., என்றாள்.,

“இதுக்கு என்ன கம்ப்ளைன்ட்”.,  என்றாள் மஞ்சரி.,

“நீ மார்பிங்  பண்ணி மிரட்டுற.,  அப்படின்னு சொல்லி நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணினா.,  என்ன பண்ணுவ”..,  என்றாள்.

“என்னது மார்பிங்” என்று கத்தியவள் “ஏன் அதை பார்த்து எல்லாரும் நம்புறாங்க.,  உனக்கு என்ன” என்று கத்தவும்.,

அவள் சொன்னதில் அத்தனை பேரும் அவள் முகத்தை தான் அதிர்ச்சியோடு பார்த்தனர்.,

“ஏங்க நீங்க  மார்பிங் பண்ணியிருக்குறது  பார்த்த உடனே தெரியுது.., இதுல அவர் முகம் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாதா.., இந்த முகத்தை அங்கங்கு  எடுத்து கட் பண்ணி ஒட்டி வைச்சிருக்க ன்னு ன்றது பார்த்தாலே தெரியுது..,

கம்ப்யூட்டரில் எவ்வளவோ அஃப் வந்துருச்சு.., நீ சும்மா இது அப்படி இப்படி ன்னு என்னை ஏமாற்ற பார்க்காத புரிஞ்சதா..,  ஜஸ்ட் அந்த கண்ணு மூக்கு இதெல்லாம் எடுத்து ஒட்டி பிக்ஸ் பண்ணியாச்சு னா., அவர் முகம் ஆகாது.,  ஓகேவா..,

ஏதோ ஒரு போட்டோல இருக்கற கண்ணு மூக்கு அந்த ஹேர் ஸ்டைல் இதை வச்சு நீ ஓட்டி இருக்கலாம் சரியா.., ஆனால் சில இடங்களில் கோட்டை விட்டுட., எதுக்கு தேவை இல்லாத வேலை.,

என் ட்ட கேட்டிருந்தால் கூட நல்ல போட்டோவா தந்திருப்பேன்.., அழகா மார்பிங் பண்ணி இருக்கலாம் இல்ல”., என்று சொல்ல திருதிருவென முழிக்க தொடங்கியது இப்போது மஞ்சரியின் வேலையாகி போயிற்று.,

நந்தனின் அம்மா “நிவேதா., இத எல்லாம் நம்பாதே” என்று சொல்ல..,

“ஐயோ அத்தை எனக்கு தெரியும் நீங்க பேசாம இருங்க”.., என்று சொல்லி விட்டு நந்தனை திரும்பி கூட பார்க்காமல் மஞ்சரியை பார்த்தவள் “இந்த போட்டோல இருக்கிறது அவர் கிடையாது., நான் சொல்றேன் நீ என்ன பண்ண போற”., என்றாள்.,

“ஏன் இத நம்ப மாட்டீயா” என்றாள்.

“இங்க பாரு இந்த போட்டோல இருக்கிறது அவர் முகமே கிடையாது., நான் அடித்துச் சொல்வேன்.,  நான் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாது.,  எக்ஸ்பிளைன் பண்ண முடியாது.,  என் ஹஸ்பென்ட் எப்படி இருப்பார்னு எனக்கு தான் தெரியும்., நீ சும்மா சொல்லிட்டு இது அவர் தான் அப்படின்னு சொன்னா நம்புறதுக்கு நான் என்ன லூசா”.., என்றாள்.,

நிமிர்ந்து பார்த்த படி சற்றே அழுத்தம் கொடுத்து பேசத் தொடங்கினாள்.,

“எப்பவும் அமைதியா சிரிச்சிட்டே போயிருவேன் எதிர்பார்க்காத.,  அன்னைக்கு அடி வாங்கினது மறந்துபோய் இருக்காதுன்னு நினைக்கிறேன்., அதே மாதிரி திருப்பி அடிக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது., புரிஞ்சிச்சா..,

வாழ்க்கை என்கிறது ஒவ்வொரு நிமிஷமும் நம்பிக்கையுடன் நகர்ந்து இருக்குற ஒரு விஷயம்., அடுத்த நிமிஷம் நாம  இருப்போம் அப்படிங்கிற நம்பிக்கையில் தான் எல்லாரும் வாழ்ந்துட்டு இருக்காங்க..,

அதே மாதிரிதான் வாழ்க்கையோட ஒவ்வொரு விஷயத்தில் கடந்து போன விஷயங்கள் ல என் ஹஸ்பென்ட் எனக்கு உண்மையா இருப்பாரு.., அப்படிங்கற நம்பிக்கையில் தான் என்னோட வாழ்க்கை நகர்ந்து போய்கிட்டு இருக்கு..,

அவர் தப்பு பண்ண மாட்டார் ன்னு.,  நான் சொல்றேன்., நீ சொல்ற இது அவர் தான் ன்னு., இந்த போட்டோ நல்லா பாரு என்று எல்லோரிடமும் காட்டியவள்.,  இதில் பிடித்திருக்க கைய பாருங்க., விரல் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு..,

இந்த விரலுக்கும்”., என்று சொல்லி அவள் பக்கத்தில் இருந்த நந்தனை பிடித்து அருகே இழுத்தவள் நந்தனின் கையை பிடித்து காட்டி “இந்த விரலுக்கும் அந்த விரலுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்க.., என் ஹஸ்பண்ட் கை விரல் நகம் கூட  என்னால் அடையாளம் காட்ட முடியும்.,

அது மட்டுமில்லாம இந்த போட்டோவ பாருங்க என்று எடுத்துக்காட்டியவள்.,  நந்தனுக்கு காதுக்கு கீழே கன்னத்தை ஒட்டினாப்பல மச்சம் இருக்கு., போட்டோ ல இந்த மச்சம் கண்டிப்பா விழுந்து இருக்கனும் இல்ல.,   இதுல அந்த மச்சம் இல்ல.., நல்லா பாருங்க வேற மாதிரி இருக்கு.., அது மட்டுமில்லாம இந்த போட்டோவ பாருங்க இதுல இருக்கும் மீசை நந்தனோடது கிடையாது..,  மொத்தத்தில் இது என்னோட நந்தன் ஃபோட்டோ கிடையாது..,

நீ மார்பிங் பண்ணினா அதையும் ஒழுங்கா பண்ணு..,  நீ எல்லாம் எதுக்கு மறுபடி மறுபடி ஒரு விஷயத்தை பண்ணிக்கிட்டு இருக்கிற.., உனக்கு ஒரு தடவை சொன்னா புத்தி வராதா”., என்று சொன்னவள்.

நந்தனின்  அம்மா  கையில் போட்டோவைக் கொடுத்து பின்னாடி அடுப்புல  போடுங்க.,  ஒரு போட்டோ மட்டும் எடுத்து வைங்க., அவ கொடுத்த லட்டர் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு.., கொண்டு போய் போலீஸ்ல கொடுத்துட்டு வந்துடலாம்..,  இவளை இதுக்கு மேல விட்டா., இவ இதேயே வேலையா சுத்துவா.,   என்று சொல்லி வேகமாக பேச தொடங்கவும்.,

சற்று பின் வாங்கினாள் மஞ்சரி அதற்குள் மஞ்சரியின் அப்பா வந்து “மன்னிச்சிடு மா” என்றார்.

“சம்பாதிச்சா  போதாது ங்க., பிசினஸ் பண்றீங்க தான் இல்லன்னு சொல்லல.,  நீங்க பிசினஸ் பண்றீங்க.,  உங்க வைஃப் என்ன பண்றாங்க.., பிள்ளைகளை கவனிக்கிறத விட அப்படி என்ன வேலை பார்க்குறாங்க.., ஒன்னும் இல்ல இல்ல,  எப்பவும் பொம்பளைங்க டிவி  முன்னாடி கிடக்குறது..,

ஆம்பளைங்க வேலை வேலைன்னு போறது அப்புறம் பிள்ளைய  யார் பார்க்கிறது., அப்புறம் இப்படி தான் இருக்கும்.,  கொஞ்சம்கூட சொல்லி வளர்கக மாட்டீர்களா வீட்டுல”.., என்றவள்., திரும்பும் முன்.,

மஞ்சரி நிவியிடம்., “நான் அவனை லவ் பண்ணுறேன் உனக்கு புரியுதா., இல்லையா”, என்றாள்.

“காதல்னா என்னன்னு தெரியுமா” என்று மஞ்சரியை பார்த்து கேட்க மஞ்சரி எங்கோ பார்த்து கொண்டு நின்றாள்.

“மார்பிங்  ஃபோட்டோ காட்டி மிரட்டி நான் உன்ன லவ் பண்றேன்., நான் உன் பின்னாடி வர்றேன்.,  நீ என்னைய பார்க்கல அப்படின்னு சொல்றதுக்கு பெயர் காதல் இல்ல..,

நீ எவ்வளவு டிஸ்டன்ஸ் ல இருந்தாலும் மனசுல இருக்கிற அன்பு பேசணும்..,  அன்புதான் அந்த காதலை உருவாக்கி கொடுக்கும்.., சத்தியமா இதுக்கு பேரு காதல் கிடையாது.., தயவுசெய்து இதுக்கு பேரு காதல் ன்னு., சொல்லி காதலை கொச்சைப்படுத்திராதீங்க.,

காதல் ரொம்ப ரொம்ப அருமையான ஒரு உணர்வு.,  அதை பண்றவங்க மட்டும் தான் உணர முடியும்.., அதற்காக என்ன லவ் பண்ணுறீயா ன்னு என்று கேட்டுறாத.,

நான் சத்தியமா கல்யாணத்துக்கு  முன்னாடி  யாரையும் லவ் பண்ணல..,  கல்யாணத்துக்கப்புறம் என் ஹஸ்பண்ட் அ மட்டும் தான் லவ் பண்ணிட்டு இருக்கேன்..,  சரிங்களா.,

அப்புறம் என்ன சொன்னீங்க பின்னாடியே சுத்துனீங்க.,  திரும்பிப் பார்க்காம போய்ட்டாங்க.,  இப்படித்தானே  கல்யாணத்துக்கு முதல் நாள் வந்து என்கிட்ட பேசும்போது சொன்னீங்க.,

எப்படி சொல்றது ஒருத்தங்க பின்னாடி போறதாலயோ., ஒருத்தங்கள தொடர்ந்து பார்க்கிறதாலயோ.,  லவ் வரவே வராது. அவங்கள பிடிக்கணும்., மனசளவுல பிடிக்கணும்.,

சும்மா ஜஸ்ட் லைக் தட் ன்னு., வசதிய கணக்குப் போடாமல்., மனசளவுல நெருங்குனா மட்டும் தான் அந்த லைஃப் ல அன்பா.,  அனுசரணையா போகமுடியும்., புரிஞ்சதுங்களா.,

நான் எப்பவும் விளையாடிட்டு இருக்கேன்., அதற்காக நான் குட்டி பாப்பா எல்லாம் கிடையாது.., எனக்கும் விவரம் தெரியும்., எங்க வீட்ல நான் தான் மூத்த பொண்ணு., எங்க அப்பா வீட்டிற்கும் சரி..,  அம்மா  வீட்டிற்கும் சரி..,  எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு.., என்னோட பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க முடியாது.

இன்னொரு முறை அவரை பற்றி தப்பா சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்…  என்னோட லைஃப் அ காப்பாத்திக்க எனக்கு தெரியும்., இது லாஸ்ட் வார்னிங் ன்னு கூட வைச்சிக்கோ.., உன் ட்ட பேசி என் டைம் தான் வேஸ்ட்”., என்றவள்.

“அம்மா அப்பா பார்க்கிற பையன கல்யாணம் பண்ணிட்டு நல்லபடியா கிளம்பு.,  அதை விட்டுட்டு திரும்ப திரும்ப வந்து கேவலப் படாதே”., என்று சொல்லிவிட்டு

தெருவில் உள்ளவர்களிடமும் “ஆன்ட்டிஸ் ப்ளீஸ் இந்த மாதிரி ஒன்றுக்கும் மத்த விஷயத்துக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ண வராதீங்க.., உங்க மதிப்ப நீங்களே கெடுத்துக்காதீங்க..,  அவ என்ன பண்றனே தெரியாம இங்கு வந்து நிக்காதீங்க.., தப்பா எடுத்துக்காதீங்க., மற்றபடி நீங்க எப்பவும் ஒன்னா பழகுறீங்க இல்ல., அப்படியே இருங்க”., என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டாள்.,

அங்கிருந்தவர்கள் மெதுவாக கிளம்பத் தொடங்கினர்.

“ஏன்மா காலேஜுக்கு போல” என்று தேவகி கேட்க.,

நேரத்தை பார்த்தவள் “இல்ல அத்தை நான் இன்னைக்கு லீவ் போடறேன்”., என்று சொல்லி பேக்கை ஒரு ஓரமாக தூக்கி  வைத்துவிட்டு.,  “கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்”., என்று சொல்லி விறு விறு என்று மாடிக்கு ஏறி விட்டாள்.

சற்று நேரம் அமைதியாக  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்தனும் யாரிடமும் எதுவும் பேசாமல் குனிந்து இருக்க..,

வீட்டில் அனைவரும் ஆளாளுக்கு நடந்த விஷயத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்.,

நந்தனின்  அம்மா கையில் இருந்த போட்டோவை எல்லாம் கொண்டுபோய் பின்னாடி இருந்த அடுப்பில் போட்டு எரித்து விட்டார்.,

மாடிக்கு சென்றவள் பேசாமல் படுத்து விட்டாள்.,  நிறைய பேசி விட்டோமோ என்று தோன்றியது.,

மனதில் இருந்த எல்லாவற்றையும் கொட்டி ஆயிற்று என்றும் தோன்றியது.,

ஷ்யாம் மற்றும் நண்பர்கள் அனைவரும் “சரி டா.., நாங்க வேலைக்கு கிளம்புறோம்., நீ கிளம்பலையா” என்று கேட்க.,

“நான் லீவ்” என்று சொல்ல., நண்பர்கள் அவனை பார்த்து சிரித்துவிட்டு “சரி போடு போடு” என்று சொல்லி விட்டுப் போய்விட்டனர்.,

நந்தன் அப்பா தான்., “எல்லாம் சரியா போகும்., நிவி இப்ப உன்ட்ட கோப பட்டாலும் நீ அமைதியா போ., இப்ப போய் கொஞ்சம் மருமகளை பாரு”., என்று சொல்லி விட்டு இவர்கள் கீழே டிவியை போட்டுவிட்டு அமர்ந்து அங்கு நடந்த விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.,

இவன் மெதுவாக மாடிக்கு வந்து சேர்ந்தான்., முகத்தை தலையணையில் புதைத்து குப்புறப் படுத்திருந்த அவளையே பார்த்தபடி வந்தவன்.,  கதவை தாளிட்டு விட்டு அருகில் வந்து படுத்துக் கொண்டு அவளை இருக்கமாக அணைத்துக் கொண்டான்.

“எனக்காக தானே எல்லாமே விட்டு கொடுத்திருக்க”., என்று சொல்லாத விஷயங்களையும் புரிந்தவனாக  கேட்டவன்.,

“எனக்காக பாவம் பார்த்து தானே., அந்த ப்ராமிஸ் கூட வேண்டாம் ன்னு விட்டுட்ட., உன் படிப்பை முடிப்பதற்கு முன்னாடி”., என்று கேட்டான்.

முகம் சிவக்க அவன் மேல் முகம் புதைத்துக் கொண்டாள்..

அவனோ அவள் உச்சியில் இதழ் பதித்தபடி., “தேங்க்ஸ் பூனைக்குட்டி., ஐ லவ் யூ டா., எனக்கும் உன்னை அவ்வளவு பிடிக்கும்.., எப்பவும் நீ நீயா இருடா., இதே துறுதுறுப்பு., இதே வாயடிக்குற பொண்ணா இரு., தேங்க்ஸ் மொத்தமா எல்லாத்துக்கும் தேங்க்ஸ்”., என்று சொல்லி மீண்டும் நெற்றியில் இதழ் பதித்தான்..,

சில பெற்றோர்களின் அன்பு தான்., பல குழந்தைகளின் ஒளி பொருந்திய எதிர்காலத்தை இருளடைய செய்கிறது.,

                                        – சார்லி சாப்ளின்.