மறுநாள் காலையில் எப்பொழுதும் போல எழுந்து கீழே வந்தவள்., வீட்டில் அனைவருக்கும் காபி கலந்து கொடுத்து விட்டு நந்தனை “ஆபீஸ்க்கு எப்ப கிளம்புவீங்க னு சொல்லுங்க., சாப்பாடு ரெடி பண்ணுறேன்”., என்று கேட்டாள்.
நந்தன் “இல்ல நான் ஆபீஸ் போகலை., லீவு சொல்லிட்டேன் எனக்காக எதுவும் செய்யாதே”என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அவளும் தன் தோழிக்கு அழைத்து மூன்று நாள் கல்லூரிக்கு விடுமுறை சொல்லிக்கொண்டிருந்தாள்.,
அவனோ “நீ எதுக்கு லீவு போடுற நாங்க இருக்கோம்., ஸ்வேதா இங்க தானே இருக்கா., நீ காலேஜ் கிளம்பு., ஷியாம் ஆபீஸ் கிளம்பு”., என்றான்.
ஷியாமோ “பேசாம இருடா பார்த்துக்கலாம்”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
நிவேதாவோ “மூன்று நாள் லீவ் போடலாம்னு நெனச்சிருந்தேன்.., இப்ப நீங்க சொன்னதால்ல.., இந்த வாரம் ஃபுல்லா லீவுதான்.., போக முடியாது என்ன பண்ணுவீங்க”., என்றாள்.
“ஏய் நான் சீரியஸா சொல்றேன்.., பாடம் போயிரும்.., நீ போ நாங்க பார்த்துக்கிறோம்”., என்று சொல்ல..,
“முடியாது., முடியாது”., என்று கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள்.
“உங்க அண்ணனுக்கு வேற வேலை இல்ல.., சொல்லுங்க உங்க அண்ணன் காலேஜ் படிக்கும் போது என்ன கட்டடிச்சதே இல்லையா” என்று கேட்டு விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள்.,
இப்படியே இரண்டு நாட்கள் சென்றிருக்க தேவகி சற்று தளர்ந்திருந்தாலும்., “ஏன்டா என்னை எல்லாருமே நோயாளி மாறியே பாக்குறீங்க., எனக்கு ஒன்னும் இல்லை”., என்று சொல்லி அவர் பேசிக் கொண்டிருந்தார்.
நிவேதா தான் எப்பொழுதும் போல அவருடன் பேசி அவரை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தாள்.
அன்று தான் அமர்ந்து அவர்கள் மருத்துவமனை விஷயங்களை பேசிக் கொண்டிருக்க., அப்போது தேவகி தான் “நான் ஆஸ்பத்திரி போற அவசரத்துல பணம் எடுத்துட்டு போகலை., ஸ்வேதா மாப்பிள்ளை ட்ட எவ்வளவுன்னு கேட்டு கொடுத்துரு” என்று சொன்னார்.
“சரி பார்த்துக்குறேன்”., என்றான்.
அதுபோலக் சற்று நேரத்தில் அவன் வரவும்., ஷ்யாமிடம் நந்தன் “ஆஸ்பத்திரிக்கு எவ்ளோ பில் கட்டன டா சொல்லு”., என்று சொல்ல..,
“ஆஸ்பத்திரிக்கு பில்லா நான் எப்படா கட்டினேன்”., என்றான் ஷ்யாம்.
“என்னடா சொல்லுற” என்று கேட்டதற்கு.,
“நான் வரதுக்கு முன்னாடி அல்ரெடி எல்லாம் பே பண்ணியாச்சு சொன்னாங்க”.., என்று இவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க.
அப்போதுதான் குளித்து முடித்து கீழே இறங்கி வந்தாள் நிவேதா., அவளையே ஷியாமும் நந்தனும் பார்த்துக் கொண்டிருக்க..,
“என்ன ஹோட்டலா வைச்சிருக்க., பார்த்த உடனே இப்படி கேட்க”.., என்றான்.
“எனக்கு தெரிந்து இந்த இரண்டு நாள்ல இப்படி பார்த்தாலே காபி வேணுமா கேட்க வேண்டியதா இருக்கு”., என்றாள்.
“கிண்டல் பண்ணுற”., என்று சொல்லிவிட்டு “ஹாஸ்பிடல் ஃபீஸ் எவ்வளவு”., என்றான்.
அவளோ சாதாரணமாக “அத்தையோட பைல் ல தான் இருந்துச்சு., எல்லா பில்லும்”., என்று சொல்லவும்..,
அதைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்த நந்தனின் அப்பா சென்று மருத்துவமனையில் கொடுத்த பையிலை எடுத்துக் வந்து பார்க்க அதில் அதற்கான பில் தொகை இருந்தது..,
மெடிசின்., ஹாஸ்பிடல்ல சேர்ந்தது ஒரு நாள் சார்ஜ் எல்லாம் சேர்த்து அதில் இருக்க அமௌன்ட் ஐ பார்த்தவர்கள் “நிவி நீ எப்படி கட்டின” என்று நந்தன் கேட்டான்.,
“நான் உங்ககிட்ட சொன்னேன் இல்ல., அப்ப ஹாஸ்டல் ல இருக்கும் போது பேங்க்ல போட்டு வச்சுருப்பாங்க., அந்த ஏடிஎம் கார்டை வைத்து யூஸ் பண்ணிக்கிட்டேன்”., என்று சொல்லவும்.,
நந்தனின் அப்பாதான் “என்னம்மா நீ இதை சொல்ல வேண்டாமா.., உனக்கு கொடுக்கனும் இல்லை”., என்றார்.
“அது அப்படி கிடையாது மா., உங்க அப்பா போட்டு விட்டது”., என்று சொல்ல.,
“அப்ப அப்பா கிட்டே இது பத்தி கேட்டுக்கோங்க”., என்று சொல்லி விட்டு போய்விட்டாள்.,
நந்தனிடம் “என்னடா” என்று கேட்க.,
” நீங்களே கேட்டுக்கோங்க பா”., என்று சொல்லவும்.,
அவர் உடனடியாக நிவேதாவின் அப்பாவிற்கு போன் செய்து நன்றி சொல்லிவிட்டு.., விஷயத்தை சொல்ல.,
“ஐயோ சும்மா இருங்க., எங்க அக்காவா இருந்தா நான் செய்ய மாட்டேனா.., இப்ப போய் இப்படி பேசுறீங்க நீங்க நிவி ட்ட பேசிக்கோங்க., அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது”., என்றார்.
“நிவியோ எனக்கு இதுக்கும் சம்பந்தம் கிடையாது” என்று சொல்ல
ஒரு பெண்ணை பெற்றவரின் மனம் என்னவென்பதை.., அவரும் ஒரு பெண்ணைப் பெற்றவர் என்பதால் புரிந்து கொள்ள முடிந்தது.
தன் வீட்டு மகள் வாழுமிடம் தனக்கு நெருங்கிய சொந்தமாக இல்லாவிட்டாலும் அதை சொந்தமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை சிலர் பெற்றவர்களுக்கு உரியது.,
மூன்றாம் நாள் மதியம் பதினோரு மணி அளவில் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் போது நிவேதாவின் போன் அடிக்க அருகிலிருந்த நந்தன் தான் போன் எடுத்தான்.
டாக்டர் காலிங் என்று வரவும் நீவி உனக்குத்தான் போன் பாரு என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் அட்டன் செய்வதற்குள் ஓடி வந்து போனை வாங்கியவள் அட்டன் செய்து காதில் வைத்த படி பின்புறம் சென்றாள்..,
“ஓகே டாக்டர்”., என்று சொன்னவள் ஸ்வேதாவிடம் நெருங்கி “நீங்க பார்த்துப்பீங்களா., ஒன்னு வாங்கனும் அது மட்டும் வாங்கிட்டு வந்துடுறேன் ப்ளீஸ்”., என்று சொல்லி விட்டு நந்தனை கிளம்புங்க கிளம்புங்க என்று சொல்லி அவசர படுத்தினாள்.
நந்தனை இழுத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தாள்., அவனுக்கு இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள் ஏனென்று தெரியாமல்..,
“ஆமா இப்ப எதுக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்திருக்க”., என்று சொல்லவும்.
அவனை முறைத்து பார்த்தாள்.,
“நிவி., நமக்குள்ள தான் ஒன்னுமே இல்லையே., இந்த ஹாஸ்பிட்டல் வரவேண்டிய அவசியம் இப்பதிக்கு நமக்கு கிடையாதே., எதுக்கு வந்தோம்” என்று வாய்க்குள் அடக்கிய சிரிப்போடு கிசுகிசுப்பாக கேட்டான்.
அவன் பேச பேச அவள் முகம் வெட்கம் பூசினாலும்., “லூசு இந்த ஹாஸ்பிடல் வந்தா அதுக்கு தான் வரனுமா., ஏன் ன்னு கேட்காமல் ஒழுங்கா என்கூட வாங்க” என்றாள்.,
அவனிடம் சிரித்தபடி பேசினாலும் அவள் கண்களில் இருக்கும் துறுதுறுப்பு மட்டும் இன்னும் வரவே இல்லை என்பதை நந்தன் உணர்ந்திருந்தான்.
ஏனெனில் இப்பொழுதெல்லாம் அவன் அவளை அணைத்து படுப்பதைவிட., அவள் தான் அவனை அணைத்து அவன்மேல் முகம் புதைத்து படுத்திருந்தாள்.,
ஏதோ ஆறுதல் தேடும் குழந்தை போல அவனுக்கு தோன்ற தொடங்கியிருந்தது..,
டாக்டர் அறை அருகே வரவும் அங்கு உள்ள நர்ஸ் பார்த்துவிட்டு “வாங்க நீங்க வந்த உடனே டாக்டர் உள்ளே வரச் சொன்னாங்க”., என்று அழைத்தார்.
அங்கு அத்தனை பேர் காத்திருந்தாலும் இவள் வந்தவுடன் உள்ளே செல்வதை பார்த்தவன் “டாக்டரை ஐஸ் வச்சி வச்சுருக்கியா”., என்றான்.,
“அடிச்சிடுவேன் ஒழுங்கா உள்ள வாங்க”., என்று சொல்லியபடி அவன் கையை அழுத்தமாக பிடிக்கும் போது தான் அவன் அவள் கையிலிருந்த சில்லிட்ட உணர்வை உணர்ந்தான்.,
‘ஏன் இவ பயந்து போய் வந்து இருக்கா’., என்று யோசித்துக் கொண்டே அவள் கையைப் பிடிக்கும் போது அவள் கைகள் நடுங்குவது அவனுக்குப் புரிந்தது.,
டாக்டர் “வாமா உட்காரு” என்று சொல்லிவிட்டு.., “இப்ப எப்படி இருக்காங்க உங்க அத்தை” என்று கேட்கவும்.,
“நல்லா இருக்காங்க” என்று சொல்லி விட்டு டாக்டர் கேட்ட மற்ற விபரங்களைச் சொல்லி., பதிலுக்கு சிலவற்றை இவள் கேட்க.,
‘இவ எப்பவும் நம்ம கூட தானே இருக்கா.., அப்புறம் எப்ப இதெல்லாம் அம்மா ட்ட பேசினா., எப்படி கேட்டு தெரிஞ்சிக்கிட்டா’ என்று நினைத்துக் கொண்டிருந்தான்.