Advertisement

உன்னை நினைத்து 9.2

அப்போ இந்த கல்பிரிட் வேலை பார்த்தது காவ்யாவா?

ம்……ஆமாம்!

சரி இந்த ஆறு மாதமும் எனக்கு, உங்க அப்பா, அம்மா இப்படி யாருக்கும் தெரியாமல் எப்படி பச்சை குழந்தையை வளர்த்த சரவணா!

அது வந்து அம்மா அப்பாட்ட வேலை இருக்கு சொல்லி ஊரில் இருக்கும்  நம் பிஸ்னஸ்  பார்த்துக்கொண்டே , அப்படியே சென்னையில் இருக்கும் பிஸ்னஸ்யையும் போனில் பேசியும் பார்த்து கொண்டேன்!

பட் அம்மா என்னை பார்க்க வரேன் சொல்லும் போது எனக்கு பக் பக்னு ஆச்சு, அப்புறம் அம்மாக்கு காய்ச்சல் சொல்லி அப்பா அலைய வேண்டாம்  அம்மாவ சொல்லிட்டாரு!

ஆனாலும் அப்ப…அப்ப… அப்பாக்கு என் மேலே சந்தேகம் ஏதோ வந்துடுச்சு போல,நான் வேற யாரோ பொண்ணுங்க கூட சுத்துவேன் நினைச்சு உங்க அப்பாக்கூட எங்க அப்பா தேனி வந்தாரு, ஆனால் அந்த டையம்  ஜகதீஷ் என்ன பார்க்க வந்த நேரமாக இருக்க,நான் அப்பாவ பார்த்துட்டு, நவிலன ஜகதீஷ் கிட்ட பேக் பண்ணி அனுப்புசிட்டேன்!

சரி இதுக்கு அப்புறம் உன்கிட்ட உன்மைய மறைக்குறது தப்புன்னு பட்டதாலயும் உன்னை மிஸ் பண்ணதாலயும், உன்னை பார்க்க நாங்க இரண்டு பேரும் வந்துட்டோம், எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லிட்டேன் ஜானவி,ஹாப்பா உன்கிட்ட உன்மைய முழுசா சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு நிம்மதியாக இருக்கு!

தீருட்டு வேலை நிறைய பார்த்து இருக்க, இந்த ஆறு மாதத்தித்தில், என்றவள்,அப்போ இங்கே தான் இருக்காளா உன்னோட அருமை தங்கச்சி காவ்யா, படிக்க சொன்ன கண்ட வேலையும் பார்க்குறா, முதலில் எங்க வீட்டில் வந்த பிறகு, முதல் ஆப்பு அவளுக்கு வெக்குறேன், அடுத்த  ஆப்பு உனக்கு , இப்போ அடுத்து கொஞ்ச நாளைக்கு இங்க பனி நிறைய பேய போறதுனால  பிளைட் எல்லாம் ரத்து செய்துட்டாங்க கொஞ்சம் நேரம் முந்தி நீயுஸ்ல சொன்னாங்க என்று சொல்லி முடித்தவள் சரவணன் முகம் பார்க்க!

 அப்போ அப்பா அம்மா இப்போ வரலையா?

என்னை கேட்டா நீயே போன் போட்டு கேளு, நான் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு போகனும் நீ வரியா!

இல்லை நீ போயிட்டு வா நவிலன் இப்போ தான் தூங்கினான்  என்று சரவணன் சொல்ல

சரி என்றவள் காரினை எடுத்து ஜானவி கிளம்ப!

ஹெய் லோலிட்டா  என்ன பண்ண நவிலனை, எப்படி அவனுக்கு உன்னை தெரியுது?”ஜானவி”

அதை உன் பையன்ட கேட்டு நீ தான் சொல்லணும்,எப்பா என்ன வாய் பேசுறான் தெரியுமா உன் பையன், அவங்க அம்மாவ நான் எதுவும் செய்ய கூடாதாம் என்கிட்ட பிராமிஸ் கேக்குது அந்த சின்ன குட்டி!

 ஏய் ஏன்டி இப்படி ஆவியா இருக்கும் போதும் இப்படி பிலாவிடுற ,ஆறு மாதம் குழந்தை பேசுமாம்.

பேசுமமாம் இல்லை பேசுவான் உன் மகன் ஆவிக்குட மட்டும் இல்லை உன் கூட, அவன் அப்பாக்கூட கூட பேசுறான், அவன் உன் கூட பேசுறதை  பார்த்து தான்,நான் அவன்  பக்கத்திலேயே  போனேன் , ஆனால்  அவன் ஆவியான என்கூடயே  பேசுனான் பாரு அங்கே தான் எனக்கு பயம் புடிக்க ஆரம்பித்ததே!

ஏன்?

இவன் உன்னை போல் இல்லை, ஆனால் உன்னை விட நவிலன் அப்டேட் வர்ஷன்!

கதை விடாத பேபி!

கதை விடலை ஜானவி, இங்கே உனக்கும் தெரியாமல் உன் வாழ்க்கையில் நிறைய விஷயம் நவிலனால நடக்க போகுது!

இந்த குழந்தை நவிலன் உனக்கும் சரவணனுக்கும் பிறந்தவன் சொன்னால் நம்புவியா?

நோ வே! ஹாவ் இட்ஸ் பாஸிபள்!

இட்ஸ் பாஸிபள்,பிகாஸ் யூ ஆர் ஹிஸ் மதர், ஓன்றறை வருடம் முன்பு நீ விளையாட்டா ஸ்பர்ம் டோனேட் பண்ணல அதில் உருவானவன் தான் நவிலன் என்று ஆவியான லோலிட்டா சொல்ல!

ஹாவ் யூ நோ திஸ் (எப்படி உனக்கு தெரியும்)

 நான் என்னேரமும் உன்னுடனே இல்லையே, நான் அப்ப அப்ப ஆவூடிங் போகும் போது இதையும் செக் பண்ணுவேன் அப்போது தெரிந்தது!

நீ விடுற கதை நம்புற போல தான் இருக்கு லோலிட்டா, ஆனால் உண்மையான டாகுமெண்ட் நவிலன் எனக்கு பிறக்களை என்று இருந்தாலும் அவனை நான் வளர்களாம் என்று முடிவு பண்ணிட்டேன்!

யாரோ யாரோ செஞ்ச தவறுக்கு இந்த சின்ன குழந்தையை ஒதுக்கும் அளவுக்கு நான் மோசமானவளும் இல்லை இது  சீரியலும் இல்லை, இது என்னோட வாழ்க்கை!

Advertisement