Advertisement

உன்னை நினைத்து 7.2

திருமணம் முன் தினம்

“சீத்தா”, அக்கா உன்னோட கல்யாணம் நின்னுடும் ல!

என்னை கேட்டா, கண்டிப்பா  எனக்கு தெரியாது,இரு பக்கத்துல இருக்குறவன் கிட்ட கேக்குறேன் “ ஹெ சரவணா திருமணத்தை நிறுத்திடுவல?

கண்டிப்பாக என்று மேடையில் ரிசப்ஷனுக்காக  நின்று இருந்த சரவணன் சிரித்தபடியே சொல்ல!

ஹான் நின்னுடுமாம் டி, நீ என்ன பன்ற இந்த கூட்டத்தில இருக்குற பையன்கள் நேம் லீஸ்ட் கலெக்ட் பண்ணு, அதில்  நான்  எனக்கு பிடிச்ச பையனை  தேர்வு செய்யுறேன் என்று தங்கையிடம் கண்ணடித்து சொல்லியவள்,வரவேற்பிற்கு வந்த தன்னுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்க்கு ஹாய் சொல்லி பேசி அவர்களுடன் ஃபோட்டோ எடுக்க என்று ரகளையாக  அந்த இடத்தை விட்டு அவர்கள் நகர்ந்தவர்கள்!

பாரேன் கடைசில நம்ம ஸ்கூல் ல நம்ம கூட ஒன்றாக படிச்ச பையனையே திருமணம் பண்ணப்போறா நம்ம ஜானவி,”பிரீத்தி”.

யாருக்கு தெரியும் லவ் மேரேஜா கூட இருக்கலாம்,”அனுஷா”

லூசி, நோ வே அவன் என்கூட தான் டூ இயர்  முன்னாடி ரிலேஷன்ஷிப்ல இருந்தான்.

“என்ன  உன்கூடயா”,வினிதா  ஷாக்காக கேட்க!

 ஆமாம்  ஜஸ்ட்  இரு வருடம் முன்பு தான் பிரிஞ்சோம்  என்று சொல்லி லூசி சாப்பிட செல்ல!

கனிகா ஏய் என்ன சொல்லுறா டி இவ!

இதை முதலில் ஜானவி கிட்ட சொல்லனும் டி  வா அப்புறமா போய் சாப்பிடலாம்! “சரண்யா”

ஹெய் அங்கே பாரு நிறைய விஐபிலாம் ரிசப்ஷன்க்கு வராங்க,இப்ப பேசுனா பிரச்சினை ரொம்ப பெரிதாகும் வா சரண்யா  என்று அவள் கைப்பிடித்து இழுத்து கொண்டு  தோழிகள் நால்வரும் சென்றனர்.

ஹெ ஜானு உனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் நிப்பாட்டு டி அவன் நல்லவன் இல்லை, இதோ இங்கே நிக்குறாலே லூசி அவக்கூட ஆ ரிலேஷன்ஷிப்ல இருந்துருகான் டி , உங்கள் வீட்டில்  அவனை பற்றி என்ன விசாரிச்சாங்க என்று சரண்யா கோபமாக கேட்க!

சீத்தா, என்ன சொல்லுறிங்க சரண்யா அக்கா!

லூசி ஜானவியிடம் வந்தவள் நான் யூஸ் பண்ணி வேண்டாம் சொல்லி போட்டத தான் நீ  யூஸ் பண்ண போறே ஜானவி, ஆக்சுவல்லி,உன்னை நினைச்சா எனக்கு ரொம்பவே பாவமா இருக்கு,பட்  நீயும் வெளிநாட்டில் இருக்கும் போது, இது  போல லிவ் இன் ரிலேஷன்ஷிப் எல்லாம் உனக்கும் சகஜமான விஷயம் தானே ,சோ இரண்டு பேரும் ஜாடிக்கேற்ற மூடியா நல்லா இருங்க என்று நக்கல் சிரிப்பை உதிர்க்க!

ஜானவி  உனக்கான வாழ்க்கை துணை கண்டிப்பாக இவன் கிடையாது இப்பவே நிறுத்திடு டி “சரண்யா”.

அதே நேரம் உள்ளே வந்த ஜானவியின் அம்மா  என்ன நீங்கள் எல்லாம் இன்னும் கிளம்பளையா? இல்லை நைட் இங்கேயே தங்க போறிங்களா, ரும் அரேஞ்ச் பண்ணட்டா என்றவர், ஜானவி சீக்கிரமா தூங்கினால் தான்  காலையில் மூன்று மணிக்கு எழுந்துக்க முடியும் போ மா, என்றவர்

மற்றவர்களை பார்க்க!

இதோ இப்போ கிளம்பிடுவோம் ஆன்டி  என்றவர்கள் சீத்தாவிடம் சொல்லிவிட்டு நகர!

 ஏங்க எதுக்கு அந்த லூசி இங்கே வந்தா மருமக பொண்ணு கிட்ட  ஏதாவது சொல்லி இருப்பாளோ!

இதை எதுக்கு என்கிட்ட கேக்குற இதோ இருக்கானே உன் பையன் அவன் கிட்டயே கேளு!

அம்மா அவளை நான் கூப்பிடலை ஜானவி தான் கூப்பிட்டு இருக்கா லூசி, ஜானவி, நான் எல்லாரும் ஒரே ஸ்கூல் ல படிச்சவங்க!

அப்போ கல்யாணம் நடந்தது போல தான் என்று பார்வதி தலையில் கை வைக்க!

அம்மா எதுக்கு இவ்வளவு கவலை படுறிங்க!

பின்ன உன்னை பெத்ததுக்கு கவலை படாமல் இருக்க முடியுமா,”அன்னிக்கு ஏன் கிட்டயே வந்து அந்த பொண்ணு லூசி உன்கூட பழகுறது உன்னோட சொத்துக்காக தான்னு அவ்வளோ தைரியமா சொல்லுறா , நான் மட்டும் அதை விடியோ எடுத்து ஆதாரத்தை காமிக்கலனா நீ என்னை நம்பியிருப்பியா!

ச்சு…… பார்வதி விடு காலைல கல்யாணத்தை வெச்சிட்டு அவனை தூங்க விடாமல் பேசுற!

அதே நேரம் மாப்பிள்ளைக்கு பால் என்று கதவு தட்டி வேலை செய்பவர் ஒருவர் வந்து கொடுக்க!

ஹான் ஏன் இவ்வளவு லேட்   பார்வதி அவரிடம் கடித்தபடி வாங்கியவர் மகனிடம். கொடுத்தவர்  பால் குடிச்சிட்டு தூங்கு  சரவணா!

அதே நேரம் சித்தி என்று இலங்கோ  அங்கே வர!

இதோ  இலங்கோ வந்துட்டான்  அவன் பார்த்துப்பான் சரவணனை, சோ நீ வா என் கூட என்று மனைவியை அங்கிருந்து  அகற்றிக்கொண்டு நகர்ந்தவர் இலங்கோவிடம் பார்த்து கொள்ள சொல்லி சென்றார் ருத்ரன்.

சரவணன் கையில் இருந்த பாலை வாங்கி மடக்மடகேன்று குடித்த  இலங்கோ எப்பா எம்புட்டு பசி, இப்ப தான் கண்ணே தெரியுது, ஏன்டா எவ்வளோ வேலை உன் கல்யாணத்துல தெரியுமா, நான் உனக்கு பார்க்குற மாதிரி நீயும் என்னோட கல்யாணத்துல வேலை செய்யனும் சரியா!

ஆமாம் என்ன சார் கல்யாணத்தை பத்தி பேசுறிங்க!’சரவணன்’.

உன்னோட மனைவி சொந்தத்தில் நிறைய பச்சை கிளிகள் இருக்கு அதுல ஏதாவது ஒரு கிளியை எனக்கு பேச சொல்லனும்  சரவணா, நானும் எத்தனை நாளைக்கு சிங்கிளாவே சுத்தரது  அதான் என்று இளித்து கொண்டே கூற!

முதலில் எனக்கே நடக்குமா நடக்குதான்னு தெரியாது இதுல உனக்கு வெறயா!

என்ன சொல்லுற ப்ரோ என்றவன் தீடீரென டேய்  அண்ணா,எனக்கு மயக்கம் வரது போல் இருக்குடா சரவணா என்று  சொல்லி இலங்கோ மயங்கி சரிய!

இலங்கோ  மயங்கி சரிவதை பார்த்து டேய் என்ன ஆச்சு உனக்கு  என்றவன் அவனிற்கு தண்ணீர் தெளிக்க!

அதற்கும் இன்னும் எழுந்து கொள்ளாமல் இருக்க, அவன் பால் குடித்த அந்த டம்ளரை பார்க்க  அதுவும் நன்றாக இருக்க!

அதே நேரம் பதட்டத்துடன் மனமகன் அறைக்கு  சீதா, மாயா, வர்ண்ணா  இவர்களுடன் வந்த ஜானவி  அங்கே நின்றிருந்த சரவணனை பார்த்து   அப்பாடி இவனுக்கு எதுவும் ஆகலை என்று நிம்மதி அடைந்தவள்  வந்தவழியே செல்ல பார்க்க!

ஏய் எங்க டி போற நில்லு,என்ன கலந்த  அந்த பாலில்?என்ன வீஷம் கலக்குன?

என்னோட அத்தை பையன் அதை குடிச்சிட்டு பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கான்  என்று சரவணன் உரும!

அங்கிருந்து செல்ல நினைத்தவளின் காதிற்கு இது புது செய்தியாக இருக்க, அப்போது தான் அங்கு இருவர் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டும்  ஒருவர் படுத்து கொண்டு இருப்பதும் கண்ணில் பட!

ஹெ சரவணா நீ நினைக்கிற மாதிரி அது விஷம்லாம் இல்லை,தூக்க மருந்து தான் கொடுத்து இருக்கு  தேவை இல்லாமல் பேசாதே! ஜானவி

அப்போ எதுக்கு இங்க வந்த இருக்கானா இல்லை போயிட்டானான்னு பார்க்க வந்தியா! பிடிக்கலை என்றால் முன்பே உங்கள் வீட்டில் சொல்லனும், அது  இல்லாமல் எனக்கு தூக்கம் மருந்தோ விஷமோ கொடுத்து திருமணத்தை நிறுத்த கூடாது, பெரிய இவளா நீ! என்று பொறிய!

அதே நேரம் டேய் சரவணா இவன் டிரிங்க்ஸ் பண்ணிருக்கான் அதோட இவங்க கொடுத்த தூக்கம் மருந்தினாலும் தூங்குறான் டோன்ட் வொரி, கத்தாதே வெளிய தெரிஞ்சா பிரச்சினை ஆகிடும்!

உன்மை சொன்னதுக்கு ரொம்ப நன்றி வினோ அண்ணா, விட்டா இவரு எங்க குடும்பத்தையே கொலை கார குடும்பம்ன்னு சொல்லுவாரு போல!’வர்ண்ணா’.

ச்சு………. போலாம் வாங்க எதுவும் பேசாதிங்க என்ற ஜானவி!

சரவணனை கண் கலங்கியபடி அடி பட்ட பார்வை பார்த்தவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தவள் தனது அறைக்கு வந்து ஒரு பொட்டு தூக்கம் கூட தூங்காது, யோசிக்க தொடங்கினால்!

என்னால் இனி வரும் காலம் முழுவதும் இவனுடன் ஒன்றாக சேர்ந்து வாழ முடியுமா!இவனை திருமணம் பண்ணலாமா!வேண்டாமா?

 நான் இப்போ முடிவு எடுக்குறது தான் என்னோட வாழ்க்கை, சரி நான் வேறு யாரையேனும் திருமணம் செய்தால் சந்தோஷமாக இருப்பேனா?

மனதில் ஒருவனை நினைத்து வாழ்வில் வேறு ஒருவருடன் மணவாழ்வில் இடுபடுவது நன்றா?

கடைசி கேள்வியாக  தனது மனதிடம் தானே அந்த கேள்வியை கேட்டாள் உன்னால் அவனை மறக்க முடியுமா?

அதற்கு இல்லை என்ற பதில் வெளியேற!

இப்போது அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்திருந்தாள் ஜானவி.

Advertisement