Advertisement

ஒப்பனைகள்

தேவையில்லை

உன் அன்பே

போதும்

என்னை அழகாக்க…

 ஜானவியின் கைகளில்  மோதிரத்தை அனிவிக்க சென்ற சரவணன்,அவள் முகத்தினை பார்த்து ஜானு நீ இப்போ கூட வேண்டாம்  என்று சொல்லி இந்த நிச்சயத்த நிப்பாட்டலாம், பட் ஒன்ஸ் உன்னோட கைகளில் என்னோட பெயர் பதித்த இந்த மோதிரத்தை நீ போட்ட பிறகு  நீ தான் என்னோட வாழ்க்கை , அதில் எக்காரணம் கொண்டும் உன்னை  வெளியேற அனுமதிக்க மாட்டேன் என்று அவளை பார்த்து உறுதியாக சொல்ல

அந்த சொல்லில் ஏனோ அவன் கண்களையே பார்த்தவள்,ஹோ…… அப்படியா அப்போ பார்க்கலாமே நீயா நானா என்று சிரித்தபடி தலை சாய்த்து சொல்ல!

மற்றவர்களோ அவர்கள் ஏதோ சிரித்தபடி பேசிக்கொள்ளுவது  போல் தோன்றினாலும் அவர்கள் மட்டுமே தெரியும் அவர்கள் எதனை பற்றி பேசிக்கொள்கிறார்கள் என்று.

சொந்தங்கள் அனைவரும் ம்ம்… சீக்கிரம் மோதிரம் மாற்றுங்கள் என்று சிரித்தபடி படி கூற

சரவணனும் ஜானவியும் தங்கள் பெயர் பதித்த அந்த மோதிரத்தை இருவரும் மாற்றிக்கொண்டு அந்த நிச்சயத்தை உறுதி படுத்தினர்.

அடுத்து இருமாதம் கழித்து திருமணம் என்று பெரியோர்கள் உறுதி செய்ய,

ஜானவி மற்றும் சரவணனுக்கு  நலங்கு வைத்து தங்கள் குடும்பங்களுடன் புகைப்படம் எடுத்து  கொண்டிருக்க!

ஜானவி மை கிர்ள் வாழ்த்துக்கள் என்று கைகுழுக்கியபடி  ராபர்ட் சந்தோஷ சிரிப்போடு வாழ்த்து சொல்ல.

நன்றி ராபர்ட் என்றவள் இவர் ராபர்ட் என்று கேலிசிரிப்பை சரவணனுக்கு பரிசளித்தவள்,ராபர்டை  அறிமுகப்படுத்த!

ஹோ….. இவரு தான் அந்த ராபர்ட்டா என்று ஜானவியை பார்த்து சரவணன் கேட்டவன, ராபர்ட்டீற்கு ஹாய் சொல்ல!

ஹெ ஜான் நீ என்னை  பற்றி முன்னமே சொல்லிட்டீயா உன்னோட ஹப்பி  கிட்ட ,சில்லி கிர்ள் என்றவன்  நைஸ் டூ மீட் யூ , நான் இப்போ போறேன் அப்பறமா பேசலாம் ஜான் பற்றி கண்ணடித்து கூறி செல்ல!

ராபர்ட் டாட்டா இப்ப இங்கே இருந்து கிளம்பு என்று ஜானவி சொல்லாமல் சொல்ல

ம்…. போறேன் போறேன் என்றபடி ராபர்ட் செல்ல.

என்னம்மா ஜான் மெறே ஜான் கல்யாணத்த நிப்பாட்ட ராபர்ட்ட சொல்ல போறேன் சொன்னியே சொல்லலையா,அச்சோ🫢 என்று சரவணன் பரிகாசத்து பார்க்க!

அச்சோ🤭😂 உனக்கு அந்த கவலை வேண்டாம் டா சரவணா , நீ என்னை பேசினதுக்கு வருந்த வைக்க கடவுளா,எனக்கு கொடுத்த சான்ஸ் மிஸ் பண்ண மாட்டேன் ,இந்த திருமணத்த கடசியில்  தான் நிப்பாட்டுவேன் ஈஈஈஈஈஈஈஈ……என்று ஜானவி பல்லை காட்ட!

சகிக்களை என்றவன் முகத்தை திருப்ப!

சில மாதங்களுக்கு முன்பு….

அன்று வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட  வெளியே சில்லென்ற காத்து வீச அதனை ரசித்தபடி மொட்டை மாடியில் அமர்ந்தபடி தனது மொபைலில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட்க்கு லைக் கொடுத்து கொண்டிருந்தவனுக்கு, திரையில் தெரிந்தவளை கண்டு சற்று அதிர்ந்தவன் ஆமாம் இவ எப்போ யூ.கே ல இருந்து இந்தியா வந்தா, அந்த போஸ்ட் கிழே கடைசியாக எங்கள் ஆருயிர் தோழி ஜானவி தேவி பேக் என்று அவன் ஃபாலோ பண்ணும் பெண் தோழி போட்டிருக்க,இவனுக்கு ஆச்சரியம் ஸ்கூல் ல குட்டி பிசாசு போல எல்லார்கிட்டயும் பீட்டர் இங்கிலிஷ் விட்டுட்டு,அப்படியே எங்க பெஞ்ச் முன்னாடி வந்து கதை பேசிட்டு போவலே,இப்போது பார்த்த வெள்ளை பூதம் போல் இருக்கா ,ஓ…….. யூகே ல இருந்த மாயமாகக் கூட இருக்கலாம் என்று சரவணன் நினைத்தவன்!

ஜானவி தேவி டிரஸ் டிசைனர் என்று இருந்த இன்டாகிராமில் ஃபாலோ ரெக்வஸ்ட்    கொடுத்தவன் அடுத்து அவனுக்கு கால் வர அதனை அட்டென்ட் பண்ணியவன்,”இல்லை நீங்க அந்த லோட் குடோன்ல வைங்க நான் அங்கே வரேன் என்று அலைபேசி துண்டித்தவன் தனது வேலை பார்க சென்றிருந்தான் சரவணன்.

அன்று திருமணத்திற்கு புடவை வாங்க காஞ்சிபுரம் செல்வதாக இருவரது பெற்றோரும் முடிவு எடுத்தவர்கள் அவரவர் கார்களில்

காஞ்சிபுரம் வந்து இறங்கினர்!

 அப்பா இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமாம் மாயா ,

 ஏன்டி அக்கா ஜானவி,”என்ன உன்னோட வருங்கால மாமியார் வீட்டுல இவ்ளோ தாமதம் பண்ணுறாங்கலாமே,இது எல்லாம் கேக்க மாட்டியா,ஹம்…… நான் இதுக்கு மேலேயும் வெயிட் பண்ணமாட்டேன் சொ வா அங்கே இருக்குற ஐஸ் கிரீம் கடையில் ஐஸ் வாங்கி தா! என்று சிறுபெண் போலே சீதா கேட்க!”.

சரி வாடி  சீத்தா,மாயா,வர்ண்ணா வாங்க நாம போலாம் ஐஸ்கிரீம் வாங்க! ஜானவி.

“தான்யலஷ்மி”ஏய் அவங்க இப்போ வந்துடுவாங்கலாம்  டி,நீ எங்கேயும் போகாதே  அம்மாக்கூட இரு ஜானும்மா !

அதை காதில் வாங்காமல் பெண்கள் நால்வரும் தமக்கு ஐஸ்கிரீம் வாங்கியவர்கள்,தமது தம்பிக்கு வாங்கி வர  அதே நேரம் சரவணன் கார் வந்து நிற்க!

காரிலிருந்து இறங்கிய  தனது குடும்பத்துடன் இறங்கிய ருத்ரன் பார்வதி தம்பதியினர் தாமதம் ஆனதற்கு மன்னிப்பு வேண்டியவர்கள் நல்ல நேரத்தில் மூகூர்த்த புடவை எடுக்க உள்ளே சென்றனர்.

சரவணன் ஐஸ்கிரீமுடன் நிற்கும் அவளிடம் வந்தவன் அவள் கைகளில் இருந்து ஐஸ்கிரீம் வாங்கிய படி முன்னே செல்ல,

ஏய்….. அது என்னோட ஐஸ்கிரீம் என்று இவள் சொல்ல !

அவன் அதை கேலாதவன்  போல் சென்றவன் தனது  குடும்பத்துடன்  வந்த சின்னப் பெண்குழந்தைக்கு  கொடுக்க!

அதுவோ  வாங்கி விட்டு அவன் கன்னத்தில் முத்தா வைத்து ஐஸ்கிரீமை ருசித்து கொண்டிருந்தது.

“ஏய் ஜானு நீ உஷாரா இரு உன்னை  கவர் பண்ணுறதுக்கு,இப்படிலாம் பண்றாங்க”,“மாயா”

“ஆமாம் டி நீ இப்போ கூட சொல்லு என்னோட குட்டி தம்பிய உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடுறேன்”,“வர்ண்ணா”

அடியே வர்ண்ணா அவன் காலேஜ் முதல் வருடம் டி  படிக்குறான், அறிவு இல்லையாடி உனக்கு,”ஜானவி”

இல்ல ஜானு சர்வேஷ் என் தம்பி அவனுக்கு உம் மேல கண்ணு, உனக்கு திருமணம்னு கேள்வி பட்ட அவன் சின்ன இதயம் ரொம்ப டேமேஜ் ஆச்சு, வர்ண்ணா சோகத்துடன் சொல்ல!

இவ்வளவும் கடையுனுள் உள்ளே நுழைவதர்குள் நால்வரும் பேசியபடியே வந்தனர்.

 “கிரிதரன்”நம்ம துணி கடைக்கு ஆர்டர் கொடுக்குற கடை இதுதான் ருத்ரன் நாம வருகிறத பத்தி அவங்க கிட்ட முன்னாடியே  சொல்லியாச்சு  என்று சிரித்தபடி கூறியவர்!

அங்கே இவர்களை  பார்த்து வரவேற்றப்படி  வந்த மேலாளர்  உள்ளே அழைத்து சென்றவர் அவர்களை தரையில் இருந்த பாயில் அமரவைத்தபடி புடவை விரித்து காமிக்கும் படி அங்கிருந்த ஊழியரிடம் கூறியவர் சற்று நகர்ந்து போய் நின்று கொண்டார்.

ஜானவி நீல நிறத்தில்யிருந்த பட்டுப்புடவை தேர்வு செய்தவள் தனது அத்தையிடம் கேட்க!

சரவணனோ ரோஜாவும் தங்க நிறம் கலந்த பட்டுப்புடவை  தேர்வு செய்தவன் அம்மா இது நல்லா இருக்கும் அது வேண்டாம் என்க!

ஜானவி  நான்  எனக்கு பிடிச்சிருக்கு சொன்னதுனாலே வேண்டாம் என்கிறாய் என்று அவனை பார்வையால் முறைத்தவள் இந்த புடவை தான் திருமணத்துக்கு என்று உறுதியாக இருக்க!

இவர்கள் இருவரும் பார்வையால் முறைத்தும் எரித்து கொண்டு இருந்தவர்களை பார்த்து,”நேத்ரா சிவப்பு மற்றும் குங்கும நிறம் தான் திருமணத்திற்கு நல்லது அதனால் நாம அதைப் பார்க்கலாம் அண்ணி என்று இருவரையும் பார்த்து பார்வதியிடம் சொன்னவர் உங்களுக்கு ஓகே வா என்று கேட்க!

அப்ப இந்த முருகன் திருக்கல்யாணம் கோலம் உள்ள இந்த சிவப்பு நிற சேலை ஜானவிக்கு நல்லாருக்குமே என்ற பார்வதி  எங்க ஜானவிக்கு இந்த புடவைய கட்டி காட்டுங்க என்று பார்வதி கேட்க!

அந்த கடையில் வேலை பார்க்கும் பெண் அழகாக  மடிப்பு வைத்து கட்டி காட்ட!

அவள் வெள்ளை நிறத்திற்கு அம்சமாகவும் எந்த அணிகலன்கள் இல்லாமலே அப்ஸரஸாக சேலையில் ஜொலித்தாள்.

 சரவணன் மெய்மறந்து அவளை பார்க்க!

அதே நேரம் அவனை பார்த்த அவளுக்கோ,என்ன இவன் இப்படி பாக்குறானே, பார்வையே  சரியில்லையே ஜானவி என்று தனக்குள் பேசியவள்.

“வித்யா”,என்ன மாமா அந்த சேலை வேண்டாம் இந்த சேலை வேண்டாம் என்று சொல்லிட்டு வெச்ச கண்ணு வாங்காம இப்படி பாக்குறிங்க ஜானவிய என்று சத்தம் போட்டு பேச  மற்றவர்கள் சிரித்தபடி பார்க்க அவனுக்கோ வெக்கம் வந்துவிட்டது அவன் அங்கிருந்து அப்படியே நகர.

மற்ற எல்லோரும் அவரவருக்கு சேலை தாவானி  என்று எடுக்க தனக்கு பிடித்த நீல நிற சேலை மற்றும் ரோஜா நிற சேலையை   அங்கே வேலை செய்யும் உழியரிடம் பில்லிங்கு எடுத்து செல்ல சொல்லியவள் பணத்தை பே பண்ணிவிட்டு  அங்கே தன்னையே பார்த்த படி போன் பேசிக் கொண்டு இருந்த சரவணனிடம் வர!

இவள் தன்னருகே வருவதை பார்த்தவன்  ஃபோனை கட் செய்து அவளை பார்க்க!

எதுக்கு எனக்கு பிடிச்ச சேலை எடுக்க விடாமல் பண்ணிங்க!

எப்படி இருந்தாலும்  நீ திருமணத்த நிறுத்த தான் போறே, எங்க அம்மா திருமணம் நின்னுச்சேன்னு சும்மாவா இருப்பாங்க அதே மேடையில் அழகா அம்சமா இருக்குற வேற பெண்னை முடிவு பண்ணுவாங்க சோ எண்ணோட  எதிர்கால மனைவிக்கு நான் செலக்ட் பண்ணேன்.

ஹோ……. அச்சோ பாவம் உன்னோட எதிர்கால மனைவி நீ சூஸ்  பண்ணத போட மாட்டா  பிகாஸ் நான் அதை வாங்கிட்டேன்! என்றவள் பொம்பளை பொறுக்கி இடியட் என்று   அவனை மனதில் திட்டுகிறேன் என்று சிறிது சத்தமாக கூறியபடி அவள் செல்ல!

என்ன பொம்பளை பொறுக்கியா! இரு டி நீ  உனக்கு பொம்பளை பொறுக்கி என்ன பன்னுவான்னு காட்டுறேன்.

Advertisement