Advertisement

உன்னை நினைத்து 6

ஏங்க கிரிதரன் உங்க ஃப்ரெண்டு தானே அவரிடம் ஜானவிய நம்ம பையன் சரவணனுக்கு கேளுங்களேன்  நல்ல பொண்ணா இருக்கா அந்த பெண்ணும் நம்ம சரவணனும் ஃப்ரெண்ட் வெற கேளுங்களேன் என்று விடாமல் ருத்ரனை பார்வதி நச்சரிக்க!

முதல உன் பையன் ஒழுக்கமா இருக்கானான்னு பாருடி,இவனை நம்பி நான் வெளியே பொண்ணு கேட்டா என்ன செருப்பால  தான் அடிப்பாங்க!

ச்சு  சும்மா நீங்க தான் அவனை எதாவது சொல்லுறிங்க ஆனால் ஊர்ல இருக்குற அனைவரும் வைரத்தை பெத்துருக்கம்மான்னு சொல்லும் போது  எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா(அப்படியா பார்வதி😱🫢🤫)ஏன் ஜானவி அம்மாவே சரவணனை புகழுறாங்கனா பார்த்துக்கோங்களேன்!

என்ன புகளழுறாங்களா? அப்படி ஒன்னும் நல்லவன் இல்லையே நம்ம பையன்!

 ஜானவியை சரவணன் சின்ன வயசுல காப்பாத்தி இருக்கான் தெரியுமா உங்களுக்கு,அப்போ அவன் ஏதோ சின்ன பாப்பான்னு சொன்னான் பட் இப்போ தான் எனக்கு தெரியுது அது ஜானவி தான்  என்று அவங்க அம்மா சொன்னாங்க!

அப்படினா கோவில சாமி கும்பிடாம  இந்த கதை பேசுற வேலை தான் செஞ்சியா!

ச்…… நான் கோவிலுக்கு போனதே என் பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடு காமாட்சி தாயேனு கேட்கதான், அந்த அம்மாவும் என்னோட வேண்டுதலுக்கு செவிசாட்சி ஜானவிய கண்ணுல காமிசிட்டாங்க, இனி நீங்க தான் அவங்ககிட்ட பேசனும் என்று பார்வதி ருத்ரனிடம் கெஞ்ச!

சரி இன்னும் உன் பையன் சரவணன் எந்த பொண்ணுங்க பின்னாடியும் சுத்தலயே?

ஏங்க அவன்   இந்த ஒரு வருஷமா ஒழுக்கமா தானே இருக்கான்(அதுக்கு முன்னாடி என் மகன் திராத விளையாட்டு பிள்ளை 😁😁😁), நீங்க சும்மா இப்படியே பேசாதீங்க முதல்ல ஜானவி வீட்டில் பேசுங்க!

ம்….. சரிம்மா என்றவர் அடுத்து ஒரு வாரத்தில் கிரிதரனிடம் பேசி ஜாதக பொருத்தம் எல்லாம் சரியாக  இருக்க ,  பூ வைத்து திருமணத்தை உறுதி செய்திருந்தனர் பெரியவர்கள்!

சரவணன் ஜானவியுடன் பேச மொட்டை மாடிக்கு வருகை தர

அதே நேரம் மாடியில் வேகமாக வந்த ஜானவி சரவணனிடம் கத்த ஆரம்பித்திருந்தாள்,எதுக்கு நீ என் வாழ்கையில் நுழையர சரவணா என்று ஜானவி அவன் கண்களைப் பார்த்து கேட்க?

அவள் கண்களை பார்த்தவனோ

உன்னை என் வாழ்கையில் மிஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்லிச்சு, கண்ணுக்கு முன்னாடியே எனக்கு பிடிச்ச என்னோட விருப்பமான  பெண்,என் நண்பனோட மனைவியா கண்டிப்பாக உன்னை நினைத்து பார்க்க முடியவில்லை ஜானவி என்று மனதில் பேசியவன் வாயைத் திறந்து அவளிடம் சொல்லாமல் திமிராக  அவளை பார்த்து வைக்க😏😈

😡அதில் கோபம் கொண்ட ஜானவி அன்னிக்கு நான் உன்கிட்ட இன்ஸ்டாகிராம்ல பேசும் போது என்னை ஃப்ரெண்ட் டா பார்க்க முடியாது தானே சொன்ன,நானும் உன்னிடம் பேசுவதை கூட நிப்பாட்டினேனே அப்படி பேசினாலும் இரண்டு நாள் பேசி இருப்போமா! சொல்லு  சரவணா இப்போது அவள் கத்த!

எதுக்கு கத்துர! நான் பேச வந்ததே நீ தான் கரணுக்கு பார்த்த பொண்ணுன்னு எனக்கு தெரியாது அப்பறம் உன்னோட மாமா பெண்தான்  மாயா என்று கூட தெரியாது! என்னோட நண்பன் அவனுக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த யோசனை கேட்டான் நானும் இலவசமா ஆலோசனை சொன்னேன் பட் அது எனக்கே எதிர்வினை ஆக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

ம்…. என்ன யோசனை என்னோட மாமா பெண்ணை பிடித்து இருக்குனு கேவலமான யோசனை சொல்லி இருக்கியே கேடுகெட்டவனே ஸ்கூல் ல நல்லாத்தானே இருந்த ஏன்டா இப்படி கேவலமாக ஆயிட்ட!

எப்பா திட்டுற ஃபார்ம்க்கு வந்துட்டா இனிமே நமக்கு பிரச்சினை இல்லை சமாளிச்சடலாம் நம்ம செல்லத்த!

  நானும் அப்போதிருந்தே அப்படி தான் உனக்கு தெரியாதற்கு  நான் என்ன பண்ண!

தக்காளி தொக்கு   என்று திட்டியவள்

சரி உன் பிரென்டோட எனக்கான திருமண பேச்சை நிப்பாட்டியது போல நமக்கான திருமண பேச்சை நிப்பாட்டு பிளிஸ்!

என்ன எதுக்கு நிப்பாட்ட சொல்லுற என்னைப் பிடிக்கலையா உனக்கு என்று யோசனையுடன் சரவணன் கேட்க?

அது இல்ல நான் யூ.கே ல இருக்கும் போது ராபர்ட்ட லவ் பண்ணேன், ஹீ  இஸ் கமிங் டூ சென்னை பார் சம் ஆப் ஹிஸ் வொர்க்(அவன்  இங்கே சென்னைக்கு  சில வேலை விஷயமாக வருகிறான்)சோ அந்த நேரம் வீட்டில பேசலாம்னு பார்த்தா, உங்க வீட்டிலோ  நாளைக்கே நிச்சயம் சொல்லி அடுத்த மாதமே திருமணம் சொல்லுறாங்க !

இப்போது சரவணனோ அப்போ அங்கே போய் படிக்காமல் இந்த வேலை தான் செஞ்சியா😡 நான் என்னோட பெற்றோரிடம் நான் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதால் தான் இவ்வளவு தூரம் வந்திருக்காங்க, இதுக்கு மேல நீயே உங்க வீட்டிலே பேசிடு என்றவன் அங்கிருந்து நகர!

போட போ நான் ராபர்ட் ட பேசி திருமணத்த நிறுத்துறேன் அப்புறம் அங்கே பார்ட்டி ஹால் ல அசிங்கபடாதிங்க மிஸ்டர் சரவணா என்று இவள் மொட்டை மாடியில் கத்த அதனை கேட்டும் கேட்காமல் அவன் கோபமாக செல்ல

 :

அதே நேரம் ஜானவி அருகே இருந்த சீதாவின் போன் ஒலி எழுப்ப,அதனை எடுத்தவள், இதோ பெரியம்மா கீழே வரோம்.

 என்னவாம் டி அம்மாவுக்கு ?

சீக்கிரமா மாப்பிள்ளை வீட்டில கிளம்பராங்களாம் கீழே வரனும் சொல்றாங்க,ஆமா நீ என்ன முடிவு எடுத்துருக்க? ஜானவி

ராபர்ட்ட பேசனும் இரு போன் போடுறேன்

ஹலோ ராபர்ட் எங்க இருக்கீங்க  எப்போ வருவிங்க,

ராபர்ட்: ஜானவி இங்கே எண்ணோட வேலை இன்னும் முடியலை நான் வர தாமதம் ஆகும் நாளைக்கு பார்க்கலாமா?

ஜனாவி: இல்லை ராபர்ட் நாளைக்கு எனக்கு எங்கேஜ்மெண்ட்  அதனால தான் உன்கிட்ட இன்னிக்கு பார்த்து பேசனும் சொன்னது!

ராபர்ட்: வோவ் காங்கிரஜ்லேசன்ஸ்  ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை சரி கண்டிப்பாக நாளை உன் எங்கேஜ்மெண்ட்ல இருப்பேன் அட்ரஸ் வாட்ஸ் அப்பில் அனுப்பு இப்போது என்னால் பேசமுடியாது பை என்று அழைப்பை துண்டிக்க

சீதா:என்ன ஜானவி அக்கா நீங்க முன்னாடியே உங்கள் மனதில் இருந்த காதலை சொல்லி இருக்கனும் மிஸ் பண்ணிடீங்க

ஜானவி  அது காதலான்னு தெரியாது பட் ராபர்ட் ஜெம் பர்சன்,ஹி ரெஸ்பெக்ட் வுமன்

யாரோ தெரியாத மோசமானவர்களை திருமண பண்ணுறதுக்கு ராபர்ட் என்னோட ப்ரெண்டை திருமணம் பண்ணா நல்லது தோனுச்சு!

நிச்சயதார்த்தம் தினம்

காலையில் ஜானவியின் ஒன்று விட்ட அத்தையின் குடும்பம் சித்தப்பாவின் குடும்பம், ஜானவி தாய்  தான்யலட்சுமியின் அண்ணன் குடும்பம் என்று ஒவ்வொருவறாக வர அவர்களை     தான்யலட்சுமி மற்றும் நேத்ரா(சீதாவின் தாய்) உபசரித்தும் அவர்களுடன் உரையாடி கொண்டு இருந்தனர்.

அப்போது ராபர்ட் கிரிதரனுடன் பேசியபடியே வீட்டினுள் நுழைந்தவன் அங்கிருந்தவர்கள் அனைவரையும் பார்த்து சிரித்தவன் அவர்கள் அனைவருடனும் உரையாட ஆரம்பித்திருந்தான்

 ஜானவி  தந்தையான கிரிதரனுக்கு யூ.கே வில் தொடங்க இருக்கும் ஹோட்டல் கிளையை பார்ப்பதற்காக ஜானவி பத்தாவது படித்து முடித்தபின் யூ.கே விற்கு சென்றுவிட்டிருந்தனர்.

இங்கே இருக்கும் நான்கு கிளைகளை தனது தம்பி,ஒன்று விட்ட தங்கை மற்றும் மச்சினனை பார்த்து கொள்ள சொல்லியவர் அங்கு தொழிழை கவனிக்க தன் மனைவி மக்களுடன் கிரிதரன்  யூ.கே செல்ல.

ஆங்கே யூ.கே வில் ஜானவியின் உற்ற நண்பனாகவும் சகோதர பாசத்துடன்  பாதுகாவலனாகவும் அவளுக்கு துணையாக இருந்தான் ராபர்ட்.

ராபர்ட்  வெளிநாட்டவன் 6 அறை அடி உயரம் ஜிம் பாடி வெண்மையும் ரோஜா நிறம் கலந்த அசுரனை போல் இருக்கும் ஆண் அழகன்.

யூகே வில் கிரிதரனை பார்க்க சொந்தங்கள் செல்லும் போது ஜானவியின் உற்ற தோழனாக இருக்கும் ராபர்ட்டீடம் அன்பாக பழகினர் குடும்பத்தினர்

ராபர்ட்டீற்கு இந்திய கலாச்சாரம் நிரம்பவே பிடிக்கும் அதனாலும் இந்திய பெண்ணான ஜானவியிடம் பழகிய இருக்கலாம் என்பது ஜானவியின் கருத்து

 மறுநாள் ஜானவி கன்னத்தில் கைவைத்து சோகமே உருவான சித்திரமாய் திருமணத்தை நிறுத்துவதற்கு தங்கை அத்தை மற்றும் மாமன் மகள்களிடம் யோசனை கேட்க !

அவர்களோ யோசனை சொல்கிறேன் என்ற பெயரில் விளையாடி கொண்டு இருந்தனர்.

இதனை பார்த்தபடி ராபர்ட் காங்கிரஜ்லேசன்  ஜானவி ஏன் என்னிடம்  திருமண உறுதியானதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை   என்றவன்,மற்றவர்களுக்கு ஹாய் என்க!

அதே நேரம் ஜானவி மூவருக்கும் கண்களை காட்டி வெளியே போகும் படி சைகை காட்ட

மற்றவர்கள் அங்கிருந்து நகர!

என்னம்மா கல்யாண  பெண்ணே இப்பவே எங்கேஜ்மெண்ட் கனவா உன்னை கட்டிக்க போற அந்த பிரின்ஸ் யாரு? என்று சந்தோஷத்துடன் ராபர்ட் கேட்க!

ராபர்ட் பேசமா நீயே என்னை திருமணம் பண்ணிக்கிறியா!

 இதனை கேட்க ராபர்ட் அதிர்ந்தவன் பின் நிதானமாக,ஜானவி நீ எனக்கு குட்டி தங்கைம்மா, எப்படி இப்படி என்னை பார்த்து கேட்க தோனுது, நான் ஏதாவது உன்னை சலன படுத்தி இருந்தா மன்னிச்சுக்கோ, ஆமாம் எதனால் இப்படி கேக்குறே

சாரி நான் கேட்டது தப்பு தான் மன்னிச்சுக்கோ ராபர்ட் ! என்று கண்கலங்கிய படி கூறியவள் யாரோ தெரியாத குரங்கை கல்யாணம் பண்ணுறதவிட என்னை பற்றி தெரிஞ்ச உன்னை பண்ணா நல்லது தோனுச்சு.

பார்த்தியா சந்தடி சாக்கில் என்னை குரங்கு சொல்லுற!

பச் நான் உன்னை சொல்லலை எனக்கு பார்த்து இருக்காங்களே அவனை சொல்லுறேன்.

ஏன் அவன் நல்ல பையன் இல்லையா?அங்கிள் அப்புறம்  எல்லாரும் விசாரித்தில் நல்லவன் என்று தானே சொன்னார்கள்.

உனக்கு பிடிகலைனா சொல்லு நான் நிச்சயத்தை நிறுத்துகிறேன்.

தயங்கியபடியே இல்லை அவன் தான் என்னோட ஃபர்ஸ்ட் ஸ்கூல் கிரஷ்  ,ஆனால் எனக்கு இப்போ அவனை பிடிகலை என்ன செய்ய ராபர்ட்! என்று அப்பாவியாக ஜானவி கேட்க!

நீ உன்னை ரொம்ப குழப்பாத ஜானவி அமைதியாக யோசித்து நல்ல முடிவு எடு,நீ எது செய்தாலும் நான் உனக்கு பிரதேர்ரா உதவி பண்ணுவேன் என்று சொல்லியவன் அந்த அறையை விட்டு வெளியேறினான் ராபர்ட்

ராபர்ட் வெளியேறியவுடன் அறையில் நுழைந்த சீத்தா ஆமாம் அக்கா என்ன சொன்னாங்க ராபர்ட்!

நான் அவருக்கு குட்டி தங்கையாம்!

அச்சோ அப்போ என்ன பண்றது அக்கா!

என்ன பண்றது திருமணம் பண்ணணும் அவனை  அந்த சரவணனை .

நான் வேணும்னா நம்ம கோபால் கிட்ட பேசவா அவனை திருமணம் பண்ணிக்கிறியா

ச்சீ லூசு அவன் என்னை விட மூன்று வயசு சின்னவன் டி.

நீ மூன்று வருடம் சின்னவன் நினைக்காமல் என் தம்பி கோபாலை திருமணம் செய்து கொள் ஜானவி, இல்லை  என்றால் அடுத்து வருகிற அறுபது வருடமும் சரவணனை திருமணம் செய்ததற்கு நீ மூக்கு கண்ணீர் சிந்த வேண்டியது தான் இருக்கும் பார்த்துக்கோ என்று மாயா ஒரு பக்கம் பயம் காட்ட!

நினைவுகள் முழுவதையும்

நீ நிரப்பி விட்டதால்

இன்று நிழல்கள் கூட

உன்னை தான்

நினைவு படுத்துகின்றது

Advertisement