Advertisement

உன்னை நினைத்து 5

ஏற்கனவே நிச்சயவரைக்கும் வந்த திருமணம் நின்றதாலும் ஜானவியின் பிறந்த நாள் என்பதாலும் கிரிதரன் தான்யலட்சுமி தம்பதியினர்  தங்கள் மகள் ஜானவியை அலைத்து கொண்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வர

ஏங்க அந்த பையன் கரண்,நம்ம பொண்ணு ஜானவிய பார்க்க வந்து புடிச்சிருக்கு சொல்லி நிச்சயம் வரை போனவன் தீடீரென மாயாவ பிடிச்சிருக்கு சொல்லுறான் அசிங்கம் பிடிச்சவன், அவங்க வீட்டலயும் அதுக்கு ஒத்து ஊதுராங்க

தான்யா கோவிலுக்கு வந்து இப்படி புலம்புவத நிப்பாட்டு நிச்சயம்  நடக்கலனு சந்தோச  பட்டுக்க,நீ வீட்டில் இருந்தா இப்படி வருத்த படுறேனு சொல்லி தானே கோவிலுக்கு அலைச்சிட்டு வந்தேன்.

ம்….. அம்மா சும்மா இருங்க கண்டதையும் நினைச்சு வருத்தபடமா கடவுளை நினைங்க நல்லதே நடக்கும்  என்று கண்சிமிட்ட!

 ம் சரி டி என்றவர் தன் குடும்பத்தின் நலனுக்காக வரிசையில்  நின்றபடியே மனதில் பிரார்த்தித்து கொண்டிருந்தார்!

அது சிறப்பு தரிசனம் என்றாலும் இந்த அகிலம் எல்லாம் காக்கும் காஞ்சி காமாட்சி அன்னையை  பார்பதற்கு  கூட்டம் கூடி நின்று எப்போதுடா அன்னையை காண்போம் என்று அனைவரும் நின்றுகொண்டு இருக்க  அந்த வரிசையில் ருத்ரன் சரவணன் பார்வதி இலங்கோ   என்று நால்வரும் நின்றிருந்தனர்.

ம்மா புடவை எடுக்க வந்தியா எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பி இருக்கலாம்,நீ தான் கோவிலுக்கு போகனும் சொல்லி பாரு எவ்வளவு தாமதம் ஆகுது பாரு, அங்கே நம்ம வீட்டுல எல்லாரும் கிளம்பிட்டாங்க நீ தான் வம்படியா காமாட்சி அம்மன பார்த்துட்டு போகனும்னு அப்படி ஒரு அடம்  என்று சரவணன் தன் தாயிடம் புலம்பி கொண்டு இருக்க!

ஆமாம் நான் அடம் தான் பண்ணேன் அதுக்கு என்ன இப்போ?, இங்கே காஞ்சிபுரம் வந்துட்டு எங்க அம்மா காமாட்சிய பாக்கலானா எப்படி ? ஏங்க நீங்க அவன் பேசுவதை வேடிக்கை பார்கிரிங்க   எதுவும் சொல்லமாட்டிங்களா அவனிடம் என்று சரவணனை மிரட்டியவர் கணவனிடம் புகார் வாசிக்க!

டேய் செத்த நேரம் சும்மா இரேன்டா, உனக்கு என்ன அவ்வளவு அவசரம்?

எனக்கு வேலை இருக்குடா இலங்கோ? என்று சரவணன் தந்தையை பார்க்காமல் வரிசையில் நடந்தபடி கோவிலின் சிற்பத்தை பார்த்து கூற!

டேய் அதான் சித்தி இவ்வளவு தூரம் சொல்றாங்களே அமைதியாக இருடா என்று இலங்கோ சரவணனிடம் கூற!

ம்…… என்றவன்  இலங்கோவிடம் கதை பேசிக்கொண்டும் அன்னையை டென்ஷன் ஆக்கி விளையாடி கொண்டும் இருந்தான் சரவணன்

மூலஸ்தானத்தில் காமாட்சி அம்பாள் நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்து முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி தலையில் கீரிடத்தில் பிறை சந்திரனை தாங்கி சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காமாட்சி அன்னை அருள்பாலிக்க , ஒரு புறம் ருத்ரன் பார்வதி சரவணன் இலங்கோ  காமாட்சி தேவியை தரிசனம் செய்ய மறுபுறம் கிரிதரன் தான்யலட்சுமி ஜானவி மூவரும் மனமுருக வேண்டி தேவியை கைகூப்பி வணங்கி கொண்டு இருக்க, சாமி தரிசனம் முடித்து குங்கும பிரசாதம் வாங்க ஜானவி கைநீட்டிய போது, நெற்றியில் குங்குமம் வைத்து நிமிர்ந்த பார்வதி ஜானவியை கண்டு ஆச்சரியம் அடைந்தவர், தன் தாயிடம் பேசி சென்று  கொண்டு இருந்த ஜானவியின் கையை பிடிக்க

தீடீரென தன் கையை யாரோ பிடிப்பது போல் இருந்ததை நினைத்து அந்த கைக்கு சொந்தகாரரை ஜானவி பார்க்க,”அங்கு சிரித்தபடி தன் முன்னே வந்து நின்ற சரவணனின் தாய் பார்வதியை ஆச்சிரியமாக பார்த்தவள் ஆன்டி நீங்க எங்க இங்கே கோவிலில்?”

அதான் நானும் கேக்குறேன் என்று சிரித்தபடி   பார்வதி கேட்டவர் எப்படி இருக்கேடாம்மா?

இன்னிக்கு என்னுடைய பிறந்த நாள் ஆன்டி,அதான்  காமாட்சி அம்மன பாக்கலாம் வந்தோம் பார்த்துட்டோம், என்றவள் யார்? என்று கேள்வியாக  நோக்கிய தான்யலட்சுமி மற்றும் கிரிதரனிடம் அன்னிக்கு ஒரு ஃப்ரெண்டுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு சொன்னேன்ல  சின்ன வயதில் கூட என்னை காப்பாற்றினானே அவங்களோட அம்மா இவங்க!

ரோம்ப நால்லா வளர்த்து இருக்கிங்க பிள்ளையை என்ற பார்வதி  பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று ஜானவிக்கு கைக்கொடுத்து வாழ்தியவர் கையிலிருந்த குங்கும பிரசாத்தை ஜானவியின் நெற்றியில் வைத்தவர் தீர்க்காயுளுடன் சகலவிதமான சந்தோஷம் நல்லா வாழனும்டாம நீ!

தேங்ஸ் ஆன்டி என்றவள் பின்னாடி நின்றிருந்தவனை  அதிர்ச்சியுடன்  ஜானவி நோக்க!

அதே நேரம் ருத்ரனை பார்த்த கிரிதரன் என்ன ருத்ரன் எப்படி இருகிங்க  பார்த்து ரொம்ப நாள் ஆச்சு  எப்படி இருகிங்க!

ஆமாம் கிரிதரன்  நீங்க இங்கேயும், வெளிநாடுகளுக்கும்  வேலையா அலையுறதுல முன்ன போல பார்த்துக்க முடியரது இல்லை!

ஆமாம்  ருத்ரன் இப்போ இனி இங்கே தான் என்று மனைவி மகளை பார்த்து கூற!

அவரும் புரிந்து கொண்ட படி சிரித்தவர்  உங்க பொண்ணு அன்னிக்கு ஹாஸ்பிட்டலில்  என்ன மாயம் செஞ்சான்னு  தெரியல  என் மனைவி உங்க பொண்ணை பத்தியே பேசுவா,ரொம்ப நல்ல பொண்ணு!

 இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்க சரவணனோ ஜானவியை முதன் முதலில் சேலையில் தன்னுடைய கோபத்தையும் மறந்து அவளை ரசனையாக விழுங்குவது போல் பார்வையிட!

அவன் பார்வையில் பெண்ணவளுக்கோ  சொல்ல முடியாத தவிப்பும் பார்கிறான் பாரு  முழுங்குற மாதிரி என்று நினைத்தவள்,தன்  இரண்டு வீரல்களை அவன் கண்கள் இரண்டையும் குத்தி விடுவேன் என்று சைகை செய்ய!

அவனும் முடியாது போடி என்று சைகையால் கூற!

அவள் இரண்டு சின்ன கண்ணும் அவனை கோபத்துடன் முறைத்தபடி   தாயிடம் கோவில் பிரகாரத்தை சுற்றலாம்  என்க!

தான்யலட்சுமி தயக்கத்துடன் பார்வதியை பார்க்க, வாங்க நாங்களும் சுத்தனும்  எல்லாரும் ஒன்றாகவே  சுற்றலாம். என்றவர் அங்கிருந்த ஒவ்வொரு பிரகாரத்திலும் கடவுளை வணங்கி கொண்டு வர

ஒரு சன்னதியில் தனியாக நின்று பிராத்தனை  செய்து கொண்டு இருந்த ஜானவியிடம் ஹேப்பி பர்தடே டூ யூ ஜானவி  என்று சரவணன் கண்மூடி வேண்டி  கொண்டு இருந்தவளுக்கு  வாழ்த்து சொல்ல!

நன்றி என்றவள் அங்கிருந்து நகர போக, அவள் கைகளை பிடித்த சரவணன்  இப்போது தலை சாய்த்து சாரி சொல்ல!

அவன் தலை சாய்த்து சொன்னதில் மயங்கியவள்  சரி கையை வீடுடா சரவணா !

சரி விட்டுட்டேன் பர்தடே டீரிட் எங்கே என்று கேட்டவனிடம்!

அவள் முழித்து விட்டு தொலினை  குழுக்கி விட்டு  எதுவும் பதில் சொல்லாமல் செல்ல!

அவள் அடுத்த பிரகாரத்தில்  நுழையும் போது தானும் அவளினை தொடர்ந்தவன் , ஓய் ஜானம்மா என்ன எதுவும் சொல்லாமல் போற

சரி உனக்கு என்ன வேணும் சொல்லு என்று அவனை பார்த்து அவள் கேட்க!

ம்……. என்று தாடையில் கை வைத்து யோசித்தவன்,சரி வேற எதுவும் வேண்டாம் ஒரு கிஸ் அப்புறம் ஒரு  ஹக் போதும் டீரிட் என்று அவளை பார்க்க!

அவளோ திருந்த மாட்டல நீ!

 திருந்திட்டேன் சொன்னா நம்ப போறியா நீ!

இல்லை!

அப்பனா நான் திருந்தலை   என்று ஜானவியை கண்ணடித்து கூற!

 நான் ஆல்ரெடி கமிட்டெட் !

சரவணன் “சோ வாட் “

 கிளம்பாலாமா டா என்று கிரிதரன் ஜானவியை பார்த்து கூற

ஹான்ப்பா  என்றவள்  சரவணன் குடும்பத்திடம் சொல்லி ஜானவி குடும்பம் விடைபெற!

 ஒரு நிமிடம் ஜானவியை இருக்க சொன்ன பார்வதி  கார் பார்க்கிங்ல் இருக்கும் தங்களது காரிலிருந்து   இன்று வாங்கிய  ஒரு பட்டுபுடவையை எடுத்தவர்  அதனை ஜானவியின் கைகளில் பிறந்த நாள் பரிசாக தர

அச்சோ என்னது இது உங்க விஷ் மட்டும் போதும் இது எல்லாம் வேண்டாம் ஆன்டி என்க!

ச்சு புடவையை வேண்டாம் சொல்ல கூடாது இந்தா பிடி என்றவர் டாட்டா பை பை சொல்லி விடைபெற!

சரவணன் அவளுக்கு யாருக்கும் தெரியாமல் டாட்டா சொல்லியவன் பிளையிங் கிஸ்  கொடுத்து விட்டு சிரித்தபடி செல்ல!

இத்தனை வருடம்  காணமல் போன காதல் அடி ஆழத்தில் ஒலிந்து  கொண்டு இருந்தது இப்போது சிறிதாக வெளியே எட்டி பார்த்து  நான் எங்கும் போகமல் உன்னிடம் தான் இருக்கிறேன் சொல்லாமல் சொல்ல   அச்சோ  என்றானது ஜானவிக்கு

Advertisement