Advertisement

உன்னை நினைத்து 4.2

சரவணன் நான் உன்கிட்ட பேசனும் ஜானவி,நவிலன் உறங்கிய பின்  பேசலாம் காத்திரு என்றவன் குழந்தையை தனதரைக்கு  அழைத்து செல்ல!

குழந்தையோ  தாயை விட்டு  வருவதாலா அல்லது அந்த உருவம் சொன்னதை மீறி ஏதாவது  தன் தாயை சேய்துவிடும்மோ என்ற அச்சத்தில் குழந்தை நவிலன்  அழ தொடங்க,அவனை தோலில் போட்டு  தாலாட்டு பாடிய படியே குழந்தையை சரவணன் உறங்க வைக்க!

லண்டனில் இருந்து வந்தவள் சரவணனை சந்தித்தது அதன் பின் இருவருக்கும் பெற்றோர் விருப்பத்துடன் திருமணம் நடந்தது என்று அனைத்தும் இனிய கணவுகளாள் இருக்க  அவனை சீன்டி எனக்கு திருமணத்தில் சம்மதமில்லை என்று சொன்னது என்று அனைத்தையும் நினைக்க தொடங்கிய மனது ஆறு மாதத்திற்கு முன் செல்ல

 வாங்க நாமலும் போகலாம்……. சகோஸ்…….

ஆகாயம் சூரியன் இருந்தாலும்…..

தனியாக தவிக்கும் பெண் மனம்

தாங்கி பிடிக்குமா?

உன்னிடம்!

ஆகாயத்தில் வளர்ந்து வரும் சந்திரன் 🌙 என்னை பார் என்று  அந்த இரவில் பல்லை காட்ட  ஆனால் அவளோ வேறு ஒருவரிடம் டெக்ஸ்ட்  மெசேஜ் அனுப்பி கொண்டு இருந்தாள் ஜானவி “சோ நீ என்கிட்ட ப்ரெண்ட் டா பேசல சரியா! நான் உன்னை ஒரு நல்ல நண்பனாக நினைச்சேன் நீயும் மத்தவங்கள போல நிருபிக்குற!

என்னது? யூ ப்ளடி ராஸ்கல்  என்ன தைரியம் இருந்தா என்ன பார்த்து அந்த வார்த்தை கேட்ப😭

அந்த பக்கம் உள்ள நபர்: எனக்கு உன்கிட்ட பேச பிடிக்கலை  நான் இப்படி பேசுனா நீ பேசமாட்டேன் பார்த்தா திருப்பி என்கிட்ட பேசுற !

அவள் : சரி நான் இனிமேல் உன்னிடம் பேச மாட்டேன் பிளாக் பண்ணிடு என்னை!

அவன்: அதெல்லாம் நான் பண்ணமாட்டேன்

அவள்:   போடா பன்னி  என்று மெசேஜ் செய்தவள் அவனை முழுமையாக இன்டாகிராமில் பிளாக் செய்தாள் அவள் ஜானவி சென்னையில் season store(துணி கடை)தனது சித்தப்பா பெண் சீதாவுடன் மற்றும் நண்பன்  ராபர்டுடன் நடத்தி வருகிறாள்(துணி கடை என்றால் சாதாரணம் அல்லாமல் அது இண்டர்நேஷனல் லெவல் கிளோதிங்  ஸ்டோர்.)

ஜானவி season ஸ்டோர் மற்றோரு கிளையினை நுங்கம்பாக்கத்தில் திறக்க அதிகாரிர்களிடம் பேசிவிட்டு வெளியே வந்தவள் தன் காரின் முன்னே நிறைய பேர் சூழ்ந்து இருப்பதை கண்டு  அங்கு விரைந்தவள் கண்டதெண்னவோ கீழே விழுந்து காலிலும் கையிலும் ரத்த காயத்துடன் அமர்ந்திருந்த சரவணனை தான்,”என்ன இவன் இப்படி அடிபட்டு விழுந்து இருக்கான் என்று  நினைத்தவள் சுற்றிலும் பார்க்க அங்கு இருந்தவர்களே எதுக்கு இவ்வளவு வேகமாக வரனும் பாரு எப்படி விழுந்து இருக்கனு,இந்த காலத்தில் பசங்க எல்லாரும் இப்படி தான்  என்று சொல்லி கொண்டு இருக்க, மற்றோரு பக்கம் இவனின் இருசக்கர வாகனம் கிழே விழுந்ததில் பாகம் பாகமாக  பிய்ந்து   பரிதாபமாக இருக்க,

இப்போ இங்கே இருந்து எல்லாரும் போறிங்கலா  சும்மா பேசிட்டே இருகிங்க ஆக்சிடென்ட் நடந்தது எனக்கு  உடைஞ்சது என்னோட பைக் இதுல  உதவிக்கி கூட வரமா ஞாயம் பேசுறீங்க என்று சுற்றி உள்ளவர்களை பார்த்து வலியில் கத்திக்கொண்டு இருந்தவன் ஜானவியை பார்த்து அதிர்ந்தவன் அவள் தன்னை மெஸேஜில் திட்டியதை நினைத்து அவளை  பார்த்தும் பார்காதது போல் திரும்பியவன் நண்பன் சதிஷிற்கு அலைக்க மச்சான் நான்  தாம்பரத்தில இருக்கேன் வரேன்டா என்று அவன் உடனே பதில் தர !

எதுவும் செய்ய முடியாது இப்போதைக்கு என்று நினைத்தவன் அண்ணா ஒரு ஆட்டோ சொல்லுங்க அண்ணா என்று தனக்கு உதவி செய்தவரிடம் கேட்க,

இவன் தன்னை பார்த்தும் பார்க்காது போல் திரும்பியதிலே தனது வண்டியை எடுத்து செல்ல போனவள் அவன் எழுந்து நிற்க முடியாமல் கீழே விழுவதை பார்த்தவள் மனிதாபிமானத்தினாலும் தன்னை அன்று சிறுவயதில் காப்பாற்றியதாலும்  காரிலிருந்து இறங்கி அவனருகில் போய் நின்று வா நான் உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் சரவணா என்று ஜானவி அழைக்க

அவனும்  வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தவன் அவன் சரி என்று கூறி  எழும்ப முடியாமல் அழுகையில் கத்த!

ஏய் ச்சு…….  என்னை புடிச்சிட்டு நிக்க பாரு  சரவணா,அண்ணா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா  கார்ல் இவனை உட்கார வைக்க!

இருவரையும் பிடித்தபடி ஒரு காலை தூக்கியபடி நடந்து வந்தவன் இருவரின் துணையுடன் அந்த காரில் அமர்ந்தவன்  தனக்கு உதவி செய்தவருக்கு நன்றி சொன்னவன் வலியில்  கண்மூட!

 ஜானவியும் சீட் பெல்ட் அவனுக்கும் தனக்கும் போட்டவள் பக்கத்தில் இருந்த மிக பெரிய பிரைவேட் ஹாஸ்பிடல்  எமர்ஜென்சி வந்தவள் காரினை நிப்பாட்டி  வார்ட் பாய் உதவியுடன் அவனை வீல் சேரில் அமர்த்தி மருத்துவம் பார்க்க.

ஜானவி வெளியே அமர்ந்தபடி  அவர்கள் சொன்னவட்ருக்கு  பில் பே பண்ணியவள்   சாய்ந்து அமர!

எக்ஸ்ரே, ஸ்கேன் இன்னும் சில டெஸ்ட் களை எடுத்தவர்கள் அவனுக்கு சிறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது  கட்டு போட்டுள்ளோம் என்றவர்கள் கையினையும் காலினையும் அசையாமல் வைக்க  வேண்டும் என்று சரவணனிடம் சொன்னவர்கள் பத்து நாள் கழித்து வந்து பார்க்க சொல்ல!

சரி என்றவள் மாத்திரை வாங்கி  வந்து காரில் வைத்தவள் இப்போது  அங்கே அவன் அருகில் நின்றிருந்த அவன் அன்னை பார்வதியையும் சரவணனையும் அழைத்து கொண்டு அண்ணாநகரில் இருக்கும் சரவணனின் வீட்டில் விட்டவள் கிளம்புவதற்கு போக!

என்னமா உடனே கிளம்புற காபி குடிச்சிட்டு போகலாம்ல என்று பார்வதி சொல்ல!

அவளுக்கும் காபி தேவைப்பட்டது  காலையில் சாப்பிட்டது மதியம் அங்கே மருத்துவமனையில்  இருந்ததினால் சாப்பிட முடியவில்லை  உடலிற்கும்  ஓய்வும் உணவும் தேவைபட  காபி மட்டும் தாங்க ஆன்டி என்றவள் வீட்டிற்குள் செல்ல!

அதே நேரம்  தான்யலட்சுமி ஜானவிக்கு அலைபேசியில் அழைப்பு விடுக்க அதனை ஏற்றவள் பாப்பா இருட்டுது ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை என்று கேட்ட தாயிடம்!

அம்மா ப்ரண்டுக்கு சின்னஆக்சிடென்ட்  அதான் என்னன்னு பார்த்து வரதுக்கு நேரமாச்சு நான் வீட்டுக்கு தான் வரேன் வந்து சொல்லுறேன் என்றவள் அழைப்பை துண்டித்து,தன்னையே கோபமாக பார்த்தவனை கண்டுகாமல் வீட்டை சுற்றி கண்களை  சுழற்ற!

ஏய் எதுக்கு என்னோட போன் எடுத்து  அம்மாட்ட பேசுன, அடுத்தவங்க போன் எடுத்து பேச கூடாது என்ற பேசிக் மெனர்ஸ் கூட தெரியாத உனக்கு!

வாய் கொழுப்பு டா உனக்கு நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலேயும் பேசுவ , உனக்கு இவ்வளவு ஹெல்ப் பண்ணினேன்ல ஒரு நன்றி சொன்னியாட  பேசுறான் என்றவள்,ம்….. அப்புறம் அதுல டார்லிங் இருந்ததினால சரி உன்னோட லவ்வர் யாராவது இருப்பாங்க நாம அவங்க கிட்ட உன்னை விட்டு போகலாம் நினைச்சா எனக்கு எப்படி தெரியும் அது உங்க அம்மா என்று  பேசியவள் அவன் அம்மா வந்ததை பார்த்ததும் ,ஆன்டி   நான் கிளம்புறேன் அர்ஜன்ட் ,அம்மா   அழைச்சாங்க போகனும் என்றவள் வெளியில் செல்ல!

இந்த காபி குடிச்சிட்டு போம்மா  என்று பார்வதி சொன்னது  காற்றில் கலந்து விட்டிருந்தது !

என்னடா அந்த பொண்ணு போயிட்டா!

ச்…. அதுக்கு என்ன இப்போ!

டேய் உனக்கு ஹாஸ்பிட்டல பணம் கட்டுனதெல்லாம் அந்த பொண்ணு டா , உன்னோட தோழினு சொன்னா அடுத்த தடவை பார்க்கும் போது பணத்தை கொடுத்துடு நான் போய் உனக்கு இட்லி எடுத்துட்டு வரேன்!

அம்மா சொன்னதை கேட்டவனிற்கோ எப்படி இருந்தது என்று புரியாது  அமர்ந்திருந்தான், இன்னும் தான் அவளை காதலிக்கிறோமா ?

 புரிந்தும் புரியாமலும்🤔

குழம்பி குழப்பாமலும்😇

பைத்தியம் பிடிக்க வைத்து 😵‍💫

அதை  தெளிய வைக்கும்

அமிர்தம் காதல் 😉

Advertisement