Advertisement

உன்னை நினைத்து 4.1

அடுத்த மாதம் நடைபெறும் லண்டன் ஃபேஷன் வீக்கிற்காக ஆடைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள் ஜானவி மற்றும் சீதா.

வருடத்தில் இருமுறை வரும் லண்டன் ஃபேஷன் வீக் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதம் லண்டனில்   இங்கிலாந்தில் நடைபெறும்.இது ஒரு ஆடை வர்த்தகக் கண்காட்சியாகும்,250க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்களை செல்வாக்கு மிக்க ஊடகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் உலகளாவிய பார்வையாளர்களுக்கு  ஆடைகள் காட்சிப்படுத்துகிறது.

ஜானவி, சீதா, ராபர்ட் ஆடைவடிவமைப்பது மற்றும் ஆடை தயாரித்தல் பற்றி இங்கிலாந்தின் பெயர் பெற்ற கல்லூரியில் படித்தவர்கள், இதோ  அதன் சம்மந்தமாகவே  தங்களின் தொழிலையும் அமைத்திருந்தனர்,லண்டனில் ஒரு கிளை, சென்னையில் ஒரு கிளை என்று தொடங்கியவர்கள், அதன் தலைமை அலுவலகத்தை சென்னையில் அமைத்து இருந்தனர்.

திருமணம் முடிந்து கணவனிடம் கோபித்து கொண்டு இங்கே மான்செஸ்டர் வந்து விட்டாலும் நினைவெல்லாம் அவன் தான், தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தாலும் சரவணன் பேசிய வார்த்தைகளை நினைத்து கலகியவள்  தடுமாற ஆரம்பத்திருந்தாள்  ராபர்ட்,சீதா உதவியுடன் கவலையிலிருந்து மீண்டவளுக்கு, சின்ன வாக்கு வாதம் பெரிய சண்டையாக முற்றி அவனிடம் சொல்லாமல் தான் இங்கு வந்தது தவறு என்று,அப்போது தான் தன் தவறு பிடிபட ஆரம்பித்தது, பின்பு தன் தவறை உணர்ந்தவளின் மனம் கணவனிடம் போகச் சொல்லி தூண்ட, ஆனால் வேலை நான் இருக்கிறேன் என்னைப் பார் என்று கூற , சரி இந்த லண்டன் ஃபேஷன் வீக் முடிந்த பின் இந்தியாவிற்கு  பறந்து விட வேண்டும் என்று அவள் நினைக்க!

அதற்குள் கணவனே தன்னை பார்ப்பதற்கு இங்கே வருகிறேன் என்று சொல்லியதை கேட்டவளுக்கு ஆனந்த அதிர்ச்சி,சரவணனை அழைக்க தானே போகப் போகிறேன் என்று சீதாவிடம் எவ்வளவு சந்தோஷமாக கூறினேன்,அவனை நேரினில் பார்த்த போது ஓடி போய் சரவணனை கட்டி கொண்டு முத்தா வைக்க வேண்டும் என்ற ஆவலை கையில் இருந்த குழந்தை நவிலன் தடைச் செய்திருந்தான்!

ஜானு ஜானு என்று சீதா பலமுறை அழைத்த பின் நினைவுலகத்திற்கு திரும்பினாள் ஜானவி,

என்ன என்று  அக்காவை தங்கை கேள்வியாக பார்க்க!

ச்…‌… ஒன்னுமில்லை டி!

எத்தனை நாளைக்கு இந்த விசயத்தை மறைக்க போற ஜானு!

நான் யோசிச்சு தான் முடிவு எடுக்கனும் சீதா,இது வாழ்க்கை நான் சட்டென்று வேண்டாம் என்று வந்துவிடமுடியாதே!

அதற்கு நீ  அவர்க்கூட ஒன்னா சேந்து வாழ போறியா!

ம்……..ஒன்னா சேர்ந்து வாழ்ந்தா என்ன தப்பு,சரவணனுடன்  கல்யாணம் பேசும்போது எனக்குள் பேரும் தடுமாற்றம் இருந்தது உண்மை தான் ஆனால் திருமணம் நெருங்க நெருங்க அவன் என் மனதையும் நெருங்கி விட்டான், அதனால் தான் நீ , மாயா சேர்ந்து தூக்கு மாத்திரை கொடுத்தது கூட எனக்கு ரொம்ப பதற்றமாச்சு, ஆனாலும் முக்கியமான காரணம் இந்த என்னோட தனிப்பட்ட வாழ்க்கையால சமுகத்தில் இருக்கும் என்னோட மரியாதை என்னால கெடுத்துக்க முடியாது!

நீ அந்த சரவணனோட மாய வலையில் இப்போ இருக்குற அதனால் நான் சொல்வதெல்லாம் உன் காதில் விழுகாது!

இல்லை சீதா நான் அவன்கூட  வாழமாட்டேன்,அதே நேரம் அவனை பிரியவும் மாட்டேன், அவன் என்னை ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு நினைக்க  வைக்கல என் பெயர் ஜானவி இல்லை, என்று பொறுமையாக கோபத்துடன் சீதாவிடம் பேசிய ஜானவி ஆனாலும் சீதா  அந்த எம் டன் சரவணன் என்னை இப்படி ஏமாத்தி இருக்கக்கூடாது என்று அதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த அழுகையை தேம்பியபடி தங்கையை கட்டிக்கொண்டு அழுக!

ச்ச….. காதலாம் காதல்,இப்படி எங்க அக்காவ  இந்த நிலைமைக்கு ஆலாக்குனவன நான் சும்மா விட போறது இல்லை இது வரைக்கும் பொறுத்து இருந்ததெல்லாம் போதும் நான் பெரியப்பாட்ட பேசதான் போறேன் சாரி ஜானுக்கா  என்று மனதில் ஜானவியிடம் மன்னிப்பு வேண்டினாள் சீத்தா!

இந்தியா (சென்னை)

அண்ணா நகர்  இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது மற்றும் அமைந்தகரை வட்டத்திற்கு உட்பட்டது. இது சென்னையில் உள்ள பிரதான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாகும், மேலும் இங்கு பிரபலமான மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வசிக்கின்றனர். இங்கு விற்கப்படும் இடங்களின் விலைகள், நகரத்தில் மிக உயர்ந்தவை ஆகும்.

அண்ணாநகரில் அந்த பெரிய வீட்டில் ஜானவி மற்றும் சரவணனின் இரு குடும்பமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

தான்யலட்சுமி உங்க பையனுக்கு ஏற்கனவே ரிலேஷன்ஷிப்ல இருந்ததை தெரிஞ்சு  தான் என்னோட பொண்ணுக்கு உங்க பையன கேட்டிங்களா? இப்போ இதான் என் பையன் என்று சொல்லி உங்க மகன் ஒரு ஆறுமாத குழந்தையோட போய் லண்டன்ல நின்னுறுக்கான் இதுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க சம்மந்தி.

என்ன சொல்லுறிங்க லட்சுமி! சரவணன் ஜானவியை பார்க்க தானே லண்டன் போனான்  எதுக்கு நீங்க வேற மாதிரி சொல்லுறிங்க, ஏங்க அவங்க என்ன சொல்றாங்க  என்று பார்வதி தன்  கணவர் ருத்ரனிடம் கேட்க!

கொஞ்சம் பதட்டபடமா  அமைதியாக இரு பார்வதி,நான் பேசுறேன் என்ற ருத்ரன்  கிரிதரனிடம் சொல்லுங்க  சம்மந்தி  என்ன விசயம் நீங்க எதபத்தி பேசுறீங்க!

உங்களுக்கு உங்க மகனுக்கு குழந்தை இருக்குற விஷயம் தெரியாத என்ற கிரிதரன் ருத்ரனை ஆழ்ந்து நோக்க!

 கிரிதரன் சொன்னதை கேட்ட ருத்ரன் சிறிது அதிர்ந்தவர், அப்படி குழந்தை இருக்க வாய்ப்பில்லை   கிரிதரன்  என்று உறுதியாக கூற !

அப்போ இந்த ஃபோட்டோ பார்த்து சொல்லுங்க இது உங்க பேரனா என்று அவர் கைகளில்  சீத்தா அனுப்பிய போட்டோவில் சரவணன் குழந்தைக்கு உணவு ஊட்டுவது போன்ற புகைப்படம் போனில் இருந்ததை  காமிக்க!

அதனை  பார்த்த கணவன் மனைவி இருவரும் அதிர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க  சரவணனை உரித்து வைத்தது போல இருந்த குழந்தையை கண்ட இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாகினர்.

ஹலோ அக்கா நான்  பெரியப்பா பெரியம்மாகிட்ட உன்னோட விஷயத்தை சொல்லிட்டேன் நீ பேசு என்று சொல்லியவள் நான் இன்னும் அஞ்சு நாளைக்கு வீட்டுக்கு வரமாட்டேன் பை அக்கா என்றவள் ஃபோனை கட் செய்ய!

இதனை அந்த பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்தவளோ ஏய் நான் அவ்வளவு சொல்லியும் நீ ஏதற்கு சொன்னாய் என்று இங்கே கோபமாக கத்தி கொண்டு இருக்க!

நான் கொஞ்ச நாளைக்கு அங்கே வீட்டுக்கு போக்கூடாது இவள் கோபம் போன பிறகு தான் போகனும் என்றவள்  தொப்பென்று சோஃபாவில் அமர!

தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…

சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…

என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…

உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…

 என்ற போனில் பாடல் ஒலியில் அழைப்பது யாரென்று அறிந்தவளுக்கு சிரிப்புடனே  அதனை ஏற்றவள் சொல்லுங்க பூஜ்ஜிமா என்ன அங்கே காலையிலே எனக்கு போன் போட்டு இருகிங்க,என்ன காலையிலே என்னோட ஞாபகமாக!

அந்த பக்கம் இருந்தவனோ ஏன்டி நீ என் கிட்ட நெத்தே சொல்லி இருக்கலாம் ல எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு கடைசில தான் எனக்கு தெரியுது என்று இலங்கோ பேச!

என்ன சொல்ல சொல்லிறீங்க, அவ நெத்தே யாருகிட்டயும் சொல்ல வேண்டாம் சொன்ன நான் அதையும் மீறி பெரியப்பாட்ட சொல்லிட்டேன், இப்போ  மட்டும் நான் வீட்டுக்கு போனா பிச்சு பேன்டு கலட்டிடுவா எங்க அக்கா!

உனக்கு நல்லா வேணும்! அவங்க இரண்டு பேரும் பேசி இருந்தாலே பிரச்சினை பெரிசாகி இருக்காது, இப்போ நீ பண்ணி வெச்சுருக்கதுல பிரச்சினை எப்படி வெடிக்க போகுதுனே தெரியலை,உங்க வீட்டு பக்கம் விவாகரத்து வரைக்கும் போயிட்டாங்க!

இதுலவேற நான் நம்ம கல்யாணத்துக்கு அம்மாகிட்ட உன்னை பற்றி பேசியிருந்தேன்,இனி எங்க நம்ம கல்யாணம் நடந்த மாதிரி தான் என்று இலங்கோ சோக கீதம் வாசிக்க!

 அச்சோ    இப்போ என்ன பண்றது! ஏதாவது உதவி பண்ணலாமா அவங்க இரண்டு பேருக்கும், இல்லை நான் சொன்னது பொய்னு சொல்லட்டா!

நீ பண்ண வரைக்கும் போதும்மா தாயே ,இனி எங்க அண்ணனே அவன் வாழ்க்கைய சரி பண்ணி எங்க அண்ணீ கூட சேர்ந்துடுவான், அனால் நீ அவங்க வாழ்க்கையை பற்றிய உண்மை சொல்லுறேன் சொல்லி  நம்ம வாழ்க்கையில் கும்மி அடிச்சிடாத மிஸ்.சீத்தா தேவி!

என்ன யாரோ மாதிரி மிஸ்.சீத்தா தேவி எல்லாம் சொல்லுறீங்க, நீங்களும் சரவணன் மாமா போல குழந்தை ஏதாவது வளர்கிறீங்களா?, நான் வேற லண்டன்ல இருக்கேன்?

ஏண்டி ஏற்கனவே ஒரு இம்சை உன்னை சாமாலிக்குறதே பெரிய விஷயம் இதுல இன்னொன்னா நிஜமா நான் தாங்க மாட்டேன் டி!

ம்……. அந்த பயம் இருக்கட்டும்  என்மேல, மீதி ஏதாவது சங்கதி எனக்கு தெரிந்தது,நீ என் கையில் கதம் கதம்!

—————–

தனது அலைபேசியில் ஒருவர் மாற்றி ஒருவர்  விடாமல் அலைப்பு விடுக்க அதனை ஏற்பதா வேண்டாம என்று

பெரும் குழப்பத்தில்  இருந்தவள் ஒரு வழியாக எல்லாவற்றையும் சமாலித்து தான் ஆக வேண்டும் என்ற முடிவோடு தந்தையின்  வீடியோ அலைப்பை ஏற்றவள்,அவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் அமைதியாக ஜானவி இருக்க!

குட்டிம்மா அப்பா அப்புறம் சரவணன் வீட்டில் அனைவரும் அடுத்த விமானத்தில் வருகிறோம் எதுவா இருந்தாலும்  பேசி தீர்க்கலாம்   சரியா என்று மகளுக்கு ஆறுதல் கூற!

அவளோ அவர் பேச பேச தொண்டை அடைக்க பட்ட உணர்வுடன் அழுகையை அடக்கிகயபடி சரி என்று சொல்ல,

“தான்யலஷ்மி”,என்கிட்ட கொடுங்க தங்க பிள்ளை அம்மாவ பாரு  என் பொண்ணு எதற்காகவும் கலங்ககூடாது அம்மா அப்பா எல்லாரும் வரோம் சரியா அதுவரைக்கும்  அமைதியாக இருடா பாப்பா!

ம்………‌

அதே நேரம் சரவணனின் அம்மா பார்வதி  ஏண்டா நாயே உனக்கு பிள்ளை இருக்குன்னு தெரிஞ்சு ஏண்டா அந்த பிள்ளை ஜானவிய கட்டிக்கிட்ட!

ம்மா……. எனக்கு உன்மையாவே தெரியாதும்மா அந்த காவ்யா எனக்கே தெரியாம நிறைய வேலை செஞ்சுருக்காமா!

ஓ………நம்புற மாதிரி நீ சொன்னாக்கூட நான் நம்புவேன், ஆனால் உன்னோட உலக மாக நடிப்ப என்னிடம் காட்டாத சரவணா!

ஏய் போனை என்கிட்ட கொடு டி என்ற ருத்ரன் டேய் உன்னை தவமா தவமிருந்து பெத்ததுக்கு,எங்களை நால்லா வெச்சு செய்யுற நாயே, அறிவு கெட்டவனே அந்த காவ்யா  உன் தங்கை உறவுமுறை  தெரிஞ்சும்,இப்படி குழந்தையை பெத்து தூக்கிட்டு வந்துருக்க, நான் நேரில் சம்மந்திக்கூட வாரேன்ல, அப்போ உன்னை வெட்டி கொலை பண்ணிடுவேன்டா நாயே, தங்கையினு உறவுமுறை தெரியாது, ஒரு வரைமுறையில்லாம தப்பு பண்ணிருக்க படவா ராஸ்கல்!

ம்மா….ப்பா… நான் அவ்ளோ சொல்லுறன்  என்ன நம்பமாட்டீங்களா!

“பார்வதி “,அடேய் வந்தேன் தொடப்பகட்டை பிஞ்சிடும் நாயே  ஆறு மாதமாக குழந்தையை கையில வெச்சிட்டு பிஸ்னஸ் விசயமா அங்கே போறேன் இங்கே போறேன் பொய் சொல்லிட்டு இப்போ நல்லவன் வெஷமா போடுற பரதேசி நாயே!

அம்மா இப்போது என்ன சொல்லுறிங்க நான் இந்த குழந்தைய விட்டுட்டு தான் ஜானவிக்கூட வாழனும் சொல்லுறியா?

ஜானவிக்கூட நீ ஒன்னா சேர்ந்து வாழனும் சொல்லி கேக்குற தகுதியா நீ எங்களுக்கு கொடுத்துருக்க, உங்க அப்பா எவ்வளவு பெரிய ஆளு அவரோட குணத்தில் ஒரு பாதியாவது இருக்கியா, அதுக்கு நேரேதிரா இருக்க, இப்போ தான்‌ நீ எங்களுக்கு பொறந்தியான்னே சந்தேகமாக இருக்கு.

சரவணனோ எனக்கும் சந்தேகமாக இருக்கு நான் உங்களுக்கு தான் பொறந்தேனானு, நான் என்னோட மாமியார்,மாமனார் அப்புறம் என் பொண்டாட்டி கிட்ட பேசிக்கிறேன்,

என்னோட வாழ்க்கை என்னால பார்த்துக்க முடியும் நீங்க இதுல வராதிங்கம்மா என்று கோபத்தில் கத்தி பேசி ஃபோனை வைத்தவன்.

ச்சு……… தன் கையினை கழுத்தில் தேய்த்தபடி  இவகிட்ட  இந்த விஷயத்தை யாருடனும் சொல்ல வேண்டாம் என்று அவ்வளோ நான் சொன்ன  பிறகும் சொல்லி இருக்கா, என்ன விட்டு போகனும் முடிவு எடுத்திட்டியா ஜானவி, அதனால் தான் இந்த விடயத்தை வைத்து நம் சொந்தம் அனைவரையும் வர சொல்லி இருக்கிறாயா,என்று கழுத்து நிரம்பு புடைக்க வீடே அதிரும்படி கத்தியாவினின் கத்தலில் தூங்கி கொண்டு இருந்த நவிலன் சத்ததில் வீறீட்டு அழுக!

என்ன குழந்தை அழுகற சத்தம் வெளியே வர கேட்குது  என்ன பண்றான் இந்த சரவணன் என்று தனக்குள் கேட்ட படி  சோகச்சித்தரமாக வீட்டிற்கு வந்தவள் அழும் குழந்தையை சமாதானம் படுத்த!

அச்சோ குட்டி பையன் அழுக கூடாது செல்லம் அப்பா எங்கே? பாப்பாவா இப்படி அழுக வைக்குற அப்பாவ அடிக்கலாமா டி தங்க பிள்ளை,ஓ……..ஓ……….. என்று கைகளில் குழந்தை   தூக்கி கொண்டு சமாதானம் படுத்தியவள்  குழந்தையிடம் பேசிய படியே சிங்கில் கழுவ படாமல் இருந்த பால் புட்டியை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து கழுவியவள் மறுபுறம் குழந்தைக்கு சுடு தண்ணீரில் பால் பவுடரை கலக்கியவள் கழுவிய பால் புட்டியில் பால் ஊற்றி குழந்தைக்கு புகட்ட அதுவா ஜானவியின் நெஞ்சில் சாய்ந்தபடி குடிக்க!

என்ன இந்த சரவணன் குழந்தையை இங்கே தனியா விட்டு  எங்கே போனான்  என்று எல்லாம் அறையிலும் பார்வையிட்டவள் ஏதேர்சையாக பின்னாடி தோட்டத்தை பார்க்க அங்கே கொட்டும் பனியில்  நின்று கொண்டு இருந்தவனை கண்டு கோபம் கொண்டவள், வெளியே சென்று அவனை உள்ளே அழைத்து வரலாம் என்று நினைத்தவளுக்கு  குழந்தைக்கு சளி பிடித்து விடும் என்று பயபட்டவள் வீட்டில் உள்ளே இருந்து சரவணா சரவணா என்று அழைக்க!

அவள் குரலினை கேட்டும் அவன் திரும்பி பார்க்காமல் இருக்க

குழந்தையை பத்திரமாக உள்ளறையில் தொட்டிலில் படுக்க வைக்க அதுவோ காலையும் கைகளையும் ஆட்டியபடி படுக்க மாட்டேன் என்று அடம் செய்ய

ஓய் என்ன சின்ன பையா  அமைதியாக இருக்கனும் அடம் பண்ணக்கூடாது  என்றவள் குழந்தையின் மூக்கை பிடித்து அப்படியே அப்பா போல அடம் ஹான் என்றவள் வெளியேற

குழந்தை  நவிலனோ அம்மா நான் உன்னை போல உனக்கு என்னை தெரியலையா என்று கேட்டது பாபம் ஜானவிக்கு கேட்க வில்லை

தன் கணவன் அங்கே தன் மனதை வதைக்க காத்திருந்ததை பாவை அவள் உணரவில்லை!

சரவணா நான் அவ்ளோ சத்தமா உன்னை கூப்பிட்டே இருக்கேன்,நீ ஏன் திரும்பி பார்க்வே இல்லை, வா உள்ளே போகலாம் கோல்ட்  ஆகிடபோகுது உனக்கு, பணிப்புயல்  வேற வரப்போகுது  சொன்னாங்க  வா வீட்டிற்கு தேவையானது பாப்பாக்கு தேவையானதுலாம் வாங்கி வரலாம் என்று  அவன் தோல் தொட்டு திருப்ப!

அதுவரை தனது கோபத்தை அடக்கிக் வைத்தவன், அவள் கழுத்தை பிடித்து நெருக்கி,ஏன் டி நான் அவ்வளவு சொல்லியும் நீ உங்கள் வீட்டில் சொல்லி இருக்கேனா நீ என்னை விட்டு பிரியரதுக்கு தானே  சொல்லியிருக்கே,அப்படி  நீ என்னை விட்டு பிரியனும்னா நீ சாவனும் என்று கழுத்தை நெருக்க!

விடுடா …..என்னை விடுடா சரவணா வலிக்குது  என்று ஜானவி கத்த!

வலிக்கட்டும் நீ பிரிஞ்சி போன எனக்கும் இதுபோலதானே வலிக்கும்  என்று அவள் கழுத்தில் கை எடுத்துக்கூற!

அவனிடம் தூற வந்தவள் பைத்தியமா டா நீ …..,. ஜானவி கத்த

ஆமாம் டி உன்மேல பைத்தியம்,அதனால தானே கையில  குழந்தையோட உன்னோட இங்கே நிக்குறேன் என்று தான் ஆண் மகன் என்றதையும் மீறி தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று அழுக!

பண்றதெல்லாம் பண்ணிட்டு நல்லவன் வெஷம் போட்டு நல்லா அழுவுற என்றவள், அவள் கழுத்தை நெறித்ததில் ஆத்திரம் அடைந்தவள் அங்கிருந்து பனியால்  சூழ்ந்த அந்த மரத்தின் கிளையை ஒடித்தவள், அழுது கொண்டு இருந்தவனை போட்டு விளாசி எடுக்க, என்னை கொல்ல பார்த்தே இல்ல இது அதுக்கு,நீ என்னை ஏமாத்தினல இது  அதுக்கு,  என்று ஒவ்வொரு காரணம் சொல்லி கணவனை அடிக்க!

அவனோ வலியில் துடித்தவன்  ஏய் வலிக்குது விடுடி ராட்சசி  என்று சரவணன் அழுது கொண்டே அவள் அடிக்கும் கிளையினை பிடித்தவன் இப்போது கோபமாக பார்க்க!

என்ன நீ கோபமா பார்த்தா நான் பயத்துடுவேனா விடுடா  அந்த கிளையை  என்று சப்தமாக கத்த

ஜானவியை பார்த்தபடி சட்டென்று அவள் கையில் இருந்த கிளையை இழுக்க,அதை அலுத்தி பிடித்திருந்தவள் பிடிமானம் இன்றி சரவணன் மீது விழுந்தவள் இப்போது,

பஞ்சு பொதி போல் தன் மீது ஜானவி வந்து விழுவாள் என்று எதிர்பார்க்கத சரவணன் அவள் அவன் மீது விழுந்த வேகத்தில் அவன் அவனவளை தாங்கியபடி அப்போது தான் பேய தொடங்கிய பனியில் நினைந்த படி  இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க

ஓய்…என்ன பாக்குற  முதல் மேலிருந்து கை எடு குளிருது வீட்டுக்கு உள்ள போகனும் என்று கண்களை குறுக்கி கணவனை மனதின் படபடப்பை மறைத்த பார்த்தபடி ஜானவி கூற!

அவள்  பேசுவதில் தன்னிலை அடைந்தவன் மோதல்ல நீ என் மேலே இருந்து இறங்கு டி குண்டம்மா இப்படி கணக்குற  எப்பா எண்ணா கணம் எண்ணா கணம்  என்று இடுப்பை பிடித்து சரவணன் எழ

உன்னை போய் பனில நிக்குறியேன்னு கூப்பிட வந்த என்னை கழுத்தை நெறிக்கி கொல்ல பார்ப்ப,குண்டம்மா சொல்லுவ ஆனால் நான் மட்டும் எதுவும் பண்ண கூடாது,சொல்ல கூடாது,செய்ய கூடாது  என்று அவனை திரும்பி பார்த்து புலம்பிய படியே குளிரில் நடுங்கியபடியே ஜானவி உள்ளே செல்ல!

உள்ளே சென்றவளை பார்த்தபடி நின்ற சரவணன் என்னை மன்னிச்சி ஏத்துப்பியா ஜனாம்மா!

அதே நேரம் உள்ளே குழந்தை நவிலனிடம்  விளையாட்டு காட்டி சிரிக்க வைத்திருந்த உருவம் ஜானவி வருவதை பார்த்து ஓரமாக போய் நின்று கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க!

ஏய் குட்டி பையா  என்ன தனியா சிரிச்சிட்டுருக்க,நீ ஏன் சிரிக்குற  என்று என்னிடம் சொன்னாய்யானால் நானும் சிரிப்பேன்ல என்று குப்புற படுத்து இருந்த குழந்தையை பார்த்துக் கேட்க!

குழந்தையோ தன் தாயிர்க்கு அந்த உருவம் இருக்கும் திசையை காட்ட என்னடா  பட்டு,அங்கே ஒன்னும் இல்லையே  என்று சொல்லியவள் குழந்தைக்கு வயிற்றில் முத்தா வைத்து விளையாட!

அந்த உருவமோ ஜானவி பக்கத்தில் வரலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் வைத்து அவளை நெருங்கலாம் என்ற வேலையில் சரவணன் வர!

அது அங்கிருந்து உடனே மறைந்தது!

Advertisement