Advertisement

உன்னை நினைத்து 2

என்னிலும் பாதியைக்கொடுப்பேன் இரண்டாம் அர்த்தநாரீசுவரன் அதிலும் நான், மிச்சம் கேட்டால் அட உயிரும் எதற்கோ?

இடியே விழுந்தாலும் அவளை இடுக்கன் தொடவிடேன், முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாம் முனங்காமல் நீகேளு முன்னறிவிப்பு செய்துவிட்டேன்!

அவளாசையின்றி விரல்கூட சீண்டாதே இராவணன் இரசிகன் நான்!!

இன்று அது பெயர் சொல்ல கூடிய பெரிய பள்ளியாக இருப்பினும் நான் படிக்கும் காலத்தில் அது அப்போது தான் வளர்ந்து கொண்டு இருக்கும் பள்ளி, படிக்க தெரியாத பெற்றோர் மற்றும் தங்கள் பிள்ளைகள் சரலமாக ஆங்கிலத்தில் பேச எழுத படிக்க என்று அனைத்தும் தெரிந்திருக்க வேண்டி பல ஆயிரங்களை செலவழித்து ஆங்கிலம் வழி கல்வி  பயிற்றுவிக்கும் வி.கா.ஓ என்ற அந்த பிரபலமான பள்ளியில் படிக்கும்போது அப்போது  எனக்கு வயதோ பதினான்கு பள்ளி விட்டு நான் மிதிவண்டியை தள்ளிக்கொண்டு அந்த சாலையில் இருந்து பிரிந்த சந்தில் சென்று கொண்டிருக்க,அங்கே ஒரு பப்ளியா குண்டா சின்ன பாப்பா யாரோ ஒருவரிடம் தன்னை அவனிடம் விடுபட்டு தப்பியோட முடியாமல் கத்தி கொண்டு இருந்ததைபார்த்தவுடன் ஏதோ தவறு நடப்பதாக  எனக்கு தோன்ற கைகளில் நிறைய கற்களை பொறுக்கி சரமாரியாக அவனை நான் தாக்க விட்டால் போதும் என்று அவன் அங்கிருந்து தப்பியோட,

நான் அப்போது தான் அந்த குட்டி பெண்ணை பார்த்தேன் கண்ணெல்லாம் அழுதழுது சிவந்த அந்த முகம்,இவன் அடித்த கல் அவள் நெற்றியில் பட்டதினால் ரத்தம்  எட்டி பார்க்க அச்சோ பாப்பா அழுகாத,வீடு எங்கே இருக்கு சொல்லு நான் உன்னை வீட்டில் விடுறேன்  என்க!

வீடா…….. அது ரொம்ப தூரம், அப்பா வந்து கூட்டிட்டு போவாங்க என்று அவனிடம் சொல்ல!

மறுபடியும் அவளை பள்ளிக்கு அழைத்துச் வந்தவன் அங்கே இவளை காணாமல்  இருந்த அவள் அம்மா,  என் கண்ணு ஜானவி இங்கே தான இருக்கனும்னு ,அம்மா சொல்லிருக்கேன்ல எதுக்கு இங்கே இருந்து போன  என்று மகளை அனைத்து அழுதவர், இப்போது தான் மகளை நன்றாக பார்த்தவர் அவள் நெற்றியில் வழிந்த ரத்தத்தை பார்த்து பயந்தவர் இன்னும் மகளை தலைமுதல் கால் வரை ஆராய்ந்து பார்த்தவர் அதிர்ந்து பக்கத்தில் இருந்த சரவணனை அடிக்க வர!

ஏ……….. தான்யா என்ன பண்ணுற நீ  என்று கிரிதரன் மனைவியை தடுத்தவர் நம்ம பொண்ண காப்பாற்றி கூட்டி வந்த அந்த சின்ன பையனை போட்டு அடிக்க போற என்று பொறிய!

என்ன?”தான்யலட்சுமி”.

ஜானவி  ம்மா….. நெத்தி வலிகிது!

நீ வாட கண்ணம்மா என்று ஜானவியை அழைத்த கிரிதரன்  பள்ளியில் இருக்கும் மேலாளர் ஆசிரியர், சரவணன் என்று எல்லோருக்கும் நன்றி சொல்லியவர் மகளையும் மனைவியும் அழைத்தபடி சென்றவருக்கு மனதில் சொல்லேன அழுத்தம்!

ஆம் மகள்களை பெற்ற பெற்றோர்களுக்கு தான் தெரியும் தன் மகள்களை இவ்வுலகில் உள்ள கொடிய மிருகங்களிடம் காப்பதின் வலி, தன் மகள் ஜானவியோ கல்லம் கபடம் இல்லாத  பதினான்கு வயது சிறு பிள்ளை ஆனால் அவளை பார்ப்பவர்களுக்கு  அவள் பதினோரு வயது சிறுமி போன்று இருப்பாள்.

குழந்தை ஜானவியை தங்கள் குடும்ப பெண் மருத்துவரிடம் அழைத்து வந்த கிரிதரன் தம்பதியினர், தங்கள் மருத்துவரிடம்  மகளுக்கு தலையில் அடிபட்டதை பற்றியும் மேலும் காணாமல் போனதை பற்றியும் கூறியவர் இதனால் குழந்தையின் மனது எப்படி இதனை ஏற்றுக் கொண்டு இருக்கும்?, பின்னாளில் இதனால் ஏதேனும் பிரச்சினை வருமா என்று பெற்றவர்கள் பயத்துடன் கேள்வி எழுப்ப!

ஷாரதா நான் பார்த்து கொள்கிறேன் என்றவர் ஜானவியின் நெற்றியில் இருந்த காயத்திற்கு மருந்திட்டு முடித்தவர் அவளிடம் விளையாட்டாக சிரித்தபடி கேள்வி எழுப்ப!

உனக்கு தெரியுமா ஷாரு,நான் அப்போ ஸ்கூல்ல அப்பா அம்மாவுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்  ஒரு குட்டி பப்பி வந்துச்சு  அதோட விளையாடிட்டு இருந்தேனா அப்போ அது ஓடி போக நானும் அது பின்னாடியே போனேனா, வழி தெரியலை  என்று உதட்டை பிதுக்கியவள் அப்போ யாரோ ஒரு அங்கிள் ஸ்கூல் கூட்டிட்டு போறேன் சொல்லி என்னை தூக்கிட்டு போக பார்த்தாங்க, நான் அவங்களை கையை கடிச்சுட்டு கத்த ஆரம்பிச்சேன்,அப்போ ஒரு பையன் பெயர் சரவணனாம் கல் தூக்கி அந்த அங்கிள் மேல் போட்டு என்னை ஸ்கூல்கு கூட்டிட்டு வந்தாங்க என்று சிரிப்புடன் கூறியவள் ஆனா எனக்கு அப்போ ரொம்ப பயமா இருந்துச்சு ஷாரு என்று கூறியவள் மருந்தின் உதவியுடன் தூங்க ஆரம்பித்திருந்தாள் ஜானவி தேவி.

தன் அறையின் கதவை சாற்றி விட்டு வெளியே வந்த ஷாரதா  நீங்கள் பயப்படும் படி எதுவும் இல்லை ஷீஸ் நார்மல் என்ன கொஞ்சம் பயந்து இருக்கா அதுவும் தூங்கி எழுந்தா சரியாகிடும், பட் நல்ல டையம்ல அந்த சின்ன பையன் வந்தான்  அந்த பையனுக்கு தான் நீங்க நன்றி சொல்லனும்!

ச்சே நான் ஏதோ தாப்பா நினைச்சு அந்த பையனை அடிக்க போய்டன் முருகா மன்னிச்சிடு என்று தான்யலட்சுமி சொல்ல!

அச்சோ தானு என்னோட மற்றோரு பெயர் வைத்திருக்கும் சரவணனிடம் தான் நீ மன்னிப்பு கோர வேண்டும் இருந்தாலும் நீ எனக்காக இருக்கும் விரதத்துக்காக நீயே உன்னோட வருங்கால மருமகனுக்கு வரும் காலத்தில் சப்போர்ட் பண்ணு என்றவர் டம்…….. என்று அந்த இடத்தை விட்டு அவர் மறைய!

ஒரு வருடம் கழித்து…….

பத்தாம் வகுப்பின் முதல் நாள் ஒவ்வொரு மாணவர்களும் சந்தோஷத்துடன் தங்கள் வகுப்பறையை தேடி கண்டுபிடித்து வந்தவர்கள் அங்கே அதே வகுப்பில் தங்கள் நண்பர்களும் தங்களது வகுப்புதான் என்று அறிந்தவர்களுக்கு  சந்தோஷத்தில்  கட்டி கொண்டும் சத்தமிட்டு கொண்டும் இருந்தனர்.

பெண்கள் பெண் தோழிகளுடனும்  ஆண்கள் தங்கள் தோழர்களுடனும்  மர மேஜை நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு இருக்க  அப்போது தயங்கியபடியே அந்த வகுப்பறைக்கு நுழைந்த ஜானவி தன் தோழிகள் தென்படுகின்றனரா என்று பார்த்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக அங்கே சரவணன்  அமர்ந்து இருப்பதை பார்த்தவள் அவனுக்கு ஒரு ஹாய் போட!

அவனோ என்ன இந்த சின்ன பாப்பா  இங்கே வந்து இருக்கு, அச்சோ எந்த கிளாஸ் தெரியமா இங்கே வந்துருக்குமோ! என்று நினைத்தவன்  அவளுக்கு வழி சொல்ல எழுந்து நிற்க போக!

ஹெ ஜானு இங்கே கடைசி பெஞ்ச் ல இருக்கேன் வாடி என்று சவிதா கூப்பிட!

இதோ வரேன் டி என்றவள்  சவிதா பக்கத்தில் உட்கார்ந்தவள்  விடுமுறையில் நடந்ததையெல்லாம் கதையாக சொல்ல ஆரம்பித்திருந்தாள் தோழியிடம்!

சரவணன் பார்க்கிறதுக்கு குட்டி பொண்ணு மாதிரி இருக்கா ஆனால் 10தாவதா! என்று தன்னிடமே கேள்வி கேட்டவனுக்கு ஆச்சரியம் தான்!

அதன் பின் வந்த நாட்களில் சரவணனிடம் நன்றி சொல்ல வேண்டும் தன்னை காப்பாற்றியதற்கு என்று  அவன் பின்னே  ஜானவி சுற்ற!,

அவனோ தன்னிடம்  அவள் காதல் சொல்வதற்கு தான் பின்னேயே அலைந்து கொண்டு இருக்கிறாள்‌ என்று தவறாக புரிந்தவனோ அவளை முற்றிலுமாக தவிர்க்க!

ஒரு கட்டத்தில்  இவனிடம் பேசமுடியாது என்று தெரிந்தாலோ அல்லது சலிப்படைந்ததளோ  அவனிடம் பேசுவதை தவிர்த்தவள் படிப்பில் கவனம் செலுத்தியவள் படிப்பு நேரம் போக தன் நெருங்கிய நண்பர்களிடம் பேசிக்கொண்டும் விளையாடி கொண்டும் இருந்தாள்.

ஜானவி இப்போதெல்லாம் தனது நண்பர்களிடம் பேசுவதிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருவதினால் என்னிடம் பேசினால் கவனச்சிதறல் ஏற்படும் என்ற காரணத்தினால் தவிர்க்கிறாள் என்று என் மனதுக்கு நானே சாக்கு சொல்ல, ஆனாலும்  அந்த சின்ன கண் என்னிடம் பேசுவதற்கு முயற்சி சேய்வதை நினைத்து அப்போது நான் மனதிற்குள் சிரித்தாலும், ஆனால் இப்போது அவள் இந்த கடைசி பரிச்சை முடிந்தவுடன் லண்டன் செல்வதாக   என் நண்பர்கள் பேசிக்கொண்டதை  கேட்டதில் இருந்து மனது  கவலையாக  இருக்க!

சரி பரிட்சை முடிந்தவுடன் அவளிடம் போய் பேசலாம் என்று நான் நினைத்து பரிட்சையை முடித்து விட்டவுடன் அவளை பார்க்க நான் ஓடிவர  அதற்குள் மற்றவர்கள் அவளை சூழ்ந்து கொண்டு அவளுக்கு பிரியாவிடை தர!

நான் இத்தனை நாள் ஜானவியிடம்  பேசாமல் இருந்தற்கு என்னை நானே திட்டிக்கொண்டு அவள் காரில் ஏறி சென்றததை பார்த்த எனக்கு  அவளை  என் வாழ்வில் திருப்பி பார்ப்பேனா என்பது அப்போது எனக்கு கேள்விக்குறி ?ஆனால் இப்போது நான் அவளை திருமணம் செய்ததோ ஆச்சிர்யகுறி!

இப்போது இருக்கும் இன்ஸ்டா, வாட்ஸ் அப், டிவிட்டர், டெலிகிராம் போன்ற  பயன்பாடு அப்போது இல்லை,அப்படி இருந்திருந்தால் நான் இனையத்தலம் மூலம் அவளிடம் பேசியிருக்கலாம், ஆனால் அப்போது இனையத்தலம் இருந்தாலும்  அதன் பயன்பாடு  குறைவாகவே  இருக்க, அதிலும் என் தாய் தந்தை மிகவும் கண்டிப்பு மிக்கவராக இருக்க,நான் எங்கே இனையதலத்தை உபயோகித்து, முகநூல் இருந்தாலும் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு தான்  நான் முகநூல் கணக்கையே தொடங்கினேன்.

Advertisement