Advertisement

உன்னை நினைத்து 16

நாட்கள் வராங்களாகி வராங்கள் மாதமாகி மாதங்கள்  வருடமாகி கங்கையவள் கைகளில் தவள ஆரம்பித்து இருந்தான் கங்கை சீரஞ்சீவியின் தவபுதல்வன் ஹரிகேசவன்!

கடந்த ஒரு வருடத்தில்

கங்கையை சீரஞ்சீவிக்கு திருமணம் செய்து வைக்க முதலில் சம்மதம் தெரிவிக்காத சீரஞ்சீவியின் பெற்றோர்,மகன் கட்டினால் இவளை  தான் கட்டுவேன் என்று  அடம்பிடித்து கேட்க, ஏனோதானோ என்று சம்மதித்த சுலோச்சனா,கிருஷ்ணர் தம்பதியினர்,சீரஞ்சீவி மணம்முடித்து வந்த கங்கையின் நடவடிக்கைகளில் அந்த பயமும் போக , மருமகள்  மாமியார் மாமனாரை தாங்க அவர்களோ தங்கள் மருமகளை ராணியை போல பார்க்க,இதில் கலகம் செய்ய முடியாமல் நெஞ்சில் வஞ்சத்தோடு தம்பியின் வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்தார் நளினி.

ஹரிகேசவன் தாய்,தந்தை,தாத்தா,பாட்டி என்று   எல்லோரும்  தரையிலே விடாமல் கைகளில் தாங்க எல்லோருக்கும் செல்ல பிள்ளையாக இருந்தான் ஹரிகேசவன்!

சீரஞ்சீவிக்கு  நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் சேரவேண்டும் என்று நான்கு வருடங்களாக வீட்டில் கேட்டு கொண்டும் முயற்சி செய்து கொண்டும் இருக்க, இதனை பற்றி அறிந்த ராம்கோவிந்து இந்த ஒரு காரணத்துக்காகவே மனைவி நந்தினி சீரஞ்சீவிக்கு  மகளை கேட்டும் கொடுக்க மாட்டேன் என்றவர்,பார்த்த சாரதிக்கு பேச  அதன் பின் போர் படையில் சேரமாட்டேன் என்று ராம்கோவிந்துக்கு வாக்கு கொடுத்தவன் கங்கையை  சீரஞ்சீவி கைப்பற்ற!

இதனை  நினைத்த படி யோசனையில் அழ்திருந்தவன் கங்கை  தன் தொல் தட்டி அழைப்பதை என்னவென்று கேட்க!

என்னாச்சு பாவா என்ன யோசனை!

ச்சு ஒன்னும் இல்ல பட்டு  எங்க குட்டி பையன் என்ன பண்ணுறான்,நீ வேலை எல்லாம் முடிச்சிட்டியா!

அவன் தாத்தா பாட்டிக்கூட இருக்குறான் நான் கூப்பிட்டா வரலை, தாத்தா பாட்டி  அழுதா எடுத்துட்டு வாரேன் சொன்னாக என்றவள்!கணவனை பார்க்க!

என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு சிரித்தபடி சீரஞ்சீவி கேட்க!

வாழ்க்கை ஒரு தெரியாத புதிர்ல?! நான் உங்களை விட்டு தூரம் விலகி போக நினைச்சா , நீங்க பின்னாடியே தொரத்தி உங்களோட வாழ்க்கையில  என்னைய சேர்த்து போக்கிஷமா மகன கொடுத்துட்டிங்களே என்று சீரஞ்சீவி நெஞ்சில் சாய்ந்து சொல்ல!

ம்…‌……. ஆமாம் எதுக்கு அண்ணையான்னு சொன்ன என்ன, நான் உன்கிட்ட எத்தனை தடவை கேட்டாலும் இதுக்கு மட்டும் பதில் இல்லை, ஆனால் இன்னிக்கு நீ சொல்லி தான் ஆகனும்,சொல்லு என்று சீரஞ்சீவி கேட்க!

எப்போதும் போல்

கங்கை வாயை அழுத்தமாக திறக்காமல் கணவனை இன்னும் இருக்கி பிடித்தவள், அவன் ரொம்ப வர்புருத்தி கேட்கவும்,அது சின்ன வயதில் அண்ணையா கூப்பிடும் போது நீங்க எதுவும் சொல்லவில்லையே?

அப்போ அது நீ சின்ன பொண்ணு, நானும் விளையாட்டு பையன், அப்போ நீ கூப்பிடுறது சரியாக தெரியாது, ஆனால் நீ சடங்கு ஆனபிறகு  எல்லாரும் என்னைய மாமா முறையில் இருந்து சடங்குக்கு சம்பிரதாயம் செய்ய  சொன்னாங்க மஞ்சள் பூசிய கண்ணங்களும் சீலை அணிந்து நீ உட்கார்ந்து  இருந்ததை பார்க்கும் போது நீ என்னவள் என்று இதயம் சொல்ல அதன் பிறகு நீ அண்ணையான்னு சொன்ன என் சின்ன இதயம் எப்படி தாங்கும் சொல்லு!

நான் அண்ணையா கூப்பிட காரணம் நளினி பின்னி அவங்க தான் அண்ணையான்னு கூப்பிட சொன்னது,நந்துமாகூட ஏய் அவன் பாவா டி முறையை மாத்தாதே சொன்னாங்க , இருந்தாலும் நான் உங்களை அண்ணையான்னு அழைக்க நீங்க என்னை கண்டும் காணாமல் முறைத்தபடி சென்றதை பார்த்த பிறகு, உங்களுக்கும் என்னை பிடிக்கவில்லை என்று  இங்கு வருவதையும்  உங்களிடம் பேசுவதையும் குறைத்தேன்  என்றவள் கணவனை பார்க்க!

உனக்கு இந்த காரணத்தை சொல்ல இரு வருடமாச்சா, இப்போ தான் என்ன நம்புனியா!

இங்கே திருமணத்துக்கு தேவையே நம்பிக்கை தானே அந்த நம்பிக்கை உங்கள் மேல் கடுகளவு குறைந்து இருந்தாலும் நான் திருமணத்துக்கு சம்மதித்து இருந்திருக்கமாட்டேன், ஆனால் நான் உங்களிடம் சொல்லும்  ஒரு சொல் நம்  சொந்தங்களின் தொடர்பே முறிக்கும் என்றால் எப்படி அதனை செய்வேன்,அதுவுமின்றி இப்போது இருக்கும் அமைதியானவன் போல் இல்லையே அப்போது அடாவடி காரர் ஆச்சே என்று சொல்லி கணவனின் கண்ணதில் முத்தமிட்டவள் குலுங்கி சிரிக்க!

நான் அடாவடி செய்யவில்லை என்றால் இப்போது நீயும் நம் மகனும் இருக்க மாட்டீர்களே என்று  பேசியபடி அவ்விருவரும் உறங்க!

அதே நேரம் மனைவியிடம்  போர் படையில் சேர கேஞ்சியவன் அவள் சம்மதத்துடன் உறவுகள் யாரிடமும் சொல்லாமல்  சீரஞ்சீவி கொல்கத்தா செல்ல!

அதே சமயம்

நேதாஜிக்கு ஆதரவாய், மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். கொல்கத்தா விரைந்த காந்தி உட்படப் பல தலைவர்களும், நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான், சுயராஜ்ஜியக் கட்சி, சட்டசபைகளில் வெற்றி பெற்று, ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும், பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி, ‘சட்டசபை வெளியேற்றம்’ எனும் கொள்கையைக் கைவிட்டு, ‘சுயராஜ்ஜியக் கட்சியின் கொள்கையே, காங்கிரசின் கொள்கை’ எனக் கூறி, இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.

போசிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரித்தானிய அரசும், அவரைக் கடல் கடந்து, மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு, காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால், அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது.

நோயின் தீவிரம் அதிகரித்ததால், சுபாசும் படுத்த படுக்கையானார். ஆனால், அரசு மருத்துவ பரிசோதனைக்குக் கூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால், காங்கிரசு, அவரை வெளிக்கொணர ஒரே வழி, 1926 தேர்தலில், நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது. நேதாஜியும், தன் சேவையைக் கருதி அதற்கு உடன்பட்டார். இதனால், சிறையிலிருந்தவாறே, வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஆனால், அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ, நேதாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, “கொல்கத்தா வராமல், சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும்; 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்” என்றும், “இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்யத் தயார்” என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி, இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.

இதனால், சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து, நேதாஜியைப் படுக்கையில் தள்ளியது. இச்செய்தி வெளியில் பரவி, “சுபாஷ் பிழைப்பதே அரிது” என்றும், “அவர் சிறையிலேயே மரணித்து விட்டார்” என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம், அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து, மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி, அவர் இனிப் பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம், அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும், படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி, ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும், 1930-ல் சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார்.

சீரஞ்சீவி கொல்கத்தா சென்றவன் சுபாஷ் சந்திர போஸ் போர் படையில் பயிற்சி செய்ய!

இங்கே மயிலையில்  சொந்தகளின் அவச்சொல்லும் பேச்சும்  கங்கை  சுட்டு வருத்த இதனிடையே இரண்டாவது முறையாக கருத்தரித்தவள் மனதில் இருந்த கவலையினால் அவள் நாட்கள் தள்ளி போவதைப் உனராமல் இருந்தவள் மனதிற்கு ஆறுதல் தேடி  தன் தாய் வழி பாட்டி ரங்கநாயகி வீட்டிற்கு திருவல்லிக்கேணிக்கு  வந்தவள்  அங்கேயே தங்கி விட!

தாய் வழி பாட்டி வீட்டில் மகளை ஈன்றவள் உறவுகளுக்கு தகவல் கொடுக்க சீரஞ்சீவி பெற்றோரும்  நந்தினியும் கங்கை பார்த்து சென்றவர்கள் குழந்தைகளுக்கு முத்தமிட்டு கண்ணீருடன் செல்ல!

ராம்கோவிந்து மகள் தான் சீரஞ்சீவியை போர் படையில் சேர அனுமதி அளித்தது என்று தெரிந்த நிமிடங்களில் இருந்து மகளிடம் பேசுவதை நிறுத்த!

ஹரிகேசவன் மற்றும் மினாட்சி. இருவருக்கும் கங்கையும் ரங்கநாயகி பாட்டியுமே அனைத்தும் ஆக இருந்தனர்!

அவ்வப்போது கோவிலில் கங்கை பார்த்தசாரதியை பார்த்தாலும்  அவரை எனக்கு தெரியாது என்கிற ரீதியில் கடந்து விடுவாள் பெண்ணவள்.

 இப்போதெல்லாம் கணவனை போர் பயிற்சிக்கு அனுப்பி வைத்தது தவறோ  என்று நினைக்க ஆரம்பித்து இருந்தாள் கங்கை!

சுற்றி அத்தனை உறவுகள் இருந்தும் யாரும் இல்லாமல்  பசுமாடு வளர்த்து பால் விற்றும்,பாட்டி வீட்டை வாடகைக்கு விட்டுப் பணம்யிட்டி கொண்டு இருந்தாள் கங்கை!

இப்போது எல்லாம் சுதந்திரம் எம்போதுடா கிடைக்கும் என்று வேண்டாத நாள் இல்லை!

அதே நேரம் வெள்ளையனே வெளியேறு என்று  ஒரு கூட்டம் சப்தமிட்டபடி செல்ல,குடுகுடு வென்று  அவர்களுடன் ஹரி கேசவன் என்ன ஏதென்று தெரியாமல் அவர்களுடன் செல்ல!

ஏய் கங்கை அங்கே உன்னோட பிள்ளை ஹரி போராட்டரர்குளுடன் செல்கிறான் போய் பாரடி என்று  ஒரு பெண் சொல்லி செல்ல!

 இடுப்பில் இருந்த மீனாட்சியை பாட்டியிடம் விட்டவள்,மகனை இழுத்து கொண்டு வர!

ம்மா என்று ஹரிகேசவன் ஏதோ சொல்ல வர அவனை அடித்தவள் அமைதியாக இரடா     என்றவள் தலையில் கைவைத்து அமர!

வாழ்க்கையே இடியாப்ப சிக்கலாக இருக்க,இதில் மகன் இன்னோரு சிக்கலை அந்த சிக்கலோடு இனைபதில் கங்கைக்கு உடன்பாடு இல்லை, அதனால் கடவுளிடம் நல்வழி வேண்ட கோவிலுக்கு சென்றவள்     மகன் மகளுடன் வெளியேற,  அதேநேரம் பட் பட்டென்று துப்பாக்கி சூடு விடாமல் கேட்க பயந்தவள், என்னானாதோ என்று  தெரியாமல் பயந்தபடி  ஒளிவதற்கு இடம்தேட !

அதே நேரம் ஒரு உருவம் சட்டென்று அவளை இழுத்துக் கொண்டு ஹரிகேசவனை தூக்கி கொண்டு ஒளிய !

யாரது என்று நிமிர்ந்து பார்த்த  கங்கைக்கு சத்தியமாக பார்த்த சாரதியை எதிர்பார்க்கவில்லை!

அதே நேரம் பார்த்த சாரதியை பார்த்து தந்தை என நினைத்த மீனாட்சியும்  ஹரிகேசவனும்  நாணா என்று தாவ!

இப்போது அதிர்ச்சியுடன் கங்கையை பார்த்த பார்த்தசாரதி  அவர்களை அனைக்க இருவருமே பயத்தில் பார்த்த சாரதியை கட்டி பிடித்து அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கொஞ்ச!

அதனை தடுக்க வேண்டியவளோ அதிர்ச்சியுடன் ஐந்து வருடங்கள் கழித்து அவன் கண்களை பார்த்தவள்,பார்த்த சாரதியின் பின்னே, “மகன், மகள் மற்றும் பார்த்த சாரதியை நோக்கி குண்டு பாய வருவதை கண்டவள்,அவர்களை கிழே தள்ளி விட்டு அவர்கள் மீது இவள் விழ அதில் குண்டடி பட்டு பெண்ணவளும் மீனாட்சியும் இறக்க!”

ஹரி கேசவனை காப்பாற்ற அடுத்த  வந்த குண்டில் பார்த்த சாரதியின் மேல் பட்டு குறுதி வெளியேறி இறக்கும் தருவாயில் நடுவில் சின்ன சந்தில் மாட்டி கொண்டு இருந்த ஹரி கேசவனை,அங்கிருந்து செல்லுமாறு சொன்ன பார்த்தசாரதி ஹரிகேசவனை பார்த்தபடியே உயிர் தூரக்க!

ரங்கநாயகி பாட்டி பேத்தி மற்றும் கொல்லுபேத்தி  எந்த தவறும் செய்யாமல் இறக்க நேரிட்டதில் கவலையானவர், கங்கையின் மகனை அவன் தகப்பன் வீட்டில் வீட்டவர், கவலையில். இறைவனடி சேர!

சீரஞ்சீவி வீட்டில் நளினி சர்வாதிகாரம்  செய்ய , அதனை கேட்ட நந்தினியை தகாத வார்த்தைகளால் திட்ட, அதிலிருந்து ராம்கோவிந்து நந்தினியை சீரஞ்சீவி பெற்றோர் வீட்டிற்கு போக வேண்டாம் என்று தடுக்க!

சீரஞ்சீவி நெடுநாட்கள் கழித்து பிறந்தகம் வரபோகிறேன் என்று கடுதாசி எழுத !இதனை தன் தாயிடம் படித்து காட்டிய ரேணுகா  பதட்டம் அடைய!

நளினி ஏய் எதுக்கு கவலைப் படுற , அந்த சாக்கடை பெத்ததையும் போட்டு தல்லிட்டா,நீ எந்த இடைஞ்சலும் இல்லாமல் நிம்மதியாக சீரஞ்சீவிகூட வாழு  என்றாள்!

ரேணுகாவும், நளினியும் விளையான்டு  கொண்டு இருந்த பிள்ளையிடம் சோரு உட்டுறேன் என்று சொத்தில் விஷத்தை  கொட்டி அதனை ஹரிகேசவனிர்க்கு ஊட்டி குழந்தை என்றும் பாராமல்  கொண்றவர்கள், குழந்தை எதையோ தீன்று இறந்து விட்டான் என்று சொல்ல, இதனை அறிந்த ராம்கோவிந்து  மகளை தன்னுடனே இருக்க வைத்திருக்கலமோ என்று காலம் கடந்து யோசிக்க, சீரஞ்சீவி பெற்றோர்களோ  தங்கள் மகன் வாரிசுகள்  சிறுவயதிலே இறந்ததை தாங்க முடியாமல் அழுதார்கள்!

சீரஞ்சீவி வீட்டிற்கு வந்தவன் மனைவி மக்களை தேட , ஆனால்  அங்கு சுவரில் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் சிவப்பு பொட்டிட்டு மூன்று பெரும் தெய்வமாய் இருப்பதை கண்டவனுக்கோ, அதிர்ச்சியில் அங்கேயே மயங்கி விழுந்தான் .

வாழ்க்கையில் தனக்கு கிடைக்காது என்று நினைத்த எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை  தொலைத்துவிட்டு இருப்போம் என்று கனவிலும் நினைக்காதவன், தன் உயிரிலும் உணர்விலும் கலந்தவள் இப்போதும் இல்லை என்றதை தாங்க முடியாமல் சீரஞ்சீவி கதறி அழ!

நளினி உன் கண்ணீருக்குலாம் தகுதி இல்லாதவப்பா அந்த கங்கை ,நீ இருந்த வரைக்கும் வீடு வாசல்னு இருந்தவ நீ  வெளியே சென்றதில் திருவல்லிக்கேணிக்கு போனாவ அப்படியே போயிட்டா, அண்ணன் எப்போ நகருவான் தின்னை எப்போ காலியாகும் என்று காத்திருந்தவளுக்கு நீயே அவப்போக சந்தர்ப்பம் அமைச்சி கொடுத்துட்ட தம்பி என்று நளினி நீலிக்கண்ணீர் வடிக்க!

நந்தினி நீ கங்கையை நல்லா பார்த்துப்ப சொல்லி தானே  நான் என் புருஷனிடம் சண்டையிட்டு உனக்கு அவளை மணமுடித்தேன், ஆனால் நீ  அவளை எவ்வளவு பெரிய இக்கட்டு சூழ்நிலைல தள்ளுன தெரியுமா, நீ போர்‌ புரிஞ்சு இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கூடுப்ப ஆனால் போன என் பிள்ளை பேரப்பிள்ளைகளை உன்னால் திரும்பிதர முடியாதுல போட! என்று கோபித்தவர் அத்துடன் தன் பிறந்தகத்தை தலைமுழுகிவிட!

கொஞ்சம் நாட்கள் மனைவி பிள்ளைகளின் நினைவுகளுடன் இருந்த சீரஞ்சீவி , தன் தாய் தந்தை மற்றும் தமக்கை நளினி நச்சரிப்பு தாங்காமல்  ரேணுகாவை மறுமணம் செய்து கொண்டான்.

அவள் பிள்ளையை  தாங்கிய பின் ஏதேர்ச்சியாக அவள்,அவள் தாயுடன் பேசுவதை கேட்டவனிற்கு நெஞ்சு ரணமாக வலிக்க இப்போதே இங்கேயே இறந்து விடமாட்டோம என்று மனது கேட்க, தன் உதிரம் தன்னவள் மேல் வைத்த பாசத்தில் அவதரித்த அவன் மகன் சாதாரணமாக இறக்கவில்லை இவர்களால் கொல்லபட்டுள்ளான் என்பதை அறிந்தவனிர்கு, கங்கையை தான் மணக்காமல் இருந்திருந்தால், இன்னேரம் உயிரோடு இருந்திருப்பாளோ, இல்லை நான் போர் பயிற்சி செய்ய போகாமல் இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ என் ஆசைக்கு   பலியானது என் உறவும் உயிரும்தானே என்றவனுக்கு,அவனையே அவனை மன்னிக்க தயாராக இல்லை!

இந்த தடவை எல்லோரிடமும் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டு போர் புரிய போகிறேன் என்று சொன்னவன் ரேணுகா எத்தனை தரம் வேண்டாம் என்று சொன்ன பின்பும் போயே தீருவேன் என்றவன் செல்லும் மூன்பு அவளிடம்,நீ எதற்கு எத்தகைய பெரிய தவறும் செய்யாத  என் மகனை கொன்றாய் ரேணு எல்லாம் எனக்காக தானே என்றவன், நான் வேண்டும் என்று இதை எல்லாம் செய்தாய், ஆனால் நான் இந்த போரில் திரும்பி வரமாட்டேன், என்  மரணம் உனக்கு ஒரு சிறந்த தண்டனை என்றவன் அங்கிருந்து நகர!

சொன்னது போல் மரணச் செய்தியே வர,ரேணுக்கு பிறந்த மகனோ வளர வளர ஹரி கேசவன்  உருவத்தில் வளர  ஆரம்பிக்க , குற்றவுணர்ச்சி மகன் அருகில் செல்லவும் முடியாமல்  பயமுருத்த  பயத்துடனே அவள் வாழ்நாளை கழித்தவளுக்கு வாழ்வே  சூன்யம் ஆனது ரேணுவின்  வாழ்வில்

நாம் செய்யும் தவறு

அந்த நேரம் தெரியாமல் இருப்பினும்

நம் மனது காலம் கடந்து உணரும் நேரம்

காலச்சக்கரம்  உருண்டோடி  தரும் தண்டனை மிகவும் கொடியது!

Advertisement