Advertisement

உன்னை நினைத்து 15

கரம்பிடித்து இதழ் அணைத்து கதைக்க

கனா இருந்தாலும் விரல் தொடாமல்

விலகி இருப்பதில்

வினோத சுகம்

கண்மணியே

கங்கை பார்த்தசாரதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கலாம் என்று முடிவு எடுத்தவள் திருவல்லிக்கேணியில் இருந்து மயிலை வர!

ஆனால் நந்தினி தன் கணவர் ராம்கோவிந்துடன் பலபோரட்டதிற்கு பின் சம்மதம் வாங்கியவர் மலமலவேன திருமண வேலைகளில் இறங்கியவர்,12 நாட்களில் அனைத்தையும்  முடித்தார்

அதே நேரம் மயிலையில் மாட்டு வண்டியில் இரங்கிய கங்கை  திருமண பந்தலும் பந்தகாலும்  அவளை வரவேற்க!

என்ன நந்துமா என்ன விஷேசம் என்னிடம் சொல்லவில்லை என்று தெலுங்கில் கேட்ட  கங்கைக்கு,நீ முதலில் வீட்டிற்கு உள்ளே வா என்று அழைத்து சென்ற நந்தினி உனக்கும் என் அண்ணன் மகன் சீரஞ்சீவிக்கும் இரண்டு நாட்களில்  திருமணம்,அதனால் திருமணம் வேண்டாம் என்று சொல்லாமல் இத்தனை நாள் நான் உன்னை என் சொந்த மகளை போல் தானே வளர்த்தேன் உனக்கு நான் கேட்டது நினைக்க மாட்டேன் நீ சீரஞ்சீவியை திருமணம் செய்தால் உன் வாழ்க்கை நலமாக இருக்கும் என்று மகளிடம் கெஞ்ச!

நானா என்ன சொன்னாரு?

அவருக்கும் இதில் சம்மதம்!

ஆனால் அம்மா!

அக்கா வா நீ என்று வைஷாலி திருமண நகைகள் ஆடைகள் என்று எல்லாவற்றையும் கங்கைக்கு காட்டியவள் மெதுவாக,பாவா உன்கிட்ட பேசனும்னு ஜன்னல் பக்கம் நிக்குறாரு நான் யாராவது வரங்களான்னு வெளியே நின்று பாக்குறேன் நீ பேசு! என்றவள் வெளியே நிற்க!

ஜன்னல் பக்கம் வந்து நின்றவளை  கண்ட சீரஞ்சீவி ஏன்டி இப்பவாவது பாவா சொல்லுவியா இல்லை அண்ணையான்னு கூப்பிடுவியா?  என்று புருவம் உயர்த்தி கேட்டவன் ஆசையாக அவளை பார்க்க!

சீரஞ்சீவி என்று பெயர் சொல்லி கூப்பிட்டவள் உன்மையா சொல்லுங்க என்ன பிடிச்சியா திருமணம் பண்ண ஒத்துகிட்டிங்க?

ஓய் என்ன பாவாவ பெயர் சொல்லி கூப்பிடுற, அப்புறம் என்னோட அத்தை பெத்த ரத்தினமே எனக்கு நீனா ரொம்ப இஷ்டம் , பிடிக்கும் டி உன்னை என்று சொல்லியவன் , யாரோ வராங்க போல திருமணத்திலே சந்திப்போம் என்று கணசிமிட்டியவன்  அங்கிருந்து விரைந்து செல்ல!

சொல்லாத காதல் செல்லாது , கண்ணுக்கும் மனதுக்கும் பிடித்தவனை

காலமும் உறவும் வேண்டாம் என்று சொல்ல

வந்த காதல் சுவடின்றி அழிய

நிழல் எது நிஜம் எது புரிய

நிழலை மறந்து நீஜத்தை ஏற்று

சித்திரமாய் மணமேடையில் அமர்ந்தவள்

மஞ்சலால் மிண்ணும் பொண் தாலியை

ஆடவன் பெண்ணிற்கு கட்ட!

வஞ்சகரும் நல்லவர்களும் ஆசி வழங்க

சிறப்புடனே வாழ வேண்டும் என்று

சீரஞ்சீவி நினைக்க, கணவனுக்கு உன்மையாக இருக்க வேண்டும் என்று மனைவியவள் நினைக்க

பெண்ணின் மனது என்ன? அவள் மனதில் தான் இருக்கிறோமா? என்று எதை பற்றியும் கவலைப்படாமல் பெண்ணவள் அனுமதியின்றி ஆனவன் தன்னவளை முழுதாக எடுத்து கொண்டவன் மேண்மையை கையாள, இதுதான் தனது வாழ்க்கை என்று நினைத்த கங்கை கணவனுக்கு தாம்பத்தியத்தில் முழு ஒத்துழைப்பு கொடுக்க,அதனை சந்தோஷமாக ஏற்வனோ தன்னவளுக்கு முத்தமிட்டு தன் காதல் முகவரி எழுத,அதற்கு அச்சாரமாய் தன்னவள் வயிற்றில்  அடுத்த பத்து மாதத்தில் தன் உயிர் தன் காதலுக்கு சாட்சியாய் பிறக்க போவதை தந்தையவன் அறியாமல்  தன் மனைவியுடன் கூடலில் கலைப்புற்று தன்னவளை  அனைத்து தலைவனவன் தலைவியுடன் உறங்க ஆரம்பித்திருந்தான்.

உன்னளவுக்கு

அன்புகாட்ட

தெரியாவிட்டாலும்

நீ மகிழ்ச்சியாக

இருக்குமளவுக்கு

என் பாசமிருக்கும்!

.

Advertisement