Advertisement

உன்னை நினைத்து 14

மண்ணில்

மறைந்திருக்கும் வேராய்

என்னுள்

உறைந்திருக்கும் நீ

உதவி காவல் கண்காணிப்பாளர் (asp) பதவி அதிர்ஷ்ட வசமாக ஆதிசேஷனுக்கு சென்னையிலே கிடைக்க,இதோ பணியை தொடங்கி இரு மாதம் கடந்து விட்டிருந்தது, சீகாமணி ஆதிசேஷன் சொன்ன படி  இரு மாதம் கழித்து திருமணத்தை நடத்துவதாக முடிவு செய்திருந்தார் அடுத்து வரும் 15 நாட்கள் கழித்து திருமணம் என்று இருக்க, மாப்பிள்ளை பெண்ணுக்கு  திருமண உடை எடுக்க  திநகர் வரச்சொல்லி வள்ளி விடாமல் அழைப்பு விடுக்க!

இங்கே இவனுக்கோ சிஎம் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருவதால் தீவிர கண்காணிப்பில் சாலையை பார்த்து கொண்டும் ரவூன்ஸ் வந்து கொண்டு இருந்தவன் தாயிர்க்கு அழைத்து தன்னால் வர இயலாது என்றவன் கட் செய்து சாலையில் கவனமாக!

அப்போது சாலையில் கூட்டம் கூடி இருக்க, என்னய்யா இது சிஎம் வர டயம்ல இங்கே கூட்டம் கூடி இருக்கு என்றவன் போலிஸ் காரினை நிப்பாற்றி ஒொஎஅஈஒஓவிட்டு கூட்டத்தில் நுழைய!

அங்கே குடித்து விட்டு ஓரு பெண்ணிடம் ஒருவன் தகாராரு செய்து அப்பெண்ணை அடிக்க போக!

அந்த குடிகாரனை ஒரு அடி கொடுத்து என்னய்யா ஓரு கர்பினி பெண்ணிடம் சண்டை இடுகிறாய்  என்றவன் அதுவரை அந்த சுடிதாரில் இருந்த  பெண்ணின் மேடிட்ட வயிற்றை பார்த்தவன், இப்போது நிமிர்ந்து சிறிது கலங்கி இருந்த அந்த பெண்ணை பார்த்தவனுக்கு  அதிர்ச்சியாக அவளை பார்க்க!

அதே நேரம் தனது வயிற்றில் இருக்கும் மகவிற்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து இருந்தவள், தன்னை காப்பாற்றிய அந்த அதிகாரிக்கு நன்றி சொல்லியவள், குழந்தையை கடத்தி போக பார்த்தான் சார்  அவன், சுத்தி இருக்குறவங்க வேடிக்கை  பார்த்துக் கொண்டே இருக்குறாங்க  தவிர என் பிள்ளையை காப்பாற்ற உதவி பன்னல ஆனால் விடாமல் தூரத்தி இங்கே வரைக்கும் வந்து அவன்ட சண்டை  இட்டேன் என்றவள், என்  கணவருக்கு கால் செய்து இருக்கேன் வந்துட்டே இருக்காதா சொன்னாரு!

அதே நேரம் அந்த இடத்திற்கு வந்த சரவணன் அழுதபடி போலிஸ் அதிகாரி ஒருவருடன் பேசியபடி இருந்து மனைவியை பார்த்தவன் அவள் அருகில் வந்தவன்  என்னாச்சு குட்டிம்மா உனக்கு நவிக்கும் எதுவும் ஆகவில்லையே என்றவன் மனைவி காட்டிய அதிகாரியை  பார்த்தவன் மூலைகளிலும் மனதில் பல மின் வெட்டுக்கள் போல சரவணன் உள்ளும் பரவி கடந்த கால முன் ஜென்ம நிகழ்வுகள் வந்து போக,அதே நேரம் நவிலன், ஜானவியை பார்த்து ஆதிசேஷன் உள்ளும் பல்லாயிரம் மின் வெட்டுக்கள் ஒன்றாக தாக்கியது போல் அவன் ஆழ் மனதில் இத்தனை நாள் உறங்கி இருந்த பூர்வ ஜென்ம ஞாபகம் ஓரு நிமிடத்தில் அனைத்தும் இருவருக்கும் நினைவு வந்து விட, அதன் பின் சரவணனும், ஆதிசேஷனும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி நின்றிருக்க பின் அங்கிருந்து சரவணன் தன் மனைவி மகனை அழைத்து கொண்டு வீட்டிற்கு விரைவாக வந்தவன்,பின்பு நவிலனை கடத்தியது முதல் அவனை அழ்நடமாட்டம் உள்ள முக்கிய சாலையில், அவனை மறித்து குழந்தையை ஜானவி காப்பாற்றியதை தனது மாமா டிஎஸ்பி விஸ்வமூர்த்தியிடம் கூறியவன் நீங்கள் தான் அது யார் என்னவென்று கண்டறிய வேண்டும் மாமா என்றவன் அவரிடம் நன்றி சொல்லி அழைப்பை துண்டித்தவனுக்கு,ஆதிசேஷன் மேல் அதிக கோபம் கோபம் கோபம் தான்!

ஜானவி மாமியார் மாமனாரிடம் அனைத்தையும் விவரித்தவள்,மகனை கைக்குள் பொத்தி ஏதாவது  இவனுக்கோ அல்லது வயிற்றில் இருக்கும் உயிருக்கோ ஏதாவது ஆகியிருந்தாள் என்ற நினைப்பே அவளை பயம்கொள்ள செய்ய, அதில் அவளுக்கு பிபி அதிகமாக முகத்தில் எல்லாம் முத்து முத்தாக வேர்வை பூக்க என்று ஒரு மாதிரி ஆகிவிட்டிருந்தாள் ஜானவி!

டேய் சரவணா இங்கே பாரு ,இவ ஜானவி என்ன இந்த மாதிரி நேரத்தில் இப்படி படபடப்பா ஆயிடுறா,நீ அவளை ரும் அழைச்சி போ என்றவர் மருமகளை கவலையுடன் நோக்க!

சரவணன் அன்னையை கடுமையாக முறைத்தவன்,மனைவியை அழைத்து கொண்டு அறைக்கு போனவன், அவள்  படபடப்பை குறைக்க மனைவியை தலையை தடவி கொடுத்தவன்,இப்போது அவள் நிதனாத்திற்கு வந்த பின், ஏன் நீ தனியா வெளியில் கன்சீவாக இருக்கும் இந்த நேரத்தில் போனே!

அது சரவணா என்றவள்  ஐஸ் கிரீம் சாப்பிட தோனுச்சு வீட்டில் என்னைய யாரும் சாப்பிட்ட விடமாட்டார்கள் என்று யாருடன் சொல்லாமல் அந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு பாப்பாவ அழைச்சிட்டு போனேன், சாப்பிட்டு பில் பே பண்ணி திரும்பி பார்த்தாள் நவிய கடத்தி போக பார்த்தான் ராஸ்கல், எனக்கு வந்துச்சு பாரு கோபம் விடாமல்  போய் அவனை சேஸ் பண்ணி பாப்பாவ வாங்கிட்டேன் என்று அவள் சொல்ல!

அதுவரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த சரவணன் முதல் முறையாக ஜானவி கண்ணத்தில் ஓங்கி அறை ஒன்று அவள் கண்ணத்தில் கொடுக்க!

 அவள் அழுது கொண்டே என்னை அடிச்சிட்டல  மாசமாக இருக்கும் என்னை அடிச்சிட்டல என்று அழுது கொண்டே ஜானவி கேட்க!

ஏய் அடிச்சதோட விட்டேன் பாரு, நீ என்கிட்ட கியூட்டா கேட்டாளே நான் உனக்கு ஐஸ்கிரீம் இல்லை ஐலேண்ட் கூட வாங்கி தருவேன், ஆனால் உனக்கோ இல்லை நவிலனுக்கோ ஏதாவது ஆகியிருந்தாள்,என்னை நினைச்சு  இப்போவும் பார்க்க மாட்டே,அப்போவும் பார்க்கமாட்டே நான் உனக்கு என்ன திங்கு  செஞ்சேன், உன்னை  நினைச்சது தவிர, உன்னை காதலிச்சத தவிர என்று சரவணன் கேட்க!

சரவணனா  பெரிய வார்த்தை எல்லாம் பேசாதே டா நீஜமா, இது போல நடக்கும் எனக்கு தெரிந்து இருந்தால் நான்  வெளியே போயிருக்க மாட்டேன் சரவணா என்றவள் கலங்கிய படி சோஃபாவில் அமர்ந்தாள் ஜானவி!

ஹலோ அண்ணா ம்….. அவன் தான் நவிலனை கடத்த பிளான் போட்டு பண்ணிருக்கான் என்ன பண்ண அவனை என்று பனியாள் சரவணனிடம் போனில் பேச!

ஓ…… அவனா…..  முடிச்சிடு,  இனி யாரும்  என்னை சுத்தி இருக்குறவங்கள தொடனும்  நினைச்சாலே பயப்படனும் என்றவன் அழைப்பை துண்டித்து தன்னையே ஆராய்ச்சியாக பார்த்து கொண்டு இருந்த மனைவிக்கு தொழில் எதிரி என்றவன்  வெளியே செல்ல போக!

சோ உன்னால் தான் இது எல்லாம் நடந்ததா!

ம்……. என்றவன் வெளியேறிய அடுத்து இருபது நிமிடத்தில் இருப்பத்தி ஐந்து பேர் கொண்ட பாடிகார்ட்ஸ் அந்த வீட்டிற்கு வர!

ஜானவி அவர்களிடம் வீட்டை சுற்றி எப்போதுமே பத்து பேர் கொண்ட பாடிகார்ட்ஸ் பாதுகாக்கனும், நவிலன் வெளியே செல்லும் போது நான்கு பேர் அவனை பாதுகாக்கனும், நான் வெளியே செல்லும் போது  எனக்கும் நீங்கள் பின்தொடர வேண்டும் என்று அனைவருக்கும் கட்டளை இட்டவள் வெளியே சென்று விட்டிருந்தாள் ஜானவி!

ஜானவி வெளியே சென்றவுடன்  தாயிடம் அவர் ஒழுங்காக மனைவியையும் மகனையும் பார்க்க வில்லை என்று கோபமாக  சரவணன் சத்தமிட!

பார்வதியை சத்தமிடுகிறான் என்று ருத்ரன் அவனை கோபத்துடன் பேசியவர் வாயும் வயிறுமா இருக்குற பிள்ளையை கை நீட்டி இருக்குற எங்க இருந்து வந்தது இந்த தைரியம், ஆயிரம் தான் எனக்கும் உங்க அம்மாவுக்கு சண்டை வந்து இருந்தாலும் நான் அவளை கை நீட்டியது இல்லை, ஆனால் என் மகன் உனக்கு எப்படி கை நீட்டும் பலக்கம் வந்தது என்றவர், அந்த பிள்ளையை தெரியாம உனக்கு திருமணம் செய்து வைத்து பெருந்தவறு செய்து வைத்து விட்டோமோ என்று நினைக்க வைக்கின்றாய் சரவணா!

ஏற்கனவே பழையதை மனதில் நினைத்து கவலையில் இருந்த சரவணன் தந்தை சொன்னது என்று எல்லாம் சேர்த்து அவன்  மனதில் ஜானவியை பார்த்து காதல் வயபடமால், திருமணம் செய்யாமல் இருந்து இருக்கலாமோ என்று தோன்ற!

அதே நேரம் ஜானவி, நவிலனை அழைத்து கொண்டு நேராக தாய் வீட்டிற்கு வந்தவள்  தனதரைக்கு வந்தவள் லோலிட்டாவிடம் மகனை பார்க்க சொல்லி விட்டு கண்மூடி தூங்க ஆரம்பித்திருந்தாள் ஜானவி!

அதே நேரம் ஆதிசேஷன் சரவணன் அந்த இரவு நேரத்தில் தங்களது முற் பிறவியின் நினைவு பெற்றதை நினைத்து பார்க்க ஆரம்பித்திருந்தனர், இவர்கள்  நினைத்து பார்க்க ஆரம்பித்த அதே நேரத்தில் ஜானவி  அவள் முன் ஜென்ம நிகழ்வுகள் கணவுகளாக கான ஆரம்பித்திருந்தாள்!

முன் ஜென்மம்

1923

மதராஸ்  தமிழ் நாடக இருக்காத நேரம் அது,பழைய மெட்ராஸ் பகுதியில் தெலுங்கு மக்கள் தொகை, சுமார் 42 சதவீதம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் தொகை 53 சதவீதம், மீதமுள்ளவர்கள் மற்ற தென்னிந்தியர்கள்.

கங்கை தெலுங்கு பெண் அன்னை இல்லாமல் சிற்றன்னை நந்தினி வளர்ப்பில் வளருபவள் தந்தை ராம்கோவிந்து.

நந்தினி ராம்கோவிந்துக்கு வைஷாலி, நரசிம்மன்  என்று இரு மக்களும், முதல் தாரத்து பெண் கங்கையும் ஆவாள்.

கங்கை அன்னை சுகமில்லாமள் காலாவதி ஆக, நந்தினியை மனந்தார் ராம் கோவிந்து.

ராம் கோவிந்திர்க்கு நில புலன்கள் பல இருக்க ,அதில் விவசாயம் ஆட்களை வைத்து பார்த்து கொண்டு இருந்தார் மனிதர்.

இதில் ஆங்கில அரசாங்கத்திற்கு பெரும் தொகையை வரியாக  கட்டி கொண்டும், தன் நிலங்களை ஆங்கிலம் அரசாங்காம் எடுக்காமல் இருக்க  வயலில் விளைந்ததை  அரசாங்க அலுவலகத்திற்கு அனுப்பி விடுவார்.

இப்போது கங்கை  மங்கை வயதை எட்டியதை எடுத்து கோவிந்து மகளுக்கு மருமகன் பார்க்க!

நெருங்கிய நண்பர் பக்கத்து ஊர் பார்த்த சாரதியை  கங்கைக்கு மணாளனாக சொல்ல!

நந்தினியோ   தன் அண்ணன் மகன்   சீரஞ்சீவி ஆசைப்படி கங்கையை அவனுக்கு மணம்முடிக்குமாறு ஒற்றை காலில் வேண்டாது குறையாக கணவனிடம் கேட்க!

கோவிந்து சரி என்று சொல்லலாம் என்று நினைக்க,அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தது என்னவோ கங்கை தான்!

கங்கையிற்கு சீரஞ்சீவி பிடித்தம் என்று இருந்தாலும், தன் பின்னி(சித்தி, நந்தினியின் தங்கை) மகள் வேணுகாவிற்கு சீரஞ்சீவியை பற்றி பேசுவாதாக சிறுவயதிலே பேசப்பட  ஆதானல் என்னவோ கங்கையை, நந்தினியின் உறவுகள் ஒதுக்கி வைக்க, இதனை கல்லம் கபடம் இல்லாத நந்தினிக்கு தெரியவில்லை!

அதனால் என்னவோ சிறுவயதிலிருந்து சீரஞ்சீவியை அண்ணையா என்று கங்கை அழைக்க  ஆரம்பிக்க, அப்போது  இருந்து சீரஞ்சீவி கங்கையிடம் இருந்து தள்ளி செல்ல!

இதனை பார்த்து சந்தோஷபட்டது  நந்தினியின் தங்கை நளினி,என் மகளுக்கு சீரஞ்சீவி ,என் மகளுக்கு  தான் சீரஞ்சீவி என்று கோட்டையை கட்ட,அதனை கங்கை  கலைப்பதை நளினி விரும்பவில்லை !

இதனுடே பார்த்த சாரதி கங்கையை பெண் பார்த்து செல்ல, கங்கையோ கருமை நிறம் கொண்ட கண்ணை போல் இருக்கும் பார்த்த சாரதியையும் வேண்டாம் என்று சொல்ல !

ஒரு பக்கம் கண்ணனை போல் இருக்கும் பார்த்த சாரதி, மற்றோரு பக்கம் சீரஞ்சீவி என்று வீட்டில்   திருமணம் உறுதியை பற்றி கங்கையிடம் பேச!

கங்கையோ பெருமாளே  உன்னையே சேவிக்குற எனக்கு நல்ல வழி காட்டு என்று மயிலையில் இருந்து திருவல்லிக்கேணிக்கு  பெருமாளை தரிசனம் முடித்து பிரகாரத்தை சுற்றி வந்தவள் கோவிலில்  நவராத்திரி கொலு படிகட்டில் பெருமாளின் அவதாரங்கள் இருக்க அதனை ரசனையாக பார்த்தவள் கடவுளிடம் வேண்டியபடி மங்கையவள் கங்கை கடக்க!

அங்கே மாய கண்ணனவன் பெண்ணை பேசாமல்  தொடர்வது பெண்ணவளுக்கு  தெரிந்ததோ அல்லது பெருமாள் பார்க்க வைத்தாரோ!

அவள் நோடி நேரத்தில்  அவனை கண்டு கொண்டவள் தலையில் தட்டிய படி ஏன்  தன் தாய் வழி பாட்டி  ரங்கநாயகி வீட்டிற்கு வந்தோம் என்பதை போல் ஆயிற்று கங்கையிற்கு!

பார்த்த சாரதியோ கோவிலில் இருக்கும் பார்த்த சாரதிக்கு ஒரு பெரிய நன்றியை விட்டவன் நவராத்திரி ஒன்பது நாட்களும் கங்கையும் பார்த்தசாரதியும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட, கடைசி நாளான விஜயதசமி அன்று கோவிலுக்கு வந்தவளிடம் பேச சென்றவன் அவள் படபடக்கும் கண்களை, இமைக்காமல் பார்வையிட , அதில் இருவரது இதயமும் இருவரிடமிருந்து மற்றவருக்கு தாவ!

ஒரு வேழம்

நாகம் ஒன்றை

வீழ்த்த பார்க்கையில்

ஒரு தாளம் பூத்தது

மறண்டதாம் சகி

அந்த வேழம் நோக்கிட

இங்கு தாளை நோக்கிட

ஒரு மோன காவியம் பிறக்க

இது அந்தி பாகமா

இது அந்தி பாகமா

யுக நீள கானமா

யுக நீள கானமா

ஒரு நொடி நேர யோகமா  சகி…..

Advertisement