Advertisement

உன்னை நினைத்து 13.1

வரமே நீயடி டி

என் வாழ்வும் உனக்காக டி

கனவில் வரும் என் கண்மணி

என் கண்களில் படாமல் தப்பிப்பது ஏனடி?

ஆதிசேஷன் மூன்று மாத லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி மூசோரியில் டிரைனிங்  முடித்தவன், அதன் பின் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி ஹைதராபாத்தில் 11 மாத டிரைனிங் முடிய, இந்த பயிற்சி முடிந்த பின் மாவட்ட திட்டமிடல் பயிற்சி டிரைனிங் ஐபிஎஸ் வேலை என்று எல்லாம் நல்ல படியாக போய் கொண்டு இருக்க!

ஆனால் தினமும் அவன் கனவில் வரும் பெண்ணவளை ஏனோ மனம் தினமும் நினைத்து தடுமாறுகிறது, அப்படி ஒரு பெண்ணை அவன் இதுவரையிலும் சந்திக்கவே இல்லாத நிலையில், அந்த பெண் தன் கனவில் வரும் காரணம் தன் வருங்கால மனைவியாக இருக்கலாம் என்று  தன்னையே கேட்டு கொண்டு இருந்தவன் கண்ணாடியில் தன் முகம் பார்க்க அதுவோ  ஓரு வெட்க சிரிப்பை உதிர்க!

ஓ காட் இது என்ன நானா, நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி இன்னும் சில நாட்களில் எனக்கு பதவி கொடுக்க போகிறார்கள் ஆனால் நான் கனவில் வந்த பெண்ணை நினைத்து வெட்க பட்டு கொண்டு இருக்கிறேன்! என்றவன் அங்கிருந்து அகன்றாலும் அவளையே நினைத்து கொண்டு அன்று  அல்ல அதற்கடுத்து வந்த நாட்களிலும் அவளது  நினைவையே தாங்கியபடி  தனது  பயிற்சியை தொடர்ந்து கொண்டு தான் இருந்தான் ஆதிசேஷன்?

ஆதிசேஷன் கனவில் வருவது யாராக இருக்கும்  அவன் முற்பிறவி மனைவி கங்காவா?, ஜானவியா? அல்லது வேறு யவரோவா?

அதே நேரம் ஆதிசேஷனை பார்க்க அவன் தந்தை வந்து இருப்பதாக ஆதிசேஷன் நண்பன் வந்து ஆதிசேஷனிடம் சொல்ல!

என்ன  என்று ஷாக் ஆனவன்  சந்தோஷத்துடன் தந்தையை பார்க்க வர!

இது இரண்டாவது தடவை சீகாமணி தனது பயிற்சியில் இருக்கும் மகனை பார்க்க வருவது, ஆனால் முதல் தடவை கொஞ்சம் பதட்டமாக இருந்தது போல இப்போது இல்லாமல், இப்போது ரொம்பவும் சந்தோஷமா  நின்றிருந்தார் மனிதர்.

என்ன அப்பா நீங்க மட்டும் தான் வந்திங்கலா அம்மாவையும் அழைத்து வந்து இருந்திருக்கலாமே என்று  மகனவன் கேட்க!

போதும் வா உன் மகன் உன்னை கேட்டுட்டான் வா வந்து உன் தரிசனத்தை தா உன் மகனிடம் காட்டு என்று சீகாமணி சொல்ல!

 ம்….. ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆக போகிறான் நான் ஒழிந்து இருப்பதை கூட இவனால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று மகனை வாரியவர், மகன் முறைத்த முறைப்பில் கணவன் அருகே நின்றவர் ஏதோ வானம் அழகாக இருப்பது போல மேலேயே பார்க்க ஆரம்பித்திருந்தார் வள்ளியம்மா!

இந்த மரத்து பின்னாடி நின்ன வள்ளியம்மாவ நான் வரும்போதே பார்த்துட்டேன்,ஏதோ சின்ன பிள்ளை தனமா நமக்கு சர்ப்ரைஸ் தரவங்கல தெரியாதது போல் காமிப்போம் என்று நினைத்தால் எனக்கே கேக்கா என்று தலையை உயர்த்தி தந்தையிடம் முறையிட்ட படியே தாயை பார்த்து கேட்க!

ச்சு…..அதை விடுடா மகனே உன்மையாலே இப்போ நான் கொடுக்கிறேன் சப்பரைஸ்  இரண்டு மாதம் கழித்து உனக்கு திருமணம் பொண்ணு நல்ல பொண்ணு பெயர் ஊர்மிளா நம்ம சொந்தம் தான் உனக்கு பிடிக்கும் ஃபோட்டோ பார் என்று தன் மொபைலில் இருந்த ஊர்மிளா ஃபோட்டோ வை காட்ட தன் கனவில் வந்த  பெண்ணுடன் இந்த பெண்ணவள் இருந்ததை  பார்த்த ஞாபகம் இருக்க, இப்போது மனதில் அதிர்ந்தவன் தந்தையை நோக்க , அவரும் ஆசையாக மகனை பார்க்க!

வள்ளியம்மா இருவரையும் பார்த்தவர் நீ  அவசர படமா நிதானமாக யோசித்து சொல்லு கண்ணா என்றவர் உங்கள் ஆசையை அவன் மேல் தினிக்காதிங்க!

என்ன ஆசை ம்மா?

இவரு தூரத்து தங்கச்சி பொண்ணு மகள் தான் ஊர்மிளா,அதான் தன்னோட உறவுளே  உனக்கு பொண்ணு கிடைச்சது ‌ சந்தோஷமா நினைக்குறாரு!

“ஆதிசேஷன்”,அவங்க விட்டுல திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்களா?

சீகாமணி ,அது எல்லாம் என் தங்கச்சிக்கு வீட்டில் நீ அவங்க விட்டு மாப்பிள்ளை ஆகுறதுல பறிபுரன சந்தோஷம்!

என் மகன் ஐபிஎஸ்ல அப்போ எல்லாரும் நீ நான் போட்டி போட்டு என் மகனுக்கு பொண்ணு கொடுக்க குயுவில் நிப்பாங்க இதுல உங்க தங்கச்சி வந்தது அதிர்ஷ்டம்னு சரி சொல்லி இருப்பா!

நீ சும்மா இரு வள்ளி,நீ இன்னிக்கு ஒரு நாள் யோசித்து முடிவு சொல்  சேஷா, அப்பா அவங்க வீட்டில் பேசி அடுத்து பத்து நாட்களில் திருமண உறுதி செய்யலாம்!

ஆதிசேஷன்,ஏன் இவ்வளவு அவசரமா திருமணம் உறுதி செய்யனும்! கொஞ்சம் நாட்கள் ஆகட்டுமே  அப்பா!

“வள்ளியம்மா”,அது  இல்லை ஆதி உனக்கு இன்னும் மூன்று மாதங்கள் முடியறதுகுள்ள திருமணம் செய்ய வேண்டும் இல்லை என்றால் உனக்கு திருமணமே ஆகாது, அது தான் அப்பா உனக்கு அவரு தங்கச்சி பொண்ணு பார்த்த போது சரி சொன்னேன், பெண்ணும் நல்ல பெண் சரி சொல்லிடுப்பா ஆதி!

ஆதிசேஷன் இன்னும் யோசனையிலே இருந்தவன் பெற்றவர்களை அழைத்து கொண்டு அந்த சிறிய உணவு விடுதியில் உணவு சொல்லி அதை உண்டவன் , நிச்சயத்திற்கு சம்மதம் தெரிவித்தவன் ஆனால் இரு மாதம் கழித்து தான் என்று உறுதியுடன் சொன்னான்!

அடுத்து வரும் இரு மாதமும் அவன் வாழ்கையே சுழற்சியாக சுழழ போவது தெரியாமல் ஆதிசேஷன் கூறியதை கால தேவன் அன்றி யார் அறிவார்!

Advertisement