Advertisement

உன்னை நினைத்து 12.1

சரவணன் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்களுடைய பதினைந்து கடைகளில் பணம் வசூல் செய்தவன், குடோனில்  போரோவிஷன் ஸ்டோர்  ஸ்டாக் லோடுகளை இறக்கி வைத்தவன் வீட்டுக்கு வர  இரவு பணிரேண்டாக, வாட்ச் மேன் கேட்டை திறக்க, சரவணனுக்காக காத்திருக்கிறேன் என்று மாமியாரை “இதோ உங்க பேரன் இப்போதைக்கு தூங்குறது போல இல்லை எப்படி இருந்தாலும் முழித்து தான் இருக்கனும் நீங்க போய் தூங்குங்க அத்தை என்ற ஜானவி சரவணன் வந்தவுடன்  எதுவும் பேசாமல் உணவு எடுத்து வைக்க”.

அவனும் பசியில் இருந்ததினால் முகம் கைகால் எதுவும் கழுவாமல் சாப்பிட அமர!

ரொம்ப பசி ஜானவி முறைக்காத பிளிஸ் என்றவன் வேகமாக சாப்பிட்டு எழ!

டேய் நவிகுட்டி வாங்க நாம போய் தூங்கலாம் சரியா என்று மகனிடம் வினாவ   அவனோ கைகளையும் கால்களையும் ஆட்டியபடி வேண்டாம் என்க!

உன்னை விளையாட சொன்ன இரவு எல்லாம் விளையாடுவ ஆனால் அம்மாக்கு ரோம்ப டயர்டா இருக்கு செல்லம் வா என்று  மகனுடன் மேலே அறைக்கு வந்தவள், குளியல் அறையில் சத்தம் கேட்க, உள்ளே இருக்கான் போல உங்க அப்பன் என்றவள் கட்டிலில் படுத்தபடியே மகனுடன் பேசி கொண்டும் விளையாட்டு காட்டி கொண்டும் இருந்தவள் அப்படியே உறங்கி இருக்க!

குளித்து முடித்து டவளுடன் வெளியே வந்த சரவணன் இரவு உடை அணிந்தவன்  க…… ஐ…….. வ…….. என்று வாயிலே சத்தமிட்ட மகனை ஜானவி உறக்கம் கேடாதபடி என்ன சத்தம் ……ம்…… என்ன …… சத்தம்…..எப்போ தூங்குவ குட்டி பையா என்றவன் மகனை சிறிது நேரம் தோளிலே ஆட்டி ஆட்டி தூங்க வைத்தவன்  மகனை சுத்தி  எங்கும் நகராக படி தாலகானி வைத்து நாலு பக்கம் அனைகட்டியவன் களைப்பில்  தூங்கிருந்தான் சரவணன்!

இரண்டு வாரமாக வேலை பார்ப்பதும் வீட்டுக்கு தாமதமாக வருவதும் என்று சரவணன் இருக்க!

அன்று  மதியம் சரண்யா ஜானவிக்கு கால் பண்ணி விசாரித்தவள் பொருமையாக லூசி மற்றும் சரவணனை ஒன்றாக பார்த்ததை கூற!

ச்ச……… இல்லடி என்கிட்ட சரவணன்  சொல்லிட்டு தான் போனான், அந்த லூசி காண்டாமிருகம் விடாமல் போன் பண்ணிட்டே இருந்துச்சு,நான் தான் என்னன்னு கேக்க சொன்னேன்!

ஓ………அப்படியா……. ஆனாலும் நீ கொஞ்சம் கவனமாக இரு டி சரவணன் நல்லவன் தான் ஆனால் அந்த லூசி அப்படி இல்லை சரியா என்றவள் இன்னும் வேறு எதோ உரையாடி விட்டு அலைப்பை தூண்டிக்க!

ஓ……..திருப்பி சார்   அவனோட பழைய கதையை  தொடங்கிட்டான,  அப்போ நான் எதுக்கு இங்கே, எனக்கு  இங்கே மனைவியா இருக்க கூட தகுதி இல்லை சொல்லுறான என்று கண் கலங்கியவள், என்ன தோழியாக இருந்தாலும் கணவனை மற்றவரிடம் விட்டு கொடுக்காமல் பேசியவள், கோபத்துடன் மகனை அழைத்து கொண்டு மாமியார் மாமனாரிடம் சொல்லி தனது தாய் வீட்டுக்கு வந்தவள் , அம்மா அப்பாவிடமும் சித்தப்பா சித்தியுடன் உரையாட!

“சித்தி”, என்ன ஜானவி இப்போ மருமகன் எப்படி இருக்குறாரு  எந்த பிரச்சனையும் இல்லையே!

இல்லை சித்தி   இத்தனை நாள் அங்கே லண்டன் வந்தது  நிறைய வேலை தேங்கி இருக்கு, அதே முடிக்கிறதுக்கு  நிறைய நேரம் ஆகிடுது!

பார்த்து இருந்துக்கோ டி ஜானவி என்ன தான் மாப்பிள்ளை நல்லவரா இருந்தாலும்  ஆடின காலும் பாடின வாயும்  சும்மா இருக்காது புருஷனை முந்தானைல முடிஞ்சுக்கோ என்ற தான்யலட்சுமி கிரிதரனை பொடிவைத்து மகளுக்கு அறிவுரை வழங்க!

என்னம்மா சொல்லுற?

அடி போடி சுரக்காய்கு உப்பு இல்லையாம், இந்த உலகத்துல எந்த அம்பிள்ளையும்  உத்தமன் இல்லை  எடுத்து காட்டு உங்க சித்தப்பா கூட! அப்போ மாப்பிள்ளை எப்படி இருப்பாரு தெரிஞ்சுக்கோ, கல்யாணத்துக்கு முன்னாடி  உன் புருஷன் எப்படி வேண்டுமானாலும் இருந்து இருக்கலாம், ஆனால் திருமணம் முடிந்த பிறகு இது தான் வாழ்க்கை!

ஏற்கனவே சரவணனை நினைத்து குழம்பி இருந்த ஜானவி , நீங்க சொல்லுறத பார்த்தா அந்த சரவணன் பையன் லூசி கூட திருப்பி ரிலேஷன்ஷிப்புல இருப்பான் போலயே என்று தாயையும் சித்தியும் பார்த்து மிரண்டபடி கூற!

இப்போது நேத்ரா, தான்யலட்சுமியிடம் கண் காட்டியவர் பார்த்திங்கலா விஷயம் வெளியே வந்திடுச்சு என்றவர்  இன்னும் தனது நடிப்பை தொடர!

அச்சோ, அக்கா இது என்ன  இவ இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடுறா!

ஏண்டி உங்க மாமியார் ஏற்கனவே அந்த லூசிய பத்தி சொன்னதே அப்படி ஒரு உவப்பா இருந்துச்சு,இதுல நீ என்னடான்னா என் வயித்துல புளிய கரைக்குற,இரு இதை இப்பயே உங்க அப்பாகிட்ட  போன் பண்ணி சொல்லுறேன்!

நீ அப்பாக்கு போன் பண்ணுறது அப்புறமா இருக்கட்டும், அந்த லூசி பத்தி என் மாமியார் உன்கிட்ட என்ன சொன்னாங்க சொல்லு!

அது அந்த லூசி உங்க கல்யாணத்துக்கு முன்னே லிவிங் ரிலேஷன்ஷிப்புல இருக்கும் போது இந்த சொத்துலாம் எனக்கு தான் பார்வதிகிட்ட தேனாவட்டா சொல்லியவள் சரவணன் கிட்ட அப்படியே  நீலிக்கண்ணீர் வடிச்சு பார்வதியை  அபன்டமா பழி சொல்லி இருக்குறா, இதுல நீ வேற நவிக்குட்டிய பிரச்சினை சொன்னப்போ எல்லாம் இந்த லூசி வேலையாக தான் இருக்கும்ன்னு புலம்புனாங்க!

நேத்ரா ஆமாம் நீங்கள் இரண்டு பேரும் ஓன்னா சேர்ந்து வாழ்க்கை தொடங்கியாச்சா?

அது ………. வந்து…………. என்று ஜானவி இழுக்க……

“நேத்ரா”,கிழிஞ்சது போங்க அக்கா!

என்னடி வந்து போயின்னு சொல்லுற………. ஏதாவது பிரச்சினை இருந்தா அதை பேசி தீர்த்துக்கணும்,  நீ இப்படி அடிக்கடி இங்கே வந்தா, இங்கே கோவிச்சுகுட்டு உட்கார்ந்தா வாழ்க்கை போயிடும் டி மகளே, நீ வானா வரதுக்கு போனா போக்குவரத்துக்கு வாழ்க்கை ரயில் கிடையாது சரியா!

ஓ……….. அவன்………. வாழ்க்கையில என்னை தவிர வேற யாரையாவது உள்ளே விடுவானா,அப்படி எவளாவது வந்தா அவளையும் எம்புருஷனும் என் கையில கைமா ஆவாங்க  சொல்லிட்டேன் கோபத்துடன் என்றவள் மறுபடியும் மகனை அழைத்து கொண்டு அங்கிருந்து விருவிருவேன மாமியார் வீட்டுக்கு வந்திறங்கினாள் ஜானவி!

ஹான்…….. சம்மந்தி இப்போ தான்  என் மருமகள் மேலே போனா என்று  கைப்பேசியில் பார்வதி தான்யலஷ்மியிடம் உறையாட!

தான்யலட்சுமி: நாங்க போட்ட நாடகம் அப்படில என்ன என் மருமகனுக்கு தான் கொஞ்சம் சேதாரம் அதிகம் ஆகும் பார்த்துக்கோங்க சம்மந்தி மருமகனை!

பார்வதி:அதை எல்லாம் கவலை படாதிங்க சம்மந்தி  அவன் எல்லாம் எதையும் தாங்கும் இதயம் , அவன் பொண்டாட்டி குடுக்குற உதையை தாங்கிக்க மாட்டானா! என்றவர் இன்னும் உறையாடி விட்டு அழைப்பை துண்டிக்க!

இரவு நெடுநேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த சரவணனை, பார்வதி  வரவேற்றவர் மகனுக்கு வயிறு நிறைய உணவு கொடுத்து  மேழே இருக்கும் அவன் அறைக்கு வழியனுப்பி வைக்க!

என்ன இந்த அம்மா இப்படி அர்த்த ராத்திரியில் மகனை பாசமாக கவனிக்குது ஏதோ  இருக்கு நமக்கு என்று மேலே தனதரைக்கு வந்தவனிற்கு தூங்காமல் முழித்தபடி அமர்ந்து இருந்த மனைவியை கண்டு ஆச்சரியத்துடன் புருவத்தை தூக்கியவன்,  புண்ணகைத்தபடியே ஒரு வணக்கத்தை போட்டவன் குளிக்க  ஆடையை எடுத்தபடி செல்ல!

 அவன் குளியல் அறைக்கு செல்வதற்குள் அந்த வழியை அடைதத்தபடி  அவன் முன்னால் வந்து நின்றவள் வேகமாக அவனை ஒட்டியபடி அவனை நுகர!

அவன் மேல் புதிதாக பூக்களின் நறுமணம் வீச, அப்படியே  கோபமாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் பட்டென்று கண்ணத்தில் அறை விட!

ஏய் எதுக்கு டி என்னை அடிச்ச என்று  கோபமாக கத்த!

சட்டையை கொத்தாக பிடித்தவள் என்ன டா உன் மேலே புதுசா வாசனை வருது,லூசி கூட நல்லா ஊர் சுத்திட்டு அவளையும் மாசமாகனும் பார்க்கிரியா? என்று சத்தம் போட்டு கத்த!

ஏய் கத்தாத டி பிள்ளை எழுந்துக்க போறான் என்க!

ஏய் உன் நோல்ல கண்ண நவிகுட்டி மேல பாரு கோட்ட கோட்ட விழிசிட்டு தான் இருக்கான்!

நவிலன் தந்தையின் பக்கம் தலையை திருப்பி சிரிக்க!

மாட்டுனேன் என்றவன், ஏய் நீயா கற்பனை பண்ணாத டி நான் லூசியலாம் பார்கல புதுசா பூ லோட் வந்தது  அதை பார்க்க போனேன் என்க!

 ஓ…………. நீ அப்போ லூசிய பார்க்கலை  உன் மேலே வருகிற வாடை அவளது இல்லை, கரெக்டா!

ம்………….

அப்போ இது என்னடா லுசியோட தங்கச்சியா என்றவள் அவனிடம் தன் போனில் உள்ள போட்டோவை காட்ட!

இது எப்படி உன்கிட்ட என்று அதிர்ச்சியுடன் சரவணன் கேட்க!

எனக்கு நாலாபுறமும் கண்ணு இருக்கும்போது, என்  பிராடு புருஷன் உன் மேலே  எனக்கு கண் இருக்காதா  என்னோட ஸ்பை சொல்லிச்சு!

சரி அந்த ஸ்பை நான் அவளிடம் பேசியதை சொல்லி இருக்கலாம் ல!

சரி என்னை பேசுனே என்று ஜானவி கேட்க!

அதுவா……. என்று அவன் கண்ணத்தில் கைவைத்து யோசிக்க!

அவன் மண்டையில் தட்டியவள்  நீ உன்னோட மண்டையில என்ன தான் யோசிச்சாலும் புளுகு முட்டை பொய் தான் சொல்ல போற!

சரவணன் எப்படி இவ கரேக்டா  கேஸ் பண்ணுறா,இது சரி இல்லையே என்று  அவன் கண்களை உருட்ட!

என்ன இவன் இப்படி கண்ணை உருட்டுறான் திருப்பி நமக்கு இவன் ரிவிட் அடிப்பானோ..….. இந்த லோலிட்டா சொல்லு பேச்சு கேட்டா நம்ம வாழ்க்கை நம்ம கையை விட்டு போயிடும் போலயே, நம்ம அம்மா  சித்தி சொன்ன போல இவனை முந்தானைல முடிஞ்சி வெச்சுகனும்!

என்ன லுக்கு!”ஜானவி”

ஒன்னுமே இல்லைமா என்று அப்பாவி போல சரவணன் சொல்ல!

ம்……. அப்படியா ………

ம்………நீ விட்டனா நான் போய் குளிச்சு ரேப்பிரஷ் ஆகி வருவேன் ரோம்ப டயட் மா பிளிஸ் என்க!”சரவணன்”

சரி போ என்றவள்  குளியல் அறைக்கு செல்லும் கணவனையே பார்த்து கொண்டு இருந்தாள் ஜானவி!

குளித்து முடித்து இரவு உடையில் வந்தவன்  அவள் யோசனையுடன் அமர்ந்து இருப்பதை பார்த்தவன்!

என்ன உனக்கு எதுக்காக லூசி என்னை பார்த்தான்னு தெரியனுமா!

ஜானவி நான் கேக்குறதுக்கு சரவணா நீ  உன்மையா பதில் சொல்லனும் சொல்லுவியா?

ம்…….. சொல்லுறேன் சொல்லு!

நீ என்னை ரொம்ப வருடம் உன்மையா காதலிச்ச தானே?

 ஆமாம் ஏன் உனக்கு என் காதல் மேலே நம்பிக்கை இல்லையா சரவணன் கோபமாக கேட்க!

ச்ச……. அப்படி இல்லடா நீ உன்மையா காதலிச்ச பட் எதுக்கு லூசி கூட லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருந்த என்றவள் அவன் முகத்தினை பார்க்க!

அவன் சங்கடமாக உன்னை காதலிச்சேன் தான் ஆனால் அந்த நேரத்தில் அந்த வயதில் லூசி பழகுனது  எல்லாம் தடம் புரள வைத்தது,ஆனால் நானே இது எல்லாம் தவறுனு தெளிந்தது எது உண்மை எது பொய் என்று என் அம்மா எனக்கு அவளை பத்தி சொல்லவில்லை என்றால்  நிஜமா நான் அவளை திருமணம் செய்து இருப்பேன்மா, ஆனால் அதன் பின் சத்தியமாக இப்போ வரைக்கும் நான் உனக்கு உண்மையாதான் இருக்கேன் டி ஜானு!

அவள் அழுது கொண்டே போடா ராஸ்கல் என்று நெஞ்சில் அவனுக்கு வலிக்காமல் அடித்தபடியே படுக்கையில் அவன் நெஞ்சில் முகத்தை மறைத்த படி அழுக!

ஏய் பப்ளி அழுகாத டி என்று அவள் தலையை தடவி சமாதான படுத்த!

ஏன் மேல காதல் இருக்கு சொன்னேல அப்போ ஏன் இந்த இரண்டு வாரமாக என்கிட்ட பேசலை!

வேலை நிறைய டி  பேசலாம்னு வந்தா மகன் கூட நல்லா தூங்குற எப்படி டிஸ்டர்ப் பண்ண சொல்லு, அதுவும் இல்லாமல் என் பாச பொண்டாட்டி நான் பக்கத்தில் வர கூடாதுனு மிரட்டி வேற வெச்சு இருந்தா, நான் அதனால பயத்தில் வரல என்று பயந்தபடி கூற!

ப்ராடு நீ பயந்த போல நடிக்காத  என்று  அவன் காதினை பிடித்து திருக !

ஏய் வலிக்குது டி பொண்டாட்டி!

ம்….. வலிக்கட்டும் நான் இன்னிக்கு அந்த லுசியோட இருந்த ஃபோட்டோ பார்த்து கோபமாக எங்க அம்மா வீட்டுக்கு இங்கே திரும்பி வரக்கூடாதுனு தான் நவிகுட்டிய கூட்டிட்டு போனேன், “ஆனால் அங்க போய் தான் எனக்கு இன்னொரு விஷயம் புரிஞ்சுது,ஏற்கனவே நீ ஓரு ப்ளே பாய்  நான் முதல் தடவை உன்னை விட்டு ஆறு மாதம் பிரிஞ்சதுல நவீ குட்டிய கூட்டிட்டு வந்துட்ட,இன்னோரு தடவை பிரிஞ்சா நீ இதான் சான்ஸ்னு வேற எவளியாச்சும்  இழுத்துட்டு வந்துட்டா, என் வாழ்க்கையை நான் தானே காப்பாத்திகனும் அதான் திருப்பி நம்ம வீட்டுக்கே வந்துட்டேன்!”

அடிப்பாவி பொண்டாட்டி உனக்கு உன் புருஷன் மேலே இவ்வளோ தான் நம்பிக்கையா!

என் புருஷன் மேலே நம்பிக்கை இருக்கு, எங்க அத்தை பெத்த மகன் சரவணன் மேலே நம்பிக்கை இருக்கு, ஆனால் இந்த  கேட்டவன் சரவணன் மேலே நம்பிக்கை இல்லை!

என்ன நம்பிக்கை இல்லையா  அவன் அவள் கண்ணத்தை கடிக்க!

 ஏய்  வலிக்குதுடா புருஷா!

ம்…….இனிமே என்னை விட்டு போகனும் நினைப்பு வர கூடாது டி பொண்டாட்டி அதுக்கு பணிஷ்மண்ட் என்றவன் இப்போது உதடுகளை  கடிக்க!

போவியா? “சரவணன்”

மாட்டேன்! “ஜானவி”

நீ வேற யாரு கூடயாவது சுத்துவியா?”ஜானவி “

ம்….. ஆமாம் என் பொண்டாட்டி ஜானவியோட ஊர் சுத்துவேன்  என்று சரவணன் புருவத்தை உயர்த்த!

அவளோ சிரித்தபடி இதழில் முத்தம் வைக்க!

மூன்றா  முத்தம் நீயா எனக்கு  தரது என்று சரவணன் கணக்கு சொல்ல!

நீ மறக்கலாயா அவள் சிரித்தபடி கேட்க!

அது எல்லாம் மறக்குற நாளா!

 கதை பேசமா முதலில் தூங்குங்க  என்றவள் கண்சிமிட்டி மகனை அனைத்தபடி தூங்க !

சரவணன் மனைவியின் பக்கத்தில் படுத்தவன் அவள் தலையில் முத்தம் வைத்து தேங்ஸ் டி கண்ணம்மா !

ம்… எதுக்கு

என்ன புரிஞ்சிகிட்டதுக்கு  அப்புறம் குட்நைட்  மறக்காமல் காலையில் எழுப்பி விட்டு டி வேலை நிறைய இருக்கு !

ம்……..  என்றவள் கணவனிடம் சாரி என்றவள்  அப்படியே  அவர்கள் கவலை மறந்து துயில் கொள்ள ஆரம்பித்திருந்தனர்!

Advertisement