Advertisement

உன்னை நினைத்து 1 

ஹெ காதல் எப்படி வரும் எங்க யார் கிட்ட வரும் தெரியாது ஆனால் சில பேருக்கு பார்த்த நொடி பொழுதில் காதல் வரும், இன்னும் சில பேருக்கு பழகி அவங்க குணத்தில் ஈர்க்கப்பட்டு காதல்  வரும், இன்னும் சில பேருக்கு ஜென்ம ஜென்மமாய் தங்கள் உறவு காதலில் தொடங்கி திருமணத்தில் முடியும், காதலில் நிறைய வித்தியாசமான காதல் இந்த புவியில் இருந்தது, இருந்து கொண்டு இருக்கும், இனியும் இருக்கும். 

பரிவு 

பாசம் 

அக்கறை 

மரியாதை 

அன்பளிப்பு 

கருணை 

உதவி 

குறும்புத்தனம் 

மீயுடைமை உணர்வு 

புரிந்துகொள்ளல் என்று நிறைய பெயர்களில் காதல் இருந்தாலும் இவை அனைத்துமே ஒரு வித காதல் தானே, 

என்னடா காதல் பற்றி இப்படி பேசுறேன் ஆனால் கதைக்கு வரலியேன்னு நீங்கள் எல்லாரும் நினைக்கலாம் ஆனால் நீங்க ஆரம்பத்தில் இருந்தே என்னோட காதல் கதைல தான் இருகிங்க! 

காதல்! காதல்! காதல்!  

என்ன ஒரு அற்புதமான சொல், கண்மூடி ரசித்தாலும் கனவிலும் அவன் முகம் ,என்னை இம்சித்திடும் ஓர் முகம் ,அவன் முகம் ,என் காதலனின் முகம் என் கணவனின் முகம்! என்னை காதல் கடலில் தவிக்க வைத்து அவனையே நினைக்க வைத்து என்னை உருக்கிய ஓர் முகம் என் சரவணனின் முகம். 

எல்லோருக்கும் வணக்கம் நான் ஜானவி தேவி இக்கதையின் நாயகி, அம்மா அப்பாக்கு செல்ல பொண்ணு சொந்தக்காரங்களுக்ககு தங்க பிள்ளை, மாமியாருக்கும் மானாருக்கும் மகள் 😜 

என்னோட காதல் கணவனுக்கு அதாங்க கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசனுக்கு நான் நல்ல மனைவிங்க😅 

அப்படி சொல்லுறதுக்கு எனக்கும் ஆசை தான் ஆனால் எம்புருசன் எம்டன் பேரனாக இருப்பவன் போல சிடுசிடுன்னு  இருக்கும் அகங்காரம் புடிச்ச மாகராஜன் சரவணன்,என்னை அவ்வப்பொழுது அல்ல என்நேரமும் கோபகடலில் வைத்திருக்கும் மோசமான நல்ல உள்ளம் கொண்ட  கணவன்‌. 

ஜானவி,சிறிய கண்கள் கொழு கொழு கண்ணம் அவளது சிரிப்பே அவளுக்கு இன்னும் அழகு சேர்க்கும் என்றால்  அவளது கண்களோ சிரிப்புடனே அவ்வப்போது காணாமல் எங்கு இருக்கிறது என்றே நோக்க வேண்டும் ஆனால் அதுவும் அவளுக்கு இன்னும்  அழகாக்கியது  வெண்மையான நிறம்  என்று   அசத்தும் பேரழகி போல் அல்லாமல்  அமுல் பேபி போல் இருக்கும் பால்கோவா அவள். 

மாகராஜனாம் மகாராஜன் யாருக்கு வேண்டும் இந்த மாகராஜன் என்று நான் நினைக்க, கடவுள் எனக்கு வரமாக தந்தாரா அல்லது நானே வலிய போய் மாட்டிக்கிட்டனான்னு இப்பயும் எனக்கு சந்தேகம்! 

எனக்கும் சரவணனுக்கும் திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிறது, திருமணம் ஆன மறுநாளே நான் என்னுடைய கணவனிடம் கோபித்து லண்டன் வர,என்னை இந்த ஆறு மாதத்தில் போனில் கூட சமாதானம் செய்ய வராத என் கணவன் ஆறு மாதம் கழித்து என்னை பார்க்க வர காரணம் என்னவாக இருக்கும்?, என் பிரிவை எண்ணி வருந்தி இருப்பானோ?!, இல்லையே அவ்ளோ நல்லவனா எம்புருசன்! 

ஏதோ தவறாக இருக்கே  என்ன என்று நான் யோசிக்க! 

அது உன்மை என்று சொல்லாமல் எனக்கு அவன் செய்கையால் உணர்த்தினான்  என் அருமை கணவன் சரவணன்! 

சரவணன் ஒல்லியான உடல் ஆறடி உயரம் மஞ்சளும் வெள்ளையும் சேர்ந்த நல்ல நிறம் அடர்த்தியான மீசை  

சுயநலம் உள்ளவன், சிரித்தால் கன்னத்தில் குழி விழும்,நல்லவன் பாதி கெட்டவன் மீதி என்று இருக்கும் ஈகோ பிடித்த கழுதை(ஈஈஈஈஈஈஈ😁😁😁 ஹீரோவாக இருக்கும் இக்கதையின் நாயகன்) 

கையில் ஆறுமாத ஆண் குழந்தை ஒன்றை கையில் தூக்கி கொண்டு, டிராலியை நகர்த்தியபடி அவன் வர! 

யாரா இருக்கும் இந்த குழந்தை, எதற்கு இப்படி குழந்தையை தூக்கிட்டு வரான்! 

ஹாய் எப்படி இருக்க ஜான்!அச்சோ என்ன நீ என்னை நினைச்சு இப்படி மெலிஞ்சி போயிட்ட! என்று சொல்லியவன் இந்தா பாப்பாவ புடி என்று குழந்தையை கொடுக்க! 

அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி  நான் அந்த கொழுகொழு என்று இருந்த  குழந்தையை கையில் வாங்க! 

அந்த குழந்தையோ என் கன்னத்தை பிடித்து தன் பொக்கை வாய் வைத்து முத்தா வைத்து சிரிக்க! 

என்னடா குட்டி என் கன்னம் உனக்கு பிடிச்சு இருக்கா! என்று புருவம் உயர்த்தி சிரிப்புடன் கேட்டவள், ஆமா யாரு டா தங்கம் நீங்க, உன் பெயர் என்ன,நீ எதுக்கு இந்த  பரதேசிக்கூட வந்தே!  

அம்மா அப்பா எங்கே என்று குழந்தையிடம் பேசியபடியே அவனிடம் கேட்க! 

என்ன கொழுப்பா என்ன பார்த்து பரதேசின்னு சொல்லுற, நான் உன்னோட புருஷன் ஞாபகம் இருக்கா இல்லை அங்கேயே என்னை வேண்டாம் சொல்லி வந்துடீய்யா? 

க்கும் என்று உதட்டை  கொனியவள் குழந்தையுடன் முன்னே செல்ல! 

சரவணனோ அச்சோ சரவணா ஏற்கனவே கல்யாணம் ஆகி கோபித்து வந்தவகிட்ட  

இவன்  நம்ம மகன்! நவிலன்,சொன்னா என்னயும  எம் மகனையும் போங்கடா இங்கே இருந்து தொறத்தி விட்டுவிடுவாளே  நான் என்ன செய்ய போறேன் தெரியலையே! 

லக்கேஜ் நகர்த்தியபடி சரவணன் பின்னே வர குழந்தை தூக்கி கொண்டு ஜானவி முன்னே வந்தவள் அந்த விலை உயர்ந்த காரின் இடப்பக்கம் இருந்த  டிரைவிங் இருக்கையில் குழந்தையுடன் அமர்ந்தவள்  தனது பக்கத்தில் அமர்ந்த கணவனை முறைத்தவள்,  என் கிட்ட முன்னாடியே குழந்தை கூட நீ வருகிறத சொல்லி இருந்தா பேபி சீட் ரெடி பண்ணி இருக்கலாம் ல  இப்போ பாரு பாப்பா எப்படி உட்கார வைக்குறது,இந்தா பேபிய வைச்சிக்கோ என்றவள் ,கணவன் சீட் பெல்ட் அணிந்த பிறகு  காரை எடுத்தவள் பிரபல ஷாப்பிங் மாலில் நிறுத்தியவள், பாப்பாக்கு கார் ல டிராவல் பண்ணுற சீட் வாங்கிடலாம் சரவணா. 

அச்சோ யார் பாப்பா தெரியாம இவ்ளோ  செய்யுராலே என்னோட பாப்பான்னு தெரிஞ்சா என் கதை என்னாகுமோ தெரியலையே முருகா காப்பாத்து! 

கடவுளோ! நானா உன்னை பிளே பாய் யா இருக்க சொன்னேன் நீ தானே இருந்த அனுபவி மகனே அனுபவி  நான் உனக்கு சாதகமா எதுவும் செய்ய மாட்டேன்! இனி நடக்க போவதை சிரித்தபடி பாப் கார்ன்  சாப்பிட்ட படி பார்க்க ஆரம்பித்தார் முருகன்! 

ஜானு ஜானும்மா மெரே ஜான்  என்மேல உனக்கு இன்னும் கோபமா! 

ஓய் குட்டி நீ பையனா,பொண்ணா,  எதுக்கு நீங்க இவன் கூடலாம் வந்திங்க, இவன்  ஒரு பெட் பாய் தெரியுமா, ஆமாம் உன்னோட பரென்ஸ் எப்படி  இவனை நம்பி  உன்னை அனுப்பி வைச்சாங்க? 

ஹொ….. என்னை எப்படி இவனை நம்பி திருமணம் பண்ணி வெச்சாங்களோ அது போலயா என்று தலையை முட்டி குழந்தையிடம் கேட்க! 

அதற்கு அந்த குட்டியோ சிரித்தபடி ஆமாம் என்று சிரிக்க! 

அச்சோ சோ கியூட்  டா பட்டு நீ! 

சரவணனோ பயத்தில் ஜானு…ஜானும்மா…..மெரே ஜான்……  உனக்கு இன்னும் என்மேல  கோபம் போகலையா! 

கோபம் போகலைன்னா என்ன பண்ணுவிங்க! 

அது அன்னிக்கு நீ திருமணத்திற்கு முன்பு நீ பண்ணது தப்பு தானே ஆதனால உன்னை கோபமா சாரி! ரோம்பவே தப்பா பேசிட்டேன்! 

இந்த ஆறு மாத காலம் அவனை நினைத்து கோபம் கொள்ளாத நாட்களும் இல்லை அவனை நினைத்து  கண்ணீர் விட்டு கலங்கிய நாட்கள் அதிகமாக இருப்பினும் சரவணன் தலை குணிந்து சாரி சொன்னது ஏதோ ஒரு போன்று இருக்க   மன்னித்தாள் கணவனை மனதினுள். 

இந்த சீட் நல்லாருக்குல சரவணா இது எடுத்துப் போவோம்மா! 

ம்…..ஓகே என்றவன் பில் பே பண்ண சென்றுவிட! 

ஏய் குட்டி  உங்க முகம் எனக்கு தெரிஞ்ச யாரையோ போல இருக்கிங்க! அந்த கண்ணு, மூக்கு, வாய் காது முகம் எல்லாமே யார போல இருக்கு என்று ஜானவி யோசிக்க தொடங்க! 

சீட் வாங்கி கையில் எடுத்தபடி போகலாமா என்று சரவணன் ஜானவியை பார்த்து கேட்டவன்  அவள் தன்னையும் குழந்தையும் மாற்றி மாற்றி பார்த்த படி இருப்பதை பார்த்தவன்!  

ஐயோ ஜானவி  என்ன அப்படி பார்க்காத இது  என்னோட குழந்தை நவிலன் சத்தியமா என்னைய மன்னிச்சிடு! 

அட பாவி சண்டாள! இதுக்கு தான் இந்த நல்லவன் வெஷமா நான்க்கூட உன்னை நல்லவன்னு நினைச்சுட்டேனே  என்று இப்போது தன் மடைமையை எண்ணி கண் கலங்கியவள்  குழந்தையை எடுத்து கொண்டு முன்னே செல்ல   

ஜானு  நான் உனக்கு வீட்டுக்கு போய் எல்லா விஷயங்களையும் மறைக்காம  சொல்லுறேன் பிளிஸ் என்க! 

யாரோ அவங்க சொந்தத்தில் தெரிந்தவர்களின் குழந்தையா இருக்கும் என்று நினைத்ததற்கு நேரேதிரா அவன் குழந்தை என்கிறாரானே அவளோ கோபத்தை அடக்கிகயபடி இம்… வண்டில ஏறுங்க என்றவள் மான்செஸ்டர்  சிட்டியில் இருக்கும் தனது வில்லாவில் காரை நிறுத்தியவள்  சரவணன் லக்கேஜ் மற்றும் குழந்தையை தூக்குவதற்கு வெயிட் செய்தவள் அவன் எல்லாம் எடுத்த பின் ரிமோட் கீயால் காரினை லாக் செய்தவள், அவள் கட்டை விரலை வைத்து அந்த கருவியில் பாஸ்வேர்டாக வைக்க கதவு தானியங்கி  திறந்து  அவள் அந்த வீட்டில் உள்ளே செல்ல அனைத்து மின்னணு சாதனம் எல்லாம் இயங்க! 

இதனை   எல்லாம் பார்த்த படி எப்படி மனைவியை சமாதானம் செய்வது என்று தெரியாமல்  எப்போதும் அனைவரையும் ஏதோ வகையில் எரிச்சல் படுத்தி குளிர்ந்தே காணப்படும் சரவணன் இன்று வாழ்க்கையை நினைத்து தன் எதிர்காலத்தை நினைத்து பயபந்து சுருள காதல் மனைவியை எப்படி சமாதானம் செய்வது   என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தான். 

என்னது காதலா!  

ஆம் காதல் தீரா காதல் ராமன் சீதையின் மேல் வைத்த காதல்,  கிருஷ்ணன் ராதையின் மேல் வைத்த காதல் எப்படி புனிதமான காதலோ, நான் ஜானவியின் மேல் வைத்த காதல்  யாராலும் அறியப்படாதது அவளுக்கே சொல்ல படாததும். 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement