Advertisement

அத்தியாயம் -2

            பெரியகருப்பன் வைத்திய லட்சுமி என்ற இருவரும் ஆலங்குளம்  கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இரு மகன்கள் மூத்த மகன் வீரபாண்டி ,இரண்டாவது மகன் ராமநாதன் பெரியகருப்பன் மூத்த மகனுக்கு வைத்திய லட்சுமி அண்ணன் மகள் லட்சுமியை கல்யாணம் செய்து வைத்தார். சின்ன மகனுக்கும் தனது தூரத்து சொந்தமான ஈஸ்வரியை மணமுடித்து வைத்தார்.                     

நாகரீகம் பெருகப்பெருக கிராமத்தில் உள்ள நிலபுலன்களை விற்று விட்டு ராசிபுரம் என்ற நகராட்சிக்கு குடிபெயர்ந்தனர்.ராசிபுரம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.ராசிபுரத்தில் வீடு வாங்கி குடி பெயர்ந்த போது வீரபாண்டி லட்சுமி தம்பதியருக்கு மகள் பிறந்தாள்.                   

              பெரிய கருப்பனுக்கு தங்கள் வீட்டுக்கு மகாலட்சுமி வந்து இருக்கிறாள் என்று மிகவும் சந்தோஷப்பட்டார். ஏனென்றால் அவருடைய முந்தைய தலைமுறையிலும் அவருடைய தலைமுறையிலும் பெண் குழந்தைகள் பிறக்கவில்லை. அதனால் , தன் மகனுக்கு பெண் குழந்தை  பிறந்தவுடன் மிகவும் மகிழ்ந்தார்.

                 பெரிய கருப்பன் தனது பேத்திக்கு மகாலட்சுமி என்று பெயர் வைக்க விரும்பினார். வீரபாண்டியோ  தன் குழந்தைக்கு வினோதினி என்று பெயரிட சொன்னார்.பிறகு குடும்பம் மொத்தமும் சேர்ந்து வினோதினி என்ற மகாலட்சுமி என்று பெயர் வைத்தனர்.

               

                குழந்தையை தரையில் இறக்கி விடாமல் ஆளாளுக்கு தூக்கி வைத்துக் கொண்டனர்.  வினோதினிக்கு அடுத்து ஒரு தம்பி நரேந்திரன். ராமநாதன் ஈஸ்வரி தம்பதியருக்கு அன்பழகன், யாழினி என்ற இரு குழந்தைகள் பிறந்தனர். இருந்தாலும், பெரிய கருப்பனுக்கு தன் மூத்த பேத்தியை ரொம்பவும் பிடிக்கும்.

             

                  குழந்தைகள் வளர ஆரம்பித்தார்கள்.ஒரு நாள் வினோவும் , நரேனும் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது , அவர்களின் அம்மா லட்சுமி கடையில் போய் சில மளிகை பொருட்களை வாங்கி வர சொன்னார்கள்.வினோவும் , நரேனும் பொருட்களை வாங்கி வரும்போது மாலை நேரம் கொஞ்சம் இருட்ட துவங்கியிருந்தது.நரேனும், வினோவும் யார் முதலில் வீட்டிற்குச் செல்வது என்று போட்டி வைத்துக் கொண்டு ஓடினார்கள்.  அப்பொழுது, வினோ கல் தடுக்கி விழுந்து விட்டாள். முட்டிக்காலில் அரைச்சு ரத்தம் வர ஆரம்பித்தது.உடனே,  நரேன் வினோவை  வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டான்.

  

           முதலில் வந்தது பெரியகருப்பன் தனது பேத்தியின் காயத்தைப் பார்த்து ரத்தம் இவ்வளவு போகுதே என்று சொல்லி துடைத்து விட்டுக் கொண்டிருந்தார்.லட்சுமியை கூப்பிட்டு இந்த நேரத்தில் பிள்ளைகளை எதற்காக கடைக்கு அனுப்பினாய்?   வீட்டில் எத்தனை பேர் இருக்கோம் என்று ஒரு பிடி பிடித்துவிட்டார்.அடுத்தது வைத்திய லட்சுமி ராமநாதன் வந்தார்கள். ராமநாதன் புண் சீக்கிரம் ஆறும் லோசன் போடுவோம் என்று சொல்லி முட்டி காலில் தடவினார்கள். அடுத்தது வீரபாண்டி வந்து லோசனை விட டிஞ்சர் வச்ச   சீக்கிரம் புண் ஆறிவிடும் என்று அதனை வைத்தார்கள்.

   

       அடுத்தது வைத்திய லட்சுமி கால் ரொம்ப வீக்கமா இருக்கு சாணி ஒத்தடம் கொடுப்போம். என்று சொல்லி சுடசுட சாணி ஒத்தடம் கொடுத்தார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து கவனித்த கவனிப்பில் லேசாக இருந்த புண் பெரிதாக வந்து கட்டுப் போடும் அளவிற்கு ஆகிவிட்டது. பிறகு மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டியபோது மருத்துவர் காலில் புண் சீக்கிரம் ஆறனும்னு  இப்படியா மாத்தி மாத்தி மருந்து ஊத்துவிங்க ,விழுந்த உடனேயே கூட்டிட்டு வந்து இருந்தா இவ்வளவு பெரிய புண்ணு வந்திருக்காது ,இல்லையா? என்று பொரிந்து தள்ளிவிட்டார்.அந்த அளவிற்கு குடும்பம் மொத்தமும் வினோதினியின் மேல் பாசம் வைத்திருந்தார்கள்.   

               வினோதினி காலில் கட்டு போட்டபடி தன் சித்தியின் கல்யாணத்திற்கு சென்றாள். அதாவது, லட்சுமியோட சொந்த தங்கை அனுராதா விற்கு கல்யாணம். லட்சுமியோட அப்பா அம்மா அவருக்கு அந்நியத்தில் மாப்பிள்ளை பார்த்து பன்னீர்செல்வத்தை மணமுடித்து வைத்தனர். பன்னீர்செல்வத்தின் கூடப் பிறந்த தங்கை ஜெயராணி அவருடைய கணவர் ராஜன் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் முகிலன் இரண்டாவது மகன் மோகன் மூன்றாவது மகள் லத்திகா.

    

               வினோதினி தன் சித்தியின் கல்யாணத்தில் ஓடி ஆடி விளையாட முடியாம மற்ற குழந்தைகள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.வைத்தியலட்சுமி பேத்தியை சேரில் உட்கார வைத்து விட்டு தன் சொந்த பந்தங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, பேசிக் கொண்டிருந்த உறவுக்காரர்கள் சாப்பிட அழைக்கவும் வைத்திய லட்சுமி தனது பேத்தியை பார்த்து கூப்பிட்டார். வினோவோ, விளையாட முடியவில்லையே என்ற சோகத்தோடு உட்கார்ந்து இருந்தாள். அதனால், பாட்டி  கூப்பிட்டதை கவனிக்கவில்லை. 

வைத்திய லட்சுமி தன்னை கடந்து சென்ற பையனைப் பார்த்து தம்பி, ” அந்தப் பொண்ணை நான் கூப்பிட்டேன் சொல்றியா ” என்றார்.அவனும் போய் பாப்பா உன்னை அந்த பாட்டி  கூப்பிட்டாங்க என்று கூறினான். திரும்பிப் பார்த்த வினோ எந்திரிச்சு நின்றால், வெள்ளை நிறத்தில் ஆரஞ்சு கரையிட்ட பாவாடை. ஆரஞ்சு நிற சட்டை அணிந்து அழகாக இருந்தால் முகத்தில் மட்டும் ஒருவித சோகம் தன் பாவாடை ,  முட்டிக் கால்களை உரசி விடாமல் ஜாக்கிரதையாக இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு நடந்தால் அதனை பார்த்து சோ க்யூட் என்று மனதில் சொல்லிக்கொண்டான். பின்தான் நடக்கிறதை கவனித்தான். அவள் விந்தி விந்தி நடந்து சென்றாள். அப்போது ,மோகன் ஐயோ! இந்த பொண்ணுக்கு கால் சரியா நடக்க வராதோ என்ற பார்த்துக்கொண்டிருந்தான்.

         வைத்திய லட்சுமியிடம் சென்று நின்றால் வினோ.உறவினர்கள் பாப்பா ஏன் விந்தி விந்தி நடக்கிறாய் என்று கேட்டார்கள்.அதற்கு வைத்தியலெட்சுமி எப்படி புண் வந்தது என்ற கதையை விளக்கி சொல்ல அதனை கேட்டுக் கொண்டிருந்த மோகன் சிரித்துக்கொண்டே நகர்ந்தான். 

               

                 வீரபாண்டியும்,  பன்னீர் செல்வமும் சகலைகளான பின்பு ராஜனிடம் பழக்கம் ஏற்பட்டது. வீரபாண்டியும், ராஜனும் இருவரும் மச்சான் மாப்பிள்ளை என்று பழக ஆரம்பித்தார்கள். நாளடைவில் இருவரும் தொழில் தொடங்கும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டது.

                  இருவரும் சேர்ந்து முதலீடு செய்து டிபார்ட்மென்டல் ஸ்டோர் மெயினான இடத்தில் ஆரம்பித்தனர். ராஜன் இல்லாத நேரத்தில் வீரபாண்டியும்,வீரபாண்டி இல்லாத நேரத்தில் ராஜனும் கடையை கவனித்துக் கொண்டார்கள். ஆறு மாதங்கள் வியாபாரம் நன்றாக நடந்து கொண்டிருந்தது. வீரபாண்டி அடுத்த தொழில் ஹோட்டல் ஆரம்பிக்க முடிவு

செய்து அதன் விசாயமாக  அலைந்து கொண்டிருந்தார். அப்போது, தனக்கு உதவி புரிய தன்னுடைய உறவுக்காரர் ஒருவர் வசந்தசகுமார்  என்பவரை வேலைக்கு சேர்த்தார் ராஜன். 

முன்பு ராஜனும், வீரபாண்டியும் இரண்டு பேரும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் இருந்தனர். இப்பொழுது, வீரபாண்டி இல்லாததால் ,தனக்கு உதவியாக வேலைக்கு சேர்த்தார்.அந்த நேரத்தில் ராஜனுடைய அப்பா சிவராமனுக்கு ஆபரேஷன் செய்வதாக இருந்தது.அதனால் வீட்டிற்கும்,மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்போது, கடையில் வசந்தகுமார் மட்டும் இருந்தார். நிறைய பணத்தை  கையாடல் செய்து விட்டு வீரபாண்டி இடம் ராஜன் தன்னுடைய அப்பாவின் மருத்துவ செலவிற்கு எடுத்துக் கொண்டு சென்றார் என்றும். ராஜனிடம், வீரபாண்டி தனது ஹோட்டல் ஆரம்பிக்க பணம் எடுத்துக்கொண்டு சென்றார். என்றும் மாற்றி மாற்றி கூறி பெருந்தொகை பணத்தை கையாடல் செய்தார். ராஜனுக்கும் வீரபாண்டி ,வெளியே நிறையபேரிடம் பணம் கேட்டு கொண்டிருந்தது முன்பே தெரியும். 

வீரபாண்டி இடம் போய் ராஜன் ஹோட்டலுக்கு பணம் வேண்டுமென்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு எடுத்து இருக்க வேண்டியதுதானே என்று கேட்டார்.வீரபாண்டியும் , நீங்கள் ஹாஸ்பிடல் செலவுக்கு என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பணம் எடுத்து இருக்க வேண்டியதுதானே? என்று இருவரும், ராஜன் இது என்ன புது கதை ?நான் எந்த ஆஸ்பிட்டல் செலவுக்கும் பணம் எடுக்கவில்லை ,நீங்கள்தான் எடுத்தீர்கள் என்று சண்டை போட்டார்.வீரபாண்டியன் நானும் எந்த பணத்தையும் எடுக்கவில்லை என்று சொல்லி சண்டை போட்டார்.”நான் ஆஸ்பிட்டலில் இருந்த சமயம் நீங்கள் கடைக்கு வந்து போனீங்களா இல்லையா”?என்று ராஜன் கேள்வி கேட்டார்.வீரபாண்டியன் ஆமாம் நான் கடைக்கு வந்தேன் ஆனால் நான் எந்த பணத்தையும் எடுக்கவில்லை என்று கூறினார் இல்லை அந்தப் பெருந்தகை காணாமல் போய் இருக்கு நீங்க தான் எடுத்து இருப்பீங்க என்று ராஜன் கூறினார். இப்படி மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.கடைசியாக கடையை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு அவர்கள் போட்ட  பங்கினை எடுத்துக் கொண்டு செல்வதாக முடிவு செய்தனர். அதன்படி கடையை வேறொரு நபரிடம் விற்றுவிட்டு அவர்கள் அவரவர் வழிகளில் சென்றனர்.

       

             வீரபாண்டி தனியாக ஹோட்டல் ஆரம்பித்து பக்கத்திலுள்ள ஸ்கூலில் கேன்டீன் ஆர்டர் எடுத்து ஹோட்டல் சிறப்பாக நடத்த ஆரம்பித்தார். ராஜன் தன் நண்பனின் மூலம் கர்நாடகா சென்று ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பிறகு ,குடும்பத்தையும் அங்கே அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். 

                 நாளடைவில் பிள்ளைகள் வளர்ந்த பின்பு அவர்களுடைய படிப்பிற்கும் தனது தந்தையுடைய விருப்பத்திற்கும் ஏற்ப தனது ஊருக்கு திரும்பி வந்து எம் எம் எல் டைல்ஸ் ஷோரூம் ஒன்றை ஆரம்பித்தார். அப்பொழுது,  வசந்தகுமாரயை பார்த்தார். அன்று கடையில் என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லிவிட்டார். தான் தான் அந்த பணத்தை எடுத்ததாகவும் கூறி மன்னிப்பு கேட்டார். அப்பொழுதுதான் ராஜனுக்கு உண்மை தெரியவந்தது.அதற்குப் பிறகுதான்,வீரபாண்டியை  பார்த்து உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்டார்.அதன்பிறகு ,பார்க்கும் விசேஷங்களில் சிறிது சிறிதாக பேச ஆரம்பித்தார்கள். ராஜனுடைய மனைவி ஜெயராணி தன் அண்ணியின் குடும்பத்திடம் அளவாகவே பழகுவார். தொழிலில் பிரச்சனை வந்த பிறகு சுத்தமாக பேச்சை நிறுத்தி இருந்தார்.இப்பொழுது கணவர் சொன்னவுடன் சற்று இறங்கி வந்து பேச ஆரம்பித்தார்.

             ராஜனுக்கு முன்புபோல் வீரபாண்டி தன்னுடன் பேசவில்லையே என்று மனதில் தவித்துக் கொண்டிருந்தார். தான் தானே அந்த வசந்தகுமாரை  வேலைக்கு வைத்தேன் என்று மருகிக் கொண்டிருந்தார்.அவரிடம் முன்புபோல் மாப்பிள்ளை, மச்சான் என்று உறவு கொண்டாட வேண்டும்.என்று தீர்மானித்து தான் தன் மனைவியிடம் , வீரபாண்டியன் மகளை நம் முகிலனுக்கு கட்டி வைப்போம் என்று கூறினார். அதற்கு, ஜெயராணி மறுப்பு தெரிவித்தார்.இப்போதுதானே,முகிலன்   M.E படித்துக் கொண்டிருக்கிறான் அவனுக்கு எதற்கு இந்த பேச்சு என்று எரிந்து விழுந்தார். ராஜன், வினோதாவும்  இப்பொழுதுதான் 12ஆம் வகுப்பு படிக்கிறாள் அவள் காலேஜ் முடிக்கும்போது முகிலனும் ஒரு சரியான வேலையில் இருப்பான் என்று சொல்லி பேச்சை முடித்தார்.

     

  

            இதனைத்தான் மோகன் தன் நண்பன் சந்தோஷ் இடம் சொன்னான்.

வினோதினி தன் தோழி தாரிகா உடன் எப்பொழுதும் பள்ளிக்கு செல்வாள். தாரிகா உடன் அவள் அக்கா நிஷாவும் சேர்ந்து வருவதுண்டு இப்படி மூவருமாக காலையில் பள்ளிக்கு செல்வார்கள். அதேமாதிரி சாயந்திரம் மூவரும் சேர்ந்து வீட்டுக்குத் திரும்புவார்கள் அப்படி வரும்போது அரட்டை அடித்துக்கொண்டு டிவி செய்திகள், சீரியல்களைப் பற்றி பேசிக்கொண்டும் வருவார்கள். பள்ளி பருவ காலத்தை நன்றாக சந்தோசமாக அனுபவித்தார்கள். நம் வாழ்வில் பள்ளிக்காலம் என்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக திகழும். அதேபோல் அவர்களுக்கும் அந்த இளம் வயதுக்கே உரிய துடிப்புடனும்  உற்சாகத்துடனும்இருந்தார்கள்.

வினோதினி எப்பொழுதும்போல் பள்ளிக்கு செல்ல தன் தோழி தாரிகாக்குகாண்டி ரோட்டில் நின்று கொண்டிருக்கும்போது இரண்டு நபர்கள் அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். 

இனி……….. 

Advertisement