Advertisement

“உன்னுள் ரோஜாவாய் நான் “

அத்தியாயம் 1

” குட்டிக்குட்டி பனித் துளியே,துளியே” என்ற பாடலை ஹம் செய்தபடி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தாள்.வினோ என்ற வினோதினி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. 

அதிகாலை பொழுது ,விடியும் முன் டியூஷனுக்கு சென்றாள். அப்பொழுது மார்கழி மாத பனியில் நனைந்தபடி இந்தப் பாடலை பாடிக் கொண்டு செல்கிறாள்.

டியூஷன்  வீட்டின் சந்தில் நுழையும்போது தடதடவென சத்தத்தோடு வேகமாக தன்னை இடிக்கும்படி வந்து கடைசி நேரத்தில் விலகிப் போன சைக்கிளை பார்த்து “எருமை மாடுகள் எப்படி போகுது பாரு…” என்று சொல்லிவிட்டு ஜெர்க் ஆகி நின்று விட்டாள்.தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் சைக்கிளை செலுத்தி டியூசனுக்கு சென்றால், அங்கே தனக்கு முன்னால் போன சந்தோஷ்,மோகன் இரண்டு பேரும் அங்கே நின்றுகொண்டு கதை அளந்து கொண்டு இருந்தனர். 

வினோதினி , இவர்களை “தடி மாடுகள் இங்கே நின்னுகிட்டு கதை அளக்க தான் அவ்வளவு வேகமா வந்தனுங்களா” என்று மனதிற்குள் வைத்தபடி அவர்களை திரும்பியும் பார்க்காமல் உள்ளே சென்றாள்.சந்தோஷ் ,”ஏன்டா இந்த வினோ ஏன் இவ்வளவு சின்சியரா இருக்கா..?சார் இன்னும் வந்து இருக்கவே மாட்டார் அதுக்குள்ள போய் என்ன பண்ண போற… நம்மளோட நின்னு பேசிக்கிட்டு இருந்தால் என்னவாம்.ஆனா ஒன்னு, காலையிலேயே குளித்து ப்ரஷ்ஷாக இருக்குற, இந்த வர இந்து ,பிரியா இந்த பக்கிகல பாரு முகம் கூட கழுவாமல் தூங்கி அப்படியே எந்திரிச்சு வர மாதிரி இருக்கு” என்று அங்கலாய்த்தான்.

“அவ ஏன்டா நம்மளை திரும்பியே பார்க்காமல் போறா உன்னைவிடு என்னையாவது பார்க்கலாம்ல” அவ்வளவு நேரம் பேசாமல் இருந்த மோகன் ” டேய் அடங்கு அவங்க அப்பாவை பத்தி தெரியும் இல்ல பேசாம இரு…” “நீ ஏன் சொல்ல மாட்டே உங்க ரிலேட்டிவ் தானே அவ” என்றான் சந்தோஷ் .

மோகன்,”தூரத்து சொந்தம் எல்லா விசேஷங்களும் பார்த்தாலும் பேசிக்க மாட்டோம்” என்றான் மோகன்.”அதான் தெரியுமே நாம எல்லாம் ஒரே கிளாஸ் படிச்சாலும் அவ உன்னை திரும்பிப் பார்க்க மாட்டாள். நீ அவளைத் திரும்பிப் பார்க்க மாட்ட “என்றான் சந்தோஷ். 

இந்து ,பிரியா ,தாஸ் என்று எல்லோரும் வர உள்ளே சென்றனர்.வந்தவுடன் அனைவரும் காலை வணக்கம் சொல்லிவிட்டு வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வினோவும், மோகனும் மாத்தி மாத்தி பதில் சொல்லிக் கொண்டே இருந்தனர். வினோவைவிட மோகன் நன்கு படிப்பான். எப்படியாவது இவனை முந்தி வகுப்பில் முதலிடம் வர வேண்டும் என்ற ஆசை வினோவிற்கு ,எதையும் மோகன் சட்டென்று புரிந்து கொள்வான்.வினோ இரண்டு, மூன்று முறை பார்த்த பிறகு அவளுக்குப் புரியும்.எதனால் இது என்று  யோசித்துக் கொண்டிருந்தாள் ஒருவேளை தன்னை விட அவன் வயதில் மூத்தவனாக இருப்பதாலோ அல்லது நான் படிப்பில் சற்று பின்தங்கி உள்ளேனா என ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாள்.

 அப்போது இந்துமதி “வினோ என்னப்பா என்ன யோசனை இந்த கணக்கு எனக்குப் புரியவே இல்ல நீ சொல்லி கொடுக்கிறாயா “என்று கேட்டுக் கொண்டிருந்தாள் .

வினோ “எனக்கும் அதில் டவுட் இருக்கு …”என்று சொல்ல வேகமாக பிரியா” அப்படின்னா நான் மோகன் கிட்ட கேட்டுவரேன்” என்று எழுந்து சென்றாள்.

எப்பொழுதுடா தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பிரியா இதனைப் பயன்படுத்திக்கொண்டு கேட்டால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் அவன் சார் சொன்ன அடுத்த கணக்கை செய்ய முற்பட்டபோது” டேய் சொல்லுடா பிரியாவை பார்த்தா பாவமா இருக்கு “என்று காதை கடித்தான் சந்தோஷ்.

உடனே,சந்தோஷுக்கு சொல்வதுபோல சத்தமாக அந்த கணக்கை விலக்கி விட்டு அடுத்த கணக்கை செய்ய ஆயுத்தமானான் மோகன். டியூஷன் முடிந்து வெளியில் வர சந்தோஷ் ,பிரியாவிடம் “என்ன கணக்கு புரிந்ததா..?” என்று வினோதினியை பார்த்துக்கொண்டே பேச்சை வளர்க்கஆரம்பித்தான்.             

மோகன், அவன் செயலை புரிந்துகொண்டு “சந்தோஷ் வாடா நேரமாச்சு  …”என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து விட்டான். பிரியா “இந்த சந்தோஷை பாரு எப்ப பாரு பேச்சு கொடுப்பதிலேயே இருப்பான்.யாரு கிட்ட நான் பேச நினைக்கிறேனோ அவன் என்னை திரும்பியும் பார்க்க மாட்டான் …”என்று அங்கலாய்த்தாள்.

வினோ,ப்ரியாவை பார்த்து “ஏன் அவன்கிட்ட பேச வேண்டுமா..?” என்று கேட்டாள்.

 “ஆமா எனக்கும் பேசணும் தான் ஆசை ஆனா அவன் தான் பொண்ணுங்களை பார்த்தாலே எட்டடி தள்ளி நிக்கிறவன் ஆயிற்றே …நம்ம கிளாஸ்ல உஷா இருக்காளே அவ ஸ்போர்ட்ஸ் டே அன்னைக்கு மோகன் ரன்னிங் ரேஸ் பஸ்ட் வந்ததுக்கு போயி வாழ்த்துக்கள் சொல்லி கைகொடுக்க போன இவனும் அவளை பார்த்து இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு திரும்பியும் பார்க்காமல் உன் வேலையை பாத்துக்கிட்டு போ அப்படின்னு சொல்லிவிட்டு போயிட்டான்,அதனாலதான் அவன் கிட்ட பேசவே பயமா இருக்கு” என்று அந்த செய்தியை புதிதாக சொல்வதுபோல சொன்னால் அது தனக்கும் தெரியும் என்று வினோதினி நினைத்துக்கொண்டாள்.     

  அங்கே சந்தோஷ் மிதி வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போதே மோகனிடம் “ஏண்டா என்னை அப்படி இழுத்துக்கிட்டு வந்த ,இன்னும் செத்த நின்னு அவள பாத்துட்டு வந்து இருப்பேன்”என்று புலம்பினான்.

மோகன், “டேய் கண்டிப்பா நீ உத வாங்கப்போற இவளை இப்படி பார்க்கிறது மட்டும் எங்க அண்ணனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவான்”. 

சந்தோஷ் அதிர்ச்சி அடைந்து “என்னடா சொல்லுற ..?”என்று கேட்டான்.” ஆமா எங்க அண்ணான் எதுக்கு நமக்கு ஸ்கூல் விடுற நேரத்தில் எதற்காக காலேஜிலிருந்து அவ்வளவு வேகமாக வந்து  ஸ்கூல்  பக்கத்தில் டீ கடையில நிற்கிறான் நினைச்சே வினோதினியை பார்க்கத்தான் ஏன்னா எங்க வீட்ல ஒரு பேச்சு இருக்கு. வினோதினியை  எங்க அண்ணன் முகிலனுக்கு கட்டி வைக்கிற மாதிரி அதைக் கேட்டு கிட்டு தான் சர் நம்மளை  பாக்குற மாதிரி வந்து நிக்கிறாங்க “என்றான்.

     

“இது எப்ப இலிருந்து ?”என்று சந்தோஷ் கேட்டான்.”நாங்க சின்ன வயசுல இருக்கும்போதே எங்க அப்பா ரெண்டு பேரும்  சேர்ந்து பார்ட்னராக  தொழில் தொடங்கினாங்க அது வந்து நஷ்டம் ஆயிருச்சு என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியல அதற்கு அப்புறம் நாங்க கர்நாடக  போயிட்டோம். உனக்கே தெரியுமல ஏற்கனவே  செல்லியிருக்கிறேன்.இங்கே நான் 3வது வரை படிச்சிட்டு அங்கே திரும்பவும் போய் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர் சேர்த்து விட்டாங்க அதனாலதான் காலேஜ் படிக்க வேண்டிய நான் 12 வது படிச்சுகிட்டு இருக்கேன். அதுக்கு அப்புறம் இப்பதான் எங்க ரெண்டு பேரோட அப்பாவும் விசேஷகளில் பேச ஆரம்பிச்சு இருக்காங்க மேலும் பின்னாடி கல்யாணம் பண்ணலாம் என்ற யோசனையில் இருக்காங்க. அம்மாவும் அப்பாவும் பேசும் போது கேட்டேன்” என்றான் மோகன். 

சந்தோஷ் ,”அடக்கடவுளே ..!இனிமே வினோ விட்டுட்டு இந்துவை ட்ரை பண்ணா வேண்டியதுதான் “என்று சோகமாக சொல்லிக்கொண்டான். 

     

 நம் கதையின் நாயகன் மோகன், நாயகி வினோதினி இவர்களில் யார் முள்ளாகவும்,  ரோஜாவாகவும்  இருக்கிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.

Advertisement