Advertisement

” உன்னுள் ரோஜாவாய் நான்” 

                       அத்தியாயம் -3

வினோதாவின் பக்கத்தில் இரண்டு பேர் வந்து “என்ன பாப்பா சைக்கிள் பஞ்சர் ஆகி விட்டதா? இல்லை காத்து இல்லையா?”என்று பக்கத்தில் வந்தனர். வினோதினி “சைக்கிள் ரிப்பேர் இல்ல என்னுடைய பிரண்டு காண்டி நின்னுட்டு இருக்கேன்” என்று கூறினாள். 

அவர்கள் வினோ கூறுவதை அலட்சியம் செய்துவிட்டு இன்னும் பக்கத்தில் வந்து “உன் வீடு எங்கே இருக்கு உன் பிரண்டு வீடு பக்கத்தில் இருக்கா இல்ல தூரத்தில் இருக்கா.?” என்று கேள்விகளை அடுக்கினர்.

 வினோவிற்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது. எப்பொழுதுடா தாரிகா வருவாள். என்றாகிவிட்டது அந்த நேரம் பார்த்து மோகன் பள்ளிக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். வினோவையும் அவள் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவர்களையும் பார்த்தான்.

வினோவிற்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை மோகனை பார்த்ததும் “மோகன் ஒரு நிமிஷம்..” என்று கூறினாள். 

ஆனால்,  அவனோ பார்த்தும் பார்க்காதது போல் போய்விட்டான்.” என்ன பாப்பா அது யாரு அதான் உன்னுடைய ஃப்ரண்டா” என்று கேட்டுக் கொண்டிருந்தனர் இருவரும்.

 வினோ மனதில் என்னது! இது என்னோட ஃப்ரண்டா இவன கூப்பிட்டதற்கு கூப்பிடாமல் இருந்திருக்கலாம். இதற்கு மேல் இங்க நிக்க கூடாது என்று சைக்கிளை எடுக்கும் போது இருவரும் வழிமறித்தது போல் நின்றனர். 

எதார்த்தமாக எதிர்ப்புறத்தில் இருந்து வீரபாண்டி வந்து கொண்டிருந்தார்.வினோவின் ஸ்கூல் பக்கத்திலேயே கொஞ்சம் தள்ளி அவர்களுடைய ஹோட்டல் உள்ளது. அதிகாலை 4 மணிக்கெல்லாம் சென்று வேலையை மேற்பார்வை செய்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.வினோதாவையும் அவள் பக்கத்தில் இரண்டு பேரையும் பார்த்து விட்டு  “என்ன பிரச்சனை ..?கீழே எதுவும் விழுந்து விட்டாயா.?”என்று கேட்டார்.

   

வீரபாண்டி, “இவர்கள் 2 பேரும் யாரு.?”என்று கேட்டு ஒரு முறை முறைத்தார். வீரபாண்டி பெயருக்கு ஏற்றாற்போல் பெரிய மீசையும் நன்கு உயரமாகவும் கண்களிலே கண்டிப்பையும் காட்டுவார். யாருமே பார்த்தவுடன் பயப்படும்படி இருக்கும் தோற்றமுடையவர்.

ஒருவன் , “ஒன்னும் இல்ல அண்ணா, பாப்பா சைக்கிளில் வந்து கொண்டிருந்தது திடீரென இந்த இடத்தில் நின்னுருச்சு அதான், சைக்கிள் பஞ்சர்ரானு கேட்டுக் கொண்டிருந்தோம் “என்று கூறினார்.

“என் பொண்ணு தான் நான் பார்த்துக்குறேன் நீங்க போங்க “என்று கண்டிப்புடன் ஒரு பார்வை பார்த்து கூறிவிட்டு, “எதற்காக நிற்கிற உன்னுடைய சைக்கிள் டயரை பார்த்த பஞ்சர் மாதிரி தெரியலையே “என்றார்.

   வினோவிற்கு அப்பா மேல அளவுகடந்த பாசம் இருந்தாலும், அதேநேரம் அப்பாவிடம் பயமும் இருக்கும்.அவளுடைய அப்பா வீரபாண்டி வினோ எதற்காவது அம்மாவிடம் அடம்பிடிக்கும் போது ஒரு பார்வை பார்த்தால் போதும் மறுபேச்சு பேசாமல் போய்விடுவாள். வீரபாண்டி அப்படித்தான் செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் செல்லம் கொடுத்து மற்ற நேரத்தில்  பிள்ளைகளை சரிவர கண்டித்தும் விடுவார்.

தன்னுடைய தந்தை வினோவிற்கு பரிந்து வரும்போது,” சும்மா இருங்கப்பா பொம்பள பிள்ளைக்கு செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் செல்ல கொடுக்கணும் சும்மா எல்லாத்துக்கும் கொடுக்கக்கூடாது “என்று கூறுவார். 

வினோ,” இல்லப்பா தாரிகா காண்டிநிற்கிறேன்” வீரபாண்டி,  “இனிமேல் யாருக்காகவும் ரோட்டில் நிற்க வேண்டாம.  வீட்டிலிருந்து கிளம்பினால் ஸ்கூலுக்கு போகணும் புரியுதா “என்று திட்டிவிட்டு அவள் சைக்கிளை எடுத்து போவதை பார்த்து விட்டு சென்றார்.

வினோ ஸ்கூலுக்கு போனவுடன், மோகனை பார்க்கும்போதெல்லாம் ஆத்திரமோ ஆத்திரம். இவன கூப்பிட்டானே  செத்த நின்னா என்ன ஒரு ஆத்திர அவசரத்துக்கு தானே கூப்பிட்டேன் நான் என்ன அந்த பிரியா மாதிரி இவனோட பேசமுயற்சி பண்றேன்னா இம்புட்டு கோபம் நான் தெரிஞ்ச பொண்ணு தானே வேற யாரோ மாதிரி கூப்பிட்டது காதில் விழுந்தும் விலகாத மாதிரி போயிட்டானே சரியான திமிரு புடிச்சவன் இவன் கிட்ட இனிமே எதற்காகவும் போய் நிக்க கூடாது பாவம் அப்ப தெரியல்ல வினோவிற்கு எதிர்காலத்தில் அவன் கிட்ட தான் போய் நிற்க போறோம் என்று. 

வினோவின் மனதில் இன்னைக்கு வீட்டுக்கு போனோம் அப்பாகிட்ட சரியான மண்டகப்படி இருக்கு என்று நினைத்துக்கொண்டு இருந்தாள்.அதற்குப் பிறகு ,அவனை சுத்தமா திரும்பியே பார்க்க மாட்டாள் பிரியா மோகனைப் பற்றி பேச்சு எடுத்தாலும் வினோ “பிரியா நிப்பாட்டு அவன பத்தி பேசுறதா இருந்தா இனிமே என்கிட்ட பேசாத “என்று கறாராக கூறி விட்டாள்.

நாட்கள் வேகமாக சென்றது. அனுவல் பிராக்டிகல் எக்ஸாம் வந்தது. அப்பொழுது வினோவின் சித்தி அனுராதா விற்கு ஐந்து வருடங்கள் கழித்து பிறந்த குழந்தைகளுக்கு கார்த்திக்,தர்ஷன்  என்ற இருவருக்கும் காதுகுத்த.  அதற்கு குடும்பத்தோட எல்லோரும் சென்று இறங்கினார்.  

மோகனின் அம்மா ஜெயராணி கோ தன் அண்ணன் மகன்களின் காதுகுத்து மோகனிடம் “சீர்வரிசை தட்டுகள் எடுக்க லட்சுமி அத்தையை இருக்காங்கல்ல .?அவங்கள கூப்பிடு” என்று கூற மோகன்” நான் போக மாட்டேன். முகிலனையோஅல்லது லத்திகாவை யோ கூப்பிட்டு வர சொல்லுங்க “என்று கூறினான்.

 அதற்கு ஜெயராணி “ஏ சின்ன புள்ள டா அவ விளையாடுவதில் குறியா இருக்கா அங்க பாரு முகிலன் உன்னை விட பெரியவன் அவன போய் கூப்பிட சொன்ன நல்லாவ இருக்கும்.  நீ போய் கூப்பிடு போ சீக்கிரம் கூட்டிட்டு வா” என்று கூறினார்.

மோகன் போகும்போது அங்கு லட்சுமியை காணவில்லை. வினோவும் யாழினியும் தான் இருந்தனர். வினோ மாம்பழ கலர் பட்டுப் பாவாடையில் அடர்பச்சை பார்டரில் பாவாடையும் அதே நிறத்தில் சட்டையும்  பச்சை வண்ண தாவணி அணிந்திருந்தாள். அதனை பார்த்த மோகனுக்கு சின்ன வயதில் அவள் பட்டுப்பாவாடையை இரண்டுகைகளாலும் பிடித்துக்கொண்டு நடந்தது ஞாபகம் வந்தது. வினோ தன் தங்கை யாழினிக்கு  தலை சிவி பின்னல் இட்டுக் கொண்டிருந்தாள்.

மோகன் சுத்திமுத்தி லட்சுமியை தேடிவிட்டு அங்கு வந்து தொண்டையை லேசாக செருமிவிட்டு “உங்க அம்மாவை எங்க அம்மா கூப்பிட்டாங்க சீர்வரிசை தட்டு அடுக்க” என்று கூறினான். ஆனால் ,வினோதினி காதில் வாங்காமல் “யாழினி இந்த ஹேர் ஸ்டைலுக்கு பிங்க் கலர் டிரஸ் போட்டுக்க “என்று கூறினாள்.

மோகன் என்ன எதுவுமே சொல்லல என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தான்.பிறகு, தன் வீட்டு ஆட்களுடன் போய் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரத்தில்  அம்மா ஜெயராணி “மோகன் நான் என்ன சொன்னேன் லட்சுமி அத்தையை கூட்டிட்டு வானுசொன்னேன் போனியா இல்லையா போறதுக்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணினா “என்று கேட்டுக்கொண்டிருந்தார் .

அந்த நேரம் பார்த்து லட்சுமி அங்கு வர “என்ன அண்ணி மோகன் கிட்ட சொல்லி உங்களை முன்னாடியே வர சொன்னேனே ஏன் வரவில்லை ..?”என்று கேட்டார் ஜெயராணி தன்னை யாரும் வந்து கூப்பிடவில்லை அங்கு சமையல்கட்டில் மளிகை பொருட்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தேன் என்று லட்சுமி கூறினார்.

ஜெயராணியோ,மோகனை பார்த்து “ஆண் பிள்ளைனு பேர் தான் ஓரு வேலைக்கும் லயக்குஇல்லா.” 

ஜெயராணி யோ திரும்பி மகனை ஒரு முறை முறைத்துவிட்டு “வாங்க அண்ணி வந்து இந்த பொருட்களை எடுங்க சீக்கிரம் நேரமாயிடுச்சு” என்று கூறினார்.

மோகனுக்கு சரியான கடுப்பு ஏன்னென்றால் வினோதினி பக்கத்திலேயே தான் நின்று கொண்டிருந்தாள். தான் கூப்பிட்டதாக ஓரு வார்த்தை கூறவில்லை.

வினோதினி தன் தங்கை யாழினியிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள். எப்பவுமே ஆண் பிள்ளைகளை பொம்பள பிள்ளைகளுக்கு முன்னாடி திட்டினாள் அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.அதேபோல் மோகனை ஜெயராணி வினோதினியின் முன் திட்டியதில் படும் எரிச்சலாக இருந்தது மோகனுக்கு.

மோகனின் மனதில் “இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கா நான் கூப்பிட வந்தேனு ஒரு வார்த்தை சொல்லவே இல்ல.சரியான திமிரு புடிச்சவ” என்று நினைத்துக்கொண்டான். காதுகுத்து சிறப்பாக முடிந்தது. மாலையில்  மண்டபத்தில் உள்ள பொருட்களை வீட்டில் கொண்டுபோய் வைப்பதற்காக  மோகனும் முகிலனும்  மாற்றி மாற்றி  வண்டியில் பொருட்களை  ஏற்றி கொண்டு சென்றனர். 

வினோதினி அவள் அம்மா லட்சுமியிடம் சென்று,” அம்மா நாளைக்கு பிராக்டிகல் எக்ஸாம் இருக்கு நான் அதுக்கு படிக்கணும் என்ன வீட்ல கொண்டு போய்விட சொல்லுங்க அம்மா அப்பாவை” என்று கூறினாள். “அப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு டா இங்க, இரு யாரையாவது கொண்டுபோய்விடசொல்றேன்” என்று கூறினார்.

“தம்பி உனக்கும் நாளைக்கு எக்ஸாம் தானே பா நீ வீட்டுக்குப் போ போறியா நீ வீட்டுக்கு போன அப்படியே வழியில்ல வினோதவை இறக்கி விட்டுட்டு போறியா” என்று மோகனிடம் கேட்டார் லட்சுமி. 

மோகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை போயும் போயும்  இவளையா  வண்டியில ஏத்தணும்.

வினோதவிற்கோ ஏண்டா அம்மாவிடம் கேட்டேன் என்று ஆகிவிட்டது அந்த நேரம் பார்த்து முகிலன் வர, லட்சுமி “இதோ முகில் தம்பி வந்து விட்டாரே அவர் கூட கொண்டுபோய் விட்டு விடட்டும் “என்று கூறினார்.

ஜெயராணியோ தன் மகன் முகிலனை இப்போதேவ இவளை கொண்டு போய் விட சொல்வது என்று மனதில் நினைத்துக் கொண்டார். ஜெயராணியோ,” இல்லம்மா முகிலனுக்கு இங்க வேலை இருக்கு அதனால நீ மோகன்கூட போமா” என்று கூறினார்.

வினோவோ  லட்சுமியிடம் திரும்பி “அம்மா நான் வேற யாரு கூடவாது போய்க்கிறேன், இல்லைன்னா நீங்க போகும் போதே வீட்டுக்கு போகிறேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். ஜெயராணியோ இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கு என்று நினைத்துக் கொண்டார். 

லட்சுமி, “பரவால்ல அண்ணி நான் போகும்போதே கூட்டிட்டு போயிக்கிறேன் “என்று சொல்லிவிட்டார்.

மோகனுக்கோ, மனதில் இவளுக்கு திமிரு திமிரு திமிரு உடம்பெல்லாம் திமிரு என்று திட்டிக் கொண்டிருந்தான். நான் என்னவோ இவ பின்னாடியே அலையற மாதிரி இல்ல சொல்லிட்டு போறா என்று மனது எரிந்து கொண்டு இருந்தது. அதுவும் அம்மாவும் அந்த அத்தையும் இருக்கும்போது இப்படி சொல்லிட்டு போறா என்று கோபம் கோபமாக வந்தது.

Advertisement